தனிப்பட்ட எதிரியை ஊரார் எதிரியாக மாற்றும் உளவியலே இது.
“சங்க காலத்திற்குப் பின்பு நீண்ட இருண்ட காலம் தொடர்கிறது. மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலான இக் காலத்திய நிகழ்வுகளை அறிவது கடினமே. ஆனால், ஆறாம் நூற்றாண்டளவில் அடுத்த காட்சிக்காகத் திரை விலகும்போது, பண்பாட்டின் எதிரிகளாகச் செயல்பட்டுள்ள களப்பிரர் எனும் தீய அரசர்கள், தமிழ்நாட்டில் நிலைபெற்றிருந்த அரசுகளை அகற்றித் தம் ஆதிக்கத்தை நிறுவினர் என அறிய முடிகிறது.” மேற்கூறிய வரிகள், களப்பிரர் காலம் குறித்த நீலகண்ட சாஸ்திரி யாரின் (1958 : 138-9) வர்ணனையாகும். தமிழ்நாட்டு வரலாற் றியலில் இக்கருத்துப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, களப்பிரர் என்பார் தமிழ்ப் பண்பாட்டின் எதிரிகள், தீய அரசர்கள், அவர்களே தமிழ்நாட்டின் வரலாற்றுத் தொடக்கக் காலத்திய சேர, சோழ, பாண்டிய அரசுகளை அகற்றியவர்கள் எனக் கருதும் போக்கு நிலைபெற்றுவிட்டது. மேலும், களப்பிரர் குறித்த ஆய்வில் அன்னாருக்குப் பிந்தைய தரவுகளே பெரும் பாலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்தரவுகளை ஆக்கியோர் உண்மையைக் கூறும் மனநிலை உள்ளவர்களா என அறியும் எதிர்மறை அகப் பகுப்பாய்வு உத்தி பயன்படுத்தப்படாது, இத்தரவுகள் கூறும் செய்திளை உண்மைகளாக ஏற்றுக் கொள்ளும் போக்கு உள்ளது. இது தவறான வரலாற்றியல்அணுகுமுறையாகும். மேலும், களப்பிரர் காலத்திற்குரிய முதல் மைத் தரவுகள் முறையாகக் கையாளப்படாமையால், களப்பிரர் காலத்திய தமிழ்நாட்டு வரலாற்றை நாம் முழுமையாக அறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இத்தகைய தவறு களைக் கருத்திற் கொண்டு ஆய்வுகள் தொடரப்படவேண்டும்.
களப்பிரர் என்னும் கலி அரசன், களப்பாளர் குலம் ஆகிய தொடர்கள் பாண்டியரின் செப்பேடுகளில் காணப்படுகின்றன. களபர் எனும் பிராகிருதச் சொல்லிலிருந்து களப்பர் களப்பாளர், களப்பிரர் ஆகிய சொற்கள் பெறப்பட்டன என வெங்கட்ராமன் (1956: 96) கருதுகிறார். ‘களவர் கோமான் புள்ளி (அகம் : 61, 342) எனும் இலக்கியத் தொடர்களின் அடிப்படையில் `களவர்` எனும் மக்களின் தொன்மையைக் குறிப்பிடும் அரங்கசாமி (1947-48: 173மு), களப்பிரர் குறித்துப் பின்வரும் செய்திகளைக் கூறுகிறார்: களப்பாளர் எனும் சொல், களமு களம்பு →களபு களவர் களப்பாளர் எனப் பெறப்படும். களவர் எனும் தமிழ்ச் சொல்லே கன்னடத்தில் களபர் எனவும், வடமொழியில் களப்பிரர் எனவும் மாற்றம் பெற்றுள்ளது. களம் எனும் சொல்லிலிருந்து பெறப்படும் களபர், போர்க்களம் (களம்) சார்ந்த மக்கள் என விளக்கம் பெறும்.
களப்பிரர் எனும் சொல்லை இனக்குழுவின் பெயராகக் கருதும் வெங்கட்ராமன் (1956: 94மு), ‘கலி’ என்பது களப்பிர அரச மரபைக் குறிக்கும் பெயர் எனக் கூறுகிறார். களப்பிரர் இனக்குழு எனும் கருத்தை ஏற்றுக்கொள்ளும் அருணாச்சலம் (1979: 16-7), ‘கலி அரசர்’ எனும் தொடரைக் கொடிய, தீய அரசர் என விளக்குகிறார். ‘களப்பிரர் எனும்,’ ‘களப்பாளர் குலம்’ ஆகிய தொடர்களிலிருந்து ‘கலியரசர்’ எனக் குறிப்பிடப்படு வோர் களப்பிரர் அல்லது களப்பாளர் குலத்தவர் என்பது புலப்படும்; இத்தொடர்களின் வேர்ச்சொல் ‘களம்’ எனக் கொள்வோமாயின், யானையைக் (களம்) கூட்டச்சின்னமாகக் கொண்ட மக்களே களப்பிரர் எனக் கருதுவதில் தவறில்லை. களப்பிரர், களப்பாளர் எனப் பன்மையில் இவர்கள் குறிப்பிடப் படுவதால் இவர்கள் யானையைக் கூட்டச்சின்னமாகக் கொண்ட இனக்குழுவினர் எனக் கூறலாம். ‘கலியரசர்,’ அதாவது, கொடிய, தீய அரசர் எனக் களப்பிர ஆட்சியாளர்களைச் சுட்டும் வழக்கு பிற்றைநாளைய மனப்போக்கால் தோன்றியது எனப் பின்னர்க் காண்போம்.
வரலாற்றுத் தொடக்கக் காலத்திய சேர, சோழ, பாண்டிய அரசுகள் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வீழ்ச்சியுற்றன. களப்பிரரே இவ்வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம்எனக் கருதப்படுகிறது. ஆனால், மூவேந்தரின் வீழ்ச்சிக்கு அகக் காரணிகளே பெரிதும் வழிவகுத்தன என முன்னர் விளக்கப் பட்டது (இயல் 4). ‘களப்பிரர் இனக்குழு’ எனும் கருத்தை ஏற்றுக்கொள்வோமாயின், அவர்கள் சிறுசிறு கூட்டமாகத் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவியிருப்பர் எனக் கொள்வதே பொருத்தமாகும். அவ்வாறாயின், களப்பிரர் ஒட்டுமொத்தமாக இங்கு நுழைந்து, இங்கு நிலைபெற்றிருந்த மூவேந்தரை வீழ்த்தினர் என்பது தவறான கருத்தாகும். படிப்படியே சிறுசிறு குழுக்களாக இங்குக் குடிபெயர்ந்த களப்பிரர், இங்கு நலி வடைந்த நிலையிலான அரசியல் சூழல் தோற்றுவித்திருந்த வெற்றிடத்தை நிரப்பினர் எனக் கொள்வதில் தவறில்லை. களப்பிரர் குறித்த ஆய்வில் அவர்கள் காலத்திய முதன்மைத் தரவுகளுக்கே முதலிடம் அளிக்கப்படவேண்டும். எனவே, இக்காலத்திற்குரிய, சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சியில் கிடைத்துள்ள மூன்று கல்வெட்டுக்கள் கூறும் செய்திகளைச் சுப்பராயலு (ஆவணம் : 1 : 57மு) அளித்துள்ள விளக்கத்தின் அடிப்படையில் காண்போம்.
பூலாங்குறிச்சிக்கருகேயுள்ள மலையில், எண்பதுகளின் தொடக்கத்தில் கண்டறியப்பட்டுள்ள மூன்று வட்டெழுத்துக் கல்வெட்டுக்களில், இரண்டாவது கல்வெட்டு முற்றிலும் சிதை வடைந்துள்ளது; எஞ்சிய இரு கற்பொறிப்புக்களும் ஓரளவு நல்ல நிலையில் உள்ளன. சேந்தன் எனும் ஆட்சியாளனின் 19*ஆம் ஆட்சியாண்டுக்குரிய முதற் கல்வெட்டில், படைத்தலைவன் ஒருவனின் நிலக்கொடை கூறப்படுகிறது. மூன்றாம் கல்வெட்டில் குறிப்பிடப்படும் கோவில்கள் இந்நிலக் கொடையைப் பெற்றி ருக்கலாம். நிலக் கொடையில் இடம்பெறும் நன்செய், புன்செய் நிலங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பிரமதாயங்களில் (அந்தணர் குடியிருப்புக்களான பிற்றை நாளைய பிரமதேயங்கள்) உள்ள வையாகும். கொடை வழங்கியவன் இவற்றை விலைக்கு வாங்கி, கிழமை (நில உரிமை), காராண்மை (பயிர் செய்யும் உரிமை), மீயாட்சி (மேலாண்மை) ஆகிய உரிமைகளுடன் நிலக் கொடை வழங்கியுள்ளான். கொடையைப் பெற்ற மூன்று கோவில்களுள் ஒன்றான பச்செறிச்சில் (பூலாங்குறிச்சி) தேவ குலம், பாண்டி நாட்டிலும் கொங்கு நாட்டிலும் காராண்மை,களம் (கதிரடிக்கும் இடம் குறித்த உரிமை), மீயாட்சி, காலாசம் (கால்நடைகள் குறித்த உரிமை?), தோட்டம் ஆகியவற்றிற்கும் உரிமை பெற்றிருந்தது. பிரமதாயக் கிழவர் (அந்தண நில உரிமை யாளர்), நாடு காப்போர், புறங்காப்பார் ஆகியோரின் மேற் பார்வையில் மேற்குறித்த கோவில்களைச் சார்ந்தவர்களும் (தமர்),பூலாங்குறிச்சிக்கருகேயுள்ள மலையில், எண்பதுகளின் தொடக்கத்தில் கண்டறியப்பட்டுள்ள மூன்று வட்டெழுத்துக் கல்வெட்டுக்களில், இரண்டாவது கல்வெட்டு முற்றிலும் சிதை வடைந்துள்ளது; எஞ்சிய இரு கற்பொறிப்புக்களும் ஓரளவு நல்ல நிலையில் உள்ளன. சேந்தன் எனும் ஆட்சியாளனின் 19*ஆம் ஆட்சியாண்டுக்குரிய முதற் கல்வெட்டில், படைத்தலைவன் ஒருவனின் நிலக்கொடை கூறப்படுகிறது. மூன்றாம் கல்வெட்டில் குறிப்பிடப்படும் கோவில்கள் இந்நிலக் கொடையைப் பெற்றி ருக்கலாம். நிலக் கொடையில் இடம்பெறும் நன்செய், புன்செய் நிலங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பிரமதாயங்களில் (அந்தணர் குடியிருப்புக்களான பிற்றை நாளைய பிரமதேயங்கள்) உள்ள வையாகும். கொடை வழங்கியவன் இவற்றை விலைக்கு வாங்கி, கிழமை (நில உரிமை), காராண்மை (பயிர் செய்யும் உரிமை), மீயாட்சி (மேலாண்மை) ஆகிய உரிமைகளுடன் நிலக் கொடை வழங்கியுள்ளான். கொடையைப் பெற்ற மூன்று கோவில்களுள் ஒன்றான பச்செறிச்சில் (பூலாங்குறிச்சி) தேவ குலம், பாண்டி நாட்டிலும் கொங்கு நாட்டிலும் காராண்மை,களம் (கதிரடிக்கும் இடம் குறித்த உரிமை), மீயாட்சி, காலாசம் (கால்நடைகள் குறித்த உரிமை?), தோட்டம் ஆகியவற்றிற்கும் உரிமை பெற்றிருந்தது. பிரமதாயக் கிழவர் (அந்தண நில உரிமை யாளர்), நாடு காப்போர், புறங்காப்பார் ஆகியோரின் மேற் பார்வையில் மேற்குறித்த கோவில்களைச் சார்ந்தவர்களும் (தமர்),பூலாங்குறிச்சிக்கருகேயுள்ள மலையில், எண்பதுகளின் தொடக்கத்தில் கண்டறியப்பட்டுள்ள மூன்று வட்டெழுத்துக் கல்வெட்டுக்களில், இரண்டாவது கல்வெட்டு முற்றிலும் சிதை வடைந்துள்ளது; எஞ்சிய இரு கற்பொறிப்புக்களும் ஓரளவு நல்ல நிலையில் உள்ளன. சேந்தன் எனும் ஆட்சியாளனின் 19*ஆம் ஆட்சியாண்டுக்குரிய முதற் கல்வெட்டில், படைத்தலைவன் ஒருவனின் நிலக்கொடை கூறப்படுகிறது. மூன்றாம் கல்வெட்டில் குறிப்பிடப்படும் கோவில்கள் இந்நிலக் கொடையைப் பெற்றி ருக்கலாம். நிலக் கொடையில் இடம்பெறும் நன்செய், புன்செய் நிலங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பிரமதாயங்களில் (அந்தணர் குடியிருப்புக்களான பிற்றை நாளைய பிரமதேயங்கள்) உள்ள வையாகும். கொடை வழங்கியவன் இவற்றை விலைக்கு வாங்கி, கிழமை (நில உரிமை), காராண்மை (பயிர் செய்யும் உரிமை), மீயாட்சி (மேலாண்மை) ஆகிய உரிமைகளுடன் நிலக் கொடை வழங்கியுள்ளான். கொடையைப் பெற்ற மூன்று கோவில்களுள் ஒன்றான பச்செறிச்சில் (பூலாங்குறிச்சி) தேவ குலம், பாண்டி நாட்டிலும் கொங்கு நாட்டிலும் காராண்மை,களம் (கதிரடிக்கும் இடம் குறித்த உரிமை), மீயாட்சி, காலாசம் (கால்நடைகள் குறித்த உரிமை?), தோட்டம் ஆகியவற்றிற்கும் உரிமை பெற்றிருந்தது. பிரமதாயக் கிழவர் (அந்தண நில உரிமை யாளர்), நாடு காப்போர், புறங்காப்பார் ஆகியோரின் மேற் பார்வையில் மேற்குறித்த கோவில்களைச் சார்ந்தவர்களும் (தமர்),நிலம் உழுவோரும் (குடி) செயல்படுவர் எனக் கல்வெட்டு மேலும் கூறுகிறது. மூன்றாம் கல்வெட்டில் சேந்தன் கூற்றனின் 192ஆம்
ஆண்டுடன், நாள் 36, தைப் பிறை நாள் 12 எனும் குறிப்புக்களும் காணப்படுகின்றன. கடலகப் பெரும்படையின் தலைவனும் வேள் மருகனின் புதல்வனுமாகிய என்குமான் என்பான் மூன்று கோவில்களை எழுப்பிய செய்தி இக்கல்வெட்டில் கூறப்படுகிறது. ஒல்லையூர் கூற்றத்து வேள்கூருப் பச்செறிச்சில் மலையில் கட்டப்பட்ட தேவ குலம் ஒரு கோவிலாகும். முத்தூர்க் கூற்றத்து விளமரில் ஒரு தேவகுலம், மதுரை உலவியத்தான் குளத்தின் வட கரையில் அமைந்த தாபதப் பள்ளியில் வாசி தேவனார்க்காக ஒரு கோட்டம் ஆகியன பிற கோவில்களாகும். அத்திகோசத்தார் (யானைப் படைக்குழு), உள்மனையார் (பிற்றை நாளைய அகம்படி முதலிகள் எனப்படும் அரச அதிகாரிகள்), நாற்பாற் திணைகள் (பல்துறை சார்ந்த அரச அதிகாரிகள்) ஆகியோரின் பாதுகாப்பில் இம்மூன்று கோவில்களும் இருந்தன. பாண்டங்கர் (பண்டாரகர்), சேவுகர், பிரம்மச்சாரி, தருமி, ஊர்க்காவல் கொண்டார் ஆகியோரால் தெரிவு செய்யப்பட்டோரே கோவிற் பூசாரிகளாகப் பணிமேற் கொள்வர். குழலூர்த் துஞ்சிய உடையாரால் (அரசனால்) நியமனஞ் செய்யப்பட்ட குடும்பியரின் (நிலம் உழும் குடிகள்) வழியினரே இந்நிலங்களில் பயிரிடும் உரிமை பெறுவர். படைத் தலைவனின் இவ்வாணை பெருந்திணை அலுவலர்களுக்கும் அறிவிக்கப்பட்டு, தமன் காரிக்கண்ணனால் ஓலையில் எழுதப் பட்டு வேனாட்டான் நாரியங்காரியால் கற்பொறிக்கப்பட்டது. இவ்வாணையை மாறுபடுவோர்க்கு 1600 கானம் தண்டம் விதிக்கப்படும்.
இக்கல்வெட்டுக்களிலிருந்து பின்வரும் செய்திகளைத் தொகுத்துக் கூறலாம். ‘கொங்கு நாடு’ எனும் சொல்லாட்சி இடம்பெறும் முதற்கல்வெட்டுச் சான்று இதுவேயாகும். கொங்கு நாட்டிற்கே உரிய கால்நடைச் செல்வம் (?), தோட்டம் ஆகியன குறிப்பிடப்படுகின்றன. இக்கல்வெட்டுக்களுக்குரிய ஆட்சியாளர் கொங்கிலும் ஆதிக்கம் பெற்றிருந்தனர் எனக் கொள்வதில் தவறில்லை. அடுத்து, பிரமதாயம் எனும் சொல் லாட்சி மும்முறை காணப்படுகிறது. கொடையாக வழங்கப் பட்ட நிலங்கள் சில பிரமதாயங்களில் இடம்பெற்றிருந்தன. பிரமதாயக் கிழவர்களான அந்தண நில உரிமையாளர்கள் கோவில் நிர்வாகப் பொறுப்பில் அமர்த்தப்பட்டனர். மேலும், ஒல்லையூர்க் கூற்றத்துச் சிற்றையூர் பிரமதாயமாக மாற்றப்பட்டுள்ளது. பிற்றை நாளைய கல்வெட்டுக்களிலும் பிரமதாயக் குடியிருப்பாகவே இவ்வூர் குறிப்பிடப்படுகிறது. பிரமதாயக் கிழவர் நிர்வாகப் பொறுப்பேற்ற கோவில்கள் வைதீக சமயம் சார்ந்தவை எனக் கருதலாம். எனவே, பூலாங்குறிச்சிக் கல்வெட்டுக்களின் காலத்தில் பிரமதாயக் குடியிருப்புக்கள் காணப்பட்டன; புதிய பிரமதாயக் குடியிருப்புக்களும் உருவாக்கப்பட்டன; பிரமதாயக் கிழவர்கள் பிற்றை நாளைப் போன்று வைதீக சமயக் கோவில்களின் நிர்வாகத்திலும் இடம் பெற்றனர். பிற்றை நாளில் சிறப்பாக இடம்பெறும் நிலம் தொடர்பான ‘காராண்மை,’ ‘மீயாட்சி’ ஆகிய சொற்கள் நிர்வாகம் தொடர்பான ‘திணை’ முதலான சொற்கள் இக்காலத் தைய சமூக அமைப்பைப் புலப்படுத்தும். இவ்வாறாகத் தமிழ்ச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை இக்கல்வெட்டுக்களின் சிறப்பு என ரமேஷ் (1985: 5) கருதுகிறார். மேற்குறித்த கல் வெட்டுத் தொடர்கள் புலப்படுத்தும் சமூக அமைப்பு, வரலாற்றுத் தொடக்கக் காலச் சமூக அமைப்புக்கு வேறுபட்ட தாகக் காணப்படுகிறது. பல்லவர்-சோழர் காலத்தில் முதிர்ச்சி பெற்ற நிலையில் காணப்படும் சமூக உறவுகளுக்கும் அரசு நிர்வாக அமைப்பிற்கும் முன்னோடியாக இதனைக் கூறலாம்.
இனி இக்கல்வெட்டுக்களின் காலத்தை அறிய முயல்வோம். ஆண்டு 192 எனும் குறிப்பைச் சக ஆண்டாகக் கருதி, இக் கல்வெட்டுக்களின் காலம் கி.பி. 270 என நாகசாமி கூறுகிறார் (தினமணி : 4-6-1981). ஆனால், எழுத்தமைதி அடிப்படையில் இவை கி.பி. ஆறாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தவை எனச் சுப்பராயலு கருதுகிறார். கல்வெட்டில் காணப்படும் காலக் குறிப்புக்கள் மற்றும் அகச் சான்றுகளின் அடிப்படையில் கல் வெட்டின் காலம் கி.பி. 500 எனச் சேதுராமன் கணித்துள்ளதை ரமேஷ் (1985: 5) சரியானது என ஏற்றுக்கொள்கிறார். இக் கல்வெட்டின் காலம் கி.பி. 500 எனக் கூறும் கிருஷ்ணன் (1986: 235மு), ஆண்டு 192 என்பது இக்கல்வெட்டை வெளியிட்ட அரச மரபின் தொடக்கத்தைக் குறிப்பதாகக் கருதுகிறார். அவ்வாறாயின், இவ்வரசின் ஆதிக்கம் கி.பி. 300 அளவில் தொடங்கியது என்பது பெறப்படும். கிருஷ்ணன் குறிப்பிடும் காலக்கணிப்பு, களப்பிரர் காலத்திற்குரிய காலவரையறைக்கு ஒத்ததாகக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. அவ்வாறாயின் இவ்வரசர்கள் களப்பிரரா எனும் வினா எழுவது இயல்பே.
இருண்ட காலம் எனக் கருதப்படும் இக்கட்டத்தில், அரச குலம் ஒன்று சோழ நாட்டின் சில பகுதிகளிலும் பாண்டி நாட்டிலும் கொங்கு நாட்டிலும் தொடர்ந்து ஆதிக்கம் பெற்றிருந்தது என்பது தமிழ்நாட்டு வரலாற்றில் புதிய செய்தியாகும். இவ்வரச குலம் களப்பிரர் எனக் கொண்டால் அக்கருத்து ஏற்புடையதே. எனத் தோன்றும். இருப்பினும், ‘சேந்தன்’ என அரசரின் பெயரைச் சேந்தன் அல்லது ஜெயந்தன் எனும் பாண்டிய அரசரின் பெயர்களோடு ஒப்பிட்டு, இவ்வரசகுலம் பாண்டியரே எனக் கருதுவர். அவ்வாறாயின் வரலாற்றுத் தொடக்கக் காலத் திலிருந்து தொடர்ந்து பாண்டியர் ஆட்சிபுரிந்தனர் என்றல்லவா சுருதவேண்டியுள்ளது. வரலாற்றுத் தொடக்கக் காலத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் களப்பிரர் ஆதிக்கம் பெற்றிருந்தனர். கி.பி. ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாண்டியரும் பல்லவரும் களப்பிரரை அகற்றித் தம் ஆதிக்கத்தை ஏற்படுத்தினர் எனும் பொதுவான கருத்திற்கு இது முரணாக உள்ளது. எனவே, பூலாங்குறிச்சிக் கல்வெட்டுக்களுக்குரிய அரசர்கள் களப்பிரர் குலத்தவர் எனக் கொள்வதே பொருத்தமானதாகும். கல்வெட்டு சுட்டும் கடலகன் (படைத் தலைவன்) முதலான பெயர்கள் பாண்டியர்க்கே உரியதெனினும் பாண்டியரை வென்ற களப்பிரர். இக்கால மரபின்படி இப் பெயர்களைப் பயன்படுத்தியிருக்கலாம் எனும் சுப்பராயலுவின் கருத்தும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.
இவ்வரசர்கள் களப்பிரர் எனக் கொள்வோமாயின் இக் கல்வெட்டுக்கள் புலப்படுத்தும் செய்திகளின் அடிப்படையில் களப்பிரர் காலத்தை நாம் மறு மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது. களப்பிரர் சமண சமயத்தவர்; எனவே, அவர்கள் வைதீக மதத்திற்கு எதிரிகள்; வைதீக மதத்தின் காப்பாளர்களான அந்தணர்க்கு வழங்கப்பட்ட பிரமதாயக் கொடைகள் பறிக்கப்பட்டன; மேலும், தமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் அவர்கள் எதிரிகள். இவையே, தமிழ் நாட்டு வரலாற்றியலில் களப்பிரர் குறித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும். முதலில் வைதீக மதத்தின் எதிரிகள் எனும் கருத்தை மதிப்பீடு செய்வோம்.களப்பிரர் ஆதிக்கத்திற்கு முன்பு பாண்டியனால் வழங்கப்பட்ட பிரமதாய நிலக் கொடை களப்பிரர் காலத்தில் பறிக்கப்பட்டது எனவும், அந்நிலக் கொடை மறுபடியும் உரியவர்க்கு வழங்கப்பட்டது எனவும் வேள்விக்குடிச் செப்பேடுகள் அறிவிக்கின்றன. இச்செய்தியை நாம் உண்மையென ஏற்றுக்கொள்வோமாயின், களப்பிரர் ஆதிக்கத்திற்கு முன்பே, அதாவது, வரலாற்றுத் தொடக்கக் காலத்திலேயே பிரமதாய நிலக் கொடைகள் தமிழ்நாட்டில் வழக்கில் இருந்தன எனத் தோன்றும். மேலும், பிரமதாய நிலக் கொடைகளை ஒரு சிறப்புக் கூறாகக் கொண்ட வைதீக மதமும் வரலாற்றுத் தொடக்கக் காலத்திலேயே இங்கு ஆதிக்கம் பெற்றிருந்தது எனவும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். வரலாற்றுத் தொடக்கக் காலத் தமிழ்ச் சமுதாய அமைப்பிற்கு (இயல் 4, 5), இயைந்தவையாக இக்கருத்துக்கள் உள்ளனவா? அதாவது, வரலாற்றுத் தொடக்கக் காலத்திலேயே வைதீக மதம் இங்கு நிலைபெற்றிருந்தது, பிரமதாய நிலக் கொடைகளும் வழக்கில் இருந்தன எனும் செய்திகள் வரலாற்றுத் தொடக்கக் காலத்திய தரவுகளின் அடிப்படையில் உறுதிசெய்யப்படின், அதற்குப் பின்னர் ஆதிக்கம் பெற்ற களப்பிரர் வைதீக மதத்திற்கு எதிரிகளாகச் செயல்பட்டு, பிரமதாயக் கொடைகளைப் பறித்தனர் எனும் கருத்தை ஏற்றுக் கொள்ளலாம்.
வரலாற்றுத் தொடக்கக் காலத்திய இலக்கியத் தரவுகளில் ஆங்காங்கே சிவன் முதலான வைதீக மதக் கடவுளர்கள் தொடர் பான குறிப்புக்கள் காணப்படினும், அவர்கள் மக்கள் வழி பாட்டில் இடம்பெறவில்லை என நாராயணசாமி அய்யர் (1974: 110மு) கூறுகிறார். முன்னரே கூறப்பட்டது போன்று, இயற்கையோடு இயைந்த வழிபாட்டு முறைகளும் இயற்கைச் சூழலின் வெளிப்பாடாக அமைந்த கடவுளருமே வரலாற்றுத் தொடக்கக் காலத் தமிழ்ச் சமுதாயத்தில் காணப்பட்டன. வைதீக மதத்தின் சிறப்புக் கூறான ‘சாதி’ முறை அறியப்பட்டிருப்பினும், தமிழ்ச் சமுதாய அமைப்பில் இம்முறை இடம்பெறவில்லை. இதுபோன்றே பிரமதாய நிலக் கொடைகளும் இக்காலத்திய தரவுகளில் காணப்படாததாகும். அரசனுக்காகப் போரிட்ட வீரர்கள் விளை நிலங்களைப் பரிசிலாகப் பெற்றமையே இலக்கியத் தரவுகளில் காணப்படுகிறது. பிரமதாயக் கொடைகள் குறித்த விவரங்கள் பிற்றை நாளில் இணைக்கப்பட்ட பதிற்றுப்பத்தின் பதிகங்களில் மட்டுமே காணப்படுகின்றன. ‘பிரமதாயம்’ எனும் சொல்லாட்சி, பதிகங்களிலும் பூலாங் குறிச்சிக் கல்வெட்டிலும் எத்தகைய மாற்றமுமின்றி இடம் பெற்றுள்ளமையால், பதிற்றுப்பத்தின் பதிகங்கள் இக்கல்வெட்டின் காலத்தில் புனையப்பட்டிருக்கலாம் எனும் குருக்களின் (1995 : 161மு), கருத்துக் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். எனவே, களப்பிரர் காலத்திற்கு முந்தைய வரலாற்றுத் தொடக்கக் காலத்தில் தமிழ்நாட்டில் வைதீக மதம் நிலை பெறவில்லை எனவும் பிரமதாயக் கொடைகள் வழக்கில் இல்லை எனவும் கருத இடமுண்டு. அவ்வாறாயின், தம் ஆதிக்கத்திற்கு முன்பு இங்கு நிலைபெற்றிராத வைதீக மதத்திற்குக் களப்பிரர் எதிரிகள் எனவும் அன்னாரின் வருகைக்கு முன்பாக இங்கு வழக்கில் இல்லாத பிரமதாயக் கொடைகளை அவர்கள் பறித்தனர் எனவும் கூறுவது எங்ஙனம் பொருத்தமாகும்? இக்காலத்தில் பிரமதாயங்கள் வழக்கில் இருந்துள்ளன என்பது மட்டுமல்ல, புதிய பிரமதாயமும் தோற்றுவிக்கப் பட்டது என்பதைப் பூலாங்குறிச்சிக் கல்வெட்டுக்கள் புலப்படுத்தும். மேலும், பிரமதாயக் கிழவரான அந்தணர்கள் கோவில் நிர்வாகப் பொறுப்புக்களையும் ஏற்றுள்ளனர். இக்கோவில்கள் வைதீக மதம் சார்ந்தவையே எனும் உண்மை யையும் மறுக்க இயலாது. வைதீக மதத்திற்கும் பிரமதாயங் களுக்கும் எதிரிகளாகக் கருதப்படும் களப்பிரர் காலத்திய கல் வெட்டுக்கள் புலப்படுத்தும் உண்மைகள் இவை. களப்பிரர் காலத்தில்தான் பிரமதாய நிலக் கொடை அளிக்கும் வழக்குத் தோன்றியது என்பதும், புதிய பிரமதாயங்களும் இவ்வரசர் களால் தோற்றுவிக்கப்பட்டன என்பதும் மறுக்க இயலாத உண்மைகள். அவ்வாறாயின், களப்பிரர் காலத்தில் பிரமதாயம் பறிக்கப்பட்டது என வேள்விக்குடிச் செப்பேடுகள் கூறும் செய்தியை எவ்வாறு ஏற்றுக்கொள்வது? இச்சிக்கலை இரு வகைகளாக அணுகலாம். வேள்விக்குடிச் செப்பேடுகள் கூறும் செய்தியை ஒரு தனிப்பட்ட நிகழ்வாகக் கருதி, இதிலிருந்து களப் பிரர் வைதீக மதத்திற்கு எதிரிகள் எனும் முடிவை மேற் கொள்வது தவறு எனக் கூறலாம். அடுத்து, எதிர்மறை அகத் திறனாய்வு அடிப்படையில் செப்பேடுகளில் காணப்படும் செய்தி யைத் தொகுத்தவர்கள் உண்மையைக் கூறும் மன நிலையில் சரியான கண்ணோட்டத்தில், செயல்பட்டுள்ளார்களா என ஆய்வு செய்து உண்மையை அறியலாம். இது குறித்த ஆய்வைப் பின்னர் தொடரலாம்.
அடுத்ததாக, களப்பிரர் தமிழ்ப் பண்பாட்டின், தமிழ் மொழியின் எதிரிகள் எனும் கருத்தைக் கவனிப்போம். இங்குத் தமிழ்ப் பண்பாடு எனச் சுட்டப் பெறுவது களப்பிரர் வருகைக்கு முன்பு நடைமுறையிலிருந்த தமிழர் வாழ்வியல் என்றே பொருள்படும். இது குறித்த செய்திகளை நாம் முன்பே விளக்கி யிருப்பினும் (இயல் 4, 5) அதனைச் சுருக்கமாகக் காண்போம். தமிழ்நாட்டின் மருத நிலச் சமுதாயத்தில் செல்வக் குவிப்பால் பண்டைய இனக்குழுச் சமுதாயம் நலிவடையத் தொடங்கியது. வர்க்க வேறுபாடுகள் தோன்றின; அதனைப் பராமரிக்க அரசு தோன்றியது.உடலுழைப்பை நல்கி நேரடியாக உற்பத்தியில் ஈடுபட்ட ‘களமர்’ போன்றவர்கள் ‘கடைசியர்’ எனத் தாழ் நிலைக்குத் தள்ளப்பட்டனர். மகளிர் நிலையும் தாழ்வுற்றது. தம் துணைவரின் முறையற்ற நடத்தையையும் பொறுத்துக்கொண்டு அன்னார்க்குப் பணிவிடை செய்யும் துணைவியரே ‘அறக்கற் புடையோர்’ எனப் போற்றப்பட்டனர். இனக்குழுச் சமுதாயத் திற்குரிய ‘பகுத்தல்,’ பரிசு வழங்கல்’ ஆகியன கைவிடப்பட்ட மையால், புலவர் முதலானோர் ஏழ்மைநிலைக்குத் தள்ளப் பட்டனர். மேல்நிலையாக்க மாற்றம் ஊக்குவிக்கப்பட்டது. ஆனால், வன்புலப் பகுதியில் செல்வ வளமின்மையால் பண்டைய இனக்குழு வாழ்வு நிலையே தொடர்ந்தது. அதனாற்றான், வன்புல வாழ்வியல் புலவரால் (புறம்: 335) போற்றப்பட்டது. இவையே வரலாற்றுத் தொடக்கக் காலத்திய இலக்கியத் தரவுகள் புலப்படுத்தும் தமிழர் வாழ்வியல் குறித்த செய்திகளாகும்.
இனி, களப்பிரர் காலத்திய தரவுகள் காட்டும் செய்திகளைக் காண்போம். வணிகப் பொருளியலே செல்வக் குவிப்பிற்கு முக்கியக் காரணம் என்பதைச் சிலப்பதிகாரம் புலப்படுத்தும். திடீர்ச் செல்வம் வணிகரின் தனிமனிதச் சிதைவிற்கு வழிவகுத்தது. கோவலன் போன்ற வணிகர் குல இளைஞர்கள் நிலைதடுமாறச் செல்வம் காரணமாயிற்று. ஊழ்வினைத் தத்துவத்தின் அடிப் படையில் நிலைதடுமாறி வாழும் செல்வரின் நிலை நியாயப் படுத்தப்பட்டது. செல்வத்தின் நிலையாமை வலியுறுத்தப்பட்டு, கூத்தாட்டு அவைக்களத்தில் கூடும் கூட்டத்தைப் போன்றே தம்மிடம் குவியும் செல்வத்தையும் கருதவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.’உழுவோர் – உழுவித்துண்போர்’ என இரு குழுக்கள் சமுதாயத்தில் நிலைபெற்று, உழைப்போர்-உழைப்பின் பயனைத் துய்ப்போர் என வர்க்க வேறுபாடு முதிர்ச்சி பெற்ற நிலையில் காணப்பட்டது. சமுதாயத்தில் ஏழ்மை நிலை பெரும் சிக்கலாக உருவெடுத்தது. வறியவர்க்கு ஈதலே செல்வத்தின் பயன் எனும் பண்புநலன் வலியுறுத்தப்பட்டது. இத்தகு ஏற்றத்தாழ் வுடைய சமுதாய அமைப்பை ஊழ்வினைத் தத்துவத்தின் அடிப் படையில் நியாயப்படுத்தும் போக்கும் காணப்பட்டது. சிவி கையைச் சுமந்து செல்வோரும், அதில் சொகுசாகப் பயணிக்கும் செல்வரும் அறத்தின் அடிப்படையிலேயே அத்தகு நிலையை எய்தியுள்ளனர் (குறள் : 37) என வலியுறுத்தப்பட்டது. வறியவரின் பசிக் கொடுமையைக் கட்டுப்படுத்த இயலாத காரணத்தால் மணிமேகலையின் ஆசிரியர் அட்சய பாத்திரத்தையே படைக்க வேண்டியதாயிற்று.
வரலாற்றுத் தொடக்கக் காலம், அதனை அடுத்த களப்பிரர் காலம் ஆகியவற்றிற்குரிய தமிழர் வாழ்வியல் குறித்த செய்திகளை அவ்வக்காலத்திய தரவுகளின் அடிப்படையில் மேலே விவரித்தோம். வரலாற்றுத் தொடக்கக் காலத்தில் மருத நிலச் சமுதாயத்தில் மாற்றங்கள் நிகழ்ந்தமையால் இனக்குழுச் சமுதாயம் சிதைவடையத் தொடங்கியது. அதனையடுத்த காலத் திலும் இம்மாற்றங்களின் தாக்கம் தொடர்ந்தமையால், தீர்க்கமான வர்க்க வேறுபாடுகளைக் கொண்ட புதிய சமுதாய அமைப்பு, அதற்கே உரித்தான தீய விளைவுகளுடன், முதிர்ச்சி பெற்ற நிலையில் காணப்பட்டது. பூலாங்குறிச்சிக் கல்வெட்டில் காணப்படும் காராண்மை, மீயாட்சி, குடி முதலான சொல்லாட்சிகள் வர்க்க வேறுபாட்டின் அடிப்படையில் தோன்றிய புதிய சமுதாய உற்பத்தி உறவுகளைத் தெளிவாக உணர்த்தும். இத்தகு போக்கைத் தமிழ்ப் பண்பாட்டின் சீரழிவு என நாம் கருதினால், அதற்கான வித்து களப்பிரர் காலத்திற்கு முன்பேயே இடப்பட்டது என்பதைக் கருத்திற் கொள்ள வேண்டும். எனவே, இத்தகு மாற்றங்களுக்குக் களப்பிரரைக் காரணமாகக் கருத இயலாது. வரலாற்றுத் தொடக்கக் காலத்திய மூவேந்தர்களின் ஆட்சி முடிவுற்று அவ்வெற்றிடத்தில் களப்பிரர் ஆதிக்கம் நிலைபெற்றமை அரசியல் தொடர்பான மாற்றமாகும். வரலாற்றுத் தொடக்கக் காலத் தமிழ்ச் சமுதாயத்திற் காணப்பட்ட அகக் காரணங்களே மூவேந்தரின் வீழ்ச்சிக்கு வழி வகுத்தன என முன்பே கண்டோம். எனவே, அரசியல் தொடர்பான இம்மாற்றத்திற்கும் களப்பிரர் காரணமல்ல என்றே கருதவேண்டியுள்ளது.
இறுதியாக, களப்பிரர் தமிழ் மொழியின் எதிரிகளாகச் செயல்பட்டனரா என்பதை ஆய்வு செய்வோம். மக்களின் கருத்துப் பரிமாற்றத்திற்கு மொழி ஒரு கருவியாகும். அவ்வக் காலத்திய சமுதாய அமைப்பைப் பிரதிபலிப்பவையாக, அச்சமுதாய அமைப்பை நிலைப்படுத்தும் முயற்சியின் வெளிப் பாடாக இலக்கியங்களைக் கருதலாம். இவ்வகையில் வரலாற்றுத் தொடக்கக் காலத்திய இலக்கியங்கள் பிற்றை நாளில் தொகுக்கப் பட்டு எட்டுத்தொகை, பத்துப்பாட்டு எனும் இரு தொகுதி களாக அறியப்பட்டன. இனக்குழுச் சமுதாயத்திலிருந்து வர்க்க வேறுபாடுகளுள்ள சமுதாயம் முகிழ்க்கும் மாற்றத்தை இவ்விலக்கியங்கள் புலப்படுத்துகின்றன. களப்பிரர் காலத்தில், மேற்குறித்த மாற்றங்களால் உருவான ஒரு முதிர்ச்சி பெற்ற வர்க்க வேறுபாடுகளைக் கொண்ட சமுதாய அமைப்பை எதிரொலிப் பவையாக, நியாயப்படுத்துபவையாக இக்காலத்திய இரு காப்பியங்களும் குறளும் படைக்கப்பட்டுள்ளன. சுருங்கக் கூறின் தமிழ் இலக்கியங்கள் இக்காலத்திலும் படைக்கப்பட்டன. தமிழின் இலக்கணத்தை வரையறை செய்யும் தொல்காப்பியமும் இக்காலத்திற்குரியதே (ஹார்ட் : 1975: 49-50; சிவத்தம்பி : 1995 89). இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தார் போன்று, தமிழ்ச் சங்கம் எனும் அமைப்பு ‘திரமிள சங்கம்’ எனும் பெயரில் வஜ்ரநந்தியால் மதுரையில் கி.பி. 470இல் தோற்றுவிக்கப்பட்டது. இதுவே தமிழ்ச் சங்கம் குறித்த தொன்மையான சான்று எனக் கூறினால் அது மிகையாகாது. எனவே, களப்பிரர் காலத்தில் தமிழ் இலக்கிய, இலக்கணப் படைப்புக்கள் தொடர்ந்தன; இதற்குப் பௌத்த, சமண சமயத்தவரே பெரிதும் காரணமாவர் எனக் கூறலாம்.
மேலே கூறப்பட்ட செய்திகளின் அடிப்படையில் களப்பிரர் தொடர்பான சில வழக்கமான கருத்துக்களை நாம் மறுமதிப்பீடு செய்யவேண்டியுள்ளது. களப்பிரர் வைதீக மதத்திற்கு எதிரி களல்லர். அவர்கள் காலத்தில் வைதீக மத ஆலயங்கள் எழுப்பப் பட்டன. பிரமதாயக் கொடைகள் தோன்றின; அந்தணர்கள் ஆலயப் பொறுப்புக்களை மேற்கொண்டனர். வரலாற்றுத் தொடக்கக் காலத்திய மருத நிலச் சமுதாயத்தில் தோன்றிய மாற்றங்களின் விளைவாக வர்க்க வேறுபாடுகள் முதிர்ந்த நிலையில் காணப்படும் சமுதாயம் களப்பிரர் காலத்தில் காணப் பட்டது. தமிழில் இலக்கிய இலக்கணப் படைப்புக்கள் களப்பிரர் காலத்திலும் தொடர்ந்தன. இக்காரணங்களால்,களப் பிரர் குறித்த வழக்கமான, தவறான கணிப்பிற்கு மாறாகக் களப்பிரரைச் சமயக் காழ்ப்பின்றி, பொருளாதார வளமிக்க நல்லாட்சியாளர்கள் எனச் சௌந்திரராஜன் (1978: 23) சிறப்பித்துக் கூறுவது குறிப்பிடத்தக்கது. உண்மை நிலை இவ்வாறிருக்க, பிரமதாய நிலக்கொடை களப்பிரர் காலத்தில் பறிக்கப்பட்டது எனவும், களப்பிரர் ‘கலியரசர்,’ அதாவது கொடிய, தீய அரசர்கள் எனவும் பிற்றை நாளைய தரவுகளில் செய்திகள் காணப்படுவது புதிராகத் தோன்றும். இப்புதிரை விடுவிக்கும் முயற்சியாகக் ‘கலி’ எனும் சொல்லாட்சிக்குரிய விளக்கத்தை முதலில் காண்போம்.
தீய செயல்கள் மிகும்போது ‘கலி காலம்,’ ‘கலி முற்றி விட்டது’ எனக் குறிப்பிடுவது நம் நாட்டவரின் வழக்கமாகும். வட இந்தியாவில் வேத காலத்தின் பிற்பகுதியிலிருந்து இத்தகு போக்குக் காணப்படுகிறது. கலியுகம், யுகாந்தா (காலத்தின் முடிவு) ஆகிய குறிப்புக்கள் வடமொழிக் காப்பியங்களில் காணப் படுகின்றன. வேத காலத்திற்குப் பின்னர் தோன்றிய உற்பத்தி உறவு முறைகளால் வைசியரும் சூத்திரரும் மேல்தட்டு மக்களாகிய அந்தணர் மற்றும் சத்திரியர் ஆகியோரின் ஆதிக்கத்திற்கு உட்பட மறுத்த காரணத்தால் சமூகத்தில் சிக்கல் ஏற்பட்டது எனவும், இதனைக் கலியுகம் எனக் குறிப்பிடும் வழக்குத் தோன்றியது எனவும் ஆய்வாளர்கள் (ஜா : 1979: 39 / அ.கு.22; சர்மா : 1992 : 147மு) கருதுகின்றனர். அதாவது, வேத காலத்தின் பிற்பகுதியில் தோன்றிய செல்வக் குளிப்பு, வர்க்க வேறுபாடுகள் ஆகியவற்றால் பாதிப்புற்றவர்கள் தம் தாழ்நிலையை ஏத்த மறுக்கவே ஒரு குழப்பமான சூழல் உருவாயிற்று: இக்குழப்ப மான சமூகச் சூழலே கலியுகம் எனக் கருதப்பட்டது. தமிழ் நாட்டின் மருத நிலப் பகுதியில் இத்தகு மாற்றங்கள் வரலாற்றுத் தொடக்கக் காலத்திலேயே தொடங்கப்பட்டு, களப்பிரர் காலத்தில் வர்க்க வேறுபாடுகளைக் கொண்ட சமுதாயம் நிலை பெற்றது எனவும், இம்மாற்றங்களுக்குக் களப்பிரர் காரணமல்ல எனவும் மேலே கூறினோம். எனவே, இதன் பொருட்டுக் ‘கலியரசர்’ எனும் வசைச் சொல்லால் களப்பிரர் குறிப்பிடப் பிட்டனர் எனக் கூறுவது பொருத்தமாக இல்லை.
‘கலியரசர்’ எனும் வசைமொழி காணப்படும் சமூகச் சூழலைக் கவனத்திற் கொண்டோமேயானால், சமயக் காழ்ப் புணர்வே இத்தகு வசைமொழி தோன்றக் காரணம் என்பதை உணரலாம். களப்பிரர் காலத்தையடுத்துப் பாண்டியரும் பல்லவரும் தம் ஆதிக்கத்தை ஏற்படுத்தினர். இக்காலத்திய பக்தி இயக்கத்தின் காரணமாக வைதீக மதங்களான சைவமும் வைணவமும் தமிழ்நாட்டில் நிலைபெற்றன. ஆழ்வார்களும் நாயன்மார்களும் தேனிசைத் தமிழ்ப் பாடல்களைப் பாடி இறைத் தொண்டு புரிந்தனர். இருப்பினும் இத்திருத் தொண்டர்கள் பௌத்தம், சமணம் ஆகிய புறச்சமயங்களைத் தம் பாக்களில் கடுமையாகச் சாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. வரலாற்றுத் தொடக்கக் காலத்திலேயே தமிழ்நாட்டில் ஊடுருவிய சமண, பௌத்த சமயங்கள் களப்பிரர் காலத்தில் மிக்க செல்வாக்குப் பெற்று அரசியல், பொருளியல், இலக்கியம் முதலான அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தின இச்சமயங்களின் ஆலயங்களிலும் மடங்களிலும் உற்பத்திக்குப் பயன்படாத வகையில் செல்வக் குவிப்புக் காணப்பட்டது. எனவே, பக்தி இயக்கத்தின்போது இப்புறச்சமயங்களுக்கு எதிராக மக்கள் தூண்டிவிடப்பட்டனர் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள் (சிவத்தம்பி : 1971 : 46). வைதீக மதத்தின் பாது காவலர்களான அந்தணர்க்குக் கொடை வழங்குவது போற்றப் பட்டது.வர்க்க வேறுபாடுகளை நிலைநிறுத்த வைதீக மதத்தின் கருவிகளாக ‘வர்ணம்,’ ‘சாதி’ ஆகியன பயன்பட்டன. இதற்கு ஆதரவாகச் செயல்பட்ட ஆட்சியாளர்கள் ‘கலிகடிந்த’ எனும் சிறப்புப் பெயரைப் பெற்றனர். ‘மகாதானங்களால்’, அதாவது அந்தணர்க்குரிய கொடைகளை வழங்குவதால், ‘கலிகடிந்த’ என வைகைப் படுகைக் கல்வெட்டுப் பாண்டியனைச் சிறப்பிக்கும். இது போன்றே பல்லவன் மகேந்திரவர்மனும் நால்வகைச் சமூக அமைப்பைக் காப்பவன் எனச் சிறப்பிக்கப்படுகிறான். சமண, பௌத்த சமயங்கள் ஆதிக்கம் பெற்றிருந்த களப்பிரர் காலத்தை ‘கலிகாலம்’ என வைதீக மதத்தினர் கருதினர். எனவே. இச்சமயங்களின் ஆதிக்கம் அகற்றப்பட்டு, அதற்குக் காரணமான ஆட்சியாளர்கள் ‘கலிகடிந்து’ எனச் சிறப்பிக்கப்பட்டன. பிரர்கள் சமயக் காழ்ப்பின்றி ஆட்சிபுரிந்தனர் எனினும் அவர்கள் இச்சமயங்கள் ஆதிக்கம் பெற்றிருந்த காலத்திய ஆட்சியாளர் எனும் அடிப்படையிலும், அவர்களே சமண சமயத்தவர் எனும் காரணத்தாலும் அன்னாரையும் ‘கலியரசர்’ ” ভালো வைதீக மதத்தினர் குறிப்பிட்டனர் எனக் கொள்வதில் தவறில்லை. மேலும், சமணரின் தமிழ்த் தொண்டையும் அவர்கள் மதுரையில் தோற்றுவித்த தமிழ்ச் சங்கத்தையும் திரையிட்டு மறைக்கும் முயற்சியும் பக்தி இயக்கக் காலத்தில் மேற்கொள்ளப் பட்டது. இதனடிப்படையில் வரலாற்றுத் தொடக்கக் காலத்தி லேயே பாண்டியரின் தலைநகர்களில் தமிழ்ச் சங்கங்கள் செயல்பட்டதாகவும், தமிழ்ச் சங்கங்களுக்கு இறைத்தன்மை அளிக்கும் பொருட்டு அக்காலத்தில் வழிபாட்டில் இடம் பெறாத சிவனுடன் அதனை இணைத்தும் புராணக் கதைகள் புனையப்பட்டன. சுருங்கக் கூறின், களப்பிரர் தமிழ் நாட்டிற்குள் ஊடுருவியவராயினும் அவர்கள் தமிழுக்கோ. தமிழ்ப் பண் பாட்டுக்கோ எதிரிகளல்லர். அவர்கள் சமண சமயத்தவராயிருப் பினும் சமயக் காழ்ப்புடையவராகச் செயல்படவில்லை. அவர் களது காலம் ‘இருண்ட காலம்’ அன்று. அவர்களைக் கலியரசர், அதாவது கொடிய, தீய அரசர் எனக் குறிப்பிடும் மரபு பக்தி இயக்கக் காலத்தில் சமயக் காழ்ப்பின் பொருட்டுத் தோன்றியதாகும்.
தமிழ்நாட்டில் களப்பிரர் காலத்திய வரலாற்று உண்மை களை அறியும் முயற்சியாகச் சற்று விரிவான விளக்கத்தை அளிக்க வேண்டியதாயிற்று. இக்காலத்தில் இரட்டர்கள் கொங்கில் ஆட்சி புரிந்தனர் எனும் கருத்து ஏற்புடைத்தல்ல என மேலே விளக்கிக் கூறப்பட்டது. பூலாங்குறிச்சிக் கல் வெட்டுக்களின் அடிப்படையில் கொங்கு நாடும் களப்பிரரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தது எனக் கூறலாம். இக்காலத்திற் குரிய, அதாவது கி.பி. நான்கு-ஐந்து நூற்றாண்டுக் காலத்திய அம்மன்கோவில்பட்டிக் (சேலம் மாவட்டம்) கல்வெட்டில் கோகூர்க்கிழான் வரம்பனின் புதல்வனாகிய வியக்கன் கோபன் கணதேவன் என்பான் ஒரு நீரூற்றைத் தோண்டினான் எனும் செய்தி கூறப்படுகிறது. அம்மன்கோவில் என்பது அமன் (சமணர்) கோவிலின் மரூஉவாகும். வியக்கன் எனும் சொல் யக்ஷ் (தலைவன்) என்பதன் தமிழ் வடிவாகும். இந்நீரூற்று சமணத் துறவிகளுக்குக் கொடையாக வழங்கப்பட்டதாகும். கொங்கில் சமணத்தின் செல்வாக்கை இக்கல்வெட்டு புலப்படுத்தும்.
அடுத்து, இருளப்பட்டி (தர்மபுரி மாவட்டம்) நடுகற்களில் இடம்பெற்றுள்ள விசையமங்கலம் எனும் இடப்பெயரை, ஈரோடு அருகிலுள்ள விசயமங்கலமாகவும், இதன் ஆட்சியாள னாகக் கூறப்படும் விண்ணவர்மனை, அதியமான் மரபினனா கவும் கருதுகின்றனர். பிற்றை நாளைய தரவுகளில் கூறப்படும் பழையகோட்டையின் (பழனி வட்டம்) ஆட்சியாளனான வின்னன் என்பானே நடுகல் கூறும் விண்ணவர்மன் எனக் கொண்டு இருளப்பட்டி நடுகற்களில் காணப்படும் செய்திகள் கொங்கு நாட்டுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன (இராம மூர்த்தி 1986 : 133மு). இக்கல்வெட்டுக்களை ஆய்வு செய்து பதிப்பித்துள்ள கிருஷ்ணன் (இ.க : 39:213), கடம்ப அரசன் விஷ்ணுவர்மனே தமிழில் விண்ணவர்மன் எனக் குறிப்பிடப் படுவதாகக் கூறுகிறார். செங்கம் நடுகற்களில் இடம்பெற்றுள்ள ஸ்கந்த விண்ணவர்மனே இவன் எனும் கருத்தைச் சௌந்திர ராஜன் (1978: 7) கூறுகிறார். எனவே, இருளப்பட்டி நடுகற்கள் கூறும் விண்ணவர்மனை அதியமான் தலைவனாகவும், அவனே பழையகோட்டையின் வின்னன் எனவும் கொண்டு அதனடிப் படையில் கொங்கு நாட்டு வரலாற்றோடு நடுகற் செய்திகளைத் தொடர்புபடுத்துவது தவறாகும். இங்குக் கூறப்படும் விசைய மங்கலத்தையும் தர்மபுரிப் பகுதியிலேயே நாம் தேடவேண்டும்.
-கொங்கு நாடு (கி.பி 1400 வரை) – வீ. மாணிக்கம்