வேலூர் சக்கிலியர் கோட்டை

வேலூர் கோட்டப்பகுதி முக்கோண வடிவில் அமைந்த மூன்று செங்குத்தான மலைகளால் சூழப்பட்டுள்ளது. இந்த மலைகள் இயற்கையாகவே உறுதியானவை; இவற்றில் பெரும்பாலும் ஏற முடியாத, பிரமாண்டமான பாறைகள் நிறைந்துள்ளன.

ஒவ்வொரு மலையும், துப்பாக்கிகள் மற்றும் சுடுகலன்களுக்கான துளைகளுடன் கூடிய உறுதியான கல் சுவர்களால் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த மூன்று முக்கிய மலைகளும், அறுபது அடி தடிமனுள்ள வலுவான கல் அரண் ஒன்றினாலும், எண்பது அடி அகலமுள்ள வெளிப் பள்ளம் ஒன்றினாலும் இணைக்கப்பட்டுள்ளன.

இங்கு காணப்படும் முக்கிய மலைகள்:

ராஜகிரி பெரிய மலை என்றும் அழைக்கப்படுகிறது. இது இம்மூன்று மலைகளிலேயே மிகவும் உயரமானதும், முதன்மையானதுமாகும். இதுவே கோட்டையின் முக்கியப் பகுதியாக விளங்குகிறது.

கிருஷ்ணகிரி இதனை ஆங்கில மலை) என்றும் கூறுவர் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த மலையைப் பற்றி வரலாற்றாசிரியர் ராபர்ட் ஓர்ம் அடிக்கடி தனது குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார்.

சந்திராயன் துர்கம் (அல்லது செயிண்ட் ஜார்ஜ் மலை): தெற்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த மலை, ராஜகிரியுடன் ஒரு தாழ்வான, பாறைகள் நிறைந்த முகடு வழியாக இணைக்கப்பட்டுள்ளது.

சக்கிலியர் கோட்டை

சிறியதும், முக்கியத்துவம் குறைந்ததுமான நான்காவது மலையான சக்கிலி துர்க் (18 ஆம் நூற்றாண்டின் வரலாற்றாசிரியர் பீம்சென் இதை சாமர் திக்ரி என்றும் குறிப்பிடுகிறார்), நன்கு பலப்படுத்தப்பட்ட உச்சியைக் கொண்டுள்ளது.

சக்கிலியர் தலைவர் ஒருவர் சொந்தமாக பராமரித்த கோட்டை என்றும், சக்கிலியர் தங்கி படைகளுக்கான தோல் படைக் கருவிகள் செய்த இடம் என்றும் சக்கிலிய படைவீரர்கள் தங்கிய கோட்டை என்றும் கூறப்படுகிறது.

Gazette of South Arcot 1906, p. 347)