வட்டெழுத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் எழுச்சியும்

வட்டெழுத்தின் வளர்ச்சியைக் குறித்து ஆராயும் போது அக்காலத்தில் தமிழகத்தின் அரசியல் நிலைமையைக் குறித்து கவனிக்க வேண்டும்.

கி.பி.6-ஆம் நூற்றாண்டின் பிற்காலத்தில் களப்பிரரை வென்ற பாண்டியர்கள் தங்கள் ஆட்சியை மீண்டும் பாண்டிய நாட்டில் நிலைபெறச் செய்தனர். ஆட்சியைப் பிடித்த பாண்டியர் தங்கள் பேரரசைக் கொங்கு நாட்டின் வடபகுதி வரை பரப்பினர். இவர்களது ஆட்சிக் காலம் சுமார் கி.பி. 550 முதல் 970 வரை நீடித்தது. கடுங்கோன் அரசு பாண்டிய முதற்பேரரசு என்று சரித்திர ஆசிரியர்கள் கூறுவர்.

ஏறக்குறைய இதே காலத்தில் தொண்டை நாட்டில் பல்லவ மன்னர்கள் ஆட்சிக்கு வந்தனர். இவர்களது ஆட்சி ஏறக்குறைய மூந்நுாறு ஆண்டுகள் நிலைபெற்று ஒன்பதாம் நூற்றாண்டு பிற்பகுதியில் வீழ்ச்சியுற்றது.

கி.பி. 6-ஆம் நுாற்றாண்டிலிருந்து 9-ஆம் நூற்றாண்டு வரை பாண்டியர் ஆண்ட பகுதிகளிலும், வடஆற்காடு மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளிலும் வட்டெழுத்து வழக்கில் இருந்திருக்கிறது.

சேர நாட்டில் கி.பி. 9-ஆம் நூற்றாண்டிலிருந்து வட்டெழுத்துக் கல்வெட்டுகள் கிடைப்பதாக கே. வி. சுப்பிரமணிய அய்யர் கூறுகிறார்.

வட்டெழுத்தில் பாண்டியர் பங்கு

தமிழ் நாட்டில் பாண்டிய நாடுதான் செந்தமிழ் நாடு என்று சிறப்பித்துப் பேசப்படுகிறது.

“தண்ணார் தமிழ் அளிக்கும் தண் பாண்டிய நாடு” என்பது மாணிக்க வாசகர் வாக்கு. சங்கம் நிறுவி தமிழ் வளர்த்தவர், பாண்டியர், தமிழினை வளர்த்த பாண்டியர், வட்டெழுத்தையும் வளர்த்தனர்.

பாண்டியர் ஆட்சிக் காலத்தில் வட்டெழுத்தே அரசு அங்கீகாரம் பெற்ற எழுத்து முறையாக இருந்திருக்கிறது. பாண்டிய நாட்டில் 7-ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழ் – பிராமி எழுத்துகள் கலவாத வட்டெழுத்துக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. 9-ஆம் நுாற்றாண்டு பாண்டியர் காலத்திய செப்பேடுகள் உள்ளன. செப்பேடுகள் அரசனால் அனைத்தும் வட்டெழுத்தில் உள் அளிக்கப்படுபவை. இதனால் வட்டெழுத்து பாண்டியர் அவையில் சிறப்புற்றிருந்ததை உணர்கிறோம். பாண்டிய நாட்டில் கி.பி. 1000 வரை வட்டெழுத்தில் சாசனங்கள் எழுதப்பட்டு உள்ளன.

சேர நாட்டில் வட்டெழுத்து

சேர நாட்டில் வட்டெழுத்து மேலும் பல நூற்றாண்டுகள் வழக்கில் இருந்திருக்கிறது. காலம் நல்லச்செல்ல அவை ஒழுங்கு இலக்கில் இருந்தப்பட்டு, பல மால்ை திறன. இவ்வாறு இல்லாமல் எடைந்த வட்டெழுத்தைத் திருவிதாங்கூர் பகுதிகளில் ”மலையாண்ம’ என்றும், கேரளத்தின் ‘கோலெழுத்து’ என்றும் அழைத்தனர். பகுதிகளில்

கொங்கு நாட்டிலும் வட்டெழுத்து

கொங்கு நாட்டில் ஏறக்குறைய கி.பி. 1080 வரையிலும் மன்னர்களின் சாஸனங்கள் வட்டெழுத்தில் அந்தப்படுகின்றன. கொங்கு மன்னர்கள் சேர மன்னர்களின் கினை வழியினராகக் கருதப்படுபவர்கள்.

கி.பி.1080 வரை கொங்கு நாட்டை ஆண்ட அரசர்கள் வீர சோழ கலிமூர்க்கன் மற்றும் கலிமூர்க்க விக்கிரம சோழன், விக்கிரம சோழ அபிமானன், அபிமான சோழ ராஜாதி ராஜன் ஆகியோர் ஆவர்.

அவர்கள் காலத்தில் கொங்கு நாட்டில் வட்டெழுத்து வழக்கில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வட்டெழுத்தின் வளர்ச்சியைப் பாண்டியர்களே பெரிதும் ஊக்குவித்திருக்கின்றனர். சேரர்களும் அதை பெருமளவில் ஆதரித்திருக்கின்றனர்.

வட்டெழுத்து காணப்படும் இடங்கள்

வட்டெழுத்து, தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, இராமநாதபுரம்,மதுரை, கோவை, சேலம்,தர்மபுரி, வட ஆற்காடு, தென் ஆற்காடு ஆகிய பகுதிகளிலும், செங்கற்பட்டு மாவட்டத்தில் சில பகுதிகளிலும் வழக்கில் இருந்திருக்கிறது.

சோழ நாட்டின் பகுதியான திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் வழக்கில் இருந்ததில்லை. மேலும், தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலத்தின் கோலார் பகுதி வரையிலும், இவ்வட்டெழுத்து நடுகற்கள் கிடைத்து உள்ளன.

கடல் கடந்து

மாலத் தீவில் வழங்கிய வட்டெழுத்து

இலங்கைக்குத் தென் மேற்கு சுமார் ஐநுாறு மைல் தொலைவில் உள்ளது மாலத்தீவு. அங்கும் கடல் கடந்தும் தமிழ்வட்டெழுத்து பரவி இருந்தது என்பதற்கு பல சான்றுகள் கிடைத்துள்ளன. மாலத்தீவில் வழங்கிய எழுத்து முறையைக் குறித்து ஐசக் டெய்லர் கூறுவதாவது:

மாலத் தீவில் வழங்கிய எழுத்துமுறை “தெவ்ஹிஹக்குரா” என்று பெயரிட்டு அழைக்கப்பெற்றது. அந்த எழுத்துகள் இந்திய எழுத்துக்களைப் போன்று இடமிருந்து வலம் நோக்கி எழுதப் பெற்றன. அந்த எழுத்து முறைகளுக்கும், கன்னடம், துளு போன்ற எழுத்து முறைகளுக்கும் தொடர்பு இருப்பதாக மொழியியலாளர்கள் கருதுகின்றனர்.’

திரு .ஐசக் டெய்லர், தமது நுாலில் மாலத்தீவு எழுத்துக்களின் வரி வடிவத்தைக் கொடுத்துள்ளார். அவற்றைப் பார்த்தபோது அந்த எழுத்துகள் வட்டெழுத்துடன் ஒத்திருப்பதை உணர்ந்தேன். அந்த எழுத்துகளை, அவர்கள் படித்துள்ளதைவிட மாறுபட்ட முறையில் சில எழுத்துக்களைப் படித்து, அவற்றிற்கு ஏற்ற பாண்டிய நாட்டு வட்டெழுத்துக்களைக் கொடுத்துள்ளேன்.

மாலத்தீவில் தற்போது வழங்கிவரும் எழுத்துகள் இஸ்லாமியர்களால் புகுத்தப் பெற்றதாக எண்ணலாகிறது.

சோழர் ஆட்சியும் வட்டெழுத்து வீழ்ச்சியும்

பாண்டிய நாட்டில் மிகச் செல்வாக்குடன் திகழ்ந்த வட்டெழுத்து பாண்டிய நாட்டைச் சோழர்கள் கைப்பற்றிய பிறகு வீழ்ச்சியடையத் தொடங்கியது.

பிற்காலச் சோழர் குலத்தைச் சார்ந்த முதலாம் பராந்தகச் சோழன் பாண்டிய நாட்டை கி.பி. 910-ஆம் ஆண்டிற்குப் பிறகு பகப்பற்றியதாகக் கருதப்படுகிறது. அவன் தன்னை ‘மதுரை கொண்ட பரகேசரி’ என்று கூறிக் கொள்கிறான். அவன் காலத்திலிருந்து சோழர் ஆதிக்கம், பாண்டிய நாட்டில் பரவத் தொடங்கியது.

இராசராசன் காலத்தில் பாண்டிய நாடு முழுமையும் சோழர் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. சோழர்கள், பாண்டிய நாட்டில் சிறிது காலம் வட்டெழுத்தையே பயன்படுத்தினர். ஆனால் அவர்கள் வட்டெழுத்தை ஆதரிக்காததால், வட்டெழுத்தின் மதிப்புக் குறையத் தொடங்கியது. கி.பி. 12-ஆம் நுாற்றாண்டில் பாண்டியர் பகுதியிலிருந்து வட்டெழுத்து மறைந்து விட்டதாகக் கருதப்படுகிறது.

திருக்குற்றாலம் தரும் செய்தி

சுமார் கி.பி. 1387-ஆம் ஆண்டில் பராக்கிரம பாண்டியத் தேவர் திருக்குற்றாலநாத சுவாமி திருக்கோயிலின் கருப்பக்கிரகத்தைப் புதுப்பித்தார்.அப்போது அதன் சுவர்களில் இருந்த சாஸனங்களைத் தனியாகப் பெயர்த்து எழுதிக் கொண்டு, கட்டிடம் முடிந்தபின் மறுபடியும் அந்த சாஸனங்களைச் செதுக்கியுள்ளார். பழைய சுவரிலுள்ள கல்வெட்டு ஒன்று வட்டெழுத்தாக இருந்ததால் ஒருவரும் படிக்க முடியாததால் அதை மட்டும் விட்டு விட்டதாகவும் கல்வெட்டில் எழுதி வைக்கப்பட்டுள்ளமை மிகவும் சிந்திக்கத்தக்கது.

இதே காலக்கட்டத்தில், சேர நாட்டின் மீது சோழர்கள் படையெடுத்து சில காலம் தங்கள் ஆளுகைக்குள் வைத்திருந்தனர்.

ஆனால் கி.பி. 1070-ஆம் ஆண்டு சோழர்களிடமிருந்து சேரமன்னன் இராமவர்மகுலசேகரன் சேர நாட்டை மீட்டதாகச் சரித்திரம் கூறுகிறது. இதனால் சேர நாட்டில் வட்டெழுத்து அழிவுறாமல் தொடர்ந்து வழக்கில் இருந்து வந்தது.

வட்டெழுத்து பல சிறப்பு அம்சங்கள் பொருந்தியது.

பாண்டிய சேர நாடுகளுக்கு இடையில் உள்ள தொடர்பை இலக்கியங்கள் மட்டும் அல்லாமல், தமிழ் வட்டெழுத்தின் வரலாறும் புதிய பாலம் அமைத்துக் காட்டுகிறது. வட்டெழுத்துக்கள் மூலம் தமிழ் வரி வடிவத்தின் வளர்ச்சியையும், தமிழகம் தழுவிய பல வரலாற்று உண்மைகளையும் நாம் அறிகிறோம்.

பிற்காலத் தமிழ் வட்டெழுத்துக்கள் நூலிலிருந்து

கட்டடக்கலைத் தொடர்பான நூல்கள்: https://www.heritager.in/product-category/books/tamil/architecture/