சிங்கப்பூர்த் தமிழர் வரலாறு

சிங்கப்பூர்த் தமிழர் வரலாறு :

தோரணவாயில் :

இந்தியாவின் சிட்னி என அழைக்கப்படும் சிறிய தீவான சிங்கப்பூர் தமிழ் நாட்டின் தென்கிழக்கே 1500 மைல் தொலைவில் உள்ளது. இந்நகரம் ஒருதுறைமுக நகரமாகும். தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் ஒன்று சிங்கப்பூர். சிங்கப்பூரிலுள்ள புலம்பெயர்ந்தவர்களின் வரலாற்றை வரைவான் புகுகின்றேன்.

புலம் பெயரக் காரணங்கள் :

எந்த ஒரு செயலுக்கும் முக்கியக் காரணம் உண்டு. தாம் பிறந்த நாட்டிலிருந்து வேறொரு நாட்டிற்குக் குடியேறி வாழ்பவர்களையே புலம் பெயர்ந்தோர் என்பர்.

1. ஆங்கிலேயர்கள் தங்களின் அனைத்து வேலைகளுக்கும் கூலித் தொழிலாளர்களாகத் தாம் வெற்றி கொண்ட நாட்டு மக்களை தத்தம் நாடுகளுக்கு அடிமைகளாகக் கொண்டு சென்றனர்.

2. சிலர் திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பதற்கு இணங்கவும்; வாணிகம் செய்வதற்கும்; பொருளாதார மிகுதியாலும், புதிய இடங்களைத் தம் வயப்படுத்தி உரிமை கொண்டாடவும் புலம் பெயர்ந்தனர். புலம் பெயர்ந்த நாட்டின் சூழல்; வளம் பிடித்துப் போக அங்கேயே தங்கிவிட்டனர்.

3. இக்காலத்தில் கல்வி கற்றவர்கள் மிகுந்த பொருளைப் பெற வேண்டி புலம் பெயர்கின்றனர்.

4. அரசர்களும் தங்கள் ஆட்சியைப் பரப்பவும் பிறநாட்டு வளங்களைத் தம் வயப்படுத்தவும் வெற்றி பெற்ற மக்களைத் தம் நாடுகளுக்கு அடிமைகளாகக் கொண்டு வந்தனர்.

புலம் பெயர்ந்த தமிழர்கள் குடியேறியுள்ள நாடுகள்

மலேசியா, சிங்கப்பூர்; பர்மா, தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், வியட்நாம், ஜப்பான், கொரியா, சீனா, பிஜித்தீவு, பிரிட்டன் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, செய்செல்சு, மொரீசியஸ், ரீயூனியன்; மேற்கு செருமனி, உருஸ்சியா, ஸ்வீடன்,ஆப்பிரிக்கா, லிபியா, பிலிப்பைன்ஸ், ஹாங்காங் முதலிய நாடுகளில் தமிழர்கள் வாழ்கின்றார்கள்.

புலம் பெயர்ந்தோர் அனுபவித்த கொடுமைகள் :

1. அடிமைகள் பிழைப்பு தேடிச் சென்றவர்கள், மிகுந்த கொடுமைகளுக்கு ஆளாயினர்.

2. ஆங்கிலேயர்கள் கல்லாத பாமர மக்களிடம் வெளிநாட்டு வேலை நிறையப் பொருளீட்டலாம். சுகமாக வாழலாம். என ஆசை காட்டி மோசம் செய்தனர். செம்மறியாட்டை அடைப்பதுபோல் அடைத்துக் கப்பலில் அவதியுறச் செய்தனர்.

3. தங்குவதற்கு வீடின்றி கூடாரம் அமைத்து அதில் பல பூச்சி கடிகளுக்கும் ஆளாகித் துன்பப்பட்டனர்.

4. சரியான ஆடைகள் கிடையாது. முழங்காலுக்கீழ் வேட்டி சேலை கட்டக்கூடாது. தோளில் துண்டு போட்டுக் கொள்ளக் கூடாது. இரு கைகளையும் கட்டிக் கொண்டு நடந்து செல்ல வேண்டும்.

5. காலை 6 மணி முதல் மாலை முன்னிரவு வரை வயல் வெளியிலும், சேற்றிலும் இரவில் சேரியின் இருட்டிலும் வாழ வேண்டும்.

6. அனைத்து வேலைகளையும் செய்யும் இவர்கள் ஆண்டைகள் மனமுவந்து கொடுக்கும் பதர் நெல், கேழ்வரகுக் கதிர்கள் அழுகிய காய்கறிகளைச் சமைத்து உண்ண வேண்டும்.

7. வேத சாத்திரம் மனுதருமத்தில் இவ்வடிமைகளின் தீட்டு விஷத்தை விடக் கொடியது எனக் கூறுகிறது. இக்கருத்தினை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

8. இன்றைய நிலை : ஏழு நூறு ஆண்டுகளுக்கு முன் சென்ற ஒப்பந்தத் தொழிலாளர்களின் வழிவழிவந்த நான்காவது, ஐந்தாவது தலைமுறையினர் இன்றும் மலேசியா, சிங்கப்பூர் மற்ற பிற நாடுகளிலும் வாழ்கிறார்கள்.

சிங்கப்பூரின் அமைப்பு :

இச்சிறிய தீவு குறுக்கும் நெடுக்கும் 22 5 41.8 கி.மீ தெலைவு உடையது. 54 அண்டைத்தீவுத் திட்டுக்கள் உடையது. 618.1 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உடையது. 4.48 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். சீனர்கள் 77% மலாய்க்காரர்கள் 13.7% இந்தியர்கள் 8.4% பிற இனத்தவர்கள் 1.4% இவர்களில் இந்தியர்களில் 65% தமிழர்கள். மலையாளம், தெலுங்கு, பஞ்சாபி, குஜராத்தி பேசுவர்களும் வாழ்கிறார்கள்.

சிங்கப்பூரின் அதிகாரத்துவ மொழிகள் :

எந்த ஒரு நாட்டிற்கும் மொழி இன்றியமையாதது. மலாய் மொழி தேசிய மொழியாகவும் சீனம், மலாய்; தமிழ். ஆங்கிலம்அனைத்தும் அதிகாரத்துவ மொழிகளாகும். ஆங்கிலம் தொடர்பு மற்றும் வணிக மொழியாக வலம் வருகிறது.

தொழில்களின் இருப்பிடம் :

பல தோட்டங்கள், பண்ணைகள், தகரம் உருக்கிப் பிரித்தெடுத்தல் ரப்பர். (துடைப்பான்) பதனஞ்செய்தல் பழவகைகளைத் தகர அடைப்புகளில் அடைத்தல் பல்வேறு தொழிற்சாலைகள் முதலியன உள்ளன. இரப்பர், தகரம் கொப்பரைத் தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இத்தனை தொழில்கள் இருக்கும் காரணத்தினால் தான் மக்கள் சிங்கப்பூருக்கு புலம் பெயர்ந்தனர். 1819 இல் மலாயாவின் தென் பகுதியில் அமைந்துள்ள வளமான துறைமுக நகரமான சிங்கப்பூரை பிரிட்டீசார் தங்கள் பிடிக்குள் கொண்டுவந்தனர்.

சிங்கப்பூர் வரலாறு :

ஒரு நாடு என்றால் அந்த நாடு எவ்வாறு உருவாயிற்று யார், யார் காரணகர்த்தாக்கள் என அறிவது முக்கியம். அரச வம்சத்தவர் முக்கிய காரணகர்த்தாக்களாக அமைகின்றனர். கி.பி 2013 ஆம் ஆண்டில் பு-லூ- சுங் என்ற தீவே சிங்கப்பூர் என நம்பப்படுகிறது. பாளம் பாங்கை ஆண்டு வந்த மன்னர் தெமாசக் மாவட்டத்தை சிங்கப்பூர் என்று 13ஆம் நூற்றாண்டுகளில் அழைக்கத் தொடங்கினர். இத்தீவின் மன்னர் மஜபாகிட் அரசரால் 1376ல் தோற்கடிக்கப்பட்டவுடன் இத்தீவின் முக்கியத்துவம் நலியத் தொடங்கியது.

சுவடிகள் தரும் சான்று :

கால வரலாற்றை அரிய சுவடிகள் பெரிதும் உதவுகின்றன. இராசேந்திர சோழனின் முன்னோரான ஸ்ரீதிரிபுவனா என்பவரே சிங்கப்பூரின் முதல் அரசர் என மலேசியாவின் வரலாறு அல்லது செய்யாரா மெலாயூ என்னும் சுவடியில் கூறப்படுகிறது. இச்சுவடிகளில் சிங்கப்பூரின் அரச பரம்பரைச் செய்திகள் காணப்படுகிறது. மலாயா, சிங்கப்பூர்; இந்தோனேசியாவிலும் சோழர்களின் புகழ் ஓங்கியிருந்ததை அறிய முடிகிறது.

சிங்கப்பூரின் பழமை :

சர் ஸ்டாபோர்டு ராஃபில்ஸ் என்ற ஆங்கிலேயர் ஆங்கிலக் கிழக்கிந்திய வணிக நிறுவனத்திற்காக 1819 ல் சுல்தான்களிடமிருந்து உரிமை பெற்று சிங்கப்பூர் தீவைக் களமாக அமைத்தார். சுமார் 200 ஆண்டுகால பழமை வாய்ந்தது. பல இனத்தவர்களும் வாழ்ந்தனர். ஒரு மீன் பிடி கிராமமாக இருந்தது. 1800 முதல் 1853 வரை தமிழர்களும் பிறரும் இங்கு புலம் பெயர்ந்தனர். ராஃபில்ஸ் ஸின் முயற்சி சிங்கப்பூர் சுங்கமற்ற துறைமுகமாகவும்; சிறந்த வாணிபத்தலமாகவும் மாறியது. அண்டை நாட்டினர் பலரும் புலம் பெயர்ந்தனர்.

சிங்கப்பூரின் வளர்ச்சி :

சிங்கப்பூரில் குடியேறிய தமிழர்கள் சாலைகள் அமைக்கவும் இரயில் போக்குவரத்து அமைப்பதற்கும் துறைமுகத்தை நவீனமாக்கவும் குறைவான ஊதியத்தில் பணி புரிந்தனர். இரப்பர் தோட்டங்களிலும், இறக்குமதி செய்யவும் தமிழர்கள் பணி செய்தனர். சிங்கப்பூர் வளர்ச்சியின் கடின உழைப்பில் 1825 ல் தமிழ்நாட்டிலிருந்து கைதிகள் கொண்டு வரப்பட்டனர். சிங்கப்பூரில் பணிபுரிந்தவர்களுக்குச் சில உரிமைகளும், சலுகைகளும் அளிக்கப்பட்டதால் தமிழர்கள் சிங்கப்பூரில் மிகுதியாகக் குடியேறினார். 1915ல் தமிழர்களின் தொகை மூன்று மடங்காகப் பெருகியது. முதல் உலகப் போர் சமயத்தில் அனைத்து இனத்தினரும் செல்வாக்குள்ள வாணிகச் சமூகமாக மாறிவிட்டனர். இரண்டாம் உலகப் போருக்கு முன் சிங்கப்பூரின் மக்கள் தொகை அதிகமானது. சீனர்கள், இந்தியர்கள் குறிப்பாகத் தமிழர்களும் சிங்கப்பூரின் சமூக பொருளாதார அமைப்பை உருவாக்குவதில் பெரும்பங்கேற்றனர்.

சீர்மையடைந்த சிங்கப்பூர் :

சிங்கப்பூர் சிங்கங்களின் நாடு அதனால்தான் சிங்கத்தை அடையாளச் சின்னமாக அமைத்துள்ளனர் தமிழர் எங்கிருந்து வந்து குடியேறினாலும் இந்த நாடு என் நாடு என்ற உணர்வுடன் முன்னேற வேண்டும் என்ற வேட்கையுடன் இரைதேடும் சிங்கங்களைப்போல் வாழ்கிறார்கள். சிங்கப்பூரின் சிங்கங்களை பெரியோர்களின் சீர்திருத்த இயக்கங்களும் சங்கங்களும் தட்டி எழுப்புகின்றன.

அரசாங்க மொழி :

சிங்கப்பூரில் தமிழ் அரசாங்க மொழியாகும். நாடளுமன்ற உறுப்பினர்கள் தமிழில் பேசுவதை தாங்கள் விரும்பிய மொழியில் அதன் மொழி பெயர்ப்பை செவிமடுக்கும் வசதி இருப்பது உலகில் எங்குமேயில்லாத ஒரு புதுமை

வானொலி :

தமிழ் நிகழ்ச்சிகளை எப் எம் ஸ்டிரீயோ ஒலிபரப்பில் அதிகாலை முதல் நள்ளிரவு 2 மணி வரை கேட்டு மனமகிழ்ந்து நிம்மதி அடைகிறார்கள். தமிழ் நிகழ்ச்சிகளை அள்ளித் தருவதற்கோர் வானொலி என்றால் அது சிங்கப்பூரில் தான் உலகிலேயே முதல் தமிழத் தொலைக்காட்சி முதல் வண்ணத் தொலைகாட்சி நிகழ்ச்சி சிங்கப்பூரில்தான் தொடங்கப்பட்டது.

பண்டைய மரபு

‘வினையே ஆடவருக்கு உயிரே
மனையுரை மகளிருக்கு ஆடவர் உயிர்’

தொழில் செய்து பொருள் சேகரிப்பது ஆடவரின் செயல் என்றும் செல்வத்தைப் பெண்கள் பாதுகாத்து ஆடவரைக் காப்பது பெண்களின் செயல் என்றும் கூறப்படுகின்றன.

‘முந்நீர் வழக்கம் மகடுஉ வொடு இல்லை’ (தொல். அகத் 37) என்ற வரையரையின்படி கடல் கடந்து ஆண்கள் வாணிகம் செய்யமுற்படும் போது பெண்களை உடன் அழைத்து செல்வதில்லை என்பது மரபு. ஆனால் கண்ணதாசன் ஆச்சி என்ற தனது நாவலில் தாயார் கடல்கடந்து செல்கிறார் எனக் கூறுகிறார்.

பண்பாடு :

பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகல் என்பது கலித்தொகைக் கூற்று. மக்களின் சமூக வாழ்க்கையில் வளர்ச்சி கருதி பாங்கு அறிந்து பெருமை உணர்ந்து பயன் தெரிந்து ஒழுகும் பண்பைத் தான் பண்பாடு என்று தமிழ்ச் சான்றோர் குறிப்பிடுவர். இதற்குச் சான்று உலகத் தமிழர்கள்.

சிங்கப்பூர்- தமிழ்நாடு தொடர்பு மூன்று பிரிவுகள் உண்டு

1. ஆங்கிலேயர் குடியேற்றத்திற்கு முன்பு
2. ஆங்கிலேயர் ஆட்சி காலம்
3. சுதந்திர சிங்கப்பூர்

குடியேற்ற நாடாக இருந்தது. நீரிணை குடியேற்றங்கள் (பினாங் சிங்கப்பூர் மலாக்கா) தமிழ் பணியாட்களை சிங்கப்பூர் செல்ல அனுமதித்தனர். 1910 ஆம் ஆண்டில் தொழிற்கட்டுப்பாட்டு ஒப்பந்தங்கள் செய்து கொண்டு செல்வது தடைசெய்யப்பட்டது. தமிழ்க் கூலிகள் ஒப்பந்தக் கெடு முடிந்த பின்னரும் நீடித்துத் தங்க முற்பட்டனர். 1950 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டதால் குடியேற்றங்களில் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. தற்பொழுதுகூட சிங்கப்பூர் செல்வோர் எண்ணிக்கை மிகவும் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது.

குடியேற்றங்களின் பிரிவுகள் :

1.குற்றவாளிகளின் குடியேற்றம் 2. கட்டுப்படுத்தப்பெற்ற குடியேற்றம் 3. தாமாக வந்த குடியேற்றம். 1857 வரை குடியேற்றங்கள் நீடித்தது. 1890இல் ஒப்பந்தப் பிணைப்புக்கு உட்படாத உழைப்பாளராகிய தமிழர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு ஆயிற்று. 1931ஆம் ஆண்டில் நீரினைக் குடியேற்றங்களில் எல்லா இனத்தினரும் மதத்தினரும் சமமாகக் கருதப்பட்டனர். பணிகள் உரிமைகள் சமவாய்ப்பு அளிக்கப்பட்டது.

சுதந்திர சிங்கப்பூர் :

1965 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 7ஆம் நாள் சிங்கப்பூர் தனி முழு உரிமையுள்ள சுதந்திர நாடு ஆகியது. சிங்கப்பூரின் வளர்ச்சியில் தமிழர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அரசு வரலாற்றுச் சின்னங்கள்மாரியம்மன் கோவில்களாக, ஸ்ரீ பெருமாள் கோவில், நாகூர் தர்க்கா போன்ற 19 சின்னங்கள் பாதுகாக்கப்பட்டு வரப்படுகின்றது.

திருவிழா :

தமிழர்களை ஒன்றுபடுத்தும் நோக்கத்துடன் தைத் திங்களில் மற்றொரு நாளைத் தேர்ந்தெடுத்து அந்நாளை தமிழர் திருநாள் எனச் சிங்கப்பூர் தமிழர்கள் கொண்டாடுகின்றார்கள். தீபாவளித் திருவிழாவைக் கூட அனைத்து பேருக்கும் உரிய முறையில் ஒரு விடுமுறை நாளில் கொண்டாடி விருந்து போற்றியும் அசுமகிழ்கின்றர்.

தமிழர்கள் சிங்கப்பூர் குடிமகன்கள் :

இன்று 75 விழுக்காட்டினர் தமிழர்கள் சிங்கப்பூர் குடிமகன்கள் ஆவார். எந்த ஒரு நபரும் எந்த நாட்டில் பிறந்தார்களோ அந்தநாட்டு குடியுரிமை உண்டு. சிங்கப்பூரில் பிறந்தவர்கள் எல்லோருக்கும் குடியுரிமை உண்டு. பதிவு செய்தவர்களுக்கும் அயல்நாட்டவர் களுக்கும் குடியுரிமை பெற வாய்ப்புண்டு.

தமிழ்க் கல்வி :

சிங்கப்பூர் நிறுவப்பட்ட காலத்திலேயே தமிழ்க் கல்வி தொடங்கப்பட்டது. 2ம் உலகப் போருக்கு முன்பே 18 தமிழ்ப் பள்ளிகள் இருந்தன. 1945க்கு பின்னர் இரண்டாம் மொழியின் முக்கியத்துவம் உணர்ந்தனர். சிங்கப்பூர் தமிழைப் பேச்சுத்தழிழ், எழுத்துத்தமிழ், எனப் பிரிக்கலாம். பேச்சுத்தழிழை யாழ்ப்பாணத் தமிழ், இந்தியத் தமிழ் என இருவகைப் படுத்தலாம்.

பொருளாதார நிலை :

சமூக அமைப்பின் மேம்பாட்டில் 25 விழுக்காட்டினர் வணிகர்களாவும்; அரசு அலுவலர்களாகவும் உள்ளனர். வணிகர்கள் தமிழ் நாட்டுடனும் மற்ற இந்தியர்களுடனும் தொடர்பு வைத்திருந்தனர். 75 விழுக்காட்டினர் தொழிலாளர்களாக இருக்கிறார்கள். நான்கில் மூன்று பங்கினர் அயல்நாடுகளில், சிங்கப்பூரில் பிறந்தவர் ஆவார். ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் தமிழ் வணிகர்கள் சீனர்களை நம்பி வாழ்கிறார்கள். தமிழர்கள் மருத்துவர்களாகவும் வழக்குரைஞர்களாகவும் இருக்கிறார்கள் என்பதில் பெருமிதம் அடையலாம்.

‘முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்’ (குறள் : 616)

என்பதற்கிணங்க தமிழ் மக்களின் கடின உழைப்பு பெரிதும் போற்றதற்குரியது.

குடும்பச் சூழ்நிலை :

அன்றும், இன்றும் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்வதால் பிள்ளைகளிடம் பேசுவதற்கே வார விடுமுறை நாட்கள்வரும் வரை காத்திருக்க வேண்டி உள்ளது. பாசத்திற்கும், உறவிற்கும் ஏங்கித் தவிக்கின்றனர். தமிழ் மொழியில் பேசுவதற்கு நேரம் ஒதுக்க வேண்டும் பெற்றோர்கள். பேச்சுத்தமிழே எழுத்துத் தமிழுக்கு அடிப்படையாகும். பெற்றோர்களின் அன்பும், அரவணைப்பும் இல்லாத நேரத்தில் பிள்ளைகள் தடம் மாறிச் செல்கின்றனர். இந்நிலை மாற வேண்டும்.

தமிழனின் நிலை :

தமிழன் தாழ்ந்தவன். தலை குனிந்து வாழ வேண்டியவன் என்று பலர் எண்ணிச் செயல்படுகிறார்கள். ‘தமிழன் என்றொரு இனமுண்டு. தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என்பது தமிழனின் தாரகமந்திரம். ‘தமிழனால் முடியாதது எதுவுமில்லை.’ ‘தமிழால் முடியாதது எதுவுமில்லை; தமிழன் எதற்கும் அஞ்சாதவன், வீரம் நிறைந்தவன். தமிழர் வாழ்வு புலம் பெயர்ந்த நிலையில் பல நாடுகளில் வஞ்சிக்கப்பட்டுள்ளது. ஆண்டாண்டு காலமாக தமிழன் அடிமைகளாக வாழ்வதும், சாவதும், அவனின் தலை விதியாக உள்ளது. சிங்கப்பூரை உருவாக்குவதில் தமிழர்கள் பெரும்பங்கு வகித்து சாதித்து உள்ளார்கள்.

புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ்ப்பெயர்கள் :

தமிழர்கள் தாம் புலம் பெயர்ந்த நாட்டு மக்கள் இலகுவாகு அழைப்பதற்காக மாற்றங்கள் மேற்கொண்டனர். புதிய இலகு உச்சரிப்புப் பெயர்களைச் சூட்டல், வழக்கிலுள்ள தமிழ்ப் பெயர்களைத் திரிவு படுத்தல் என இருவகையாக மேற்கொண்டனர். தமிழ்க் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் பொழுது ஆங்கில ஆதிக்கத்தைக் காணலாம். தமிழுக்கு உரித்தான ஓசைகள் தவிர்க்கப்பட்டு ஆங்கில மொழியில் உச்சரிக்கக் கூ கூடிய பெயர்கள் வழக்குக்கு வருகின்றான்.

உதாரணமாக ‘ழகரம் தமிழிலும், மலையாளத்திலும் மட்டுமே உள்ளன. ‘ழகரம் கொண்ட பெயர்களை வைப்பதையே தவிர்த்து விடுகிறார்கள் நீண்ட பெயர்களாக இல்லாமலும், ஆங்கிலேயர்கள் உச்சரிக்கக் கூடிய பெயர்களாகவும் இருக்க வேண்டும் என எண்ணுகிறார்கள். தாத்தாவின் பெயரையோ, பெயரடியையோ, பேரன், பெயர்த்திக்கு வைக்கும் தமிழ்ப் பண்பாடு கைவிடப்பட்டது. குறித்து மனம் வேதனை கொள்கிறது. இலகு தமிழ்ப் பெயர்களின் தாக்கம் இன்று தாயகங்களிலும் பரவுவது வேதனைக்குரியது. புலம் பெயரும் தமிழர்கள் தமது பெயரை ஆங்கிலேயர் உச்சரிப்பதற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்கிறார்கள்.

புலம் பெயர்ந்தோர் கலை இலக்கிய முயற்சிகள் :

புலம் பெயர்ந்த தமிழர்களின் இலக்கிய முயற்சி என்பது கவிதை. சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை, ஓவியம் எனத் தீவிரமடைகிறது. நான் கண்ட அரியதொரு காட்சியை கூற விழைகின்றேன்.கலைப் போட்டி நடக்கும் சமயத்தில் தீவுத் திடலில் மணலில் பல புராதனச்சின்னங்கள், கோவில்கள், உலக அதிசயங்கள் எனப் பலவற்றை மணலில் உருவாக்கி இருந்தனர். இன்றும் என் நினைவில் உள்ளது. ‘கைவண்ணம் இங்கே கண்டேன்’ என்ற சினிமா பாடல் வரிகள் என் நினைவில் ஊஞ்சலாடுகின்றன. கூத்துக் கலைகள் தெரு நாடகங்கள், குறும்படங்கள் மூலமாக பிரச்சனைகளை உலக சமுதாயத்திற்கு எடுத்துரைக்கின்றனர். படைப்புகள், சாதி, அரசியல், மதம், இலக்கியக் கோட்பாடு, கருத்தியல் வாறாகப் பண்முகத்தன்மை கொண்டவையாய் விளங்குவது மிகவும் குறிப்பிடத்தக்கது.(நூலிலிருந்து)

புலம்பெயர்ந்த தமிழர்: வரலாறும் வாழ்வியலும் – கோ. விசயராகவன், முனைவர் கு. சிதம்பரம்
விலை: 140/-
வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
Buy this book online: https://www.heritager.in/product/pulampeyayarntha-tamilar-varalarum-vaazhviyalum/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908

Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/

#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers