நூலின் ஆசிரியர் கூறுகையில்,
“இந்து சமயத்தில் ஆரிய சமயத்தில் பெண் தெய்வத்திற்குக் கொடுக்கப்படுகிற உயர்வை விட திராவிடச் சமயத்தில் உள்ள பெண் தெய்வத்திற்குத்தான் ஏற்றம் மிகுதியாகக் கொடுக்கப்பட்டு இருந்தது; இன்றும் இருந்து வருகிறது. திராவிடர்களுடைய மொழியில் வடமொழி புகுந்து ஆதிக்கம் செலுத்திய காலத்தில், ஆரியர்களின் பண்பாட்டில் திராவிடர்களின் பண்பாடு கலந்து ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. இந்தச் சமயத்தில்தான் திராவிடர்களின் சக்திவழிபாடு ஆரியர்களின் சமயமான இந்து சமயத்தில் பின்பற்றப்பட்டது. திராவிடர்கள் வேளாண்மையை விரும்பி போற்றியதால் வளமைத் தெய்வமான பெண் தெய்வத்திற்கு முதன்மைக் கொடுத்தார்கள். ஆரியர்கள் போரை விரும்பியதால் ஆண் தெய்வங்களுக்கு ஏற்றம் கொடுத்தனர். காலப்போக்கில் ஆரியர்கள் பண்பாட்டுக் கலப்பால், திராவிடர்களைத் தமதாக்கி அடிமைகளாக்கி கொள்ளவேண்டும் என்ற உந்துதலால் பெண்தெய்வ வழிபாட்டை ஏற்றுக்கொண்டு ஆண்தெய்வத்தின் துணையாக்கிக் கொண்டார்கள். ஆணுக்குப் பணியும் தெய்வமாகப் பெண் ஆக்கப்படுகிறாள். திராவிடச் சக்தி அவ்வாறல்ல. தனித்தே வந்திருக்கிறது. ஆனால் இந்தப் பெண் தெய்வங்களை இப்போது இந்து சமயத்தின் ஆண்தெய்வத்தின் மனைவிக்கு அவதாரமாக்கி விட்டிருக்கிறார்கள். ஆகவே திராவிடச் சக்தி வேறு, இந்து சக்தி வேறு. திராவிடச் சக்தி ஒன்றல்ல. பல பெண் தெய்வங்கள் இருக்கிறார்கள். அவற்றில் முதன்மை தெய்வம் கண்ணகி. இடத்தைப் பெற்றதுதான் பத்தினித் திராவிடச் சக்தியே தாய்த் தெய்வம். இத்திராவிட சக்தியில் மிகுதியான அளவில் ஏற்றம் கொண்டிருப்பது கண்ணகியாகிய பத்தினித்தெய்வம் என்பார் துளசி இராமசாமி.
கண்ணகி போதிலார் திருவோடும் தீதிலா வடமீனோடும் தொடர்புபடுத்தப் பட்டாலும் திராவிடத் தொன்மமான தாய்த்தெய்வத்தின் கொற்றவையின் கூறாகக் கோவலன் அவளைக் காண்கிறான். சாதாரண மக்கள் அவளைக் கொற்றவையோடு இணைத்துப் பார்க்கும்போது, சமுதாய அடிமனத்தில் எழுந்த பண்பாட்டுப் படிமமாக (cultural im-age) உருவாகிறாள். யுங்கின் கருத்துப்படி மூலப்படிவம் பொது அடிமனத்தின் கனவின் வெளிப்பாடு, சாதாரண மக்களின் சமாதான ஆற்றலின் வெளிப்பாடாகத் திகழும் கண்ணகியை அவர்களின் குரலாக தெய்வமுற்ற சாலினி, தென்தமிழ்ப் பாவையின் செல்வியாக, உலகமாமணியாகவும் உயர்த்தும் போதுதான் முழுமையான திராவிடர் மூலப்படிவமாகிறாள்.” – நூலிலிருந்து
திராவிடத் தெய்வம் கண்ணகி – தொகுப்பாசிரியர் பேரா. காவ்யா சண்முகசுந்தரம்
ஒற்றைச் சிலம்பு கொண்டு மன்னனிடம் நீதி கேட்டு வாதாடி மதுரையைப் பற்றி எரியச் செய்தாள் கண்ணகி. அவளது சிலம்பாலும், சினத்தாலும் உருவான சிலப்பதிகாரம் திராவிட இதிகாசமாகப் போற்றப்படுகிறது. கண்ணகி திராவிடத் தெய்வமாக வணங்கப்படுகிறாள்.
வீரபத்தினி, நடுகல், தாய்த் தெய்வம் போன்ற முன்னோர் வழிபாடுகள் திராவிட வழிபாடுகளாக விளங்கி வருகின்றன. “கண்ணகி வழிபாடு’ திராவிட மக்களின் தாய்த் தெய்வ வழிபாட்டில் ஒன்றாகவும், ஆரம்பகாலம் தொட்டே வளர்ந்து வந்த கிராமிய வழிபாட்டு முறைகளிலே சிறப்பிடம் பெறுவதாகவும் உள்ளது.
மாரி, காளி, கண்ணாத்தாள் போன்ற பல்வேறு பெயர்களில் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அம்மன் வழிபாடும், கேரளத்தில் உள்ள ஆற்றுக்கால், கொடுங்கலூர், பாலக்காட்டில் பகவதி வழிபாடும் நடைபெறுகிறது. இலங்கையில் தமிழர்களால் கண்ணகையாகவும், சிங்களர்களால் பத்தினித் தெய்யோவாகவும் அம்மன் வழிபாடு நடைபெறுகிறது.
மாநிலம், நாடு கடந்து வழிபடப்படும் இந்த அம்மன்கள் அனைவருமே கண்ணகியின் அம்சமாகத் திகழ்வதாக ஆய்வு, இலக்கியங்கள், செவிவழிச் செய்திகள், நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் நிரூபிக்கிறார் நூலாசிரியர்.
கண்ணகி தொடர்பாக வியக்கத்தக்க செய்திகளை உள்ளடக்கிய இந்த நூல் அளவில் பெரியது மட்டுமல்ல, அரியதும்கூட. பல பகுதிகளில் பாடப்படும் கண்ணகி குறித்த பாடல்களும் கண்ணகை அம்மன் காவியங்களும், கோவலன்- கண்ணகி நாடகப் பகுதிகளும் நூலின் பிற்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. இது கண்ணகி குறித்து மேலும் ஆய்வு செய்ய ஆர்வமுள்ளோருக்கு பெரிதும் உதவும்.
வெளியீடு: காவ்யா
உள்ளடக்கம்:
1. திராவிடத் தெய்வம் கண்ணகி
2. தமிழகத்தில் கண்ணகி வழிபாடு
3.கேரளத்தில் கண்ணகி வழிபாடு
4. ஈழத்தில் கண்ணகி வழிபாடு
5.கண்ணகி திராவிடத் தெய்வம்
பின்னிணைப்புகள்:
1.கோவலன் கண்ணகி நாடகம்
2. கண்ணகி வழக்குரை
3.கண்ணகை அம்மன் குளித்திப்பாடல்
4. பொற்புறாவந்த காவியம்
5. அங்காணமைக்கடவை கண்ணகை அம்மன் காவியம்
6. வற்றாப்பழைக் கண்ணகி தோத்திரம்
7. வற்றாப்பழைக் கண்ணகை அம்மன் காவியம்
8. பட்டிமேடு கண்ணகை அம்மன் காவியம்
9.தாண்டவன்வெளி கண்ணகை அம்மன் காவியம்
10. தம்பிலுவில் கண்ணகை அம்மன் மழைக்காவியம்
11. பட்டிநகர் கண்ணகை அம்மன் மழைக்காவியம்
12. கன்னன்குடா கண்ணகை அம்மன் மழைக்காவியம்
13. புகைப்படங்கள்
விலை: ரூ. 950 + அனுப்பும் செலவு
Buy online: https://www.heritager.in/product/thiravida-deivam-kannagi/
WhatsApp: Order: wa.me/919786068908