Description
தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் மரம் பனை. இம்மரத்தை மையமாகக் கொண்டு உருவான வாய்மொழி வழக்காறுகளையும் எழுத்துப்பதிவுகளையும் இந்நூல் தன்னகத்தே கொண்டுள்ளது. கிறித்துவுக்கு முந்தைய காலத்திய தமிழ் பிராமிக் கல்வெட்டுகளில் தொடங்கி, இடைக்காலக் கல்வெட்டுகள்வரை, தொல்காப்பியம் சங்க இலக்கியம் தொடங்கி, வாய்மொழி இலக்கியம், நவீன இலக்கியம்வரை எனப் பல அரியதரவுகளின் துணையுடன் இந்நூல் உருவாகியுள்ளது. வரலாறு, நாட்டார் வழக்காற்றியல், இனவரைவியல் என்ற அறிவுத்துறைகளும் பனைமரமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து நின்று தமிழ்ச்சமூக வரலாற்றின் ஒரு பகுதியை நாம் அறியும்படிச் செய்துள்ளன.





























