தெலுங்கு சோழர் வரலாறு 2: தெலுங்குச் (சோழ) குல காலன் – தெலுங்கு குல காலன்
தெலுங்கு சோழர்களும், தமிழ் சோழர்களும் பரம எதிரிகள். தெலுங்கில் சோழர் சோடர் எனப்படுவர்.
தெலுங்குச் சோழர்கள் எல்லோரும் தங்களைச் ரேணாட்டு சோழர்கள் எனச் சொல்லிக் கொண்டார்கள். இவர்களில் ஐந்து வம்சங்கள் வெவ்வெறு காலகட்டங்களில் வெவ்வேறு இடங்களை ஆண்டுள்ளனர். இவர்கள் ஆண்ட பகுதிவாரியாக இவர்கள் பிரித்து அடையாளப்படுத்தப்படுகின்றனர்.
ரேணாட்டு சோழர்
பொத்தப்பி சோழர்
நெல்லூர் சோழர்
கோனிடேனா சோழர்,
நன்னூரூ சோழர்,
நெல்லூர் சோழர்கள்
இவர்களில் ஒரு பிரிவினர் ரேநாட்டுச் சோழர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். இவர்களின் நாடு ரேணாடு ஏழாயிரம் என குறிப்பிடப்பட்டது. இவர்கள் தாங்கள் கரிகாலன் வழியினர் என்றும், உறையூரைச் சேர்ந்தவரென்றும் சிலர் உரிமை கொண்டாடினர். தங்களை சூரிய மரபினர் என்றும் காசியப கோத்திரத்தினர் என்றும் சொல்லிக்கொண்டனர். மற்ற பகுதி தெலுங்கு சோழர்கள், ரேணாட்டு சோழர்களை மட்டும் மகாராஜா என அடைமொழியிட்டு அழைக்கின்றனர்.
பெத்தகல்லு வம்சாவளியான வேங்கியை ஆண்ட தெலுங்கு சோழனான ஜடா சோட பீமனை (தெலுங்கு சோழனை) முதலாம் இராஜராஜ சோழன் போரில் வென்றதை திருவாலங்காடு செப்பேடு கூறுகிறது.
மேலை சாளுக்கியருக்கு ஆதரவாக காஞ்சியை தெலுங்கு சோழர் கைப்பற்றிவிடுகின்றனர். அதனால், காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கல்வெட்டு தெலுங்கு சோழனான ஜடா பீம சோடனை “சோழ திரிநேத்ரா”அல்லது “முக்கண் உடையவன்”, “சோழர்குல மாணிக்கம்” எனப் போற்றுகிறது.
இராஜராஜ சோழர் ஆட்சிக்கு வந்தபிறகு ஜட சோட பீமனை கொன்று, “தெலுங்கு குல காலன்” என பெயர் தமிழ் சோழருக்கு வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ரேணாட்டு சோழரை தமிழ் சோழருக்கு ஆதரவாக, கீழைச் சாளுக்கிய அரசன் சக்திவர்மன் கொன்றான் என அவனது பிரபுபற்று செப்பேடு கூறுகிறது.
சரி இராஜராஜ சோழனும், சோட பீமனும் எவ்வளவு பெரிய எதிரிகள் என்பதை திருவலங்காடு செப்பேடு கூறுகிறது. “புராணத்தில் ராஜராஜன் என பெயர் கொண்ட துரியோதனனை, போரில் பீமன் எனப் பெயர் கொண்டவன் தனது கதையால் தாக்கி அழித்தான், அதனாலேயே இந்த மிகவும் வலிமை வாய்ந்த இந்த ஆந்திர அரசனான பீமனை இராஜராஜன் ஆகிய நான் கொன்றேன்” என்பதாக அப்பாடல் பொருள் வருகிறது. பிறப்பாலேயே பங்காளிகளான துரியோதனும் பீமனும் எதிரிகள், அதேபோல தானும், பீமா சோடனும் எதிரிகள் என்பதாய் இப்பாடல் வருகிறது. இந்த தெலுங்கு சோழ சோட பீமனின் அடைமொழிகளில் ஒன்று தெலிங்கா என்பது.
விஜயநகரத்தார் காலத்திலும் பல தெலுங்கு சோழர்கள் ஆட்சியாளராக நீடித்துள்ளனர்.
தெலுங்கு (சோழ) குல காலன்
ராஜராஜச் சோழன் படத்தில் இந்த காட்சி வரும், கீழைச் சாளுக்கியரான விமலாதித்தனையும் (முத்துராமன்) எதிரிகளிடமிருந்து காப்பாற்றி மீண்டும் சோழர் ஆட்சியின் கீழ் ஆட்சி அவருக்கு வழங்கப்பட்டிருக்கும். அந்த எதிரி யார் என்பதை காண்போம்.
கீழைச் சாளுக்கியரின் கடைசி சுதந்திர அரசன் தானார்ணவ ஆவான். இவன் ஆட்சி ஏறி மூன்று ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்த மன்னன், தனது ஆட்சிக்காலம் முழுவதும் எதிரிகளுடன், குறிப்பாக தெலுங்கு சோழனான ஜடா சோட பீமன் என்பவனுடன் தொடர்ந்து போரிட வேண்டியிருந்தது. இந்த ஜடா சோட பீமன், இன்றைய கர்நூல் மாவட்டத்திலுள்ள பெடகல்லு பகுதியைச் சேர்ந்த தெலுங்குச் சோழ மன்னவன். இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டதற்கான சரியான காரணங்கள் முழுமையாகத் தெரியவில்லை. இருப்பினும், இந்த தெலுங்குச் சோழ பீமன், ராஜ-பீமன் அல்லது சாளுக்கிய இரண்டாம் பீமன் என்பவரின் பேரன் என்றும், சாளுக்கிய இரண்டாம் அம்மா வின் மைத்துனன் (மனைவியின் சகோதரன்) என்றும் கூறப்படுகிறது.
தனது மைத்துனன் இரண்டாம் அம்மா கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கவே, ஜட சோட பீமன் கி.பி. 973-ல் தானார்ணவனைக் போரில் தோற்கடித்துக் கொன்றான். இந்த நிகழ்வு, கிழக்கு சாளுக்கியர்களின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
ஏனெனில், கி.பி. 7 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில், குப்ஜ விஷ்ணுவர்த்தனன் என்பவரால் வேங்கியில் நிறுவப்பட்ட சாளுக்கியப் பேரரசு, முதன்முறையாகத் தனது ஆட்சியை முழுமையாக இழந்தது. இதற்கு முன் நடந்த உள்நாட்டுப் போர்கள், அயல்நாட்டுப் படையெடுப்புகள் போன்றவற்றால், சாளுக்கியர்களின் ஆட்சி தற்காலிகமாக பாதிக்கப்பட்டிருந்தாலும், அரியணையில் எப்போதும் ஒரு சாளுக்கிய மன்னரே இருந்தார். ஆனால், தானார்ணவனின் மரணத்துக்குப் பிறகு, நிலைமை மாறியது.
அவரது மகன்கள் நாடு கடத்தப்பட்டனர். இதன் காரணமாக, கீழைச் சாளுக்கியப் பேரரசு வேங்கிப் பகுதியில் ஒரு முடிவுக்கு வந்தது. இது தான் படத்தில் வரும் கதைக்கு பின் உள்ள வரலாறு. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட தெலுங்கு சோழக் குடும்பத்தைச் சேர்ந்த ஜடா சோட பீமன், சாளுக்கியர்களின் அரியணையைக் கைப்பற்றி, தனது ஆட்சியை நிலைநிறுத்திக் கொண்டான்.
ஜடா சோட பீமனின் ஆட்சி (கி.பி. 973 – 1000)
ஜடா சோட பீமன் கி.பி. 973 முதல் 1000 வரை சுமார் இருபத்து ஏழு ஆண்டுகள் வேங்கியை ஆட்சி செய்தான். பிற்கால கிழக்கு சாளுக்கியக் கல்வெட்டுகளில் இந்த காலகட்டம், ‘இடைக்கால ஆட்சி’ என்று குறிப்பிடப்படுகிறது.
இவனது ஆட்சி குறித்த ஒரே ஒரு கல்வெட்டு மட்டுமே தற்போது கிடைத்துள்ளது. அதில், பீமன் தன்னைப் புகழ்ந்து, குனக விஜயாதித்தன் என்பவனுடன் ஒப்பிட்டுக் கொள்கிறான். இதிலிருந்து, குனக விஜயாதித்தனிடமிருந்து தனது வம்சாவழியைப் பெருமையுடன் குறிப்பிட்டிருக்கலாம். இந்த ஒப்பீடு குறிப்பிடத்தக்கது. ஏனெனில், குனக விஜயாதித்தனைப் போலவே, பீமனும் பல எதிரிகளுடன் போரிட்டு, பெரும் நிலப்பரப்பை ஆட்சி செய்தான்.
பீமன், அங்க, கலிங்க, வைதும்ப மற்றும் திராவிட (தொண்டை மண்டலம்) நாடுகளின் மன்னர்களைத் தோற்கடித்தான். தனது வலிமையான காலத்தில், மகேந்திரகிரி முதல் காஞ்சிபுரம் வரையிலும், வங்காள விரிகுடா முதல் கர்நாடக எல்லை வரையிலும் உள்ள கடலோரப் பகுதிகள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தான்.
சோழப் பேரரசர் முதலாம் இராஜராஜனின் படையெடுப்பு
கி.பி. 1001-ல் ஜட சோட பீமன் தெற்கில் உள்ள தொண்டைமண்டலத்தின் மீது படையெடுத்தான். இந்த படையெடுப்புக்கான சரியான காரணங்கள் கல்வெட்டுகளில் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை. எனினும், அக்கால சோழர் மற்றும் கிழக்கு சாளுக்கியர்களின் கல்வெட்டுகளை ஆய்வு செய்யும்போது, சில காரணங்கள் தெளிவாகின்றன.
சோழ மன்னன் முதலாம் இராஜராஜன், தனது பேரரசை விரிவுபடுத்தும் நோக்கத்தில், தானார்ணவனின் மகன்களுக்கு ஆதரவு அளித்தான். இளைய மகனான விமலாதித்தனுக்குத் தனது மகள் குந்தவையை மணம் முடித்துத் தந்தான். மூத்த மகனான சக்திவர்மன் I-ஐ மீண்டும் அவனது அரியணையில் அமர்த்தும் நோக்கில், கி.பி. 999-1000-ல் வேங்கியின் மீது படையெடுத்தான்.
முதலாம் இராஜராஜனின் 14-ஆம் ஆட்சியாண்டு (கி.பி. 999-1000) கல்வெட்டுகள், அவன் வேங்கியை வென்றதாகக் குறிப்பிட்டாலும், உண்மையில் அவனால் முழுமையாக வெற்றி பெற முடியவில்லை. ஏனெனில், ஜடா சோட பீமன் வலிமை வாய்ந்த எதிரிகளுடன் கூட்டணி அமைத்திருந்தான். சோழக் கல்வெட்டுகள் குறிப்பிடுவதுபோல, அவனை அவ்வளவு எளிதாகத் தோற்கடிக்க முடியவில்லை.
இதன் காரணமாக, முதலாம் சக்திவர்மனின் ஆட்சிக்காலக் கல்வெட்டுகளில், சோழர்களின் உதவியைப் பற்றி எதுவும் கூறாமல், தானே தனது வீரத்தால் வெற்றி பெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தக் கல்வெட்டுகள், பீமனுக்கு எதிராக இரண்டு அல்லது மூன்று போர்கள் நடந்திருக்கலாம் எனத் தெரிவிக்கின்றன.
முதல் போர்: சோழர்களின் துணையுடன் சக்திவர்மன் வேங்கியை நோக்கி முன்னேறியபோது, பீமன் தனது சிறந்த தளபதியான ஏகவீரன் என்பவனை, இவர்களை எதிர்த்துப் போரிட அனுப்பினான். ஏகவீரன் திறமைசாலியாக இருந்தபோதிலும், சக்திவர்மனிடம் தோற்று, போர்க்களத்திலேயே கொல்லப்பட்டான். அவனது படைகள் சிதறடிக்கப்பட்டன.
இரண்டாவது போர்: அடுத்து, தெலுங்கு சோழ இளவரசர்களான மகாராஜா மற்றும் பத்தெம்மா ஆகியோர் சக்திவர்மனை எதிர்த்தனர். அவர்களும் தோல்வியடைந்து, போர்க்களத்திலிருந்து தப்பி ஓடினர்.
இந்தத் தொடர் தோல்விகள், பீமனுக்குப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தின. இதனால், பீமன் வேங்கியை விட்டு வெளியேறி, கலிங்கத்தின் மலைகளிலும், காடுகளிலும் தஞ்சமடைந்தான். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சக்திவர்மன் வேங்கியை ஆக்கிரமித்து, தன்னை மன்னனாக அறிவித்துக் கொண்டான். அவனது நோக்கம் நிறைவேறியதால், சோழப் படைகள் தங்களது நாட்டுக்குத் திரும்பின.
ஆனால், பீமன் தனது தைரியத்தை இழக்கவில்லை. அவன் புதிய படைகளைச் சேகரித்து, வேங்கியை நோக்கி மீண்டும் படையெடுத்தான். சக்திவர்மன் அவனை எதிர்த்தானா என்பது தெளிவாகத் தெரியவில்லை. எதிர்த்திருந்தாலும், அது பயனுள்ளதாக இருந்திருக்காது. பீமன் வேங்கியை வெற்றிகரமாகக் கடந்து, தொண்டைமண்டலத்தின் மையப்பகுதிக்குள் ஊடுருவி, சோழப் பேரரசின் முக்கிய நகரங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தை, கி.பி. 1001-1002-ல் கைப்பற்றினான்.
ஆனால், அங்கும் அவனால் நீண்ட காலம் இருக்க முடியவில்லை. முதலாம் இராஜராஜன் அவனை விரைவிலேயே தனது ஆட்சிப்பகுதியிலிருந்து விரட்டினான். அவனை முற்றிலும் ஒழித்துக்கட்ட ஒரு திட்டத்தையும் தீட்டினான். கி.பி. 1002-1003-ல் முதலாம் இராஜராஜன் மீண்டும் தெலுங்கு நாட்டின் கடலோரப் பகுதிக்கு படையெடுத்து, கலிங்கம் வரை முன்னேறினான். அங்கு, பீமனைக் போரில் கொன்று, விமலாதித்தன் அண்ணனான முதலாம் சக்திவர்மன்-ஐ மீண்டும் வேங்கியின் அரியணையில் நிலைநிறுத்தினான்.
சரி ராஜராஜர் தோற்கடித்த அந்த எதிரி படத்தில் மேலைச் சாளுக்கியர் என்று கூறப்பட்டிருக்கும். ஆனால் ராஜராஜார் கொன்றது ஒரு தெலுங்குச் சோழனை. காஞ்சியைச் கைப்பற்றி வேங்கியை சுதிந்திர நாடாக அறிவித்தவர் ஜடா பீமா சோழன் என்ற தெலுங்கு சோழர் ஆவார். இவரை போரில் வேன்றதாலேயே “தெலுங்கு குல காலன்” என்ற பட்டப்பெயர் தமிழ்ச் சொழரான ராஜராஜருக்கு உண்டு என ஆய்வளார்கள் கருதுகின்றனர். இவனை கொன்றதைப் பற்றி ராஜராஜர் தனது செப்பேட்டில் வருணித்து கூறி இருப்பார்.
இராஜராஜ சோழனும், சோட பீமனும் எவ்வளவு பெரிய எதிரிகள் என்பதை திருவலங்காடு செப்பேடு கூறுகிறது. “புராணத்தில் ராஜராஜன் என பெயர் கொண்ட துரியோதனனை, போரில் பீமன் எனப் பெயர் கொண்டவன் தனது கதையால் தாக்கி அழித்தான், அதனாலேயே இந்த மிகவும் வலிமை வாய்ந்த இந்த ஆந்திர அரசனான பீமனை இராஜராஜன் ஆகிய நான் கொன்றேன்” என்பதாக அப்பாடல் பொருள் வருகிறது. பிறப்பாலேயே பங்காளிகளான துரியோதனும் பீமனும் எதிரிகள், அதேபோல தானும், பீமா சோடனும் எதிரிகள் என்பதாய் இப்பாடல் வருகிறது. இந்த தெலுங்கு சோழ சோட பீமனின் அடைமொழிகளில் ஒன்று தெலிங்கா என்பது.
ஜடாசோட பீமணை தெலுங்குச் சோழர்களிலேயே சிறந்து விளங்கிய வீரமிக்க மன்னர் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்த ஜடாசோழன் என்பதே தமிழ் இலக்கியங்களில் சேட்சென்னி (இளஞ்சேட்சென்னி) என வருகிறது. ஜடா=சேட், சென்னி=சோழ. ஜடாசோடன் என்பவர் தெலுங்குச் சோழரின் முன்னோர் எனக் கூறப்படும் கரிகாலனின் தந்தை என தெலுங்குச் சோழர் ஆவணங்கள் கூறுகின்றன. தமிழ் ஆவணங்கள் இளஞ்சேட்சென்னியை கரிகாலனின் முன்னோர் எனக் கூறுகிறது.
ஒரே காலக்கட்டத்தில் ‘தெலுங்கு குல காலன்’ என்ற பட்டத்தை மூன்று பேர் கொண்டிருந்தனர்.
அவர்களில் ஒருவர் சோழ மன்னன் விக்ரமசோழன். மற்றொருவர் அவருக்கு ஆதரவாக தெலுங்கு நாட்டிற்கு படை எடுத்து சென்ற பாண்டிய மன்னன் சடையவர்மன் பராந்தக பாண்டியன். மூன்றாவது நபர் தெலுங்கு நாட்டில் இவர்களின் போருக்கு துணை நின்ற வேல்நாட்டு தெலுங்கு சோழன்.
இந்த மூவரும் இணைந்து, கொனலு (குளம்) பகுதியைச் சேர்ந்த தெலுங்குச் சோழன் வீமனை எதிர்த்துப் போர் புரிந்தனர். சோழப் பேரரசுக்கு எதிராகக் கலிங்கர்களுடன் வீமன் கூட்டணி வைத்ததே இந்தப் போரின் முக்கியக் காரணம்.
குளம் பகுதிக்கு அடுத்துள்ள மலைப் பகுதியில் பதுங்கியிருந்த வீமனைத் தேடிச் சென்று கொன்றதாகக் கூறப்படுகிறது. தெலுங்குச் சோழன் வீமனையும் அவனுடைய பிள்ளைகளையும் உறவினர்களையும் வேல்நாட்டு தெலுங்குச் சோழன் தனது கைகளாலேயே கொன்றதாக, அவரது கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்கு குல காலன் என்ற பட்டப்பெயர் தெலுங்கருக்கே உண்டு.. நேரடியாக தெலுங்கன் குலத்தை அழித்தவரும் தெலுங்கரே…
கொல்லப்பட்டவன்” காஞ்சியை கைப்பற்றிய தெலுங்குச் சோழன் ஜடா பீம சோடன்
காரணம்: பீமன் என்ற பெயர் வைத்ததால்கொன்றவர்: முதலாம் குலோத்துங்கனின் (கலிங்கத்துப்போர்) சாளுக்கிய சோழன்,
கொல்லப்பட்டவர்: அனந்தவர்மன் சோட கங்கன் (தாய்வழியில் சோழன்) – கலிங்க மன்னன்
காரணம்: சோழப் பேரரசுக்கு இரண்டு வருடமாக வரி கொடாமைகொன்றவர்: விக்கிரம சோழன் – கலிங்கத்துப் போர் (சாளுக்கியச் சோழன்)
கொல்லப்பட்டவன், கொலனு பகுதி ஆண்ட தெலுங்கு சோழன் ராஜேந்திர சோடன் வழிவந்த, தெலுங்கு சோழன் பீமன் (தெலிங்க வீமன்) (வேறு பெயர் தெலுங்கு நாயக்கன்)
காரணம்: சோழப் பேரரசுக்கு எதிராகப் புரட்சிமூலம்: ஆந்திர பிரதேச கெஜட்டியர் – மேற்கு கோதாவரி பகுதிகள்
தெலுங்குக் குல காலன் – தெலுங்கர் தமிழர் இனமோதல் போக்கிற்கும் திராவிட கட்சி அரசியலுக்கு எதிராகப் பயன்படும் சொல்
பண்டைய சோழ மன்னர்கள், தாங்கள் வெற்றி கொண்ட நாடுகள் மற்றும் மன்னர்களின் பெயர்களைத் தங்கள் பட்டங்களோடு சேர்த்துக்கொள்வது வழக்கம். இது மொழி அல்லது இன வெறுப்பின் காரணமாக ஏற்பட்டதல்ல, மாறாக அவர்களின் வீரத்தையும் வெற்றியையும் குறிக்கும் ஒரு பாரம்பரியம்.
கேரளாந்தகன்: சேர நாட்டை வென்றதால் சோழ மன்னர்களுக்கு இந்தப் பட்டம் சூட்டப்பட்டது.
பாண்டிய குலாசினி: பாண்டிய நாட்டை வென்றதால் இந்த பட்டம் பெற்றனர்.
தைலக்குல காலன்: தைலா என்ற சாளுக்கிய மன்னரை போரில் வென்றதால் இந்தப் பெயர் வழங்கப்பட்டது.
ஈழம் கொண்டருளிய: இலங்கையை போரில் வென்றதால் இந்தப் பட்டம் கொடுக்கப்பட்டது.
தெலுங்க குல காலன்: கொலநு பகுதியின் தெலுங்கு பேசிய தெலுங்குச் சோழர்களை வென்றதால் இந்தப் பட்டம் வந்தது. தமிழ் அறிஞர்கள் இவர்களை வெறும் தெலுங்கர் என்றே குறிப்பிட்டுவிட்டனர்
இப்படி ஒவ்வொரு பகுதியை வெற்றியையும் அவர்களின் பட்டங்கள் மூலம் மக்கள் அறிந்து கொண்டனர். இந்தப் பட்டங்கள், அவர்கள் வெற்றி பெற்ற பகுதியைச் சார்ந்த மக்களை வெறுத்ததைக் குறிக்காது.
வரலாற்றுப் பட்டங்களும் அரசியல் தெளிவும்
ஒரு மன்னன் ‘தெலுங்க குல காலன்’ என்று பட்டம் சூட்டிக்கொண்டார் என்பதற்காக, அவர் தெலுங்கு மொழி பேசும் மக்களை வெறுத்தார் என்று பொருள் கொள்ள முடியாது.
அதேபோல், ‘ஈழம் கொண்டருளிய’ கடாரம் கொண்டான் என்ற பட்டங்கள், ஈழத் தமிழர்களுக்கு சோழர்கள் எதிரானவர்கள், மலேசிய மக்களுக்கு சோழர்கள் எதிராவனர்கள் என்று இனவெறி பிரச்சாரம் செய்யமுடியாது. அது ஒரு போரில் பெற்ற வெற்றியை மட்டுமே குறிக்கிறது.
இதேபோல், ‘மதுராந்தகன்’ அல்லது ‘பாண்டியன் தலை கொண்டருளிய’ போன்ற பட்டங்கள், சோழ மன்னர்கள் பாண்டிய மக்களை வெறுத்தனர் என்று பொருள்படாது.
அப்படிப் புரிந்துகொண்டால், இன்று சோழநாட்டிற்கும் தொண்டை நாட்டிற்கும் இடம் பெயர்ந்து வாழும் பாண்டிய நாட்டு மக்கள் மீது அதே போர் வெறுப்புப் பிரச்சாரம் செய்ய வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.
ஒரு மன்னனின் அரசியல் நிலைப்பாட்டையும், வெற்றிப் பட்டத்தையும் கொண்டு ஒரு சமூகத்தையோ, மொழியையோ வெறுத்ததாகக் கருதுவது தவறான புரிதல்.
சோழர்களின் வெளியுறவுக் கொள்கையும் திராவிட அரசியலும்
சோழர்கள் மொழி வெறியர்களாக இருந்திருந்தால், தெலுங்கு மொழி பேசும் வடுகப் படைகளைத் தங்கள் படைகளாக ஈழம் வரைக்கும் அனுப்பியிருக்க மாட்டார்கள். அத்துடன், வடுகத் தலைவர்களைத் தமிழகப் பகுதிகளில் நிர்வாகிகளாக நியமித்திருக்கவும் மாட்டார்கள்.
இதற்கு மற்றொரு சான்றும் உள்ளது.
சோழர்கள் வடுகப் பகுதிகளான கன்னட மற்றும் தெலுங்கு பேசும் குடும்பங்களில் பெண் கொடுத்தும், பெண் எடுத்தும் திருமண உறவுகளைப் பேணியுள்ளனர். குந்தவை என்ற பெயர்கள் கொண்ட பல அரசிகள் சோழர் குடும்பத்தில் மட்டுமல்லாமல், கங்கர் மற்றும் சாளுக்கியர் குடும்பங்களிலும் இருந்துள்ளனர்.
புலம்பெயர் தமிழர் = திராவிடர்
எனவே, திராவிட கட்சிகளின் அரசியல் நிலைப்பாட்டை, திராவிடர் என்றால் தெலுங்கர், என தமிழகக்தில் தெலுங்குபேசும் மக்கள் மீதான வெறுப்பு அரசியலோடு கலப்பது வரலாற்றுப் புரிதல் இல்லாத ஒரு செயல்.
தமிழ்நாட்டிலிருந்து தென் மாநிலங்களுக்கு பண்டையக் காலத்தில் புலம்பெயர்ந்து வாழும் மக்களே ‘திராவிடர்’ என்று அழைக்கப்படுகிறார்கள். அண்டை மாநிலங்கள் மற்றும் இலங்கையில் குடியேறிய தமிழ் மக்களையும் அந்தந்த மாநில மக்கள் ‘திராவிடர்’ என்று குறிப்பிடுகின்றனர்.
உதாரணமாக: தெலுங்கு நாட்டில் உற்பத்தியாகிய பிராமணர் தெலுங்கு பிராமணர் என்றே அழைக்கப்பட்டனர். ஆனால் தமிழ் பேசும் தஞ்சையைப் பகுதியில் இருந்து ஆந்திராவிற்கு இடம்பெயர்ந்த பிராமணர்கள் அங்கிருக்கும் மக்களால் திராவிட பிராமணர்கள் (திராவிடலு) என்று அழைக்கப்பட்டனர.
இலங்கை பத்திரிகைகளில் தமிழரை தமிள என்று குறிப்பது போல திராவிடர் எனக் குறிப்பதை இன்றும் காணலாம். பண்டையக் காலத்தில் புலம்பெயர்ந்த மக்கள் அந்தந்த மாநில மொழிகளுடன் சேர்த்துத் தமிழ் மொழியையும் பேசுபவர்களாக உள்ளனர்.
திராவிடர் என்பது தமிழின் அயல்மொழிச்சொல்லான் தமிள தமிட திராமிள போன்ற பிராக்கிரு சொற்களின் சமஸ்கிருதவடிவம்.
தெலுங்கரை குறிக்க வடுகர், தெலுங்கர், ஆந்திரர் என்ற சொற்கள் மட்டுமை வரலாறு முழுக்கப் பயன்பட்டு வந்தன.
‘திராவிட மொழிக் குடும்பம்’ என்பது, தமிழ் மொழியைப் போன்ற மொழிகள் அனைத்தையும் குறிக்கும் ஒரு குறியீட்டு மட்டுமே. இதில் எல்லா தென்னக மொழிகளும் அடங்கும்.
இலங்கையில் எவ்வாறு மலையகத் தமிழரும், ஈழத்தமிழரும் முட்டிக்கொண்டார்களோ, அதே போல திராவிடத் தமிழரும், தமிழகத் தமிழருக்கும் இடையேயான மோதல் போக்கினை மொழி வரலாற்று புரிதல் இல்லாமல் தமிழகத்தில் வாழும் தமிழக சிங்களவர்களால் இன்று ஊக்குவிக்கப்படுகிறது.
தெலுங்கா என்று பெயரை வைத்துக்கொண்டவர்கள் குளம் (குலம்) (ஸ்ரீகாகுளம்) என்ற பகுதியை ஆண்ட தெலுங்குச் சோழர்கள். இவர்களை இராஜராஜன் காலம் தொட்டே படையெடுத்துச்சென்று வெல்லுவதும், அவர்கள் மீண்டும் வந்து காஞ்சிபுரத்தைக் கைப்பற்றிக்கொள்வதும் என நடந்துகொண்டு இருந்த ஒன்று. தெலுங்கு கல்வெட்டில் இது கொலனு என அழைக்கபடுகிறது.
தெலுங்குச் சோழர்கள் காஞ்சிபுரத்தை வென்ற நினைவாக காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில் இந்த ஜடாபீம சோழனின் கல்வெட்டு உள்ளது.
தெலுங்கு சோழருக்கு மேலை சாளுக்கியரும், தமிழ்ச் சோழருக்கு கீழைச்சாளுக்கியரும் அரசியல் மற்றும் மண உறவினர்கள். எனவே இவர்கள் மோதிக்கொண்டனர்.
தெலுங்க ஜடாபீமனை குளத்தை சேர்ந்தவன் என்றே கல்வெட்டுகள் கூறுகின்றன. “தெலுங்க குலம்” என்ற குலமரபு கூறும் வழக்கம் இல்லாததால் தெலுங்க குலம் என்பது “குளம்” அல்லது “ஸ்ரீகாககுளம்” என்ற ஊரிலிருந்து ஆண்டதெலுங்க சோழரை குறித்த சொல்லாக இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தெலுங்க தெலிங்க என்ற அடைமொழி மட்டுமே இவர்களிடம் காணப்படுகிறது.
தமிழ் வரலாற்றாசிரியர்கள் இவரை தெலுங்க வீமன் என்று கூறுகிறார்களே ஒழிய இவர்கள் தெலுங்குச் சோழர் என்றோ, இவர்களும் சோழர் மரபினர் என்ற கூற்றினை எங்கும் இடுவதில்லை.
தெலுங்க குல காலன் என்றால் எதோ தெலுங்கருக்கு என்று தனி குலம் இருக்கிறது, அந்த குலத்தை அழித்து இராஜராஜர் தெலுங்க குல காலன் என்ற பட்டம் எய்தினார் என்று கூறப்படுகிறது.
ஆனால் குலம் என்பது ஆந்திர நாட்டில் இருக்கும் குளம் (ஸ்ரீகாகுலம்) என்ற பகுதி உள்ளது. தெலுங்கு குல என்றால் அந்த பகுதியை ஆண்ட தெலுங்கு சோழன் என்பதே அதன் பொருள் என்கின்றனர்.
தமிழ் மெய்க்கீர்த்திகள், ஆவணங்கள் முழுவதும் இராஜராஜன் சண்டையிட்டது “தெலுங்க பீமன்” அல்லது தமிழ் வரலாற்று நூல்கள், “ஜடா பீமன்” என்று மொட்டையாகவே இருக்கும். ஆனால் அவன் தெலுங்க என்ற பட்டம் கொண்ட தெலுங்குச் சோழனான ஜடாபீமா சோடன் என்று எங்குமே குறிப்பிடவில்லை. அவர்களின் தெலுங்கு கல்வெட்டில் அவர்கள் சோழ வம்சத்தார் என்று குறித்துள்ளனர். ஜடா பீம சோடன் கலிங்கத்தின் தென் பகுதியையும் வட ஆந்திரப் பகுதியையும் இப்பகுதியில் இருந்து ஆண்டதாகக் கூறப்படுகிறது.
ராஜராஜன் காலத்தில் இருந்து பல ஜடா பீமா தெலுங்கச் சோழர்கள் இருந்துள்ளனர். அவர்கள் தமிழ் பகுதி பேரரசு சோழர்களை எதிர்த்துள்ளனர். இதனாலேயே ராஜராஜன் முதல் பிற்கால சோழர் வரை அனைவருக்கும் “தெலுங்கு குலக் காலன்” என்று பெயர் உள்ளது.
ராஜராஜ சோழன் பற்றிய திருவாலங்காட்டுச் செப்பேட்டில் உள்ள ஒரு சுலோகம்.
“தண்டேன பீமேன யுதி ப்ரவீணா யத் – ராஜராஜோ நிஹதோ மதாக்யஹ தத் பீமநாமானம் அரந்த்ரம் – ஆந்த்ரம் ஹன்மீதி தண்டேன ஜகானா தம் ஸஹ”
இந்த சுலோகத்தின் நேரடிப் பொருள், “போரில் வல்லவனான பீமன் என்பவன், என் பெயரை உடைய மற்றொரு ராஜராஜனைக் கொன்றுவிட்டான். எனவே, அந்த பலம் வாய்ந்த ஆந்திர மன்னன் பீமனை நான் தண்டால் வீழ்த்துவேன்” என்பதாகும்.
இந்த வரிகளைப் படித்தபோது, தெலுங்கு நாட்டில் ராஜராஜன் என்ற மன்னன் இருந்ததாகவும், அவனது மரணத்துக்குப் பழிவாங்கும் பொருட்டு ராஜராஜ சோழன் போர் தொடுத்தான் என்றும் பலர் நம்பினர். அந்த தெலுங்கு ராஜராஜனைத் தேடி பல ஆண்டுகளாக ஆய்வாளர்கள் அலைந்தனர், ஆனால் அப்படி ஒரு மன்னன் இருந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
பெயர்ப்புதிரின் உண்மையான பொருள்
ஆனால், இந்தச் சுலோகத்தின் உண்மையான பொருள் முற்றிலும் வேறானது. இது வெறும் பெயரின் மீதான ஒரு கவிதை விளையாட்டு. மகாபாரதத்தில் வரும் துரியோதனனின் இன்னொரு பெயர் ராஜராஜன். அவனை வீழ்த்தியது பீமன். அதேபோல், இங்கு சோழ மன்னன் ராஜராஜன், ஆந்திர மன்னன் பீமன் ஆகிய இருவரும் இயற்கையிலேயே எதிரிகள் என்பதை இந்த சுலோகம் குறியீடாக உணர்த்துகிறது.
இதுபோன்ற நுட்பமான கவிநயம் கல்வெட்டுகளில் நிறைந்து காணப்படுகிறது. எனவே, அவற்றை வாசிக்கும்போது நாம் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
கல்வெட்டுகளும், இலக்கியப் பொக்கிஷங்களும்
தென்னிந்தியாவின் கல்வெட்டுகள் வெறும் வரலாற்று ஆவணங்கள் மட்டுமல்ல; அவை இலக்கியப் பொக்கிஷங்கள். கவிதை நயமும், இலக்கியச் செழுமையும் கொண்ட பல காவியங்கள் அவற்றில் பொறிக்கப்பட்டுள்ளன. உண்மையில், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளின் மிகப் பழமையான இலக்கியங்கள் கல்வெட்டுகளிலிருந்துதான் கண்டெடுக்கப்பட்டன.
அக்காலத்தில், அரசவை புலவர்களே இத்தகைய கல்வெட்டுகளை எழுதினர். நாட்டின் சிறந்த கவிஞர்கள், தங்கள் திறமையைப் பயன்படுத்தி, மன்னர்களின் பெருமைகளை அழகுறப் பொறித்தனர்.
தமிழ் வரலாற்று ஆசிரியர்களிடையே ஏனிந்த வரலாற்று இருட்டடிப்பு என்று தெரியவில்லை.