திருச்சி மலைக்கோட்டை :
திருச்சிராப்பள்ளிக்குச் சிறந்த ஓர் அடையாளமாகத் திகழ்வது அந்நகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த மலைக்கோட்டையாகும். திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை என்பது மலைப்பாறை ஒன்றின் மீது கட்டப்பட்ட கோட்டை மற்றும் கோயில்களைக் கொண்ட ஒரு தொகுதி. நடுவில் ஒரு மலையும், அதைச் சுற்றி கோட்டையும் கொண்டு அமைந்துள்ளதால் மலைக்கோட்டை என்று அழைக்கப்படுகிறது.
காவிரியின் மிக அருகே தென்பகுதியில் ஒரே பாறையாலான தாயுமானவர் மலை அல்லது உச்சிப்பிள்ளையார் மலை என்ற பெயருடன் அமைந்திருக்கிறது. மலையின் மீது கோயிலாகவும், கோட்டையாகவும் சிறந்த கருங்கற் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இம்மலையையும், இதனடியிலுள்ள பெரிய குளத்தையும் உள்ளடக்கிய பெரிய மதிற்சுவர்களால் நகரைச் சுற்றிலும் கோட்டை கட்டப்பட்டிருந்தது. கோட்டைக்கு வெளியில் ஆழ்ந்த அகழி இருந்தது. பிற்காலத்தில் அகழி தூர்க்கப்பட்டுத் தெருக்களாக மாறிவிட்டன. கோட்டை மதில்களும் இடித்து அழிக்கப்பட்டு விட்டன. ஆனால் அக்கோட்டையின் மேற்கு வாயில் மட்டும் அழிபாட்டுக்கு இலக்காகாமல் மதுரையின் விட்ட வாசல் போல இன்றும் ஒரு பழங்கால நினைவுச் சின்னமாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இதனைப் பார்த்தாலே பழைய கோட்டை கொத்தளங்கள் எத்தகைய வடிவில் அமைந்திருக்கும் என்பதை ஒருவாறு ஊகித்துக் கொள்ளலாம்.
இக்கோட்டை பற்பல போர்களுக்கும், முற்றுகைகளுக்கும் உட்பட்டு வரலாற்றில் சிறந்த இடம் பெற்றிருக்கிறது. பகைவரின் வருகையை நெடுந்தூரத்திலிருந்தே அறிவதற்கு ஏற்றவண்ணம் உயர்ந்த மலையையும் பகைவர் திடீர் தாக்குதல் செய்ய முடியாதவாறு தடுக்கும் இயற்கை அரணாக காவிரி ஆற்றையும் இக்கோட்டை பெற்றிருக்கிறது.
மலைக்கோட்டையில் இரு குகைக் கோயில்கள் உள்ளன. மேலே இருப்பது மகேந்திரவர்மனின் குகைக்கோயில், கீழே இருப்பது அவரது மகன் மாமல்லன் அமைத்த கோயில்.
18 ஆம் நூற்றாண்டில் நடந்த கர்நாடகப் போர்களில் இக்கோட்டை சிறந்த இடத்தைப் பெற்றிருந்தது. இம்மலைமீது வண்ண ஓவியங்கள் நிறைந்த தாயுமானவர் கோயிலும், மலையுச்சியில் உச்சிப்பிள்ளையார் கோயிலும் உள்ளன.. இம்மலை ஒரு காலத்தில் சமணப்பள்ளியாக இருந்தது. என்பது சிராப்பள்ளி என்ற அதன் பெயரிலிருந்தே தெரிய வருகிறது.
கி.பி.1310 இல் முஸ்லீம்களின் படையெடுப்பினால் பலம் குன்றிய சோழர்கள் விஜயநகரப் பேரரசர்களின் கீழ் நாட்டை ஆண்டு வரும் சிற்றரசர்களாக ஆனார்கள். கி.பி 1559 இல் மதுரையை ஆண்ட விசுவநாத நாயக்கர் திருச்சிக் கோட்டையைப் பெற்றுக்கொண்டு தஞ்சையை அடுத்த வல்லம் கோட்டையைத் தஞ்சை மன்னனுக்கு அளித்தார்.
பின்னர் அவர் இக்கோட்டையைப் புதுப்பித்து பெரிய தெப்பக்குளம் வெட்டுவித்து அரண்களைத் திருத்தியமைத்தார். இராணி மங்கம்மாள் இங்கே ஒரு சிங்கார அரண்மனையும் கட்டியுள்ளார். நாயக்க அரச பரம்பரையின் எட்டாவது மன்னரான முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் திருச்சியைத் தலைநகராக்கி ஆண்டு வந்த நிலையில் அவருக்குப் பின்வந்த திருமலை நாயக்கர் தலைநகரை மதுரைக்கு மாற்றிவிட்டார்.
நாயக்கர் வமிசத்து கடைசி அரசியான மீனாட்சியிடமிருந்து திருச்சியை ஆற்காட்டு நவாபான சந்தா சாகிப் 1736 இல் கைப்பற்றிக் கொண்டார். பின் முகமது அலி 1751 இல் இங்கே வந்து ஒளிந்து கொண்டபோது சந்தா சாகிப்பும், பிரெஞ்சுகாரர்களும் இதை முற்றுகையிட்டனர்.
அப்போது இராபர்ட் கிளைவ் திடீரென ஆற்காட்டை முற்றுகையிடவே சந்தாசாகிப் திருச்சி முற்றுகையை பாதியிலேயே விட்டுத் திரும்ப, அதற்குள் ஆற்காடு கோட்டை ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டது. வெற்றி கைகூடும் சமயத்தில் சந்தா சாகிப் ஆற்காடு நோக்கித் திரும்பியதால் திருச்சி கை நழுவிப் போனதுடன் ஆற்காட்டையும் இழந்தார். முகமது அலி ஆங்கிலேயர் உதவியுடன் ஆற்காடு நவாபானார். ஆங்கிலேயர் செல்வாக்கும் உயர்ந்தது.
கி.பி. 1768 இல் ஐதர் அலி படையெடுத்து வந்து திருச்சி கோட்டையை முற்றுகையிட்டு அதன் அரண்களைத் தகர்த்துப் பாழ்படுத்தினார்.
17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சொக்கநாத நாயக்கரால் கட்டப்பட்ட அரண்மனை ஒன்று மலைஅடிவாரத்தில் காணப்படுகிறது. இந்த அரண்மனை ராணி மங்கம்மாள் மகால் என்று அழைக்கப்படுகிறது. இப்போது இந்த அரண்மனை அருங்காட்சியகமாகச் செயல்படுகிறது.
மலை, கோட்டை, குளம், அரண்மனை, கோவில்கள் என இவை அனைத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில் மேற்குப் பகுதியில் ஒரு பெரிய வாயில் ஒன்றும்
அமைந்துள்ளது.(நூலிலிருந்து)
தமிழகச் சுற்றுலாக் கோட்டைகளும் காதல் கோட்டைகளும் – சி.எஸ் முருகேசன்
விலை: 150/-
வெளியீடு: சங்கர் பதிப்பகம்
Buy this book online: https://www.heritager.in/product/tamilaga-suttrula-kottaikalum-kadhal-kottaikalum/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers