ஆலய நிர்மாணம்
ஆலய நிர்மாணம் நமது நாட்டில் சைவாகமங்களை ஒட்டியும், சாக்தேயம், பாஞ்சராத்திரிகம், தந்திரம் முதலியனவற்றை யொட்டியும் ஆலயங்கள் நிர்மாணம் செய்யப்படுகின்றன. சிவாகமங்கள் இருபத்தெட்டோடு சைவ உபாகமங்கள் நூற்றுப்பதின்மூன்று உள்ளன. சாக்தேய ஆகமங்கள் அறுபத்துநான்காகும். பாஞ்சராத்ராகமங்கள் நூற்றெட் டென்பர். அவற்றுள் முக்கியமானவை பாஞ்சராத்ரமும், வைகானஸமுமாகும்.…