
ஃபிலோமினா தம்புச் செட்டியார் (Philomena Thumboo Chetty): வயலின் கலையில் ஒரு தனி நட்சத்திரம்
இந்தியப் பாரம்பரியத்தைப் பின்புலமாகக் கொண்ட ஃபிலோமினா தம்புச் செட்டியார், மேற்ஐரோப்பாவை மயங்கச் செய்க முதல் இந்தியப் பெண் வயலின் இசைக் கலைஞர் – ஃபிலோமினா ருக்மாவதி தம்புச் செட்டியார் (1913 – 2000)

ஒரு எளிய புடவை அணிந்து, ஐரோப்பிய பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய பெண் கலைஞர். ஐரோப்பிய வயலின் கலைஞர்களை மட்டுமே கண்டு பழக்கப்பட்டிருந்த அந்த ரசிகர் கூட்டத்தின் மத்தியில், ஓர் இந்தியர் விவால்டி (Vivaldi), பாக் (Bach), டெபுஸ்ஸி (Debussy) போன்ற மேதைகளின் செவ்வியல் இசையை வாசித்தது பெரும் வியப்பில் ஆழ்த்தியாது.
அன்றைய இங்கிலாந்து பத்திரிகைகள் பின்வருமாறு அவரை பற்றி எழுதியிருந்தன:
“இந்த நாட்களில் இங்கிலாந்திற்கு இந்தியா கொடுத்துள்ள கொடைகள் என்னே!” – ராய்ஸ் வீக்லி (Roy’s Weekly
“அவரிடம் ஒரு எளிதான பாணியும், இனிமையான ஒலியும் இருக்கிறது.” – மியூசிக்கல் ஒப்பீனியன் (Musical Opinion)
“கிழக்கத்திய வயலின் கலைஞர்கள் அனைவரையும் விட அவர் ஏற்கெனவே ஒரு படி மேலே இருக்கிறாள்.” – சண்டே ஸ்டேட்ஸ்மேன் (Sunday Statesman)
வயலினில் உலகப் புகழ் பெற்ற முதல் இந்தியர்
ஃபிலோமினா ருக்மாவதி தம்புச் செட்டியார் (Philomena Rukmavathy Thumboochetty), இந்தியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற வயலின் கலைஞர் ஆவார்.

ஐரோப்பிய செவ்வியல் இசையில் ஆழமான பயிற்சி பெற்று, உலகப் புகழ்பெற்ற பாரிஸ் கன்சர்வேச்சுவார் (Conservatoire de Paris) கல்வி நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்ட முதல் இந்தியக் கலைஞர் என்ற பெருமையைப் பெற்றவர் இவர்.
இத்தகைய மகத்தான சாதனைகள் இருந்தபோதிலும், இன்று அவரைப் பற்றி அதிகம் எதுவும் எழுதப்படுவதில்லை. அவர் குறித்து அறியப்பட்ட ஒரே வாழ்க்கை வரலாறு, 1937-இல் வெளியிடப்பட்ட “இந்தியாவின் வயலின் அரசி” (The Indian Fiddler Queen) என்ற சிறு குறிப்பு மட்டுமே. இந்திய அறிவியல் மேதை சர் சி. வி. இராமன் இந்தச் சிறு நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ளார் என்பது ஃபிலோமினாவின் கலைத் தகுதிக்குக் கிடைத்த பெரும் அங்கீகாரமாகும்
இசையில் அவர் அடைந்த சாதனைகள், இந்திய மறுமலர்ச்சிக் காலத்தின் பங்களிப்புகளில் ஒன்றாகக் கருதப்பட்டது. இவரது பங்களிப்புகள் இரவீந்திரநாத் தாகூர், சர் சி. வி. இராமன், சர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் ஆகியோரின் சாதனைகளுடன் ஒப்பிடப்பட்டன.
ஃபிலோமினா தம்புச் செட்டியார் 1913 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட குடும்பதில் பெங்களூருவில் பிறந்தார். இவரது குடும்பம் ரோமன் கத்தோலிக்க பாரம்பரியத்தைச் சேர்ந்தது.

திரு. டி. தம்புச் செட்டியார், OBE. இவர் மைசூர் மகாராஜாவின் தனிச் செயலாளராக (Private Secretary) இருந்தவர். இவரது செல்வாபதி (கெர்டிட்யூட் தம்புச் செட்டியார்).
இவரின் தாத்தா சர் டி. ஆர். ஏ. தம்புச் செட்டியார் வணிகக் குலமான தேசாய் குடும்பத்தில் பிறந்த (Trichinopoly Rayalu Arakiaswamy Thumboo Chetty). திருச்சியை பூர்வீகமாகவும், சென்னையில் படித்த இவர் மைசூர் தலைமை நீதிமன்றத்தின் முதல் இந்தியத் தலைமை நீதிபதியாகவும், மைசூரின் திவானாகவும் (Offg. Dewan) பணியாற்றியவர்.

தனது ஆரம்பக் கல்வியை மைசூரில் உள்ள ஒரு கன்னியாஸ்திரி மடத்தில் பயின்றார் ஃபிலோமினா.

ஏழு வயதில் வயலினுடன் நிற்கும் ஒரு சிறுமியின் மங்கலான கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள், அவர் தனது கருவியுடன் எவ்வளவு ஒன்றிப்போயிருந்தார் என்பதைக் காட்டுகின்றன. மைசூர் மகாராஜாவின் ‘ஹுசூர்’ செயலாளரும், ஆழ்ந்த பக்திகொண்டவருமான அவரது தந்தை, தான் பெரிதும் மதித்த ஒரு புனிதரின் நினைவாகவே அவருக்குப் பெயரிட்டார். ஃபிலோமினாவின் பெற்றோர்கள், தனது மகளின் அபாரத் திறமையை ஆரம்பத்திலேயே உணர்ந்து, மைசூரில் உள்ள ஒரு கன்னியாஸ்திரி மடத்தில் இருந்த இசைக் கலைஞர்-துறவியின் கீழ் அவரைப் பயிற்சிக்குச் சேர்த்தனர். “நான் நீருக்குள் செல்லும் மீனைப் போல இயல்பாக இசைக்குள் சென்றேன்” என்று தனது ஆரம்பகால ஈர்ப்பை ஃபிலோமினா குறிப்பிட்டுள்ளார்.
ஃபிலோமினா பெங்களூருவில் பிறந்தாலும், அவரது குழந்தைப் பருவம் பெரும்பாலும் மைசூரில் உள்ள ஒரு கன்னியாஸ்திரி மடப் பள்ளியிலேயே கழிந்தது. அவரது தந்தையின் பெயர் திரு. தம்புச் செட்டியார்; இவர் ஒரு சிறந்த மைசூர் மகாராஜாவின் ஆலோசகராகவும், நம்பிக்கை வைத்த நண்பராகவும், அதே சமயம் எளிமையான கடவுள் பற்றுள்ள கிறிஸ்தவராகவும் இருந்தார். ஃபிலோமினா, ஒரு மாபெரும் தந்தையின் (சர் டி. ஆர். ஏ. தம்புச் செட்டியார்) பேரனான தனது தந்தையின் மூலம், செழுமையான பாரம்பரியத்தையும், கலை ஆர்வத்தையும் மரபுரிமையாகப் பெற்றார். மைசூரில் உள்ள அவரது இல்லம் ‘ருக்மாலயா’ என்ற எளிமையான பங்களா ஆகும்.
ஆரம்பத்தில் கல்கத்தா இசைப் பள்ளியில் (Calcutta School of Music) பயிற்சி பெற்றார். பின்னர், லண்டனில் உள்ள டிரினிட்டி கல்லூரியின் (Trinity College London) ஃபெலோஷிப்பைப் பெற்று, அங்குத் தனது திறமையை மெருகூட்டினார்.

அவருக்கு 16 வயதே ஆனபோது, உலகிலேயே மிகக் கடினமான இசைப் பள்ளிகளில் ஒன்றான பாரிஸ் கன்சர்வேச்சுவாரில் 1929 அனுமதிக்கப்பட்டார். இவர் அந்த நிறுவனத்தில் சேர்க்கப்பட்ட மிக இளைய மாணவர் மற்றும் முதல் இந்தியப் கலைஞர் ஆவார். பதினாறு வயதில் உலகப் புகழ்பெற்ற பாரிஸ் கன்சர்வேச்சுவார் (Paris Conservatoire) இசைப் பள்ளிக்குள் நுழைந்தது ஒரு இந்தியப் பெண்ணுக்குச் சந்தேகத்திற்கு இடமற்ற வியத்தகு சாதனையாகும். வெகு சில இந்தியர்களே ஐரோப்பிய இசையில் ஆர்வம்கொண்டனர், அவர்களில் மிகச் சிலரே சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்கப் புகழ் அடைந்தனர். அந்த வெற்று வானில் ஒளிரும் தனி நட்சத்திரமாக ஃபிலோமினா திகழ்ந்தார். பாரிஸ் கன்சர்வேச்சுவாரில் தனது படிப்பை முடித்த பிறகு, புகழ்பெற்ற ருமேனிய வயலின் கலைஞரான ஜார்ஜ் எனெஸ்கோவின் (Georges Enesco) மாணவியாகத் தனிப் பயிற்சி பெற்றார்.
ஃபிலோமினா தம்புச் செட்டியார், “வயலின் கலைஞராகத் தனிச் சிறப்பை அடைந்த முதல் இந்தியப் பெண்களில் ஒருவர்” என்று புகழப்படுகிறார்.
1934 ஆம் ஆண்டு, இவர் தனது தாயாருடன் இணைந்து ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் மற்றும் மேரி அரசியார் முன் இசைக் கச்சேரியை நடத்தினார். 1935 ஆம் ஆண்டு, லண்டனில் உள்ள புகழ்பெற்ற ஈயோலியன் ஹாலில் (Aeolian Hall) தனது இசை நிகழ்ச்சியை நடத்தினார்.

வயலின், வீணையைப் போலவே, மிக நுட்பமான மற்றும் தேர்ச்சி பெறக் கடினமான கருவியாகும். இந்தியக் கலைஞர்களில் சிலர் வயலினில் சிறந்த இன்னிசையை வழங்கியிருந்தாலும், அவர்களுக்கு ‘பாணி’ (Style) மற்றும் ‘கச்சிதம்’ (Finesse) இல்லையென்ற ஒரு கருத்து நிலவியது. திருகோடிக்காவல் கிருஷ்ண ஐயர் மற்றும் திருச்சி கோவிந்தசாமி பிள்ளை போன்ற இந்திய வயலின் மேதைகள் தங்கள் கலையையும் ஆன்மாவையும் வெளிப்படுத்தியபோதும், அவர்களுக்கு அந்த மேற்கத்திய ‘பாணி’ குறைபட்டிருந்தது.
வயலினைப் பிடிக்கும் விதம், வில்லை (Bow) இழுக்கும் கோணம், மற்றும் கருவியின் ஒலித்திறன் போன்ற அனைத்து நுட்பங்களிலும் அவர் கச்சிதம் காட்டினார். அவர் வாசிக்கும்போது ஒரு ‘கம்பீரம்’ இருந்தது. அவர் ஒரு ‘இசைச் சூழ்நிலையையும்’ ஒரு ஆழமான ‘உணர்வையும்’ உருவாக்கினார். கடினமான இசைத் துண்டுகளைக்கூட எளிமையாகவும், தன்னம்பிக்கையுடனும் வாசிக்கும் அவரது வித்தையைக் கண்ட சக இசைக் கலைஞர்கள், “அவரது பணிவு, அவரது அற்புதமான வாசிப்பைப் போலவே ஒரு பெரிய கவர்ச்சியாகும்” என்று பாராட்டினர்.

லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியிலேயே அவரது முதல் பொது நிகழ்ச்சி நடந்தது. அவர் ஃபிராங்க், பீத்தோவன், க்ரைஸ்லர்-விவால்டி, ப்ளோச் ஆகியோரின் படைப்புகளை வாசித்தார். அப்போதைய மைசூர் மகாராஜாவையும் (கல்லூரியின் துணைத் தலைவர்களில் ஒருவர்) புகழ்ந்து, அவர் ஒரு “இந்து கலைஞர்” என்று விளம்பரப்படுத்தப்பட்டார்
மைசூர் மகாராஜாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்த அவரது தந்தையின் ஆதரவு, ஃபிலோமினாவின் திறமைகளைப் பயன்படுத்த ஊக்குவித்தது. அவர் தனது மகள்களை ஆடம்பரமின்றி, திறமைகளைப் பயன்படுத்தும் வகையில் வளர்த்தார். ஐரோப்பாவில் அவர் ஆறு ஆண்டுகள் தங்கியிருந்தது, அவரது மறைந்திருக்கும் திறமையைத் தீட்டிக் கொள்ள உதவியது. அங்கே அவர் ஜார்ஜஸ் எனெஸ்கோ (Georges Enesco) போன்ற சிறந்த மேதைகளின் கீழ் பயிற்சி பெறவும், உலகப் புகழ்பெற்ற கலைஞர்களின் நிகழ்ச்சிகளைக் கேட்கவும் அரிய வாய்ப்புகளைப் பெற்றார்.

தனது குருவான ஜார்ஜஸ் எனெஸ்கோவின் பாராட்டுகளைப் பெற்ற பிறகு, அவர் லண்டன் மற்றும் ஆக்ஸ்ஃபோர்டில் நடந்த இசை நிகழ்வுகளில் பங்கேற்று, தனது ஆளுமையாலும் வாசிப்பாலும் பார்வையாளர்களைக் கவர்ந்தார்.
இந்தியப் பெண்கள் சிலர் ஐரோப்பிய இசையில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், சர்வதேச அளவில் புகழ்பெற்ற முதல் இந்தியப் பெண் ஃபிலோமினா தம்புச் செட்டியாரே ஆவார். ஐரோப்பியப் பார்வையாளர்கள் மிகவும் விமர்சனத் தன்மை கொண்டவர்கள் என்பதைக் கருத்தில் கொண்டால், இது ஒரு மிகப் பெரிய வெற்றியாகும்.
இவரை பற்றி இந்திய அறிவியல் கழக தலைவர் சி. வி. இராமன் பின்வருமாறு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். “ஃபிலோமினா தம்புச் செட்டியார் இன்று இசை உலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள ஒரு தனித்துவமான ஆளுமை.
அவருடைய கலையிலும், அவருடைய இளமைப் பருவத் தனித்தன்மையிலும், நவீன இந்தியாவின் உண்மையான வேட்கை (Spirit of Modern India) வெளிப்படுகிறது. இந்த வேட்கை, மனித முயற்சியின் மிக உயர்ந்த இலக்குகளை நோக்கித் தன்னை வெளிப்படுத்த விரும்புகிறது. மேலும், அந்த இலக்குகளை அடைவதில் எந்தவிதமான எல்லைகளும் இல்லை என்பதையும் அது ஆழமாக உணர்ந்துள்ளது.
அவர் தன் சொந்த நாட்டின் பாரம்பரிய இசையையோ அல்லது இசைக் கருவிகளையோ தேர்ந்தெடுக்காமல், மேற்கத்திய இசையையும், ஐரோப்பிய இசைக் கருவிகளிலேயே அதிக வெளிப்பாட்டுத்தன்மை கொண்ட வயலினையும் தன் சுய வெளிப்பாட்டிற்குரிய ஊடகமாகக் தேர்ந்தெடுத்தது, காலத்திற்குப் பொருத்தமான ஒரு தேர்வாகும்.
அவர் வயலின் வாசிப்பதைப் பார்ப்பதும், அவருடைய இசையைக் கேட்பதும் எவருக்கும் என்றும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.
ஃபிலோமினாவின் இந்தப் பிரமிக்கத்தக்க திறமைகள், உலகறியாத ஒரு நிலையிலிருந்து வெளிவர உதவிய சூழ்நிலைகள், மிகுந்த ஆர்வத்திற்குரியவையாகும். எனவே, இந்தச் சிறு வெளியீடு வாசகர்களால் ஆர்வத்துடன் வரவேற்கப்படும் என்றும், அவருடைய குறிப்பிடத்தக்க தொழில் வாழ்க்கை மற்றும் சாதனைகள் மீதான பொது மக்களின் கவனத்தை மேலும் வலுப்படுத்த உதவும் என்றும் உறுதியாக நம்புகிறேன்.
சி. வி. இராமன், இந்திய அறிவியல் கழகம், பெங்களூரு.”
1935 இல் இந்தியா திரும்பிய அவர், ஜகன்மோகன் அரண்மனையில் மைசூர் அரண்மனை இசைக்குழுவுடன் இணைந்து கச்சேரி செய்தார். இக்கச்சேரியை மகாராஜா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கேட்டு மகிழ்ந்தனர்.
1937 ஆம் ஆண்டு கல்கத்தா சிம்பொனி இசைக்குழுவுடன் இணைந்து வாசித்தார்.
1937 ஆம் ஆண்டு, இவரைப் பற்றிய ஒரு சுருக்கமான வாழ்க்கை வரலாறு “தி இந்தியன் ஃபிட்லர் குயின்: ஃபிலோமினா தம்புச் செட்டியாரின் ஒரு சுருக்கமான ஓவியம்” (The Indian Fiddler Queen: A Short Sketch of Philomena Thumboochetty) என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
1938 ஆம் ஆண்டு, கல்கத்தா இசைப் பள்ளியின் ஐந்தாவது சிம்பொனி கச்சேரியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இது அகில இந்திய வானொலியில் நேரடியாக ஒலிபரப்பப்பட்டது.
ஃபிலோமினா தம்புச் செட்டியார் 1937 ஆம் ஆண்டு பிரான்சிஸ் காந்தராஜ் தம்புச் செட்டியை மணந்தார். இவர்களது திருமண விழாவில் மைசூர் திவானாக இருந்த மிர்சா இஸ்மாயில் உரையாற்றினார். இவர்களுக்கு செவித்திறன் குறைபாட்டுடன் பிறந்த முதல் மகள் சித்ரா உட்பட ஐந்து குழந்தைகள் இருந்தனர்.
அவரது இரண்டாவது மகன் ரவி தம்புச் செட்டியார் கூற்றுப்படி, அவரது முதல் மகள் சித்ராவுக்குச் செவித்திறன் குறைபாடு இருந்தது. அவருக்குச் சிறப்புப் பள்ளியில் பயிற்சி அளிக்கப்பட்டு, உதடு அசைவுகளைப் படித்தறியக் கற்றுக்கொடுக்க வேண்டியிருந்தது.
“ஐரோப்பாவிற்குச் சென்று தனது தொழில் வாழ்க்கையைத் தொடர அவர் திட்டமிட்டார், ஆனால் குடும்பக் கடமைகள் அதை அனுமதிக்கவில்லை” என்று ரவி கூறுகிறார். சிறப்புக் கவனிப்பு தேவைப்படும் குழந்தையும், வளர்ந்து வரும் குடும்பமும் அவரை பெங்களூருவிலேயே நிலை நிறுத்திவிட்டது.
திருமணத்திற்குப் பிறகும், ஃபிலோமினா இசையை விட்டுவிடவில்லை.

சுற்றுப்பயணங்கள் செய்யாவிட்டாலும், பெங்களூருவில் கச்சேரிகள் வழங்கினார். அவரது மகனின் கூற்றுப்படி, அவர் வாழ்நாள் இறுதி வரை தினமும் மூன்று மணி நேரம் வயலின் பயிற்சி செய்வதைத் தொடர்ந்தார்.
1960கள் மற்றும் 1970களில் மேக்ஸ் முல்லர் பவன் இசைக்குழுவுடன் (Max Mueller Bhavan Orchestra) இணைந்து வாசித்தார்.

வயலின் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். இவரிடம் பயின்ற மாணவர்களில் ஒருவர், கிராமி விருது பெற்ற வயலின் கலைஞரும் இசையமைப்பாளருமான மனோஜ் ஜார்ஜ் (Manoj George) ஆவார். ஃபிலோமினா செல்வச் செழிப்பு, பதவி, செல்வாக்கு என எல்லாவற்றையும் பெற்றிருந்தாலும், அவர் எளிமையானவர், ஆர்ப்பாட்டம் இல்லாதவர். ‘அறிவாற்றல் மிக்கவர், துடிப்பானவர், இனிமையானவர்’ என்று அறியப்பட்ட அவர், கலைஞர்களுக்கே உரிய கர்வம் அல்லது விசித்திரப் பழக்கங்கள் இல்லாதவர். அவரது கண்களில் ஒளிந்திருக்கும் தீவிரமான ஆன்மா, சாந்தமான முகத்தின் பின்னால் மறைந்திருந்த ஒரு கிளர்ச்சியாளரைக் காட்டுவதாகவும் குறிப்புகள் கூறுகின்றன.
2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஃபிலோமினா தம்புச் செட்டியார் மறைந்தார். அவரது குடும்பத்தினர், Philomena Thumboochetty Music Academy சார்பாக அவரது நினைவாக ஆண்டுதோறும் இசை நிகழ்ச்சிகளை தம்புச் செட்டியார் அறக்கட்டளை (Thumboochetty Foundation) மூலம் நடத்தி இசைக் கலைஞர்களுக்கு விருதுகளை அளித்து வருகின்றனர்.
#PhilomenaThumboochetty

தந்த தம்பு செட்டியுடன் தங்கை தர்மாவதி
Philomena Thumboochetty
