புலவர்களும் புலமை மரபுகளும் :
பொருநர் :
பொருநர் என்பாரும் கலைஞர்களே எனினும் இவர்களின் அடை யாளத்தை உறுதி செய்ய முடியவில்லை. இச்சொல்லும் பல பொருள் களை உடையது. போர்வீரர், சிறுபறை இசைப்பவர், மற்றொருவரோடு ஒப்பிடப் பெறுபவர், ஒப்பிட இயலாதவர், பகைவர் என்பன இதற்குரியபொருள்களாகும் .’இஃது ஒரு குறுநில மன்னனின் பெயரும் ஆகும்.
‘பொரு’ என்னும் வேருக்கு மற்ற பொருள்களோடு, போரிடு, ஒத்திரு என்ற பொருள்களும் உண்டு.இவ்வேரிலிருந்து, போர்வீரன் மற்றொருவரோடு ஒப்பிடப் பெறுபவர் என்று பொருள்படும் பொருநன் என்ற சொல் பெறப்பட்டது. இவ்விரு பொருள்களும் பாணர் அல்லது புலவரின் சிறப்பைக் குறித்த குறிப்பைத் தருவதாகத் தோன்றுகின்றது. போர் வீரர் என்பதற்கு மாறாக புலவர்களைக் குறிப்பதாக இச்சொல் வழங்கப்பெற்றமை ஒரு பாடலில் தெளிவுறக் காட்டப்பட்டுள்ளது.
பொருநன் என்னும் சொல்லுக்கு அடைமொழியாக ஓர் எதிர்மறைக் குறிப்போடு கூடிய ‘பொராப்’ என்னும் சொல் இங்கு ஆளப்படுகிறது. பொராப் என்பதன் பொருள் போரிடாத. அல்லது போர் செய்யாத என்பதாகும். எனவே பொராப் பொருநன் என்பதற்குப் போர் செய்யாத வீரர். அதாவது போர்ப் பாட்டுக்காரன் என்பது பொருளாகிறது. இவன் போர் வீரர்களோடு பயணம் செய்பவன். பாணர்கள் பலவகைப் பட்டவர் என்று நச்சினார்க்கினியர் கூறுவர். அவர்கள் ஏர்க்களம் பாடுவோர். போர்க்களம் பாடுவோர் மற்றும் மற்றையோராவர். நமக்குக் கிடைக்கும் முற்காலப் பாடல்களில் ஏர்க்களத்தைப் போற்றிப் பாடும் பாணர் பற்றிய பாடல்களுக்கு எடுத்துக்காட்டு இல்லை. ஆனால் அதன் இலேசான அடையாளங்கள் உள்ளன.
மனிதர்களையும் பொருட் களையும் போற்றுகின்ற சொல்லமைப்பில் ஒன்றாக வியங்கோள் வடிவில் அமைந்த பொலிக! (வளம் பெறுவதாக) என்பது பயன்படுத்தப் பட்டுள்ளது. ‘பொலி’ என்ற வினைச்சொல், ‘தழைக்க,வளம்பெற . நிரம்புக, பெருக, தழைத்து நீடு வாழ்க’ என்ற பொருள்களை உடையது. பிற திராவிட மொழிகளில் உள்ள இதற்கு இணையான சொற்கள்.பொருள்களாகும் .’இஃது ஒரு குறுநில மன்னனின் பெயரும் ஆகும். ‘பொரு’ என்னும் வேருக்கு மற்ற பொருள்களோடு, போரிடு, ஒத்திரு என்ற பொருள்களும் உண்டு. இவ்வேரிலிருந்து, போர்வீரன் மற்றொருவரோடு ஒப்பிடப் பெறுபவர் என்று பொருள்படும் பொருநன் என்ற சொல் பெறப்பட்டது. இவ்விரு பொருள்களும் பாணர் அல்லது புலவரின் சிறப்பைக் குறித்த குறிப்பைத் தருவதாகத் தோன்றுகின்றது.
போர் வீரர் என்பதற்கு மாறாக புலவர்களைக் குறிப்பதாக இச்சொல் வழங்கப்பெற்றமை ஒரு பாடலில் தெளிவுறக் காட்டப்பட்டுள்ளது.பொருநன் என்னும் சொல்லுக்கு அடைமொழியாக ஓர் எதிர்மறைக் குறிப்போடு கூடிய ‘பொராப்’ என்னும் சொல் இங்கு ஆளப்படுகிறது. பொராப் என்பதன் பொருள் போரிடாத. அல்லது போர் செய்யாத என்பதாகும். எனவே பொராப் பொருநன் என்பதற்குப் போர் செய்யாத வீரர். அதாவது போர்ப் பாட்டுக்காரன் என்பது பொருளாகிறது. இவன் போர் வீரர்களோடு பயணம் செய்பவன். பாணர்கள் பலவகைப் பட்டவர் என்று நச்சினார்க்கினியர் கூறுவர். அவர்கள் ஏர்க்களம் பாடுவோர்.
போர்க்களம் பாடுவோர் மற்றும் மற்றையோராவர். நமக்குக் கிடைக்கும் முற்காலப் பாடல்களில் ஏர்க்களத்தைப் போற்றிப் பாடும் பாணர் பற்றிய பாடல்களுக்கு எடுத்துக்காட்டு இல்லை. ஆனால் அதன் இலேசான அடையாளங்கள் உள்ளன. மனிதர்களையும் பொருட் களையும் போற்றுகின்ற சொல்லமைப்பில் ஒன்றாக வியங்கோள் வடிவில் அமைந்த பொலிக! (வளம் பெறுவதாக) என்பது பயன்படுத்தப் பட்டுள்ளது. ‘பொலி’ என்ற வினைச்சொல், ‘தழைக்க,வளம்பெற . நிரம்புக, பெருக, தழைத்து நீடு வாழ்க’ என்ற பொருள்களை உடையது. பிற திராவிட மொழிகளில் உள்ள இதற்கு இணையான சொற்கள்.பொருள்களாகும் .’இஃது ஒரு குறுநில மன்னனின் பெயரும் ஆகும். ‘பொரு’ என்னும் வேருக்கு மற்ற பொருள்களோடு, போரிடு, ஒத்திரு என்ற பொருள்களும் உண்டு.இவ்வேரிலிருந்து, போர்வீரன் மற்றொருவரோடு ஒப்பிடப் பெறுபவர் என்று பொருள்படும் பொருநன் என்ற சொல் பெறப்பட்டது. இவ்விரு பொருள்களும் பாணர் அல்லது புலவரின் சிறப்பைக் குறித்த குறிப்பைத் தருவதாகத் தோன்றுகின்றது.
போர் வீரர் என்பதற்கு மாறாக புலவர்களைக் குறிப்பதாக இச்சொல் வழங்கப்பெற்றமை ஒரு பாடலில் தெளிவுறக் காட்டப்பட்டுள்ளது. பொருநன் என்னும் சொல்லுக்கு அடைமொழியாக ஓர் எதிர்மறைக் குறிப்போடு கூடிய ‘பொராப்’ என்னும் சொல் இங்கு ஆளப்படுகிறது. பொராப் என்பதன் பொருள் போரிடாத. அல்லது போர் செய்யாத என்பதாகும். எனவே பொராப் பொருநன் என்பதற்குப் போர் செய்யாத வீரர். அதாவது போர்ப் பாட்டுக்காரன் என்பது பொருளாகிறது. இவன் போர் வீரர்களோடு பயணம் செய்பவன். பாணர்கள் பலவகைப் பட்டவர் என்று நச்சினார்க்கினியர் கூறுவர். அவர்கள் ஏர்க்களம் பாடுவோர். போர்க்களம் பாடுவோர் மற்றும் மற்றையோராவர். நமக்குக் கிடைக்கும் முற்காலப் பாடல்களில் ஏர்க்களத்தைப் போற்றிப் பாடும் பாணர் பற்றிய பாடல்களுக்கு எடுத்துக்காட்டு இல்லை. ஆனால் அதன் இலேசான அடையாளங்கள் உள்ளன. மனிதர்களையும் பொருட் களையும் போற்றுகின்ற சொல்லமைப்பில் ஒன்றாக வியங்கோள் வடிவில் அமைந்த பொலிக! (வளம் பெறுவதாக) என்பது பயன்படுத்தப் பட்டுள்ளது.
‘பொலி’ என்ற வினைச்சொல், ‘தழைக்க,வளம்பெற . நிரம்புக, பெருக, தழைத்து நீடு வாழ்க’ என்ற பொருள்களை உடையது. பிற திராவிட மொழிகளில் உள்ள இதற்கு இணையான சொற்கள்.இச்சொல் முதன்மையான நிலையில் வேளாண் குறிப்புப் பொரு ளுடையது என்பதை அழுத்தமாகக் காட்டுகின்றன. (எ-டு) மலையா ளத்தில் பொலிக என்பதற்குத் ‘தானியக் குவியலை அள என்றும். அறுவடை செய்தவர்க்குத் ‘தானியமாகக் கொடுத்தல்’ என்றும் பொருள்படும். மேலும், பாணர்களின் பாடல்களிலேயே.நெல் வயல்களையும், மழையையும், வளத்தையும் போற்றும் பழக்கம் உண்டு என்று குறிக்கும் சில சொற்றொடர் மாதிரிகள் நம்மிடம் உள்ளன.” வையையாற்றை விளிப்பதான குறிப்புகள் கொண்ட பரிபாடலிலிருந்து இயல்பாகவே பெறப்படும் நிகழ்வொன்றை நாம் காட்டலாம்.
மக்கள் ஆற்றில் பொன்னால் செய்த சங்கு, நண்டு, இறால், மீன் ஆகியவற்றைப் பொலிக! பொலிக! எனக் கூவி இட்டனர். போர்க்களத்தில் அரசர்கள் நேரும் கொடை குறித்துப் போற்றுவதிலும் இதேவிதமான வெளிப்பாடு பொருந்த அமையும் உண்மையைக் காணலாம்.வாழ்த்துதல், போற்றுதல், இயற்கைக் கூறுகளைத் தொழுதல் ஆகிய நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு பெரிய கருத்து வெளிப்பாட்டுத் தொகுதியின் ஒரு பகுதியாகவே இவை கருதக்கூடியன 30வீரநிலைப் பாடல்களில், வயல்வெளிகளின் தொடர்பான. அதுவும் குறிப்பாக அறுவடைத் திருநாள் பற்றிய விரிவும் விளக்கமும் அமைந்த உவமைகள், ஏர்க்களம் பாடும் பொருநரும்,ஏர்க்களப் பாடல்களும் இருந்தமைக்கு மறைமுகச் சான் றாகும். தொல்காப்பியமும் புறப்பொருள் வெண்பாமாலையும் இதனைக் குறித்துள்ளன.” உரையாசிரியர்களும் இவ்வுவமைகள் அறுவடைச் சடங்குகளோடு ஒத்த பொருண்மை உடையன எனக் குறித்துள்ளனர்.
உண்மையில் ஒருவர் இடர்ப்பாடின்றி இவ்விளக்கங் களிலிருந்து அறுவடைச் சடங்குகளை மீட்டுருவாக்கக்கூடிய அளவு முழுமையாக இவ்வொப்பீடு அமைந்துள்ளது. இனிவரும் எடுத்துக்காட்டுகளிலிருந்து, புலவர்கள் தங்களால் பாடப்பெறும் மக்களின் உருவத்தை மேற்கொண்டு பாடினர் என நாம் உய்த்துணர்வு செய்வதில் தவறு இருக்கமுடியாது. அவர்கள் உழுத வயல்களைப் பாடும் போது அவர்கள் உழவர்களைப் போலவே உடையுடுத்தவும் தோற்றம் கொள்ளவும் செய்தனர் எனலாம். இதேபோலப் போர்க்களத்தில் அவர்கள் போர்வீரர்களைப் போலத் தோற்றம் கொள்ளுமாறு அவர்கள் பணி அமைந்தது. வேறு சொற்களில் கூறினால் அவர்கள் போர்வீரர்களாக மாற்றுருக் கொண்டனர் எனலாம். தற்காலிகமாக இருப்பினும் இத்தகைய விளக்கம் ஒன்றே பொருநன் என்ற சொல் மற்றவரைப் போல ஒப்பீடு கொள்பவன் என்ற பொருளைத் தெளிவாக்கும். போர்ப் பொருநரின் இத்தகைய வாழ்க்கைப் பாங்கு, அவர்கள் போர்வீரர்களோடு களத்திற்குச் சென்று தங்கள் வீரப்பாடல்களால் அவர்களைக் கிளர்ச்சியுறச் செய்த செய்தியாலும் மிகவும் தெளிவாகிறது. அவர்கள், போர் வீரர் களைப் போல அவ்வீரர்களின் முன்னோர்தம் அருஞ்செயல்களையும் புகழையும் பாடினர் என்பது மறுபடியும் இங்குக் கூறத்தகும். இஃது அவர்களின் அடையாளத்தை மிகவும் நெருக்கமாகக் காட்டுவதாக அமையும்.
இப்பொருநர்களைப் பிறவகைக் கலைஞர்களிடமிருந்து வேறு படுத்தக்கூடிய முக்கியமான பண்பு, அவர்கள் அரசர்களோடும் தலைவர் களோடும் கொண்டிருந்த நெருக்கமான உறவாகும். முன்னரே குறித்தவாறு, போரிலும், வீட்டிலும் இப்பாணர்கள் அரசர்களின் பரிவாரப் பகுதியாக இருந்தனர். இந்நிலையில் அவர்கள் போர்ப்பாணர் எனப் பொருத்தமுறக் குறிக்கத்தக்கவராவர், மற்றக் கலைஞர்களோடு ஒப்பிடுகையில் அவர்கள் வாழ்க்கை பாதுகாப்பும் நிலைபேறும் பெற்றிருந்தது. மற்றவர்களைவிட அவர்கள் குறைவாகவே வெளி யிடங்களில் அலைந்து திரிந்தவராகலாம். போர்ப்பாணர் பற்றிய ஒரு பாட்டு இக்கருத்தை மிகுதியும் தெளிவாக்குகின்றது.
”நான் குளிர்ந்த வளமான சோழநாட்டுப் பொருநர்களின் தலைவன். சோழநாடு வலிமை மிக்கது, கடலில் பகைவரை வென்று அவர்களின் கலங்களிலிருந்து கொண்டு வந்த பொருளால் மிக்கது. நாங்கள் அசையும் பிடரியில் தலையணி பொருந்திய குதிரைகளைக் கொண்ட நலங்கிள்ளியின் விருப்பத்திற்குரிய பொருநராவோம். நாங்கள்பிறரைப் பாடுவதில்லை; பிறரிடமிருந்து பரிசுபெற விரும்புவது மில்லை. எங்கள் தலைவனான அவனுடைய புகழையும் பெருமை யையுமே நாங்கள் எப்போதும் பாடுவோம்..-3
என்பது ஒரு பாட்டின் கருத்தாகும். இதேபோன்ற உணர்வுகள், தமக் குச் சிறப்புற ஆதரவு நல்கும் பிறபிற அரசர்களைக் குறித்துப் போர்ப் பொருநரால் பாடப்பெற்றுள்ளன.
ஒவ்வொரு போர்ப் பொருநனுக்கும் அரசர்களின் அவைகளில் தகுதியான பாதுகாப்பும் வாழ்க்கை வசதியும் அளிக்கப்பட்டதாகக் கூற இயலாது. இதன் விளைவாக நாம் அலைந்து திரியும் பொருநர் கூட்டங்களைப் பார்க்கிறோம். நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற திருவிழாக்கள் அவர்களை ஈர்த்தன. போர்ப் பொருநன் ஒரு பாட்டில் கீழ்வருமாறு நோக்கிக் கூறப்பெறுகின்றான் :
“பொருநனே! விழாக் கழிந்தபின் உணவு பற்றிக் கவலையுறாமல்
விழா முடிவில், செல்வ வளமிக்க பெரிய அகன்ற குடியிருப்புகளை
விட்டு நீங்கும் அறிவுடையவனாகிறாய். திருவிழாக்கள் நடைபெறும்
புதிய இடங்களைத் தேர்ந்து கொள்ளும் அறிவு உனக்கு இருக்கிறது”
யாழ் பொருநர்களின் முதன்மையான கருவியாயின், தடாரி அல்லது கிணை எனப்படும் சிறுபறை என்பது அதனொடு கூட்டியிசைக்கத் தகும் பொருநரின் அடிப்படைத் துணைக்கருவியாகும். இவ்விசைக் கருவி வகைகளின் வேறுபாடு அவர்களின் கலைகளிலும் முறையே அமைந்த சில வேறுபாடுகளைக் குறிப்பதாகக் கூறலாம். யாழ் என்பது நரம்புக்கருவி; மெல்லிய ஒழுகிசையை உண்டாக்குவது; பறை ஒரு கடுமையான போர்ப்பண்பை எதிரொலிப்பது. இஃது இவ்வாறிருக்க. வீரநிலை இலக்கியத்திற்குப் புலவர்கள் நிறைய வழங்கியுள்ளனர் என்பது வியப்பன்று. பாணர்களைப் போலவே பொருநர்களும் கூட்ட மாக இயங்கினர். ஒரு கூட்டம் என்பது முழுக்குடும்பங்களையும் உறவினர்களையும் உள்ளடக்கியது.
பொருநராற்றுப்படை ஒரு பெரிய பாண் குடும்ப இயக்கத்தை ஓவியப்படுத்துகிறது. அவர்களில் இளை யோர் மூத்தோர்களின் செயல்முறைகளை நோக்குவதாலும், செய்முறைப் பயிற்சியாலும் பாட்டுக்கலைத் திறனை வளர்த்துக் கொண்டனர். பெருவேந்தன் கரிகாலனின் அவையில், இளம் பயிற்சியாளர்கள் பாடியமைக்கு ஒரு குறிப்பு “என் பக்கத்தில் நிற்கும் மாணவர்கள் அவன் புகழைப் பாடுவதைக் கேட்டு, எங்களை அழைத்துவரச் செய்தாள்; நாங்கள் உரிய மதிப்புடன் அவனை வாழ்த்தினோம்.>> பொருநர்களின் தலைவன் ஒருவனோடு உடன்வந்த மாணவர்கள் அல்லது பயிற்சியாளர்களின் சரியான எண்ணிக்கையைக் கணிப்பது இயல்வதன்று. அவர்கள் பன்மை வழக்கில் மாறாமல் பலராலும் குறிப்பிடப்பட்டுள்ளனர் என்ற அளவிலேயே கூறமுடியும். (நூலிலிருந்து)
விலை: 350/-
வெளியீடு: குமரன் புத்தக இல்லம்
Buy this book online: https://www.heritager.in/product/tamil-veeranilai-kavithai/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers