Description
தமிழ்ச்சமூகத்தின் வரலாற்றில் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து வரலாற்றுக்காலத்துக்கு மாறிச் சென்ற காலம் மிகவும் முக்கியமானதாகும். இந்த முக்கியமான கட்டத்தின் விவரங்கள் தெளிவுபடுத்தப்படும்போதுதான் தமிழ்ச் சமூக வரலாற்றின் பல புதிர்கள் விடுவிக்கப்பட முடியும். அந்த வகையில் இப்பொருள் குறித்த மிகச் சிறந்த ஆய்வு நூலாக இந்த நூல் வெளியிடப்படுகிறது. தொல்லியல் அறிஞர் முனைவர் தி. சுப்பிரமணியன் அவர்களின் முனைவர்பட்ட ஆய்வேடு உரிய அறிஞர் பெருமக்களால் செப்பம் செய்யப்பட்டு நூலாக வெளியிடப்படுகிறது.




