தமிழ் மக்கள் மற்றும் மன்னர்களின் தொன்மையான வரலாற்றை அறிந்து கொள்ள ஆதாரமாக இருப்பவை பத்துப்பாட்டு, எட்டுத்தொகை மற்றும் காப்பிய நூல்களாகும். அருந்ததியர் என்பதன் வேர்ச் சொல்லான ‘அருந்ததி’ பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களான அகநானூறு, பரிபாடல், கலித்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, புறநானூறு, திரிகடுகம், பெரும்பாணாற்றுப்படை, சீவகசிந்தமானி, சிலப்பதிகாரம் ஆகிய நூல்களில் காணக்கிடைக்கின்றன.
அருந்ததியர்களைப் பறம்பர் என்று கூறுகிறார் தேவநேயன்.இவர் தனது ‘தமிழர் வரலாறு’ என்ற நூலில் பறம்பன் என்ற சொல்லுக்கு ‘தோல் வேலை மற்றும் சுண்ணாம்புக்கல் சுடுதல் தொழிலைச் செய்பவர்கள் ‘ என்ற பொருளையே தருகிறார். மேலும் ‘செருப்புத் தைக்கும் தமிழ்க் குலத்தான்’ என்றும் கூறுகிறார். இவர்கள் திருநெல்வேலி, மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களை வாழ்விடமாகக் கொண்டவர்கள் என்றும் கருதுகிறார் தேவநேயன்.
அக்காலத்தில் செருப்பு என்பது தோலினால் மட்டுமே செய்யப்பட்டதால் தோல் வேலை செய்பவன் என்ற பொருள் கொள்வதே சரியானதாகக் கொள்ளமுடியும். மாறாகத் தோல் தொழில் செய்பவன் என்று கருத இடமில்லை.சிலப்பதிகார உரையாசிரியர்களில் ஒருவரான அரும்பதவுரைக்காரர் அருந்ததியரை ‘செம்மார்’ என்று சொன்னாலும், அதே பெயரை ‘பறம்பர்’ என்று அடியார்க்கு நல்லார் அருந்ததியரைச் சுட்டிக்காட்டி உறுதிப்படுத்துகிறார் எழில் இளங்கோவன். அபிதான சிந்தாமணியும் அருந்ததியரைப் ‘பறம்பன்’ என்றே கூறுகிறது. வேளாண் குடிவந்த தமிழர்களாக ‘செம்மார்கள்’ கருதப்படுகின்றனர். தமிழ் நாட்டில் வாழும் ஒடுக்கப்பட்ட சாதிகளுள் மிகவும் குறைவான எண்ணிக்கையில் காணப்படும் செம்மார்களை மருத நிலத் தொழில் மக்களாக இலக்கியங்கள் பதிவு செய்கின்றன ‘செம்மான்’ என்ற சொல்லுக்கு ‘சிகப்பு மான்’ என்றும் காட்டு விலங்குகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியை உண்டும் தோலை விற்றும் வாழ்ந்தவர்கள் என்றும் கருதப்படுகின்றனர்.
தமிழக அருந்ததியர் வரலாறும் வாழ்வும் – முனைவர் ச. சீனிவாசன்
விலை: 200/-
Buy this book online: https://www.heritager.in/product/tamizhaga-arundhathiyar-varalaarum-vaazhvum/
To order on WhatsApp: wa.me/919786068908
Call: 097860 68908
Buy online: www.heritager.in
Social Media Handles:
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு
#books #tamilbookstore #Heritager wwww.heritager.in
Buy History and Heritage Related book online:
Buy Tamil Inscription Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/inscriptions/
Buy Tamil Literature Books: https://www.heritager.in/product-category/books/tamil/literature/
Buy Tamil Archaeological Books: https://www.heritager.in/product-category/books/tamil/archaeology/
Buy Tamil Temple Architecture and Art Books: https://www.heritager.in/product-category/books/tamil/art/
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/