இசைக்கருவிகள் :
தவில், நாதசுரம், பம்பை, உறுமி, தமுக்கு, தாளம் (சால்ரா) ஆகிய இசைக்கருவிகள் இணைந்து வாசிக்கும் இசைக்கு நையாண்டி மேள இசை என்றும் நையாண்டி மேளச் செட்டு என்று குழுவினரையும் அழைக்கின்றனர். உறுமி எனும் தோலிசைக் கருவி 14ஆம் நூற்றாண்டில் நாயக்கர்கள் வருகையின்போது இடம்பெற்றிருந்த ஒரு தோலிசைக் கருவியாகும். இக்கருவியை வாசித்தவர் அருந்ததியினர்.இவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியினராகையால் பறையர் பள்ளர். குடியிருப்பினை ஒட்டிக் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
உடுக்கை, குடுகுடுப்பை, மகுடி, புல்லாங்குழல், கத்தக்குழல், சங்கு, கால்மணிக் கச்சம், குடத்தாளம், மட்டையடித்தாளம், செகண்டி, பறை, பெரியமேளம், ஜிம்பலாக்கொட்டு, பானைத் தாளம் போன்ற இசைக் கருவிகள் தமிழகத்தில் பல்வேறு ஆட்டங்களில், பாடல்களுக்கான இசை மற்றும் தாளம் தரும் இசைக்கருவிகளாக உள்ளன.
1. குழல் இசைக் கருவி
2. நரம்பிசைக் கருவி
3.தோலிசைக் கருவி
4. துணை இசைக்கருவி
எனுமாறு ஐவகையில் நாம் அவற்றை அடக்கிக் காணமுடியும். வில்லிசை, உடுக்கை போன்ற இசைக்கருவிகள் நரம்பு பயன்படுத்தப் பட்டாலும் நரம்பு இசைக் கருவியாக மட்டும் கணக்கிட இயலாத நிலை உள்ளது. நரம்பிசைக் கருவி தனித்த நிலையில் நாட்டுப்புற இசைக் கருவிகளில் தமிழகத்தில் காண முடியவில்லை.
ஆடல் முறைகள் :
மிழக நாட்டுப்புற ஆட்டங்களில் காணும் ஆட்டமுறை களைப் பொதுவாகக் கீழ்வருமாறு வகைப்படுத்தியும் பகுப்பாய்வு செய்தும் கூறுபடுத்தி விளக்கிட வழிவகை செய்வதாக அமையும்.
1.அமர்ந்தாடுதல்
2.சுழன்றாடுதல்
3.நின்றாடுதல்
4.தவழ்ந்தாடுதல்
5.உருண்டாடுதல்
6.குதித்தாடுதல்
7.வீழ்ந்தாடுதல்
8.கை இணைந்தாடுதல்
9.கை கொட்டி ஆடுதல்
10.கைவீசி ஆடுதல்
11.எத்தி ஆடுதல்
12.பின்னக்கால் ஆட்டம் ஆடுதல்
13.குனிந்தாடுதல்
என்பன போன்ற ஆடல்முறைகள் இன்று நாம் காணும் ஆட்டங்களில் காணமுடிகிறது. குறவன் குறத்தி ஆட்டத்தில் குறவனும், குறத்தியும் எதிரெதிராக நின்றும் அமர்ந்தும் ஆடுகின்றன. (நூலிலிருந்து)
பயன்பாட்டுத் தளங்களில் பழந்தமிழர் கலைகள் – கரு.அழ.குணசேகரன்
விலை: 80 /-
To order on WhatsApp: wa.me/919786068908
Buy this book online: https://www.heritager.in/product/payanpaattuth-thlangkalil-palanthamilar-kalaikal/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers