கோவில்கள் அறிந்ததும் அறியாததும்

125

Add to Wishlist
Add to Wishlist

Description

கோயில் என்றால் என்ன, இந்து மதத்தில் கோயில்களின் இடம் என்ன, கும்பிடும் தெய்வங்கள் எத்தனை, வரலாற்றில் கோயில்களின் இடம் என்ன, விடுதலைக்குப் பின்னர் கோயில் நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் எவை என்னும் கேள்விகளை இந்த நூல் பரிசீலனை செய்கிறது. தமிழகக் கோயில்கள் பற்றிய நூல்களில் முற்றிலும் மாறுபட்டது இந்நூல். கோயில் கட்டிடம், வரலாறு, சிற்பங்கள் ஆகியவற்றைக் காட்டிலும் கோயிலுக்கும் சமூகத்திற்குமான உறவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

இந்த உறவைச் சமகாலப் பார்வையுடன் விவரிக்கிறது. கோயில் வழிபாடு சமகால அரசியலால் பாதிக்கப் படுவதையும் நடுநிலையுடன் கூறுகிறது. நூலின் ஆசிரியர் உமா சங்கரி தில்லி பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி ஆய்விற்குச் செய்த (1976-83) கட்டுரைகளின் மறுபரிசீலனை செய்யப்பட்ட சுருங்கிய வடிவம் இது.

Additional information

Weight 0.250 kg