Description
திண்டுக்கல் மாவட்டத்தின் தனித்துவமான சிறப்புகளையும் மாவட்டத்திலுள்ள பல்வேறு ஊர்ப்பகுதிகளின் பெருமையையும் வரலாற்றுத்தரவுகளின் ஆதாரங்களோடு பதிவு செய்திருக்கும் இந்நூல் திண்டுக்கல் மாவட்டக் களஞ்சியமாக அமைந்துள்ளது. திண்டுக்கல் மலைக்கோட்டை, கொடைக்கானல், வத்தலக்குண்டு, நத்தம், காந்திகிராமம், பழனி என இம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைப் பற்றிய அரிய தகவல்களையும் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை நிலை மற்றும் சமூகச்சூழலையும் வரலாற்றுப் பார்வையோடு அணுகும் இந்நூல் திண்டுக்கல் மாவட்டத்தைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள உதவும்.



























