சிதறால் மலைக்கோவில்

சிதறால் மலைக்கோவில்

குமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் அருமனை ஊர் அருகே சிதறால் மலை உள்ளது. இது குழித்துறையில் இருந்து 4 கி.மீ. தொலைவிலும் நாகர்கோவிலில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவிலும் அமைந்த ஊர்.

கல்வெட்டுகளில் சிதறால் மலையைத் திருசாணத்து மலை என்று குறிக்கிறது. அது திருசாரணத்து மலை என்பதன் திரிபு. மலையின் உச்சியில் ஒரு சமண மலைக்கோவில் உள்ளது. (குடைவரையா என்பதில் சந்தேகம் உள்ளது. இப்போதுள்ள கட்டுமானக் கோவிலுக்கு சுட்டப்படும் முன் ஒரு குடைவரை இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது.) திருசாரணத்துப்பள்ளி என அழைக்கப் பெறும் அம்மலைக்கோவில் சமண முனிவர்கள் சமயப் பணியாற்றிய இடம். தென்னகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை நெடுகிலும் இத்தகைய சமணப் பள்ளிகள் ஏராளம் உள்ளன. இங்கு கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு தொடங்கி கல்வெட்டுகள் கிடைக்கின்றன. அதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்து இப்பள்ளி செயல்பட்டது எனக் கருதலாம்.

ஆய்வாளர்கள் காலத்தை நிர்ணயிக்க ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படும் கல்வெட்டு, கோவிலின் தென்புறப் பாறையில் உள்ளது.

காலம்

1. ஸ்வஸ்தி ஸ்ரீ கோவிக்கிரமாதித்திய வரகு
2. ணர்க்குச் செல்லா நின்ற யாண்டு (இ)
3. ருபத்தெட்டு இவ்வாண்டு பேராயக்கு
4. டி அரட்டநேமி படார மாணாக்கிகள் குண
5. ந்தாங்கிக் குரத்திகள் திருசாணத்துப் ப
6. டாரியர்க்கு (அரவி)க்கட்டப் பொற்கட்டி
7. ன கழஞ்சு பத்து, பொற்பட்டமும் பொற்
8. ப்பூவு (மை)ங் கழஞ்சின்
9. பொலி கொண்ட அரவிக் (க)ட்ட இட்டது..

இதில் வரும் அரசன் விக்கிரமாதித்திய வரகுணன் கி.பி. 885 முதல் 925 வரை அரசாண்ட ஆய்மன்னனைக் குறிப்பதாகக் கொள்வர். அவனது ஆட்சியாண்டு 28 என்னும் போது கல்வெட்டு ஆண்டு கி.பி. 913 என்றாகிறது.

பேராயக்குடியில் அரட்டநேமி படாரர் என்னும் முனிவர் இருந்திருக்கிறார். அவரது மாணாக்கியர்கள் குணந்தாங்கிக் குரத்தியர்கள் என அழைக்கப்படுவோர் இம்மலையின் படாரியான- பெண் தெய்வத்திற்குப் பொற்பட்டமும் பொற்பூவுக்குமாக 15 கழஞ்சி பொன் கொடுத்துள்ளனர். திருச்சாரணத்துப் படாரியான தேவி / பகவதி அம்பிகா யட்சியாகலாம் என்பது கட்டுரையாளர் கருத்து. படாரர் என்ற சொல் முனிவரையும் குறிக்கும், தெய்வத்தையும் குறிக்கும். படாரி பெண்பால். (படாரியிலிருந்துதான் பிடாரி வந்ததோ?)

விக்கிரமாதித்திய வரகுணனின் பெயர் சுனை அருகில் உள்ள 12 வரி வட்டெழுத்துக் கல்வெட்டிலும் இடம்பெறுகிறது. பெயர்ப்பகுதி தெளிவற்று இருந்தாலும் விக்கிரமாதித்திய வரகுணன் என்றே வாசிக்கப்பட்டுள்ளது. ஆட்சியாண்டு பதினேழு எதிர் நாலு என வருவதால் 17+4 = 21 ஆம் ஆட்சியாண்டு என்றாகிறது. எனவே கல்வெட்டின் காலம் கி.பி. 906. நாராயணகுட்டியார் திருசாரணத்து எடுப்பித்த ஸ்ரீகோயிலுக்கு நந்தாவிளக்கும் பகவதிக்கு இரு கழஞ்சு பொற்பூவும் அளித்த செய்தியை அக்கல்வெட்டு கூறுகிறது. (நூலிலிருந்து)

குமரியில் சமணத்தின் சுவடுகள்
விலை: 35/-
வெளியீடு: NCBH
Buy this book online: https://www.heritager.in/product/kumariyil-samanaththin-suvadugal/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908

Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/

#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers