கோவில்களும் பொருளாதாரமும் :
பொருளாதாரத்தில் கோவில்களின் தாக்கம்
பலவகைகளில்காணப்பட்டது. கோவில்களைக் கட்டுவதென்பதே ஒரு பெரிய பொதுநிறுவனமாக இருந்தது. பெரும்பாலான கோவில்கள், அரசராலும் அரச
குடும்பத்தாலும் கட்டப்பட்டதால், அதிக அளவு அரசுப் பணம் அதில்செலவிடப்பட்டது.
கோவில் கட்டும் பணி, திறமையான கொத்தர்கள்,சிற்பிகள், கைவினைத் தொழிலாளர்கள் ஆகியோருக்கும். சாதாரணத்
தொழிலாளர்களுக்கும் பெருமளவில்
வேலை வாய்ப்பைப்பெற்றுத்தந்தது. கோவில்களுக்காகப் பஞ்சலோக விக்கிரகங்களைச்செய்து, திருவிழாக்களின் போது ஊர்வலமாக எடுத்துச் செல்லும்வழக்கம், அதற்கான அச்சுக்களைத் தயாரித்தல், உலோக வேலைகள்
ஆகிய தொழில்களுக்கான தேவையை உருவாக்கியது.
சொல்லப்போனால், இன்றும்,தஞ்சாவூர், கும்பகோணம் பகுதியில் பல கைவினைத் தொழிலாளர்கள் வெண்கலம், பித்தளை போன்ற உலோகங்களில் பொருட்களை உருவாக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுபோன்ற வேலை வாய்ப்புகளாலும், வருவாயாலும் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பல்பெருக்குச் செயல்திறன் குறிப்பிடத்தக்கதாக இருந்திருக்கவேண்டும், ஆனால் அதைத் துல்லியமாக அளவிட முடியவில்லை.தங்கள் செயல்பாடுகளை நிறைவேற்றுவதற்காக கோவில்களுக்கு அதிக வளங்கள் தேவைப்பட்டது.
கோவில்கள் குறிப்பாக கோவில் களில் உள்ள பிரதான தெய்வம் சட்டப்படி தனிப்பட்ட ஒருவராகக் கருதப்பட்டு. அவர் பெயரிலேயே எல்லா நடவடிக்கைகளும் நடத்தப் பட்டன. கோவில் சடங்குகளிலும் ஆகமங்களிலும் திறமையுள்ள, பூஜைகளையும் விழாக்களையும் நிறைவேற்றக்கூடிய பூஜாரிகள்: கோவில் மடப்பள்ளியில் சமைக்கக்கூடிய சமையல்காரர்கள், அவர்களின் உதவியாளர்கள்; கோவில்கள் விழாக்களில் நடனம் செய்யும் பெண்கள். இசைக்கலைஞர்கள்; இதைத்தவிர கோவில்களில் பல்வேறு பணிகளைச் செய்பவர்கள் என்று பலதரப்பட்டவர்களுக்கும் வேலையளிக்கும் நிறுவனமாகக் கோவில்கள் இருந்தன.
பூஜாரிகளுக்கும். நடனமாதர்களுக்கும் நிலங்களை அளிப்பதன் மூலமும், மற்ற பணியாளர்களுக்கு கோவில் நிலங்களிலிருந்து வரும் நெல்லை வழங்குவதன் மூலமும் அவர்களுக்கு ஊதியம் வழங்கப் பட்டது.
கோவிலின் விளக்குகள் எரிவதற்காக எண்ணெய் அல்லது நெய் போன்ற பல்வேறு மளிகைப் பொருட்களின் நுகர்வோராகவும் கோவில் இருந்தது. இரவிலும் பகலிலும் தொடர்ந்து எரியும் நந்தா விளக்கு, காலையிலும் மாலையிலும் ஏற்றப்படும் சந்தியாதீபம் போன்ற விளக்குகள் கோவில்களை அலங்கரித்தன. தவிர, அரிசி, பருப்பு, பதப்படுத்த உதவும் பொருட்கள், வாசனைப்பொருட்கள், தினசரி நைவேத்தியத்துக்காக வாழைப்பழம் போன்ற பழங்கள் ஆகியவையும் கோவில்களுக்குத் தேவைப்பட்டது.
விக்கிரகங்களை அலங்கரிப் பதற்காக வேண்டிய மலர்கள் மற்றுமொரு முக்கியமான தேவையாக இருந்தது. கற்பூரம், கஸ்தூரி, பன்னீர், குங்குமப்பூ, சந்தனம் போன்ற மதிப்புமிக்க வாசனைப் பொருட்களும் அபிஷேகங்களுக்காகவும், காப்பு சாத்துவதற்காகவும் கோவிலுக்குத் தேவையாக இருந்தன. அவற்றில் பல இறக்குமதி செய்யப்பட்டன.
உதாரணமாக, பதினொன்றாம் நூற்றாண்டில் தஞ்சாவூரைச் சேர்ந்த நன்கொடையாளர் ஒருவர் அவரது கொடையிலிருந்து வரும் வட்டிப்பணம், கோவில் அபிஷேகத்துக்கான ஏலக்காய், மணமுள்ள மலரான செண்பகப்பூ ஆகியவற்றை வழங்கப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு, கோவில் பொருளாதார ரீதியாகப் பல்வேறுவிதமான பங்களிப்பை, முதலாளியாகவும் நுகர்வோராகவும் அளித்திருப்பதைப் பல வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, கோவில்கள் தங்கள் தினப்படி கைங்கர்யங்களை நிறைவேற்று வதற்கு அதிகப்படியான பணபலம் தேவைப்பட்டது. தவிர, பெருங் கோவில்களில் பலவகை ஆராதனைகளை/ சேவைகளை நிகழ்த்த வேண்டும் என்ற பக்தர்களின் எதிர்பார்ப்பையும் அது பூர்த்தி செய்ய வேண்டியிருந்தது. இந்த எதிர்பார்ப்பு பூர்த்தியாகாவிட்டால், பக்தர்கள் கோவிலுக்கு வருவது நின்றுபோய், வருமானமும் குறைந்து, கோவிலின் செயல்பாடுகளில் சுணக்கம் வருமென்பதனால். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
இந்தச் செலவுகளையெல்லாம் ஈடுகட்ட, நிலம், கால்நடைகள், பணம் ஆகியவற்றை அரசரின் குடும்பத்தினர்கள், படைத்தலைவர்கள். நிறுவன சபைகள், வணிகர்கள், தனிப்பட்ட கொடையாளர்கள் என்று சமூகத்தின் அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் நன்கொடைகளாகப் பெற வேண்டியிருந்தது. இந்தக் கொடைகளை விற்று வரும் வருமானமும் கோவில் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டது.
பழந்தமிழ் வணிகர்கள்: சர்வதேச வர்த்தகத்தின் முன்னோடிகள் – கனகலதா முகுந்த் தமிழில்: எஸ்.கிருஷ்ணன்
விலை : 185 /-
Buy this book online: https://www.heritager.in/product/pazhanthamizh-vanigargal/
To order on WhatsApp: wa.me/919786068908
Call: 097860 68908
Buy online: www.heritager.in
Social Media Handles:
Join our WhatsApp Group: https://chat.whatsapp.com/Jq4WbvrezuyCvlLgb8igza
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு
#books #tamilbookstore #Heritager wwww.heritager.in
Buy History and Heritage Related book online:
Buy Tamil Inscription Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/inscriptions/
Buy Tamil Literature Books: https://www.heritager.in/product-category/books/tamil/literature/
Buy Tamil Archaeological Books: https://www.heritager.in/product-category/books/tamil/archaeology/
Buy Tamil Temple Architecture and Art Books: https://www.heritager.in/product-category/books/tamil/art/
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/