பஞ்சரச் சிற்பங்கள் :
இக்கோயில் விமானத்தின் நான்கு திசைகளிலும் முகமண்ட பத்தின் மூன்று திசைகளிலுமாய்த் திசைக்கு இரண்டென 14 தளப் பஞ்சரங்கள் உள்ளன. அவற்றின் கிரீவகோட்டங்களிலும் அவற்றின் தலைப்பாக விமான, முகமண்டபக் கபோதத்தில் காட்டப் பட்டுள்ள பெருவளைவுகளிலும் எழிலார்ந்த சிற்பச் செதுக்கள் உள்ளன.
கிரீவகோட்டச் சிற்பங்கள் :
பஞ்சரங்களின் 14 கிரீவகோட்டச் சிற்பங்களுள் ஐந்து சிவ பெருமான், உமை என அமைய, நான்கு வானவர்களாகவும் எஞ்சிய ஐந்து வானவமகளிராகவும் உள்ளன. மகளிரில் மூவர் சுவரிக்காரிகையர். இப்பதினான்கு சிற்பங்களுள் ஒன்று முழுஒருக் கணிப்பிலும் ஒன்று சுவஸ்திகக் காலமைப்பில் நேர்ப்பார்வை யிலும் அமைய, ஏனைய பன்னிரண்டும் லேசான இட அல்லது வலஒருக்கணிப்பில். முப்புரம் எரித்தவராகவும் நந்தியணுக்கராக வும் உள்ள சிவபெருமான் இடுப்பிற்குக் கீழ்ப்பட்டு இடஒருக் கணிப்பிலும் உடலின் மேற்பகுதி வலஒருக்கணிப்பிலும் அமை யக் காட்சிதருகிறார். விமானத்தின் தெற்கு, மேற்குப் பஞ்சரங்க ளிலும் முகமண்டபத்தின் வடக்குப்பஞ்சரத்திலும் இடம்பெற் றுள்ள உமை இரு இடங்களில் லேசான வலஒருக்கணிப்பிலும் தெற்கில் நேர்ப்பார்வையிலும் அருகில் நிற்கும் தோழியின் தலை மீது கையூன்றியவராய்க் காட்சியளிக்கிறார்.
இந்த 14 சிற்பங்களுள் மூன்று கரண்டமகுடம் கொள்ள,அவற்றுள் ஒன்று மகுடம் மீறிய நிலையில் சடைப்பாரமும் பெற் றுள்ளது. 6 சிற்பங்கள் சடைமகுடம் பெற, 4 தமிழம் கொண்டை யுடன் மிளிர்கின்றன. உமையின் தமிழம் கொண்டை இரு இடங் களில் அழகிய பூமுகப்புப்பட்டை பெற்றுள்ளது. கழுத்தணிகளில் சரப்பளி (5), முத்துமாலை (5) விரும்பிக் கொள்ளப்பட்டுள்ளன. சில சிற்பங்களில் இரு அணிகளுமே உள்ளன. இரண்டு சிற்பங்கள்சவடி கொள்ள, ஒன்று பதக்கஆரமும் மற்றொன்று மெல்லிய கழுத்தணியும் பெற்றுள்ளன. 5 சிற்பங்கள் உதரபந்தம் கொள்ள, 5ல் முப்புரிநூல் அவற்றுள் ஒன்றில் மடித்த துண்டு முப்புரிநூல் போலுள்ளது. 11 சிற்பங்களில் பனையோலைக் குண்டலங்களும் இரண்டில் பூட்டுக்குண்டலங்களும் இடம்பெற, முப்புரம் எரித்த வரின் வலச்செவியில் மகரகுண்டலம். பெரும்பாலான சிற்பங்கள் தோள், கை வளைகள் கொள்ள, தெற்குப்பஞ்சர உமை கடகவளைகளும் பூண்டுள்ளார்.
3 சிற்பங்களில் அரைக்கச்சு சிறக்க அமைய, 6 இடைக்கட்டு பெற்றுள்ளன. 8 சிற்பங்கள் சிற்றாடையும் 5 பட்டாடையும் கொள்ள, 1 சிற்பம் கணுக்கால்வரை ஆடையுடனுள்ளது. 2 சிற்பங்கள் கால் களைக் குறுக்கீடு செய்து சுவஸ்திகத்தில் உள்ளன. 14 சிற்பங்களில் 13 முழுவடிவமாய்ப் பாதங்கள்வரை அமைய, 1 முழங்கால் வரை யினதாய் உள்ளது. கவரிப்பெண்கள் விமானக் கிழக்குமுகப் பஞ்ச ரக் கோட்டங்களிலும் முகமண்டபக் கிழக்குப் பஞ்சரக் கோட் டங்களில் வடக்கிலும் உள்ளனர்.
முகமண்டபத் தெற்குப்பஞ்சரங்கள் :
தென்கிழக்குப் பஞ்சர கிரீவகோட்டத்திலுள்ள ஆடவரின் வலக்கை கடியவலம்பிதத்தில் இடக்கையில் மலர் தென்மேற்குப் பஞ்சரத்தில் இடஒருக்கணிப்பிலுள்ள அழகியின் இடக்கை இடச் செவியருகே. வலக்கை தொடையில் படர்ந்துள்ளது.
விமானத் தெற்குப்பஞ்சரங்கள் :
தென்கிழக்குப் பஞ்சர கிரீவகோட்டத்தில் இடக்காலை வலக் கால் பின் குறுக்கீடு செய்து நிற்கும் உமையன்னையின் வலக்கை, வலப்புறத்துள்ள பெண்ணின் தலையில் அம்மையின் இடக்கை கடகமாய் நீலோத்பலம் ஏந்தியுள்ளது. நேர்ப்பார்வையில் ஒசிந்துநிற்கும் அவரது ஒயில்நிறை எழிற்கோலம் கண்களை நிறைக்கும் சிற்பச்செழுமையாகும். வலக்கையைப் பதாகத்திலிருத்திச் சிற்றா டையுடன் காட்சிதரும் தோழியின் இடக்கை தொடையில் தென் மேற்கில் லேசான இடஒருக்கணிப்பிலுள்ள இளம் ஆடவரின் வலக்கை கடகத்தில் விரல்கள் விரித்த அவரது இடக்கை தூணில் படர்ந்துள்ளது.
விமான மேற்குப்பஞ்சரங்கள் :
மேற்கின் தெற்குப்பஞ்சர கிரீவகோட்டத்தில் வலஒருக்கணிப் பிலுள்ள ஆடவரின் இடக்கை கடியவலம்பிதமாக வலக்கையில்மலர். இக்கோட்டப் பெருவளைவில் யோகபட்டத்துடன் சிவ பெருமான் வடக்கு கிரீவகோட்டத்தில் வலக்காலை இடக்கால் பின் குறுக்கீடு செய்து தோழியுடன் நிற்கும் உமை. அவரது இடக் கை இடப்புறம் நிற்கும் தோழியின் தலைமீது. வலக்கை தோள ருகே. இடத்தோளில் புரளும் சடையுடன் முகத்தை வலம் சாய்த்து ஓயிலுற நிற்கும் அம்மையின் எழில் இணையற்றது. முழுமை யுறாத தோழியின் வலக்கை அவர் முகத்துக்குத் தாங்கலாக, இடக் கை இடுப்பில்.
விமான வடக்குப்பஞ்சரங்கள் :
வடக்கிலுள்ள மேற்குப்பஞ்சர கிரீவகோட்ட நந்தியணுக்கர் தாமரைத்தளத்தில் வலப்பாதமிருத்தி, இடமுழங்காலைச் சற்றே மடித்துப் பாதத்தைத் திரயச்ரமாக்கியுள்ளார். இடஒருக்கணிப்பி லுள்ள அவர் முகம் வலத்திருப்பமாக, வல முன் கை கடியவலம் பிதத்தில். இட முன் கை அருகிலுள்ள நந்தியின் தலைமீது வலப் பின் கை தோளைத் தொட்டுக் கடகத்திலமைய, இடப் பின் கையும் கடகத்தில் இளமை பொலியும் முகத்துடன் எழிலராய்க் காட்சி தரும் சிவபெருமானின் தோற்றம் கண்களை நிறைக்கும் காவிய மாகும். கிழக்குப்பஞ்சரக் கோட்டத்திலுள்ள ஆடவரின் வலக்கை சிதைந்துள்ளது. இடக்கை கடியவலம்பிதத்தில்
முகமண்டப வடக்குப்பஞ்சரங்கள் :
வடக்குப் பஞ்சரங்களில் மேற்கு கிரீவகோட்டத்தில் வலக் கால் ஊன்றி இடக்காலை முழங்காலளவில் மடித்து வலஒருக் கணிப்பில், முகத்தை இடந்திருப்பி நிற்கும் உமையின் தோற்றம். அவரது வலக்கை சிதைந்துள்ளது. இரு கைகளையும் இடுப்பி லிருத்தி இடப்புறம் நிற்கும் தோழியின் தலைமீது இடக்கை.கிழக்கு கிரீவகோட்டத்தில் முயலகன் தலைமீது இடக்காலும் முதுகில் வலக்காலும் ஊன்றியவராய் முப்புரம் எரித்த சிவபெரு மான் இடஒருக்கணிப்பிலுள்ள அவர் வலக்கையில் அம்பு. இடக் கையில் வில் முகம் வலத்திருப்பமாய்.
முகமண்டபக் கிழக்குப்பஞ்சரங்கள் :
கிழக்குப் பஞ்சரங்களில் வடக்கு கிரீவகோட்டத்தில் வல ஒருக்கணிப்பில் இடக்கையை மார்பருகே இருத்தியுள்ள அழகி. அவரது வலக்கை கடியவலம்பிதத்தில் தெற்கு கிரீவகோட்ட அழகி இடஒருக்கணிப்பிலுள்ளார். வலக்கையை வயிற்றருகே ஏந் தலாய்க் கொண்டுள்ள அவர் இடக்கையில் கவரி.
விமானக் கிழக்குப்பஞ்சரங்கள் :
கிழக்குப்பஞ்சரங்களில் தெற்கு கிரீவகோட்டத்தில் கருவறைக் காய் ஒருக்கணித்துள்ள அழகியின் வலக்கையில் சுவரி. அவரது இடக்கை மறைந்துள்ளது. வடக்கு கிரீவகோட்டத்தில் கருவறைக் காய் வலஒருக்கணிப்பிலுள்ள அழகியின் இடக்கை கடியவலம் பிதத்தில். நடுத்தொங்கலுடன் பட்டாடை பெற்றுள்ள அவரது வலக்கையில் கவரி. அம்மையின் வலப்புறம் தாமரையுடன் பூக் குடுவை. (நூலிலிருந்து)
புள்ளமங்கை ஆலந்துறையார் கோவில் – அர. அகிலா, மு.நளினி, இரா.கலைக்கோவன்
விலை: 300 /-
Buy this book online: https://www.heritager.in/product/pullamankai-alanturaiyar-kovil/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers