‘கம்பர் வாழி’ என்னும் நூல் 16 பாடல்களையுடையது. இந்நூலுக்குக் ‘கம்பர் வாழி பதினாறு’ என்றும் பெயர் உண்டு. தனி ஏடாகக் கிடைத்த இந்நூலை திருச்செங்கோடு முத்துசாமிக்கோனார் முதலில் பதிப்பித்தார்.
கொங்கு வேளாளர் திருமணங்களில் குடிமகன் என்னும் மங்கலன் (நாவிதர்) ‘மங்கல வாழ்த்து’ இசைப்பதற்கு முன் காணிப் புலவரால் இவை பாடப்பட்டன. மணமக்கள் வீட்டாரின் குலப்பெருமை, குடிப்பெருமை, வாசல் வளம் இவைகளைப் பாடியபின் புலவர் இதைப்
பாடுவார்.
‘கம்பர் சொன்ன வாழ்த்து உரைத்து
மங்கலமும் கன்னி சொல்ல’
‘வாழி சொன்ன புலவருக்கு
வரிசை தனைக் கொடுத்து’
என்ற மங்கல வாழ்த்துத் தொடர்கள் மூலம் கம்பர் ;வாழி மங்கல வாழ்த்துக்கு முன்னர் பாடப்பட்டது என்பதும், பாடினர் என்பதும் தெரிகிறது.
கொடுமணல் தம்பிராட்டிபாளையம் நாச்சிமுத்துப் புலவர் வீட்டில் கிடைத்த ஏட்டுச்சுவடி மூலம் இங்கு பதிப்பிக்கப்படுகிறது.பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க’ என்று மணமக்களை வாழ்த்துதல் மரபு. அப்பதினாறு பேறுகளை புகழ், கல்வி, வலிமை, வெற்றி, நன்மக்கள், பொன், நெல் (தானியம்), நல்லூழ், நுகர்ச்சி, அறிவு, அழகு, பொறுமை, இளமை, துணிவு, நோயின்மை, வாழ்நாள் என்பர். அப்பதினாறு கம்பர் வாழிப் பாடல் 16 ஆகக் கூட இருக்கலாம். (நிச்சயமாக 16 மக்கள் இல்லை).
இப்பாடல்கள் வெண்பா, ஆசிரியவிருத்தம், கலிவிருத்தம் என்ற யாப்பமைதியில் உள்ளன.
நூல்
1.மணநாறு கொன்றையந் தார்சடை யோனும் மலைமகளும்
பணணா டரவினில் பள்ளிகொள் வோனும் பதுமமினும் துணைநான் முகமுள்ள தோன்றலும் பன்னிரு தோளனுடன்
கணநா தரும்இந்தக் கல்யாண நன்மையைக் காப்பர்களே!
2.வெள்ளி வெற்பரும் வானுளோர் மற்றுளோர்
வென்றி மானுடன் வேதாவும் கூடியே
அள்ளி வைத்த அருகோடு அரிசியை
அழகு சேரவே சென்னியில் வைப்பரால்
தெள்ளு முத்தமிழ் வாணர்கொண் டாடவே
தெரிவை மாதரும் பல்லாண்டு கூறவே
வள்ளி அம்மனும் வேலரும் போலவே
மங்கை யும்மண வாளனும் வாழியே!
3.நாள்க்கரசு நாட்டி நல்ல முகூர்த்தமிட்டுப் பேய்க்கரும்பை நாட்டிப் பிறைமண்வைத்து – பூத்தமலர் நற்பிடியும் வேலனும்போல் நன்மங்க லம்சிறக்கக் கைப்பிடித்து வாழ்வீர் கலந்து.
4.முரசுடன் கொம்பு காளம் முழங்கிட விளங்கி மண்மேல்
திருமகள் திருமால் போலச் சிறந்திடு மங்கை வாழி அருமைமங் கிலியம் வாழி ஆயிரத் தாண்டும் இன்பாய் இருவரும் பல்கி ஒன்றாய் இன்றுபோல் வாழி தானே!
5.வாழி மணவாளப் பிள்ளைதனை ஆழிசங்கு மாலோனும் அம்புயனும் – வேழமுகத்து
ஐங்கரனும் வேலவனும் ஆதி வியரவனும்
சங்கரனும் காத்திடவே தான்.
6.மணவாளன் வாழி மணையாட்டி வாழி
மணவாளன் தந்தைதாய் வாழி – மணவாளன் சுற்றத்தார் கிளையும் சூழ்ந்திருந்த வான்கிளையும் குற்றமற வாழ்வீர் குளிர்ந்து.
7.மணமுடனே நன்றாக வாழ்த்தும் புலவோர்க்குப் பணமுடனே நன்றாகப் பால்வைத்து – குணமுடனே சிங்கார மாகக் கலியாணம் செய்தார்கள்
மங்காமல் நீடூழி வாழி
8.மாறாமல் பாலமிர்தம் செல்வம் பதினாறும்
ஊறின்றிப் பெற்றே விளங்குவீர் – பேறான
சீதேவி முன்னடக்கச் செல்வரும் தேவியரும்
மாதேவர் காக்க மகிழ்ந்து.
9.வரிகால் வருவண்டே வாழ்வாய் வளருவாய்
ஒருகாலும் ஆயிரங்கால் ஆவாய் – இருபோதும் பூமடந்தை வாழ்த்தப் புவிமடந்தை போற்றிசெய்ய மாமடந்தை நீடூழி வாழி!
10.புத்திர சம்பத்தும் புண்ணியமே யுண்டாள்வீர் வித்தகரைப் போல விளங்குவீர் – எத்திசைக்கும்
பூமாது சேரப் புயமா தளவுடனே
மாமாது நீடூழி வாழி
11.ஆயிரவர் சீர்பெருகி அன்றுலகை யாளுவீர்
மாயாய்ப் பிரள்கென்றே பேர்படைப்பீர் – நோயகற்றி நல்லுடம்பும் ஆள்வீர் நவநார்க் கரசாள்வீர்
பல்லூழி வாழ்வீர் பரிந்து!
12.ஆர்போல் தழைத்து அருகதுபோல் வேரூன்றி
நார்போல் கிளைகிளைத்து நன்றாக – சீர்போன்ற வாகைபுனை மணவாளன் மணையாட்டி மிகவாழ்க வாகைதந்து நீடூழி வாழி!
13.கணவனே தெய்வம் கருத்ததனில் வைப்பாய்
குணமலி தார்க்குழலி மாதே குணமுடைய
காந்தன் மகிழக் கலந்து விளையாட
வேந்தர் எடுத்தார் அறுகு.
14.ஆயன் பதியில் அரன்பதிவந் துற்றாலும்
மாயன்ஊ தும்கருவி ஆனாலும் தூய
குன்றுபோல் வீற்றிருக்கும் குணவதியாள் தன்னுடனே இன்றுபோல் என்றும் இரு.
15.அட்டலட்சுமிஉமது பங்கிலே நின்றுதினம்
அகலா திருக்கவேணும்
அதிகசம் பத்துடன் புத்திரசந் தானமும்
அருள்ந்து கொடுக்கவேணும்
பட்டிமா டெருமை குதிரைபல தானியம்
பாலாறு பெருகவேணும்
பசியென்று வந்தபேர்க்கு அன்னமும் சொன்னமும் பந்தியில் பகரவேணும்
கட்டழகு வாலிபம் வயதுநூ றாகவே
கருத்தன் கொடுக்க வேணும்
கண்ணேறு நாவேறு வருகாம லேதினம்
காட்சிதந் தருளவேணும்
துட்டரண சூரரும் நொடிபில்லி சூனியம்
தூரவே நிற்கவேணும்
துளசிமால் மருகனே பழனிவேல் முருகனே
தோகைமயி லேறுகுகனே
16.பாடுபுல வோர்வாழி பாலகனார் தான்வாழி
தேடுதந்தை வாழி தேர்ந்தெடுத்த தாய்வாழி
கூடுகிளை வாழி குலத்தில்எல் லோர்வாழி
நாடுநகர் வாழி நல்லோர்கள் வாழியவே.
கொங்கு வேளாளர் சீர்களும் இலக்கியங்களும் – புலவர். செ. இராசு
விலை: 120/-
Buy this book online: https://www.heritager.in/product/kongu-velaalar-seergalum-ilakkiyangalum-pulavar-raasu/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers