விடுதலைப்போரில் முஸ்லிம்கள் செய்த தியாகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. பொதுவாக வட இந்திய முஸ்லிம்களே இந்த பட்டியலில் இடம்பெற்று நம் மனதில் பதிந்தவர்கள். தமிழக முஸ்லிம்களின் சுதந்திரப் போர் வரலாற்றில் பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். அவர்களில் குறிப்பிடும்படியான சிலரைப் பற்றி இந்த நூல் விவரிக்கிறது.
மதுரை மௌலானா, வேலூர் உபைதுல்லா, ஜமால் முஹம்மது, காஜா மியான் ராவுத்தர், கருத்த ராவுத்தர் போன்றவர்களின் தியாக வரலாற்றை முனைவர் ஜெ. ராஜா முகம்மது தனக்கேயுரிய பாணியில் இந்நூலில் விவரித்துள்ளார்.