தமிழகத்தில் வேதக் கல்வி வரலாறு – சி. இளங்கோ

230

Guaranteed Safe Checkout
Extra Features
  • Book will be shipped in 3 - 7 days.
  • Secure Payments
  • To order over phone call 978606 8908
  • Worldwide Shipping
  • If the book is out of stock, you will be refunded.

தமிழகத்தில் வேதக் கல்வி வரலாறு – முனைவர். சி. இளங்கோ

பதிப்பு: அலைகள் வெயீட்டகம்
பக்கங்கள்: 288

புத்தக உள்ளடக்கம்:

1. தமிழகத்தில் வைதிகர்களும் தமிழ்க் கல்வியும் (சங்க இலக்கியமும் தமிழகச் சூழலும்)
2. வைதிகத்திற்கு எதிரான அரசியல் கலகமும் தமிழும் (களப்பிரர் காலம்)
3. வடமொழிக் கடிகைகளும் தமிழ்ப் புலமைவாதிகளும் (பல்லவர் காலம்)
4. வைதிக ஆட்சியும் தமிழ்ப் பண்பாட்டுக் கல்வியும் (சோழர் காலம்)
5. வடமொழியும் தமிழும் : ஒரு முகத்தில் இரு கண்கள் (பாண்டியர் காலம்)
6. புதிய அரசியல் மாற்றங்களும் வைதிகமும் (கி.பி. 13 முதல் கி.பி. 19 வரை வடமொழியும் தமிழும்)
7. திண்ணைப் பள்ளிக்கூடமும் – தமிழ் மடங்களும் (பிற்கால நீதி நூல்களும் தமிழ்க் கல்வியும்)
8. தமிழ்- வடமொழி:வேறுபட்ட மொழிக் குடும்பங்கள் (திராவிட மொழிக் குடும்பம் – தனித்தமிழ் இயக்கம் -இன்றையப்போக்கு)

9. முடிவாக
துணை நூல் பட்டியல்

Buy Online: https://www.heritager.in/shop/thamizhagathil-vedha-kalvi-varalaru
Order on WhatsApp: wa.me/919786068908

 

சங்க காலத்தில் அந்தணரின் தொழில்கள் என்னவென்று பார்த்தால் அவை : 1. ஓதல், 2. ஓதுவித் தல், 3. வேட்டல், 4. வேட்பித்தல், 5. ஈதல், 6. ஏற்றல் என்பவையாகும்.

இதில் ஓதல், வேட்டல் முதலானவை வேதம் ஓதலையும், யாகம் வளர்த்தலையும் குறிக்கிறது. இது மட்டுமில்லாமல் இதனைக் கற்றுத் தருபவர்களாக அவர்கள் இருந்ததை ஓதுவித்தல், வேட்பித்தல் என்ற சொற்கள் உணர்த்துகின்றன. இதன் மூலம் வேத பாடம் சங்ககாலத்தில் கற்பிக்கப்பட்டது என்பது புலனாகிறது. இந்த வேதக் கல்வி எவ்வாறு கற்பிக்கப்பட்டது என்ற குறிப்புகள் எதுவும் சங்கப் பாடல்களில் இடம்பெறவில்லை. பரிபாடலில் ‘வேள்விமுதல்வன்’ என்ற தொடர் கையாளப்பட்டுள்ளது. இவ் வேள்வி முதல்வன் என்பதற்கு ஆய்வாளர் கே. பழனிவேலு பின்வருமாறு விளக்கம் அளிக்கின்றார்:

ஆசான் என்பதற்கு வேள்வி முதல்வன் எனப் பொருள் கொள்ளப்பட்டிருக்கின்றது. (பரி. 2:61) இந்த வேள்வி முதல்வன் என்பவன் வேள்விச் சடங்குகளை நிகழ்த்தும் தலைமைக் குருவாக இருந்திருக்கலாம். வேள்வியின் அனைத்துக் கூறு களையும் அறிந்த தலைமை குரு தமது மகனுக்கு அல்லது மாணவர்களுக்குக் கற்பித்திருக்க வேண்டும்

சங்க இலக்கியத்தில் வேதங்களைப் பயிற்றுவிக்கும் குரு பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ள நிலையில் பதிற்றுப்பத்தில் வேள்வி களைச் செய்த மன்னர்களைப் பற்றிய குறிப்பும் இடம் பெறுகின்றது. பெருஞ்சேரல் இரும்பொறை பற்றிய பதிற்றுப்பத்து பாடல்,

கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்ப – (1.74:12)

என அவன் வேள்வி செய்ததைக் குறிப்பிடுகிறது. இதுபோல் செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பற்றிய கபிலர் பாடல்,

அறம் கரைந்து வயங்கயி நாவின் பிறங்கிய உரைசால் வேள்வி முடித்த கேள்வி அந்தணர் அருங்கலம் ஏற்ப நீர்பட்டு இருஞ்சேறு ஆடிய மணல்மலி முற்றம் (क्र. 69:3-6)

என்றும்,

வேள்வியில் கடவுள் அருத்தினை கேள்வி

உயர்நிலை உலகத்து ஐயர் இன்புறுத்தினை – (பதி. 70:18,19)

என்றும், சேரர்களுக்கும் வேள்விக்கும் உள்ள உறவினைச் சங்க நூலான பதிற்றுப்பத்து விளக்குகிறது. மேலும் பர்ப்பனர்களுக்கு கட்டுப்பட்டவர்களாக அன்றைய அரசர்கள் சிலர் இருந்தமைக் கான சான்றுகளும் சங்க இலக்கியத்தில் உள்ளன. சான்றாக,

பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியலையே -(பதி. 63:1)

இறைஞ்சுகக் கெரும நின் சென்னி சிறந்த நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே – (புறம். 19,20)

புறநானூறு குறிப்பிடும் பல்யாக சாலை முதுகுடுமி பெருவழுதி பல யாகங்களைச் செய்தவன். மேலும் சங்ககாலச் சோழ மன்னனான பெருங்கிள்ளி வேதக் கருத்தியலின் ஆதரவாளனாக இருந்துள்ளான். இவன் இராசசூய யாகத்தைச் செய்தான். இவனது யாகத்தில் சேர மன்னன் மாரி வெண்கோவும், பாண்டிய மன்னன் உக்கிரப் பெருவழுதியும் கலந்துகொண்டனர். இவர்கள் மூவரும் யாகத்தில் ஒன்றாக இருப்பதைக் கண்ட ஔவையார் ஒன்றுபட்டு இருப்பீராக என வாழ்த்துகிறார். இதனைப் புறம். 367 பாடல் விளக்குகிறது.

‘ஒன்று புரிந்து அடங்கிய இரு பிறப்பாளர்’ (புறம். 367:12)-என அந்தணர்கள் சங்ககாலத்தில் அழைக்கப்பட்டனர். இதனால் இரண்டாவது பிறப்பாகிய உபநயனம் செய்விக்கப் பெற்றுள்ளதை அறிய முடிகிறது. உபநயனம் செய்விக்கப் பெற்ற பின்னரே பார்ப்பன மாணவர்கள் வேதம் கற்றல் என்ற முறையை அன்று வழக்கத்தில் கொண்டிருந்தனர் என்பது புலனாகிறது.

பிராமணர்களுக்கு அன்று வேதங்களைச் சொல்லிக் கொடுக்கும் சில பள்ளிகள் இருந்தன. இது பற்றிய குறிப்பைச் சங்கப் பாடல்களின் வழி அறிய முடிகின்றது. சங்க காலத்தில் கோயில் அமைப்பு முறை இன்று உள்ளதுபோல் வளர்ச்சியடையாத காரணத்தால் பிராமணர்களிடம் கோயிலில் வேதம் கற்கும் நடைமுறை என்பது இல்லை.

இவ்வாறு தமிழகத்தில் இருந்த வேத கல்விமுறை பற்றி ஆய்வு ரீதியில் அணுகுவோருக்கான, முனைவர். சி. இளங்கோ எழுதிய நூல்.

Weight0.4 kg