தமிழகத்தில் தேவதாசிகள் பற்றி பல அறிய வரலாற்று தகவல்களைக்கூறும் இந்நூலில், பொட்டுக்கட்டு திருமணம் எவ்வாறு நடைபெற்றது என்பதை முனைவர் கே. சாதாசிவம்,
“தேவதாசிகளிடையே ‘பொட்டுக் கட்டுதல்’ என்று பிரபலமாக அறியப்பட்டுள்ள மரபு ஒன்று உண்டு. கோயிற் சேவைக்கெனத் தங்களை அர்ப்பணித்துக் கொள்வோர் பின்பற்றிய இந்த வெகுமக்கள் வழிமுறையின் மீது இந்தக் காலகட்டத்தின் ஏராளமான தரவுகள் வெளிச்சம் பாய்ச்சுகிறவையாக உள்ளன. அருணகிரிநாதரின் சகோதரி திருமணமே இதற்கான சான்றினைக் கொண்டிருக்கிறது. திருவண்ணாமலைக் கோயிலின் மூலவருக்கு அவள் திருமணம் செய்து வைக்கப்பட்டிருந்தாள். தங்கத்தினால் ஆன ஒரு சிறிய ஆபரணம்தான் பொட்டுத் தாலி என்பது. வேள்வித்தீயின் முன்பு நின்று, அந்தப் பெண்ணின் கழுத்தைச் சுற்றி இந்தத் தாலியைக் கோயிலின் குருக்கள் அணிவிப்பார்.” திருவண்ணாமலைக் கோயிலில் உள்ள கணேச விக்கிரகத்துக்குப் பொட்டுக் கட்டும் விநாயகர் என்று பெயர் காரணம், இத்தகைய திருமணங்கள் ஒருக்கால் அப்பிள்ளையார் சந்நிதி முன்பாக நடத்தப்பட்டு வந்திருப்பதால் இருக்கலாம்.
முன்பு எப்போதையும் விடவும் இந்தக் காலகட்டத்தில் திருமணம் என்பது முற்றிலும் சடங்காசாரமயமானதாக ஆகிவந்துள்ளது. துவார்தே பார்போஸா, அத்தகைய ஒரு சடங்கிற்கு நேரடியாய்க் கண்ணாற்கண்ட விவரங்களை நமக்கு அளிக்கிறார். அவர் கூறுகிறார்: “பல பெண்கள் தமது மூடநம்பிக்கைகளின் காரணமாக தங்கள் மகள்களுடைய கன்னிமையைத் தமது கடவுளர் விக்கிரகங்களுள் ஒன்றுக்குத் தாரை வார்த்துத் தந்து அர்ப்பணிக்கிறவர்களாக இருக்கிறார்கள். அந்தப் பெண்ணுக்குப் பன்னிரண்டு வயது ஆன உடனேயே, அந்த விக்கிரகம் இடம் பெற்றுள்ள வழிபாட்டுத் தலம் அல்லது மடத்துக்கு அவளை அழைத்துக் கொண்டு சகலவிதமான அதிகபட்ச மரியாதைகளுடன் போவார்கள். அந்தப் பெண்ணுக்குத் திருமணம் செய்விக்கப்படுவதற்கு முந்தைய நாள் விழாவொன்றை அவளது உறவினர்கள்-குடும்பத்தினர் ஒன்று கூடி எடுக்கின்றனர்.
அவ்விடத்தின் கதவுக்கு வெளிப்பக்கமாக, மிகக் கடினமான கருங்கல்லால் ஆன ஒரு சதுரமான பீடம் ஓர் ஆள் உயரத்திற்கு அமைக்கப்பட்டிருக்கும். அதைச் சுற்றிலும் மரப்பலகைகளால் ஆன தட்டிகள் வைக்கப்பட்டு அதனுள் பீடம் கண் மறைவாக இடம் பெற்றிருக்கும். இவற்றின் மீது பல எண்ணெய் விளக்குகள் வைக்கப்பட்டு அவை இரவில் எரிக்கப்படும். விழாவுக்காக அவர்கள் மரப்பலகைகளைப் பல பட்டுத் துணித் துண்டுகளால் அலங்கரித்திருப்பார்கள். வெளியே உள்ள மக்கள் உட்புறம் நடப்பவற்றைக் காணமுடியாதபடி அத்துணிகள் உட்புறம் செருகப்பட்டு மறைப்பாக அமைக்கப்பட்டிருக்கும். மேலே சொல்லப்பட்ட கருங்கல்லின் மேல், குனிந்த நிலையிலிருக்கும் ஒரு மனிதனின் உயரத்திற்கு மற்றொரு கல் இருக்கும். அதன் நடுவேயுள்ள ஒரு துளையில் கூர்முனையுள்ள ஒரு குச்சி செருகிவைக்கப் பட்டிருக்கும்.
கன்னிப்பெண்ணின் தாயார், தனது மகளையும் உறவுக்காரப் பெண்கள் சிலரையும் அழைத்துக் கொண்டு மரப்பலகைகளால் ஆன அந்த இடத்திற்குள் போய்விடுவாள். பிரமாதமான பூசைகளுக்குப்பின் உள்ளே நடந்த நிகழ்வு பார்வையிடப்படாததால் அது பற்றி எனக்குச் சொற்பமான அறிவே உள்ளது; அந்தப் பெண், கல்துளையுள் செருகப்பட்டிருந்த கூர்முனையுள்ள குச்சியைக் கொண்டு தனது கன்னித்திரையைத் தானே கிழித்துக் கொள்வாள் கசியும் குருதியை அந்தக் கற்களின் மேல் சிறிய துளிகளாகத் தெளித்து விடுவாள்; அதோடு அவர்களின் அந்த விக்கிரக முழுதனை நிறைவடையும்.மேற்கண்ட அவரது கூற்று முழுவதையும் நுணுகி ஆராய்ந்தால், கடவுளான சிவனின் பிரதிநிதிக்கு, பூப்பெய்துவதற்கு முன்னரே அப்பெண் திருமணம் செய்து வைக்கப்பட்டிருக்கிறாள் என்று நமக்குச் சொல்லப்படுகிறது. மற்றோர் இடத்தில் அவர் கூறுகிறார்: ”இது வெளிப்படையாகவே லிங்க (ஆண்குறி) வழிபாட்டுடன் தொடர்புடையதாக இருந்திருக்கிறது. கடவுளான சிவனுக்கு இத்தகைய பெண்களைத் திருமணம் செய்து வைப்பதற்குச் சமமான ஒரு சடங்காக அனேகமாக இது கருத்திற் கொள்ளப்பட்டிருக்கக் கூடும்… என்பதாம்.
அர்ப்பணித்தல் சடங்கிற்கு ஒரு வேறுபட்ட சித்திரத்தை சமீபத்திய சேர்க்கைகளுடனான மரபு தருகிறது. அதன்படி, சமர்ப்பணம் செய்யப்படப் போகிற பெண், தேவதாசி குலத்திற் பிறந்தவளாயிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆறு முதல் ஒன்பது வயதிற்குட்பட்டவளாகத்தான் அவள் கட்டாயம் இருக்க வேண்டும். அவள் பூப்பெய்தி வயதுக்கு வருவதற்கு முன்பே சமர்ப்பணச் சடங்கு கட்டாயம் செய்விக்கப்பட்டிருக்க வேண்டும். கோயில் அதிகாரிகளுக்கு அவளுடைய பெயர் கட்டாயமாக ஒரு தலைமைத் தேவதாசியால் பரிந்துரைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட சுபயோக சுபதினத்தில், இதர ஆலய ஊழியர்கள் அனைவரின் முன்னிலையிலும் அதற்கான சடங்கு நிகழ்த்தப்பட வேண்டுமென்பது கட்டாயமாகும். சமர்ப்பண நாளன்று, ஆலய இறைவனின் சன்னதியின் கருவறையில் வீற்றிருக்கும் மூலவருக்கு அருகில் அமருமாறு குறிப்பிட்ட அப்பெண்ணை கோயில் அர்ச்சகர் நெறிப்படுத்தவேண்டும். பிறகு, மூலவரின் பாதத்தில் ஏற்கெனவே தயாராக வைக்கப்பட்டிருக்கும் தாலி, கடவுளின் பிரதிநிதி என்ற வகையில் அர்ச்சகரால் அப்பெண்ணின் கழுத்தைச் சுற்றி அணிவிக்கப்பட்டாக வேண்டும்.
இவ்வாறு திருமணம் செய்து வைக்கப்பட்டபின் வெளியேயுள்ள மண்டபத்துக்கு அவள் வரவேண்டும். அங்கு வந்ததுமே உடனடியாக அவளுக்குப் பயிற்சியளிக்க வேண்டிய பொறுப்பை ஏற்றுக் கொள்கிற நட்டுவனார், கலைகளில் மிகக் கண்டிப்பான பயிற்சியை அவளுக்கு வழங்கத் தொடங்குகிறார். இவ்வாறாக, இந்த விழா இரண்டு அல்லது முன்று நாட்களுக்குத் தொடருகிறது.
இச்சடங்கு நிகழ்த்துதலுக்கு ஆகிய செலவு ஆலய கருவூலத்தினால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.”கோயிற் சேவைக்கென்று அவர்கள் நுழைந்த கணத்திலிருந்து, அவர்கள் ஆலயத்தின் சொத்தாகி விடுகின்றனர். பயஸின் கூற்றுப்படி, அவர்கள் கோயிலுக்குச் சொந்தமாகி விடுவதோடு, இந்தப் பெண்களுக்குப் பிறக்கப் போகிற எல்லாப் பெண்களும் கூட கோயிலுக்கே உடைமையாகின்றனர்.” இத்தகைய பெண்களின் மீது அடையாளச் சின்னமிடும் நடைமுறையும் கூட மீட்டுருவாக்கம் செய்யப்பெற்றது. இதைக் குறிப்பிடும் கல்வெட்டுச் சாசன வாசகம் இவ்வாறு சொல்கிறது: “எம்பெருமான் அடிமை ஆகுமுன்பே திரு இலச்சினையும் சாத்தி விடுகையில்… (கடவுளின் அடிமையாக வருவதற்கு முன்பே புனிதச் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதால்)” “கி. பி. 1474ன் மற்றொரு சாசனத்தின் வரி இவ்வாறு குறிப்பிடுகிறது.
” மேலே போட்டிருந்த சூலமும் பாதஞ்சூலமும் கண்ட பிறகு (சிவனின் அடையாளமான திரி சூல இலச்சினையைத் தங்களின் மேற்தோள்களில் பொறிக்கப்பட்ட பிறகு ) அதைத் தொடர்ந்து, அவர்களின் ஒவ்வொரு மேற்தோளிலும் சில பூச்சின்னங்களை சந்தனக் குழம்பினால் அடையாளமிடுவதும் நடைபெற்றுள்ளது.
தமிழகத்தில் தேவதாசிகள் – முனைவர் கே.சதாசிவன் (ஆசிரியர்), கமலாலயன் (தமிழில்)
Buy this book: https://heritager.in/product/tamizhagathil-thevathasigal