Team Heritager April 16, 2025 0

இலமூரியா உண்மையா? ஒரு தேடலும் ஐயமும்

கடல்கோளால் அழிந்த இலமூரியா என்ற குமரிகண்ட பற்றி கருதுகோள் நம்மிடையே உண்டு. ஒரு காலத்தில் கிழக்காசிய நாடுகள் அனைத்தும் ஒரே நிலப்பரப்பாக இணைந்து இருந்ததாகக் கூறப்படுகிறது. காலப்போக்கில் ஏற்பட்ட காலநிலை மாற்றங்களின் விளைவாக கடல்நீரின் மட்டம் உயர்ந்து, அந்த நிலப்பகுதி பல தனித்தனி தீவுகளாகப் பிரிந்து விட்டது என்றும் நம்பப்படுகிறது.

ஆப்பிரிக்காவில் தோன்றிய தொல்மாந்தரினமானது, இப்படியாக ஒன்றாக இருந்த நிலப்பரப்பின் வழியாகப் பயணித்து ஆஸ்திரேலியாவை அடைந்திருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

இங்கு குறிப்பிடப்படும் ‘இலாமுரி தேசம்’ என்பது இன்றைய சுமத்திராவின் வடக்குப் பகுதியில் அமைந்திருந்த ஒரு நாடாகும். அரேபியர்கள் இந்த நாட்டை ‘லாமுரி’ என்றும், புகழ்பெற்ற பயணி மார்க்கோ போலோ ‘லம்பரி’ என்றும் குறிப்பிட்டுள்ளனர். சீன வரலாற்றாசிரியர் சௌ ஜூ-குவா இதனை ‘லான்வூரி’ என்று பதிவு செய்துள்ளார். மேலும், மா நக்கவரம் என்பது இன்றைய நிக்கோபார் தீவுகளைக் குறிக்கிறது.

இந்த இடங்களின் வரலாற்றை ஆராயும்போது, ராஜேந்திர சோழன் சுமத்திராவில் இருந்த ஸ்ரீவிஜய இராச்சியத்தையும், அதன் அதிகாரத்திற்கு உட்பட்டிருந்த மலேயா நாடுகளையுமே கைப்பற்றினான் என்பது தெளிவாகிறது.

இப்படிப்பட்ட வரலாற்றுத் தடயங்களை நோக்கும்போது, ஒரு காலத்தில் கடல்கோளால் அழிந்துபோனதாகக் கருதப்படும் லெமூரியா கண்டம் இதுவாக இருக்குமோ என்ற ஐயமும் எழுகிறது.

Buy Books: www.heritager.in

#Heritager

Category: