மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று, சொன்னாலே நிறைய பேருக்கு கோபம் வருகிறது. ஆனால் சுமார் எட்டு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய உலகில் மனிதனைத் தேடினால் நமக்கு இந்த மூஞ்சுறு shrews எலியின் ஒரு வகையாகத்தான் கிடைத்திருப்பான். ஏனெனில் பரிணாமக் கோட்பாட்டு ஆய்வுகளின்படி இவைகளே நம் ஆதி பாலூட்டி முன்னோர்கள்.
டைனோசார்கள் முற்றிலும் அழிவதற்கு முன்பு தான், நாம் ஒரு வகை பல்லியில் இருந்து ஒரு பெரு விலங்காக மாறினோம். ஆனால் இன்று எவ்வாறு மனிதன் பூமி எங்கும் நிறைந்து இருக்கின்றானோ அதே போல டைனோசர்களின் பல இனங்கள் உலகின் எல்லா இடங்களிலும் இருந்துள்ளன. எனவே, டைனோசர்களின் ஆதிக்கத்துக்குப் பயந்து உருவத்தில் குறைந்து, தரைக்கு அடியில் வாழும் தகவமைப்பை பெற்ற எலி போன்ற shrews வகை பாலூட்டியாக முதன்முதலில் பரிணமித்தோம்.
விண்கல் தாக்கி டைனோசர்கள் அழிந்த பிறகு, அந்த பெரும் உடல்களை உண்டு வாழக்கூடிய பூச்சிகள் அதிக அளவில் இந்த பூமியில் தோன்ற ஆரம்பித்தன. மூஞ்சுறு வடிவில் இருந்த பாலூட்டி அப்பூச்சிகளை நன்றாக உண்டு வாழ்ந்தன. எதிரிகள் இல்லாததாலும், உணவாக பூச்சிகள் அதிகப்படியாக கிடைத்ததாலும், மீண்டும் பெரிய உருவ அமைப்பை பெற்ற விலங்காக பரிணாம வளர்ச்சியடைந்தோம். பின்பு குரங்காக மாறி இறுதியில் மனிதனாக மாறுவதற்கானப் பயணத்தை தொடர்ந்துள்ளோம்.
காலச் சூழலைப் பொறுத்து தொடர்ந்து உயிர்வாழ பரிணாம வளர்ச்சி என்ற தகவமைப்பைப் பயன்படுத்தி, மனிதனாகிய நாம் பல வடிவங்களை எடுத்துள்ளோம். இன்று நாம் எடுத்திருக்கும் இந்த மனித உருவமும் கூட தற்காலிகமானதாக இருக்கலாம். உலகிலேயே மனிதனுக்கு அடுத்ததாக காரமான உணவுப் பொருட்களை விரும்பி உண்ணக் கூடிய இரண்டாவது உயிரினம் இந்த Shrews எனும் மூஞ்சுறு வகை எலிகள் தானாம். இவ்வகை சிறிய பாலூட்டிகளுடனா நமது டிஎன்ஏ க்கள் அதிகம் ஒத்துப்போவதால் தான் மனித நோய்க்கான மருத்துவ ஆய்வுகளில் எலியும், குரங்குகளும் பயன்படுத்தப்படுகின்றன.
டைனோசர்களை மறைமுகமாக உண்டதன் (பூச்சிகள் வழியே) மூலமாக நாம் தொன்றியுள்ளோம். எனவே டைனோசர் அழிந்ததால் தான் மனித இனமே தொன்றுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சொல்லப்போனால், நாம் இன்று விரும்பி உண்ணும் கோழியும் கூட, டைனோசர்களின் வழி தோன்றல்கள் தான். அதனை பின்பு காண்போம்.
#வந்தேறி_மனிதன்
https://www.scotsman.com/news/uk-news/humans-evolved-shrew-scientists-claim-1591234
https://www.livescience.com/60888-rat-creatures-were-earliest-eutherian-mammal-ancestors.html#:~:text=Learn%20more-,These%20Rodent%2DLike%20Creatures%20Are%20the%20Earliest%20Known,of%20Humans%2C%20Whales%20and%20Shrews&text=The%20earliest%20known%20ancestors%20of,much%20earlier%20than%20previously%20thought.
https://www.livescience.com/32860-why-do-medical-researchers-use-mice.html#:~:text=As%20a%20minimum%20requirement%2C%20mice,of%20the%20same%20purebred%20species.&text=Another%20reason%20rodents%20are%20used,replicated%20in%20mice%20and%20rats.
https://mrc.ukri.org/publications/browse/primates-in-medical-research/
https://www.nationalgeographic.com/animals/2018/07/tree-shrews-pain-chili-peppers-news/
https://www.nationalgeographic.com/news/2011/8/110824-placental-mammal-shrew-fossil-earliest-ancestor-evolution-science/