பல் யானைச் செல்கெழு குட்டுவன் ஆட்சி
பல்யானைச் செல்கெழு குட்டுவன் குடநாட்டின்கண் மாந்தை நகர்க்கண் இருந்து இமயவரம்பன் ஆட்சி புரிந்து வருகையில் குட்ட நாட்டில் வஞ்சி நகர்க்கண் இருந்து பல் யானைச் செல்கெழு குட்டுவன் ஆட்சி செய்து வந்தான். இக்குட்டுவன் இமயவரம்பனுக்கு இளையனாதலின், இளமை வளத்தால் இவன் போர்ப்புகழ்…