மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார் நிறுவனத்தில் பணியாற்றிய பின் இப்போது பஞ்சாப் மாநிலத்தில் மொகாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் (IISER) த.வி.வெ. பேராசிரியராக விளங்குகிறார். இந்திய வானவியல் கழகம், கல்கத்தா இந்திய அறிவியல் செய்திக் கழகம், IISER, NCERT, IGNOU, NIOS முதலிய அமைப்புகளின் வல்லுநர் குழுவில் உறுப்பினராக விளங்குபவர். தமிழ்நாடு பாடநூல் உருவாக்கத்திலும் பங்களிப்புச் செய்து வருபவர்.
புராணக் கதைகளைப் புறந்தள்ளி ஆரிய பட்டர் பூமி ஒரு உருண்டை என்பதை ஆராய்ந்து உணர்கிறார். எதிர்ப்புகளுக்கு இடையே இந்த அறிவியலாளர் ஈர்ப்பு விசை பற்றிய தொடக்க காலச் சிந்தனையை முன்வைக்கிறார். இதனை மிக அருமையாக விளக்குகிறார் த.வி.வெ. உண்மையில் தமிழ் அறிவியல் உலகம் ஈர்ப்பு விசை அலைகள் குறித்து இன்னும் செவிடாக இருப்பதாகவே கருதலாம். இந்த நூல் கேளாரும் வேட்ப மொழியும்’ குரலாக நிச்சயம் அமையும். இந்த நூல் தமிழில் ‘ஈர்ப்பு விசை ‘ பற்றிய வரலாற்று ஆவணமாகத் திகழ்கிறது.