கொங்கு நாட்டில் சமணம் :
கொங்கு நாட்டில் சமணம் பன்னெடுங் காலமாக வழக்கத்திலிருந்தது என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன. சமணக் கோயில்கள், கல்வெட்டுகள், சிற்பங்கள், செப்புத் திருமேனிகள் முதலியன நமக்குச் சான்று பகர்கின்றன.
கொங்கில் சமணம் :
சந்திர குப்தன் காலத்தில் சமணத் துறவிகள் வட நாட்டிலிருந்து மைசூர் மாநிலத்திலுள்ள சிரவண பெல்லி குளம் என்ற இடத்திற்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து தமிழகம் நோக்கி வந்தனர் [P.B. Desal, ‘Jainism In South India’ p.3, 18 and 32.] என்று பி.பி.தேசாய் கூறுகின்றார். கி.மு. முதல் நூற்றாண்டில் சிரவண பெல்லி குளத்தில் இருந்த சிம்ம நந்தி என்னும் சமண முனிவர் அப்பகுதியில் கங்க அரசை நிறுவியதாகக் கூறுகின்றனர். [புலவர் குழந்தை ‘கொங்கு நாடு’. ப.ம். 391.1. இரண்டொருவர் தவிர, கங்க அரசர்கள் அனைவரும் சமணராகவே இருந்தனர். அதனால் மைசூரில் சமணர் செல்வாக்குப் பெற்றிருந்தனர். கங்கர்கள் கொங்கு நாட்டைக் கைப்பற்றி அங்கும் தங்கள் ஆட்சியை நிறுவினர். கொங்கு நாட்டை ஆண்ட முதல் அரசன் கங்க கொங்கணீவர்மன், இவன் கி.பி.179 இல் பட்டாபிசேகம் செய்து கொண்டவன். [கொங்கு தேச ராசாக்கள்]. இவன் காலத்திலும், இவனுக்குப் பிறகு வந்த அரசர்கள் காலத்திலும் கொங்கு நாட்டில் சமண மதம் சீரும் சிறப்பும் பெற்று வளர்ச்சியடைந்தது.
கொங்கில் சமணக் கோயில்கள் :
கங்க அரசர்கள் காலத்தில் கொங்கு நாட்டில் பல சமணக் குகைகள் குடையப்பட்டன. விசய மங்கலம் அறச்சலூர், ஐவர்மலை, ஆர்நாட்டார் மலை (புகழியூர்), திருச்செங்கோடு, பருத்திப் பள்ளி முதலிய இடங்களில் சமணர் குகைகளும் படுக்கைகளும் காணப்படுகின்றன. தர்மபுரியிலுள்ளமல்லிகார்சுனன் கோயில் சமணத் தீர்த்தங்கரர் மல்லி நாதருக்கு எடுக்கப்பட்டதாகும்.[மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும், ப.ம். 165.1 அதமன் கோட்டையில் இரண்டு சமணக் கோயில்கள் காணப்படுகின்றன
கொங்கில் சமணத் திருமேனிகள் :
கொங்கு நாட்டில் பல இடங்களில் சமணச் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உடுமலை வட்டம் திருமூர்த்திமலையின் அடிவாரத்தில் ஒரு பாறையில் சமணத்தீர்த்தங்கரர் உருவம் காணப்படுகின்றது. பருத்திப் பள்ளியில் சமணத் தீர்த்தங்கரரான ஆதிநாதர் சிலையும் பல சமணர் சிலைகளும் காணப்படுகின்றன. கொடுமுடியில் உள்ள அறப்பள்ளீசுரர் கோயிலிலும் சமணர் சிற்பங்கள் உள்ளன. தாராபுரம் கோட்டை மேட்டில் சில சமணர் சிலைகள் உள்ளன. ஐவர்மைைலயில் பல சமணர் சிற்பங்கள் உள்ளன. அமணலிங்கம் என்ற பெயரில் பொள்ளாச்சி, உடுமலை வட்டங்களில் சமணச் சிலைகள் வழங்கப்படுகின்றன.
கொங்கியில் சமணப் பெயர்கொண்ட ஊர்கள்
கொங்கு நாட்டில் சமணம் பெற்றிருந்த செல்வாக்கைச் சில ஊர்ப் பெயர்களும் பறைசாற்றுகின்றன. பருத்திப் பள்ளி, கூட்டப்பள்ளி, அரியூர், அரியானூர், அரூர், மோளிப்பள்ளி, பள்ளிப்பாளையம், பெரங்கலூர்ப்பள்ள, பராமச்சுரப்பள்ளி, சீனாபுரம், திங்களூர் அரசண்ணாமலை, அருவாப்பள்ளியூர், அறச்சலூர் போன்ற ஊர்ப்பெயர்கள் சமணத்திற்குச் சான்று பகர்கின்றன.
கொங்கியில் சமணப் பெரியார்கள் :
கொங்கு நாட்டில் பல சமணப் பெரியார்கள் வாழ்ந்திருக்கிறார்கள். பெருங்கதையின் ஆசிரியர் கொங்குவேளிர் விசயமங்கலத்தைச் சார்ந்தவர். சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் விசயமங்கலத்துக்கு அருகிலுள்ள நிரம்பை என்ற ஊரைச் சார்ந்தவர். நன்னூல் ஆசிரியரான பவணந்தி முனிவர் கொங்கு நாட்டில் உள்ள சீனாபுரத்தைச் சார்ந்தவர்.
கொங்கு நாட்டில் சமண சமயம் மிகுந்த செல்வாக்குப் பெற்று விளங்கியது. (நூலிலிருந்து)
கல்வெட்டுவழிப் பண்பாட்டியல் – முனைவர் பெ. அர்த்தநாரீசுவரன்
விலை: 60/-
வெளியீடு: கௌரா பதிப்பகம்
Buy this book online: https://www.heritager.in/product/kalvettuvazhi-panpattiyal/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers