சம்புத் தீவு பிரகடனமும்

சம்புத் தீவு பிரகடனமும் (அரசியலும்) – உறவு பாலசுப்பிரமணியம் (மார்க்சிய சிந்தனையாளர்)

மருதுபாண்டியர்கள் வெளியிட்ட சம்புத்தீவு பிரகடனம் காலனியாதிக்கத்தை எதிர்த்து விடுதலையை இலக்காக கொண்டு விடுக்கப்பட்ட ஒன்று இப்படியான பிரகடனத்தை வெளியிட வேண்டிய அரசியல் சூழல் அதன் பின்புலத்தை சாரமாக பார்போம்.

ஜரோப்பாவிலிருந்து பல வணிகத்திற்காக வந்தனர். அவர்கள் வரும் நிலையில் முகலாயப் பேரரசு, விசயநகரப் பேரரசு, மராட்டிய பேரரசு வீழ்ச்சியை எதிர்கொண்டு இருந்த காலம் ஆகும்.

விசயநகரப் பேரரசின் தனிச் சிறு அலகாக உருவாக்கப்பட்டது தான் பாளையம் என்பது இதை சோழர்கள், பாண்டியர்கள் முன்வைத்து நாடு என்பதோடு ஒப்பிடத்தக்கது. ஒரு நாடு என்பது இருபது, இருபத்தி ஐந்து கிராமங்களை கொண்டது. ஒரு கிராமம் என்பது சாதியப்படி நிலையில் பதினெட்டு தொழில்கள் செய்யும் பலரும் இருந்தால் மட்டுமெ அது ஒரு கிராமம் எனப்படும்;. இல்லையெனில் அது அனரக் கிராமம் எனப்படும்.

விசயநகரம் பேரரசு தென்னிந்தியாவில் முகலாய அரசிற்கு – நவாப் அரசிற்கு திரை செலுத்துபவர்களாக மாறி இருந்தனர். அதன் தொடர்ச்சியாக விசயநகர பேரரசின் அங்கமான பானையங்களும், நவாய் அரசிற்கு திரை செருத்துபவர்களாகமாறி இருந்த, ஜரோப்பிய வணிகக் குழுக்களில் பிரெஞ்சும் பிரிட்டானிய கிழக்கிந்திய கம்பெனியினரும் முக்கிய போட்டியாளர்களரக இருந்தனர். அவர்களுக்குள் போட்டியும் மோதலும் கூட அவ்வப் போது நடந்தன.

முதலாயப் பேரரசர் ஒளரங்கசீப்பிற்கு பின் அவர்களது வாரிசுகளுக்கு இடையே வாரிசுப் போர் உருவானது. தென்னியந்திய பகுதிகள் உரிமை கொண்டபடி சந்தாசாகிப்பும், ஆந்தாடு நவாப்பும் மோதிக் கொண்டனர். இந்த மோதலில் இருதரப்பும், பிரெஞ்சுகாரர்கள் கிழக்கிந்திய கம்பெனியினர் உதவியை நாடினர். இதை நல்வாய்ப்பாக பிரெஞ்சுகாரரும், கிழக்கிந்திய கம்பெனியும் பயன்படுத்திக் கொண்டனர். சந்தாசாகிப்பை பிரெஞ்சுகாரர்கள்; ஆதரித்தனர். ஆன்சாடு நவாப்பை கிழக்கிந்திய கம்பெனியினர் ஆதரித்தனர். மோதலில் சந்தாசாகிப் கொல்லப்பட்டார். ஆந்தாடு நவாப் வெற்றி பெற்றார். இந்த வெற்றிக்கு உதவிய கிழக்கிந்திய கம்பெனிக்கு கைமாறாக, மதுரை, சிவகங்கை, நெல்லை உள்ளிட்ட பல பாளையங்களில் வரிவசூல் செய்யும் உரிமையை பெற்றனர்.

கிழக்கிந்திய கம்பெனி வெற்றிக்கு மருதநாயகம் முக்கியமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மருத நாயகம் சந்தாசாகிப் கொல்லப்படுவதற்கு முன் பிரெஞ்சு ஆதரவாளராக இருந்தவர் என்பதும் நாம் மறக்க கூடாது. கம்பெனி அரசு மதுரை உள்ளிட்ட பாளையங்களின் வரிவசூல் செய்யும் அதிகாரியாக மருத நாயகத்தை நியமனம் செய்தது. மருத நாயகம் சிறு படையைக் கொண்டு அதிரடியாக போர் நடத்தி வெற்றி ஈட்டுவதில் திறமைசாலியாக இருந்தான். இதனால் கம்பெனி அரசில் முக்கிய தளபதியாக மருத நாயகம் புகழ்பெற்றான். அவருக்கு கம்பெனி அரசு காமாண்டோ கான் எனும் சிறப்பு பெயரையும் அளித்தது. மருத நாயகம் மேலும் மேலும் புகழ்பெற பூலித்தேவனை அழித்தது பாளையங்கோட்டை, எட்டயபுரம் பாளையத்தின் தளபதியான கட்டலாங்குளம் வீரன் அழகுமுத்துக் கோன் மற்றும் அவருடன் இணைந்து போரிட்ட இருநூறுக்கும் மேற்பட்டவர்களை பீரங்கி வாயில் கட்டி வைத்து பீரங்கயை வெடிக்கச் செய்து பலரைக் கொன்றார். இந்தச் செயல்
பாளையக்காரர்கள் கம்பெனிக்காரர்களை எதிர்க்க முடியாது. அவர்களுக்கு அடங்கி நடக்க வேண்டியது தவிர்க்க இயலாது என்பதை ஏற்படுத்தியது. இந்தக் கொடூரச் செயல் சுதேசி மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் கம்பெனி அரசு பெருமகிழ்வுற்றது. கம்பெனிக்கு எங்கு பிரச்சனை என்றாலும் மருத நாயகம் அழைக்கப்படும் அளவிற்கு மாறியது.

கம்பெனி அரசு மருத நாயகத்தை நடத்தும் விதம் ஆற்காடு நவாப்பிற்கு பிடிக்கவில்லை. சந்தாசாகிப் படையில் பணியாற்றி, பிரெஞ்சு ஆதரவுடன் மைசூர் அரசராக ஐதர் அலி முடிசூடிக் கொண்டது மட்டுமல்லாது கம்பெனி அரசிற்கும் நவாப்பிற்கும் கடும் எதிர்ப்பாளராக மாறிய நிகழ்வு முக்கிய காரணம் எனலாம். அதாவது மருத நாயகமும் ஐதர் அலி போல் மாறி தனக்கு குடைச்சல் கொடுக்கக் கூடும் என நவாப் கருதினார். இதனை மனதில் கொண்டு மருத நாயகம் கம்பெனி ஊழியர் என்றாலும் வரிவசூலை தன்னிடம் ஒப்படைக்க கடமைப்பட்டவர் என உத்தரவிட்டார் இதனை கம்பெனி அரசு எதிர்க்கவில்லை. ரசிக்கவே செய்தது. மேலும் தனது எதிர்கால அரசியலுக்கு பயன்படும் என்றபடி நவாப் உத்தரவையே கம்பெனி அரசு ஆதரித்தது. இது கம்பெனி ஊழயரான மருதநாயகத்திற்கு அதிர்ச்சியாக இருந்தது. மருத நாயகத்தை டெல்லி பகதூர்ஷா, ஆதரித்ததாகவும் செய்தி உண்டு மருத நாயகத்திற்கும் கம்பெனி அரசிற்கும் கருத்து வேறுபாடு வளர்ந்தது.

மருத நாயகமும் ஐதர் அலி போல சுதேசி மன்னர்- சுல்தான் என்ற இலக்கை நோக்கி பயணமானார். அதன் ஒரு பகுதியாகவே தெற்கத்தி பாளையங்கள் தன்னை ஆதரிக்க வேண்டும். இல்லை எனில் அவற்றுக்கு எதிர்காலம் இல்லை என அறிக்கை விடுத்தார். தன்னுடன் சேருமாறு பாளையக்காரர்களை வலியுறுத்தினார். சிவகங்கை பாளையத்தின், திருப்புவனம் பகுதி மதுரையை சேர்ந்தது என சிவகங்கை மன்னர் முத்துவடுக நாதருக்கு நெருக்கடி கொடுத்தார்.சிவங்கை பாளையக்காரர்கள் முத்துவடுக நாதர், ஆற்காடு நவாப்பையும், மருதநாயகத்தையும் பகைத்துக் கொள்ளாத வழியில் பயணம் செய்ய முடிவெடுத்தார். ஆனால் அமைச்சர் தாண்டவராயன்பிள்ளையோ வேறு விதமாகசிந்தித்தார். திருப்புவனம் பகுதியை இழக்காதிருக்க ஆற்காடு நவாப் ஆதரவாளராக மாறி மருதநாயகத்தை எதிர்ப்பது என முடிவெடுத்தார். அதன்படியே மருதநாயகம்’ பிரெஞ்சு ஆதரவாளாக மாறுகிறார். ஆற்காடு நவாப் ஆதரவாளரான சிவகங்கை பாளையத்திற்கு நெருக்கடி கொடுகிறார் என புகார் அளித்தார்.

மருத நாயகத்திற்கு எதிராக, ஆற்காடு நவாப்பும், கம்பெனி அரசும் இணைந்து செயல்படும் நிலை ஏற்பட்டதை அடுத்து தன்னைப் பலப்படுத்திக் கொள்ள தொடங்கினார். படைபலம் பெருக்கினார். அவர் படையில் கிட்டத்தட்ட முப்பதாயிரம் படை வீரர்கள் இருந்ததாக வரலாற்றாளர் கூறுகின்றனர். பல மோதல்கள் வெடித்தன. மருதநாயகம் படை வெற்றி பெற்றது. கம்பெனி மற்றும் நவாப் படைகள் தோற்று ஓடினர். இந்நிலையில் மதுரையின் சுல்தானாக மருதநாயகம் அறிவித்துக் கொண்டார்.

மருதநாயகத்தின் கம்பெனி மற்றும் நவாப் எதிர்பை மைசூர் மன்னர் ஐதர் அலி வெகுவாக பாராட்டி கடிதம் எழுதினார். அதில்; ”நீயும் நானும் வேறல்ல நாமும் நமது நாடும் வேறல்ல” என நட்புக்கரம் நீட்டினார். மேலும் ஒரு படைப்பிரிவை மருதநாகயத்திற்கு ஐதர் அலி அனுப்பி வைத்தார். மேலும், பிரெஞ்சு ஆதரவும் மருத நாயகத்திற்கு கிடைத்தது.

கம்பெனி அரசும், நாவப் அரசும் மருதநாயகத்தை போர் மூலம் வெற்றி கொள்ளமுடியாது. விதமாகவே வெற்றி கொள்ள முடியும் என முடிவுக்கு வந்தனர்.

மேலும் ஐதர்அலியும்,மருத நாயகமும் இணைந்து செயல்பட வாய்ப்பு அளிக்க கூடாது என்பதில் கம்பெனி அரசு தீவிரம் காட்டியது என்பதை அமைச்சர் தாண்டவராயன் பிள்ளை மூலம் கம்பெனி அரசும், நவாப் அரசும் திட்டமிட்டவரை பேச்சு வார்த்தை என சொல்லி வஞ்சமாக, மருத நாயகத்தை பிடித்து தூக்கிலிட்டனர்

மருத நாயகத்தை தூக்கில் தொடர்ந்து மூன்று முறை ஏற்றிய போது அவர் சாகவில்லை. மூச்சை உள் இழுத்து கழுத்தை புடைக்க செய்து தூக்கு கயிரை செயல் இழக்க செய்தார். அந்த அளவிற்கு அவர் தனது உடலை கட்டுடலாக வைத்துருந்தார். அவர் தூக்கில்டப்படும் போது வயது நாற்பத்தி ஐந்துக்குள் தான் என்பதும் கவனம் கொள்ளத் தக்கது. மருத நாயகம் மனைவி போர்த்துக்கீசிய தந்கைக்கும், தலித் பெண்ணுக்கும் பிறந்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. மருதநாயகம் இசுலாமியராக மாறியவர் என்பதும் இதன் காரணமாக தனது பெயரை கான்சாகிப் என மாற்றிக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கம்பெனி அரசு மருத நாயகத்தை அழிக்க, சிவகங்கை பாளையத்தை பயன்படுத்தியது சில ஆண்டுகள் கடந்த நிலையில் சிவகங்கை பாளையத்தின் மீது கம்பெனி அரசும், நவாப் அரசும் படையெடுத்தனர். மன்னர் முத்து வடுக நாதர் கொல்லப்பட்டார். அமைச்சார் தாண்டவராயன் பிள்ளை, வேலுநாச்சியார்,மருது பாண்டியர்களும், தப்பி ஜதர் அலி செல்வாக்கு பகுதியான திண்டுக்கல்லுக்கு சென்றனர். வேலுநாச்சியார் விருப்பாட்சி பாளையக்கார கோயால் நாயக்கர் உதவியால் ஜதர் அலியை சந்தித்து உதவி கோரினார். ஜதர் அலி பணம் மற்றும் படை உதவி பெற்று வேலு நாச்சியார் தலைமையில் சிவகங்கை மீட்கப்பட்டது வரலாறு ஆகும்.

கிழக்கிந்திய கம்பெனியின் நவாப் ஆதரவு நிலை பிரெஞ்சுக்காரர்களை விட வணிக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் வளர உதவியது. ஆதரிப்பது மூலம் கம்பெனியின் எதிர்காலம் இருக்கிறது. என்பதை தெளிவாக புரிந்து கொண்டது. கம்பெனி ஊழியர்கள், படைவீரர்கள், நவாப்பின் பேராசைக்கு அடிபணிந்து தொடர்ந்து போர் நடத்துவதை வெறுத்தனர் தங்களது எதிர்ப்பை புலம்பலாக வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வெளிப்படுத்தினர் என்பதை கம்பெனி ஊழியர்களின் பதிவுகளைக் காணும்போது தெரிய வருகிறது.

பாளையங்களின் எதிர்ப்பு, திப்பு, மருதநாயகம் இறப்புக்கு பின் கம்பெனி அரசுக்கும் நாவப் அரசுக்கும் இக்கட்டான நிலையினை ஏற்படுத்தியது. அதாவது மருதநாயகம், திப்பு தலைமையிலான பேரரசுகள் தலைமையிலான எதிர்ப்பு தோல்வியுற்ற நிலையில் அதன்- நீட்சியாய் புதிய முயற்சியாய்பாளையங்கள் ஒன்றிணைந்த கூட்டணிக்கான தேவை எழுந்தது. அதை, மருதுபாண்டியர்கள், கோபால் நாயக்கர் போன்றவர்கள் முன்னெடுத்தனர். அதுவே தீபகற்ப கூட்டணி ஆகும். அக்கூட்டணியின் போர்ப் பிரகடனமே சம்புத்தீவு பிரகடனமாகும்

இந்தச் சம்புத்தீவு என்பது கிட்டதட்ட தென்னிந்தியா முழுமையையும் குறிக்கிறது. 1800-1801 கிளர்ச்சி உச்சத்தில் இருந்தபோது மத்தியப் பிரதேசம் குவாலியர் வரை ஆதரவு கிளர்ச்சி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.(நூலிலிருந்து)

மருது பாண்டியர்களின் பேரறிக்கையும் அதன் அரசியலும் – இளஞ்சென்னியன்
விலை: 120/-
வெளியீடு: யாப்பு வெளியீடு
Buy this book online: https://www.heritager.in/product/maruthu-paandiyarin-perarikkaiyum-athan-arasiyalum/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908

Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/

#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers