இந்தியாவில் சாதி நிலம் மற்றும் நில உடமை

தீபகற்ப இந்தியாவில் சாதவாகனரும், சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்குட்பட்ட சங்கத் தமிழரும் பண்டைய வரலாற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தினர். ஏனையோர், திணை என்ற சூழியத் தொகுதியில் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் வேட்டைக்காரர்கள், ஆடுமாடு மேய்ப்போர், வழிப்பறிக் கொள்ளையர், மீனவர் மற்றும் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் ஆவர். இவர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பர உதவி செய்து கொண்டு வாழ்ந்தவர்கள். ஆயினும் இப்பிரிவு தெளிவாக வரையறுக்கப்படவில்லை. அங்குமிங்கும் மாற்றங்களும் தென்பட்டன. பயிர்செய் நிலங்களும் செல்வமும் சேர்ந்து கொண்ட காரணத்தினால் விவசாயம் படிப்படியாக பயிரிட்டிருக்கக்கூடும் என்று கணிக்கப்படுகின்றது”

பந்து இனக்குழுக்களில் (clans) குடும்பங்களின் தலைவர்களே முக்கியத்துவம் பெற்றிருந்தனர். எனினும் வேளிர் எனப்படும் கலைஞர்களுக்கு உயர்ந்த அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது. அதனினும் மிக உயர்ந்த அந்தஸ்தினை வலிமை மிக்க வேந்தர் என்ற பதம் சேர, சோழ மற்றும் பாண்டிய மன்னர்களைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டது. குடும்பத்தலைவர்கள்/இனத் தலைவர்கள், குறுநிலத்/தலைவர்கள் மற்றும் அரசர் என்ற இந்த மூன்று நிலையினரை மட்டுமே பண்டமாற்றம் மற்றும் உற்பத்தி மறுபகிர்வு ஒருவரோடு ஒருவரை ஒன்றிணைத்திருக்கலாம். அத்தடுத்து வந்த கால கட்டங்களில்தான் குறுநிலத் தலைவர்களிடமிருந்து படிப்படியாக மன்னராட்சிக்கு மாற்றம் நிகழ்ந்தது.

சங்ககாலப் பொருளாதாரம் பந்து இனக்குழுக்களுடன் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆற்றலற்ற இனத்தோர் தங்களுக்காகக் கொள்ளையிடும் அதிகாரத்தினை குறுநிலைத் தலைவர்களிடம் ஒப்படைத்தனர். அவர்களும் கவர்ந்து வந்த கொள்ளைப் பொருட்களை இனக்குழுக்களுக்குப் பரிசாகப் பகரிந்தளித்தனர். தன் இனத்தைச் சாராத ஒருவரது உழைப்பைப் பயன்படுத்துதல் என்பது பிந்தைய வளர்ச்சி நிலையாகும். எங்கு இனங்களின் உழைப்பு ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றதோ அங்கு மரபுப் பழக்கவழக்கங்கள் பின்பற்றப்பட ஏதுவாகின்றது. மறுபுறத்திலோ வறுமையினாலும் அல்லது தொடர்ச்சியாக அடிமைப்படுத்தலுமே ஆதாரமாக விளங்கிய இனம் சேராத உழைப்பு அன்றைய பொதுப்பழக்கமாக இருந்தது. சங்க இலக்கியங்கள் பல தொழில் முறைகளைக் குறித்திருப்பினும் சமூக அடுக்கினை நிர்ணயிக்கும் வர்ணமுறை பற்றி நேரடியாகப் பேசவில்லை. சற்றே பின்னாளில் தமிழகத்தின் தென் பகுதியில் அரசுகள் தோன்றிய அதே காலகட்டத்தில் நடந்த சமகால நிகழ்வாக பிராமணர்களின் குடியிருப்புகளும் அமைக்கப்பெற்று சமூக அமைப்பில் வர்ண முறையும், வட்டார மொழியான தமிழ் மொழிக்குள் சமஸ்கிருதமும் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்”

சுங்கர்கள், கன்வர்கள், இந்தோ-கிரேக்கர்கள், சாகர்கள், குஷாணர்கள், சாதவாகனர்கள், இஷீவாகக்கள், சேரர்கள், சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் ஆகியோர் தோராயமாக கிமு.200 முதல்கி.பி.300 வரையான காலகட்டத்தைச் சார்ந்தவராகின்றனர். இக்கால கட்டத்தில்தான் வணிகத்தின் மூலமாக சலுகை பெற்ற பிரிவினருக்கு அதிக அளவில் பணமும் செல்வமும் குவிக்கப்பெற்றதால் பொருளாதார நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் சமூக அமைப்பின் மாற்றங்களைக் கண்டது. ‘பொருளாதார நடவடிக்கை வணிகத்துடன் நின்றுவிட்டது என்றோ, விவசாயம் குறைந்து விட்டது என்றோ குறிப்பிட முடியாது. ஏனெனில் விவசாயம் தொடர்ந்து வருவாய் அளித்துக் கொண்டிருந்தது.

இக்கால கட்டத்தில்தான் ஏற்கெனவே வேளாண்மை செய்யப்பட்ட நிலங்களில் விவசாய முயற்சிகள் மேற்கொள்வதுடன் காடுகளும் களர்நிலங்களும் உழப்பட்டுக்கொண்டிருந்தன. விவசாய முறைகளையும், தேவைகளையும் பொறுத்து நிலஉடமை உரிமையின் காலக்கிரம வரிசை மாறுபட்டது. ஆகவே வரிவிதிப்பு பற்றிய பிரஸ்தாபங்கள் காணப்பட்டன. நிலங்கள் செல்வப் பொருட்களாகவும் வருவாய்க்குரிய மூலாதாரமாகவும், தானப்பொருளாகவும் உபயோகிக்கப்பட்டிருந்தது. புத்த, சமண விகாரைகளுக்கும் பிராமணர்களுக்கும் சிறிய அளவில்தான் என்றாலும் நிலங்கள் தானமாக வழங்கப்பட்டன. இது பின்னாளில் வரப்போவதை உணர்த்தும் குறிப்பாக இருந்தது.

அதிக அளவிலான கைவினைஞர்கள் வேலைவாய்ப்புப் பெற்றதும், அதன்மூலம் அவர்கள் செல்வந்தராகும் சாத்தியமும் சேர்ந்து வணிகச் சங்கங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது. அதுவே இக்காலகட்டத்தின் வியாபார மற்றும் வணிக நீட்சியின் கந்துபொருளானது. சூத்திரர் பிரிவிலிருந்து பெருவாரியாக வந்த இந்தக் கைவினைஞர்களில் சிலர் தங்கள் சாதி அந்தஸ்தை உயர்த்தும் நோக்குடன் தங்கள் தொழிலையும் தங்கள் வாழ்விடத்திற்கு மாற்றிக் கொண்டனர். இவ்வாறு மாறும் குழுவினரைத் தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பது கலப்புசாதியினரின் நோக்கங்களு ஒன்றாக இருந்தது. பெரும்பாலும் நகரத்தின் விளிம்பில் குடி அமர்த்தப்பட்ட தாழ்ந்த சாதியினர் அந்த இடங்களில் இருந்தே தங்கள் தொழில்களை மேற்கொண்டனர். அதே சமயத்தில் தீண்டத்தகாதவர்கள் நகர எல்லைக்கு வெளியே இருக்கவேண்டும் என்பதே எதிர்பார்க்கப்பட்டது.

இந்தியாவில் சாதி நிலம் மற்றும் நில உடமை – ப.சு.சந்திரபாபு
70/-
Buy link : https://heritager.in/product/caste-land-and-land-tenure-in-india/

இந்நூலினை எப்படி வாங்குவது?

1. எங்களது WhatsApp ல் 097860 68908 தொடர்பு கொள்ளலாம், அல்லது
2. எங்கள் இணைய தளத்தில் Heritager .in வாங்கலாம். இணையதள பக்கம் பின்னூட்டத்தில் உள்ளது.

எங்கள் முயற்சியில் எவ்வாறு நீங்களும் பங்கெடுக்கலாம்?:

1. எங்கள் நூல் அறிமுக பதிவுகளைப் பகிர்ந்து பலரை சென்றடைய உதவுங்கள்.
2. உங்களுக்கு தேவையா நூல்களை எங்கள் மூலம் பெறுங்கள்.
3. வரலாற்றில் ஆர்வமுள்ள நண்பர்களுக்கு எங்களின் Heritager .in The Cultural Store பற்றி தெரிவியுங்கள்.

உங்களின் தொடர் ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றிகள்