பதிற்றுப்பத்து – பொதுவிளக்கம்

பதிற்றுப்பத்தின் வழி சேரர் வாழ்வியல் – ஜெ.தேவி

பதிற்றுப்பத்து – பொதுவிளக்கம் :

தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்களுள் மிகவும் பழமையான இலக்கியம் சங்க இலக்கியமாகும். சங்க இலக்கியமான எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் கடைச்சங்க காலத்தைச் சேர்ந்தவை ஆகும்.

எட்டுத் தொகையில் “ஒத்த” என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் பதிற்றுப்பத்தின் பெயர்க் காரணம்,தொகுப்பாக்கம் பின்புலம், துறை, தூக்கு, வண்ணம், சேரர்களின் வரலாற்றைக் கூறும் கல்வெட்டுக்கள் பதிற்றுப் பத்தினைப் பாடிய புலவர்கள் பாடப்பெற்ற மன்னர்கள் போன்ற செய்திகளை ஆராய்வதே இவ்வியலின் நோக்கமாகும்.

பத்துப்பத்து என்பது பதிற்றுப்பத்தின் பொருளாகும். பத்து சேர மன்னர்களைப் பற்றிப் பத்துப்புலவர்கள் பாடிய பத்துப்பத்துப் பாடல்களின் தொகுதியே பதிற்றுப்பத்து எனப் பெயர் பெற்றது.

இந்நூலைத் தொகுத்தோரும் தொகுப்பித்தோரும் இன்னார் இன்னார் என்பது அறியமுடியவில்லை என்றாலும் இந்நூல் சேர மன்னர்களை மட்டுமே சிறப்புற பாராட்டிப் பாடப்பெற்ற நூலாகும்.

சேர அரசர்களிற் சிலரைப் பற்றிய செய்யுட்களும் செய்திகளும் வேறு தொகை நூல்களிற் வரினும் குறிப்பிட்ட ஓர் அரசரைக் குறித்துத் தொடர்ச்சியாகப் பத்து செய்யுட்கள் பதிற்றுப்பத்தினில் தான் காணமுடிகின்றது.

பத்துப்பத்துப் பாடல்களை முதற்பத்து, இரண்டாம்பத்து, மூன்றாம்பத்து என்னும் முறையில் எண் குறியீட்டுப் பெயரால் தொகுக்கப்பட்டுள்ளன. பதிற்றுப்பத்தென்பது இற்றுச் சாரியை வந்தது என்று, நேமிநாத உரையாசிரியர் இந்தொடருக்கு இலக்கணம் கூறியுள்ளார். இந்நூலில் எரியெள்ளு வன்ன நிறத்தான் என்னும் கடவுள் வாழ்த்து அமைந்துள்ளது. இவ்வாழ்த்து உ.வே. சா அவர்கள் பதிப்பித்த நூலில் இடம் பெறவில்லை. இவற்றுள் முதற்பத்தும், இறுதிப்பத்தும் இதுவரை கிடைக்கவில்லை. இடையிலுள்ள எட்டுப்பத்துகளே கிடைத்துள்ளன.

பதிற்றுப்பத்தின் பாடல்கள் அனைத்தும் பாடாண்திணையிலே அமைக்கப்பட்டுள்ளன. இந்நூலின் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் துறை,தூக்கு, வண்ணம், பெயர் என்பவற்றைப் புலப்படுத்தும் குறிப்புகள் காணப்படுகின்றன.

விலை: 200/-
Buy this book online: https://www.heritager.in/product/pathitrupaththu-vazhi-serar-vaazhvhiyal/
To order on WhatsApp: wa.me/919786068908
order on WhatsApp: wa.me/919786068908
Call: 097860 68908
Buy online: www.heritager.in

Social Media Handles:
Join our WhatsApp Group:https://chat.whatsapp.com/Jq4WbvrezuyCvlLgb8igza
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு

#books #tamilbookstore #Heritager wwww.heritager.in

Buy History and Heritage Related book online:

Buy Tamil Inscription Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/inscriptions/
Buy Tamil Literature Books: https://www.heritager.in/product-category/books/tamil/literature/
Buy Tamil Archaeological Books: https://www.heritager.in/product-category/books/tamil/archaeology/
Buy Tamil Temple Architecture and Art Books: https://www.heritager.in/product-category/books/tamil/art/
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/