செஞ்சி நாயக்கர் கலைப்பணி :
தமிழகத்தில் பல்லவர், பாண்டியர், சோழர்களைத் தொடர்ந்து கட்டடக் கலை வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவர்கள் விஜயநகர நாயக்கர்களாவர். கோயில் வளாகத்தின் முக்கியமான கூறுகளாக விமானம், மண்டபங்கள், பிரகாரங்கள், கோபுரம், தெப்பக் குளங்கள் முதலியவற்றைக் கூறலாம். தமிழகத்துக் கோயில் விமானம் என்பது பொதுவாக ஆறு அங்கங்களைக் கொண்டிருக்கும். எனவே அது “ஷடங்க” விமானம் என அழைக்கப்படும். விமானத்தின் ஆறு அங்கங்கள் என்பவை கீழ்க்கண்டவை யாகும்.
1. அதிட்டானம்
2. பித்தி
3. பிரஸ்தரம்
4. கிரீவம்
5. சிகரம்
6.கலசம்
இந்த ஆறு அங்கங்களும் மனிதனுடைய பாதம், கால்,தோள், கழுத்து, தலை, முடி (கிரீடம்) ஆகிய உறுப்புகளுக்கு இணையாகக் கொள்ளப்படுகின்றன.
சில கோயில்களில் விமானத்தின் உயரத்தைக் கூட்டி கோயிலை கம்பீரமாகத் தோன்றச் செய்ய வேண்டி அதிட் டானத்தின் கீழ் உபபீடம் அமைப்பதுண்டு. இத்தகு உபபீடம் பல்லவர்களால் அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட தில்லை என்றாலும் பல்லவர் காலத்தைச் சேர்ந்த பிற கோயில்களில் உபபீடம் காணப்படுகின்றது. இது சோழர்காலத்தில் அதிக அளவில் அத்தகைய கம்பீரத்திற்காகக் கையாளப்பட்டது. பின்னர் சிறிய கோயிலாக இருந்தாலும் அது ஓர் அலங்கார வேலைப்பாடாக இடம் பெற்றது. உபபீடமானது அந்தந்த அதிட்டானத்தின் உறுப்புகளையே பெரிதும் பெற்று வரும். உபபீடத்தில் இடம் பெறும் கண்டத்தில் பலவிதமான சிற்பங்களை இடம் பெறச் செய்வர் பொதுவாக முற்காலச் சோழர்கள் மற்றும் விஜய நகர-நாயக்கர் கோயில்களில் இத்தகு கண்டச் சிற்பங் களுடன் கூடிய உபபீடக் கோயிலுக்கு மதுரை கூடலழகர் கோயிலை எடுத்துக் காட்டாகக் கூறலாம்.
சோழர் காலத்திலும், விஜய நகர – நாயக்கர் காலத் திலும் பிரநாளம் பல்வேறு அழகு வேலைப்பாடுகளுடன் கூடிய வகைகளாக உருமாறின. இக்கால கட்டத்திற்கு பின் தோன்றிய பிரநாளம் சிம்மமுகத்துடன் துவங்கி கூர்மையான பூமுனையுடன் அமைந்ததை விஜயநகர நாயக்கரது கோயில்களில் காணமுடிகின்றது. விஜயநகர- நாயக்கரது காலத்தில் உருண்டையான தண்டுப்பகுதி நீண்டு விளங்கியதுடன் சிறந்த வேலைப்பாட்டுடன் திகழ்ந்தது. பிரநாளம் மகரம், யானை மற்றம் வியாழ முகத்துடன் இவர்களது காலத்தில் படைக்கப்பப்பட்டன.அரைத் துாண் என்பது சுவர் பகுதியில் இடம் பெறும் அலங்கார வேலைப்பாட்டுடன் கூடிய கட்டடக் கலைக் கூறாகும். இவ்வகைத் துாண், சதுரம், அரை வட்டம் என அமைவதோடு பதினாறு பட்டை வரை மடிப்புகளுடன் அமையும். இத்தகு பதினாறு பட்டை அமைப்பு விஜயநகர நாயக்கரது கோயில்களில் பெரும்பாலும் இடம் பெற் றிருக்கும். இவ்வரைத் துாண் பல உறுப்புகளுடன் திகழும். அவை: (1) சதுரப்பகுதி (2) நாகபந்தம் (3) கம்புப்பகுதி (4) மாலசுதானம் (5) பத்பபந்தம் (6) கலசம் (7) தாடி (8) குடம் (9) பத்மஇதழ் (10) பலகை (11) வீரண்கடம் (12) போதிகை என்பன.இத்துாணின் மேற்பகுதியில் இடம் பெறும் போதிகை யானது கோயில்களின் காலத்தைக் கணக்கிட உதவும் ஓர் உறுப்பாகும். ஏனெனில் போதிகையானது பல்லவரது குடைவரையிலிருந்து நாயக்கரது காலம் வரை பல்வேறு வளர்ச்சியைப் பெற்றுவந்துள்ளது.
விஜயநகர நாயக்கரது காலத்தில் கட்டப்பட்ட கோயில்களில் தேவ கோட்டத்தில் பாண்டியரைப் போன்றே இறையுருவங்களை வைக்கவில்லை என்றாலும் ஒரு சில கோயில்களில் இவ்விஜயநகர-நாயக்கர்கள் பாண்டியரது கலை மரபையும் தங்களது கலை மரபுடன் இணைத்து தேவகோட்டங்களை அமைத்து அதில் சிறு அளவிலான இறையுருவத்தையும் இடம் பெறச் செய்துள்ளனர்.
கோட்ட பஞ்சரம் என்பது ஓர் அலங்கார வேலைப் பாடாகும். இது கருவறைச் சுவர்ப்பகுதியில் தேவகோட் டத்தின் இருமருங்கிலும் அகாரை மற்றும் கர்ணப் பகுதி களில் அமைக்கப்படும் விஜயநகர-நாயக்கரது கோயில் களில் இறையுருவங்கள் இன்றி கோட்ட பஞ்சரங்கள் அமைப்பட்டுள்ளன.
கும்பபஞ்சரம் என்பது கீழிருந்து மேலாகக் கலசம்,கால்ப்பகுதி பஞ்சரம் என அமையும். கும்பபஞ்சரம் ஆரம்ப காலத்தில் எளிமையாக அமைக்கப்பட்டு பிற்காலத்தில் குறிப்பாக விஜயநகர- நாயக்கர் காலத்தில் பல மடிப்பு களுடனும் அலங்காரங்களுடனும் அமைக்கப்பட்டது.
கபோதத்தின் கீழ் இடம்பெறும் புடைப்புப் பகுதியே எழுதகம் எனப்படும். இந்த எழுதகப் பகுதியில் பூதகண வரிசை, அன்னவரிசை, பத்மவரிசை போன்ற சிற்ப அலங் கார வேலைப்பாடுகளில் ஏதேனும் ஒன்று இடம் பெறும். சில கோயில்களில் இவ்வகையான அலங்கார வேலைப் பாடுகள் இன்றியும் எழுதகம் அமைவதுண்டு. விஜயநகர- நாயக்கர் காலக் கோயில்களில் எழுதகப் பகுதியில் வளைந்த கட்டை அமைப்பும் இடம் பெறுகின்றது. இக்கட்டைஅமைப்பு அதன் மேலே உள்ள கபோதத்தைத் தாங்குவது போல இருக்கும் விஜயநகர-நாயக்கர் காலக் கோயில்களில் தான் இவை மாற்றப்பட்டு பெருமளவில் வளைந்த கட்டை அமைப்பு இடம்பெறுகின்றது.
கபோதம் எனும் கட்டடக் கலை உறுப்பானது பயன்பாட்டுத் தேவை கருதி எழுதகத்தின் மேல் அமைகிறது. கவிழ்ந்திருப்பதால் இது கபோதம் எனப் பெயர் பெறு கின்றது. இது மழை நீரானது கருவறைச் சுவரின் வெளிப் பகுதியில் படாமலிருப்பதற்காக அமைக்கப்படுவதாகும். கபோத அமைப்பானது பல்லவரது குடைவரைக் கோயில் கள் முதலே காணப்படுகின்றன. தொடர்ந்து கட்டுமானக் கோயில்களில் இடம் பெற்று வந்த கபோதம் விஜயநகர நாயக்கர் காலத்தில் தான் தாழ்வார (கொடுங்கை) அமைப் பைப் பெறுகின்றது.
விமானத் தளங்கள் துவக்க காலத்தில் கற்களினாலேயே கட்டப்பட்டு வந்தன. சோழர் காலத்தில் மிக உயரமான விமானங்கள் அமைக்கப்பட்ட போதிலும் அவை கல்லினா லேயே அமைக்கப்பட்டன. பிற்காலத்தில் இவ்வமைப்பு மாற்றமடைந்தது. பாண்டியரது கோயில்களில் கூரைவரை கல்லினாலும் கூரைக்குமேல் செங்கல், சுதையினாலும் கட்டப்பட்ட கோயில்களை அதிக அளவில் காணலாம். விஜயநகர-நாயக்கர் காலத்துக் கோயில்கள் அனைத்துமே இத்தகைய அமைப்பில் இடம் பெறுகின்றன.
விமானத்தளங்களின் வளர்ச்சி சோழர் காலத்தில் உச்ச நிலையை அடைந்தது. பிற்காலப் பாண்டியர் காலத்தின் இறுதியில் இம்மரபுமாறி, விமானத்தின் உயரத்தை (தளங்களை) குறைத்து கோபுரங்களின் உயரத்தைக் கூட்டும் வழக்கம் துவங்கியது. இவ்வழக்கம் விஜயநகர-நாயக்கர் காலத்தில் நிலைத்து நின்றது. அவர்கள் கட்டிய அல்லது விரிவுபடுத்திய கோயில்களில் கோபுரங்களை விமானத்தின் உயரத்தை விட மிகப் பெரிய அளவில் அமைத்தனர். விமானத்தின் உயரத்தை உயர்த்தி தம்முடைய புகழினையும்பெருமையையும் உயர்த்திக் கொண்டவர்கள் சோழர்கள் என்றும், கோபுரத்தின் உயரத்தை உயர்த்தி தம்முடைய சிறப்பினை அதன் மூலம் நிலை பெறச் செய்தவர்கள் விஜயநகர நாயக்கர்கள் என்றும் கொள்ளலாம்.
தமிழகத்தில் பெரும்பாலான கோயில்களில் துவக்க காலத்தில் கருவறை மற்றும் அர்த்த மண்டபம் மட்டும் கட்டப்பட்டன. அதன்பின் மகாமண்டபம் கட்டப்பட்டது. பிற்காலச் சோழர் காலத்திலும் பாண்டியர் காலத்திலும் சுற்றுப் பிரகாரம் அமைத்து வெளித் திருச்சுற்றுச் சுவரின் வாயிலில் கோபுரமும் அமைக்கப்பட்டன.விஜயநகர- நாயக்கர்கள் எல்லாக் கோயில்களிலும் இத்தகு பிரகாரங் களை அமைத்தனர்.
விஜயநகர-நாயக்கர் காலத்தில் கோபுரங்கள் மிக உயரமாக அமைக்கும் வழக்கம் தொடர்ந்தது. இவர்கள் கோபுரங்கள் கட்டுவதில் அதிக ஈடுபாடும் கவனமும் செலுத்தினர்.
விஜயநகர-நாயக்கர்களால் கட்டப்பட்ட கோபுரங்களுக்கு :
சிறந்த எடுத்துக்காட்டு காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், திருவண்ணா மலை அருணாச்சலேஸ்வரர் கோயில்,சிதம்பரம் நடராசர் கோயில் வடக்குக் கோபுரம், காளகஸ்திகோயில் கோபுரம் ஆகியனவாம். இவை அனைத்தும் கிருஷ்ணதேவராயர் காលល់ គ្រប់ㄴ. (K.R. Srinivasan, Temples of South India, P.181). பாண்டிய நாட்டில் கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்ட கோபுரங்களில் குறிப்பிடத்தக்கது மதுரை மீனாட்சி சுந்தரேசுவர் கோயிலின் தெற்கு, வடக்குக் கோபுரங்களும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பதினோரு தளங்களையுடைய கோபுரமும் ஆகும். இக்கோபுரங்கள், அனைத்தும் ‘ராய கோபுரங்கள்’ என அழைக்கப்படும். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள்- வடபத்ரசாயி கோயிலில் இடம் பெற்றுள்ள விஜயநகர-நாயக்கர் கட்டிய கோபுரமே தமிழக அரசின் முத்திரைச் சின்னமாக அமைந்துள்ளது.
விஜயநகர – நாயக்கரது காலத்தில் கட்டப்பட்ட கோபு ரங்களில் பிரஸ்தரம் வரை கருங்கல்லாலும் அதன் மேல் செங்கற்களாலும் கட்டப்பட்டிருக்கும். வாயிலின் இருமருங் கிலும் பெரிய கற்கள் துாண்கள் போல் அமைந்திருக்கும். மரத்தினாலான வாயிற்கதவுகளில் அழகிய மரவேலைப் பாடுகளுடன் கூடிய சிற்பங்களைக் காணலாம். இத்தகைய வாயிற்கதவுச் சிற்பங்கள் பிரம்மதேசம் பிரம்மபுரீசுவரர் கோயில், கல்லிடைக்குறிச்சி வராகப்பெருமாள் கோயில், அழகர் கோயில் சௌந்தரராசப் பெருமாள் கோயில் ஆகிய இடங்களில் காணலாம்.
செஞ்சி நாயக்கர் கலைப்பாணியை மூன்றாகப் பிரிக்க லாம்.
1. கட்டடக் கலை
2. சிற்பக் கலை
3. ஓவியக் கலை என்பதாகும்.(நூலிலிருந்து)
செஞ்சி நாயக்கர் வரலாறும் கலைகளும் – கே.ஆர். இலட்சுமி
விலை: 100 /-
வெளியீடு: மதன்மோனிகா பதிப்பகம்
Buy this book online: https://www.heritager.in/product/cenci-nayakkar-varalarum-kalaikalum/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers