வண்ண ஓவியங்களை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. ஓவியங்களை ரசிப்பதற்கு ஒருவித ரசனை வேண்டுமென்றால் அதனை வரைவதற்கும் ரசனை வேண்டும். உலகில் பிறந்தவர்களில் சிலர் தங்களை வித்தியாசப்படுத்திக் காட்டிக் கொள்ள விரும்புவார்கள். அப்படி வித்தியாசப்படுத்திக் காட்டிக் கொள்வதில் ஒரு வகை ஓவியராக இருப்பது, ஓவியராக இருப்பதற்கு மிகப்பரந்த கற்பனை வளம் இருக்க வேண்டும். உருவாக்கும் அறிவும் இருக்க வேண்டும். அந்த திறமை இருந்தவர்களே முதல் உலகப் புகழ்பெற்ற ஓவியர்களாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த உலகில் பல்லாயிரக்கணக்கான ஓவியர்கள் உருவாகி புகழின் உச்சியில் அமர்ந்திருக்கின்றனர். இந்நூலில் திறமையால் பேரும் புகழும் பெற்ற ஓவியர்கள் சிலரின் வாழ்க்கை வரலாறு சுவைபட கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் பட்டியலை இப்போது பார்ப்போம்.
லியனார்டோ டாவின்சி,
மைக்கேல் ஆஞ்சலோ,
ரஃபேல்,
டிட்டியன்,
எல்கிரிகோ.
சர் பீட்டர்பால் ரூபன்ஸ்,
நிகோலஸ் பெளசின்,
பிரான்சிஸ்கோ-டி- கோயா,
வில்லியம் பிளாக்கி,
பால் சிழேன்,
எட்வர்ட்,
மனே,
கிளாடி மோனே,
பால்கோகன்,
ராஜா ரவி வர்மா,
வின்சென்ட் வான்காக்,
ஹென்ரி மத்தீஸ்,
பாப்லோ பிக்காசோ,
ஜார்ஜ் பிராக்,
ரோஸ் பொன்ஹியூர்,
எம். எஃப். உசேன் கோபுலு,
நார்மன் ராக்வெல்,
பிளக்கிளாக் ரால்ஃப்.