சோழர் கல்வெட்டுக்களில் இசைக்கருவிகள்

சோழர் கல்வெட்டுக்களில் இசைக்கருவிகள்

இசைக்கு மயங்காதோர் மண்ணுலகில் இல்லை. இசைக்கு அடிப்படையாக விளங்குவன இசைக்கருவிகளே. நாளும் இன்னிசையால் தமிழ்பாடிய ஞானசம்பந்தர் உள்ளிட்ட நாயன்மார்களாலும், ஆழ்வார்களாலும் வளர்ந்த பக்தி இயக்கத்தால் இசையும் பாடலும் தெய்வ மணங்கமழும் கவின் கலைகளாயின. சோழர் காலத்தில் இசையை வளர்ப்பதில் திருக்கோயில்கள் முதன்மையாக விளங்கின. இசைக் கலக்கு அடிப்படையாக விளங்கியவர்கள் பலவகையான இசைக்கருவிகளைப் பயன்படுத்தியதையும் அதன்வழி இசைக்கலை வளர்ந்ததையும் பிற்காலச் சோழர் கல்வெட்டுக்களின் வழி விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

காளம்

பிற்காலச் சோழர் காலத்தில் பயன்பாட்டிலிருந்த துளைக் கருவிகளில் காளமும் ஒன்றாகும். இக்கருவி குழல் வடிவில் நீண்டு முன்வாய் அகன்றிருக்கும். இதன் பகுதிகள் கங்கில், குழல், மோதிரம் என்பவனவாகும். செயம்கொண்ட சோழ மண்டலத்துப் புறற் கோட்டமான விக்கிரம சோழ வளநாட்டு. வெண்கல நாட்டு. வெண்கற் சேற்றுப் பேடன், திருநாடுடையான் பொன்னனான குலோத்துங்க சோழ காடுவெட்டி என்பவர் நந்தலூர் சௌமிய நாதர் கோயில் பெருமாளுக்குச் செம்பால் செய்த தனிக்காளம் ஒன்றை வழங்கியுள்ளமையை.

எம்பெருமானுக்கு சேஷமாகக் குடுத்தன செம்பால் தீர்த்தை மண்டை ஒன்றும் ஸ்ரீபலித்தாலமொன்றும் திருமண்டையொன்றும் சங்கொன்றும் காலொன்றும் சட்டுவமொன்றும் தாரை இரண்டும் தனிக்காள மொன்றும் சின்னமிரண்டும் பண்ண இட்டார்

என்னும் கல்வெட்டுத் தொடர் குறிப்பிடுகிறது.

வங்கியம்

பிற்காலச் சோழராட்சியில் வங்கியம் என்னும் இசைக் கருவியைப் பற்றிய குறிப்பு கல்வெட்டுக்களில் காணப்படுகிறது.காற்றுக் கருவிகளில் வங்கியம் எனப்பட்ட குழல், ஆடலிற்கு ஏற்ற பக்க இசைக் கருவியாகப் பழங்காலத்திலிருந்தே பயன்பட்டு வந்துள்ளது. இக்கருவி இராகத்தையும், வர்ணமெட்டையும் குரலிசை போல் இனிமயாக இசைக்கும் திறனுடையது. என்று ஞானாம்பிகை குலேந்திரன் குறிப்பிடுகிறார். வங்கியம் என்னும் இவ்விசைக் கருவியை இசைப்பதற்காகத் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் மூவர் பணியமர்த்தப்பட்டிருந்ததையும் அவர்களுக்கு மற்ற இசைக் கலைஞர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டதையும்,

வங்கியம் ஒன்றுக்கு நிகரிலிசோழத்தெரிந்த உடனிலைக்
குதிரைச்சேவகரில் நின்றும புகுந்த தஞ்சை கணவதிக்குப்
பங்கு ஒன்றையும் மேற்படி ஒன்றுக்குச் சிறுதனத்து வடுகக்காவலரில் செருவத்த வரையறுக்குப் பங்கு ஒன்றரையும் மேற்படி ஒன்றுக்கு
ராஜேந்திர தேஸரையனுக்குப் பங்கு ஒன்றரையும்

என்னும் கல்வெட்டுத் தொடர் காட்டுகின்றது.

சங்கு

சங்கு என்பது கடலிலும், ஏரி, ஆறு, குளங்களிலும் காணப்படும். முதுகெலும்பில்லாத ஓர் உயிரினம். இது நத்தையைப் போன்ற உருவமுடையதாக இருக்கும். இதிலுள்ள சதைத்திரளை நீக்கிய பிறகு இச்சங்கை ஊதும் இசைக் கருவியாகப் பயன்படுத்தவர். இந்திய நாட்டில் கன்னியாகுமரி முதல் இமயமலை வரை குஜராத் முதல் மேகாலயா வரை காணப்படும் இசைக்கருவி சங்கு என்று பி. சைதன்யதேவ குறிப்பிடுகிறார். முதலாம் இராசராசனின் இருபத் தொன்பதாவது ஆட்சியாண்டில் தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்கு முத்திரைச் சங்கு ஊதுவார் மூவரை நியமித்தமையை.

முத்திரைச் சங்கு ஒன்றூதத்தயிலன் விக்கியண்ணுக்குப் பங்கு
ஒன்றும் மேற்படி ஒன்றுக்கு மும்மடி சோழத்தெரிந்த ஆனைப்பாகரில் சுற்றி நாதனுக்குப் பங்கு ஒன்று மேற்படி
ஒன்றக்குத் தஞ்சாவூர் எரியூர்நாட்டுத்தளி உவைச்சன் பொற்காளி தொண்டையனுக்குப் பங்கு ஒன்றும்

என்னும் கல்வெட்டுத் தொடர்கள் உறுதி செய்கின்றன. மேலும் சங்குகளை ஊதக்கூடியவர்களை உவைச்சர்கள் என்று அழைத் துள்ளமையும் புலனாகிறது.

செயகண்டிகை

செயகண்டிகை என்பது வெண்கல உலோகத்தாலான தட்டிசைக் கருவியாகும். சேகண்டி, சேகண்டிகை என்றும் குறிப்பிடப்படு கின்றது. திருமழபாடிக் கல்வெட்டில் செயகண்டிகை வாசித்தவருக்கு நிவந்தமாக நிலம் கொடுக்கப்பட்டமையும். அந்நிலம் செயகண்டிகைப்புறம் என்று அழைக்கப்பட்டமையும் கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. முதலாம் இராஜராஜானின் பன்னிரெண்டாம் ஆட்சி ஆண்டில் கோனேரிராசபுரத்தில் உள்ள கோயிலில் செயகண்டிகையோடு தலைப்பறை, மத்தளி, கரடிகை, கைம்மணி ஆகிய இசைக்கருவிகள் இசைக்கபட்டதை, இக்கல்வெட்டுகளின் வழி கோயில்களில் மற்ற இசைக் கருவிகளோடு இணைந்து சேகண்டிகை என்னும் இசைக்கருவியின் இசை நிகழ்த்தப் பெற்றிருப்பதையும் அறிய முடிகிறது.

கரடிகை

பிற்காலச் சோழர் காலத்தில் திருக்கோயில்களில் கரடிகை என்னும் இசைக்கருவி இசைக்கப்பட்டது, இக்கருவி கரடி கத்துவது போன்ற ஒலி தரும் தோற் கருவியாகும் . முதலாம் இராஜராஜனின் ஏழாம் ஆட்சியாண்டில் கோனேரிராஜபுரம் கோயிலில் தலைப்பறை, மத்தளி, சேகண்டிகை, கைம்மணி போன்ற இசைக் கருவிகளோடு இயைந்து கரடிகையும் இசைக்கப்பட்டமையை என்னும் கல்வெட்டு வழி அறியலாம். மேலும் திருவான்மியூர் வேதபுரிசுவரர் கோயிலில் கரடிகை வாசித்த ஒருவருக்கு அறுநாழி நெல் ஊதியமாக வழங்கப்பட்டமையை.

தலைப்பறைக் கொட்டி ஒருவனுக்கு நெல் குறுணி கரடிகை கொட்டுவான் ஒருவனுக்கு நெல் அறுநாழியும்

இருநாழியும்என்னும் கல்வெட்டுத் தொடர் காட்டுகிறது. இதன்வழி தலைப்பறையோடு இயைந்து கரடிகை என்னும் கருவி இசைக்கப் பட்டமையை அறியமுடிகிறது.

திமிலை

திமிலை என்னும் இசைக் கருவியானது திருக்கோயில்களில் இறை வழிபாட்டின் போது இசைக்கப்படுகின்ற தோற் கருவிகளுள் ஒன்றாகும் . திமிலை என்பது பம்பை என்னும் தோற் கருவியாகும் என்று கி. கோவிந்தராசனார் குறிப்பிடுகிறார். பம்பை என்பது உருளை வடிவமுள்ள இருபறைகளாகக் கட்டி வாசிக்கப்படும் கருவியாகும். இவ்விரு பறைகளும் மரத்தால் செய்யப்பட்டவையாக இருக்கும் என்றும் சில இடங்களில் ஒன்று மரத்தாலும், மற்றொன்று பித்தளை யினாலும் செய்யப்பட்டதாக இருக்கும் என்றும் பி, சைதன்யதேவ குறிப்பிடுகிறார். முதலாம் பராந்தகனின் 30வது ஆட்சியாண்டில் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி திருக்கோயிலில் திருப்பள்ளி எழுச்சியின் போதும் மூன்று சந்தி பூசையின் போதும் இசைக் கருவிகளைக் கொண்டு இசைக்கப்பட்டிருக்கிறது. இவ்விசைக் கருவிகளில் திமிலையும் ஒன்றாகும் என்பதனை, என்னும் கல்வெட்டுத் தொடர் உணர்த்துகின்றது.

செண்டை

செண்டை என்னும் இசைக் கருவி உண்டை என்று கல்வெட்டுக் களில் குறிக்கப்பெறுகிறது. இக்கருவி தற்பொழுது கேரளாவில் புகழ்பெற்று விளங்குகிறது. கேரளாவின் கதக்களி நாட்டியத்திற்கும் இச் செண்டை என்னும் இசைக் கருவி இசைக்கப்படுகிறது. பலா மரத்தினால் செய்யப்படும் இந்த உருண்டை வடிவப் பறை இரு முகங்களைக் கொண்டு விளங்கினாலும், ஒரு புறத்தில் மட்டுமே கோல்களைக் கொண்டு தட்டி இசைக்கப்படும். அரிஞ்சய சோழனின் இரண்டாவது ஆட்சியாண்டின் திருப்பழனம் ஆபத்சகாயசுவரர் கோயிலில் செண்டை வாசிப்பார் ஐவருக்கு நிவந்தமாக 30 கலம் நெல் கொடுக்கப்பட்டுள்ளதை.

வீணை

குழல் இனிது யாழ் இனிது! என்பர் வள்ளுவர். குழல், யாழ் தண்ணுமை முதலிய கருவிகளைப் பற்றி எடுத்துரைக்கிறது சிலம்பு. தமிழர் இசையில் காலத்தால் முந்தியது யாழ் யாழ். மறைந்ததும் அவ்விடத்தை வீணை பெற்றது. செவ்வியல் இசையில் வீணை இன்றும் முக்கிய இடம் பெற்றுள்ளது. பிற்காலச் சோழர் காலத்தில் வீணை இசை இருந்ததை அறிய முடிகிறது. முதலாம் இராசராசன் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் வீணை வாசிப்போரை நியமித்து, அவர்களுக்கு ஊதியமும் கொடுத்தமையை. இதனால் சோழர் காலத்தில் கோயில்களில் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் வீணை வாசிக்கும் நிகழ்வு இருந்துள்ளதையும் இதற்கு மதிப்பு மிக்க ஊதியம் கொடுத்துப் போற்றியுள்ளமையும் தெளிவாகிறது.

பிற்காலச் சோழர் காலத்தில் நுண்கலைகளாகிய கட்டிடக்கலை, சிற்பக் கலை, ஆடற்கலைகளோடு, இசைக்கலையும் தமிழகத்தில் மிக உயர்ந்த நிலையில் சிறப்புற்று, விளங்கின. தமிழ்ப் பாடல்கள் பாடுவோரையும். ஆரியப் பாடல்கள் பாடுவோரையும் திருக் கோயில்களில் நியமிக்கப்பட்டமை தெளிவாகப் புலப்படுகின்றன. இசைப்பாடல்களைப் பாடுவோருடன் இணைந்து இசைக்கருவிகளை இசைக்கும் கலைஞர்களும் மிக உயரிய நிலையில் இருந்துள்ளனர் என்பதில் ஐயமில்லை.(நூலிலிருந்து)

இலக்கியம் கல்வெட்டு கல்வியியல் கட்டுரைகள்-முனைவர் தி. ஆறுமுகம்
விலை: 50/-
வெளியீடு: பாவை பதிப்பகம்
Buy this book online: https://www.heritager.in/product/ilakiyam-kalvettu-kalviaeeyail-katturaikal/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908

Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/

#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers