Menu

சிலப்பதிகாரம் கூறும் மாநாய்க்கன் என்போர் யார்?

கரவா வருணகுல சூர்யா குலத்தைச் சார்ந்த “வருணகுல ஆதித்தன்” என்பவன் (கரவா – அரச மரக்கலகெ) எனும் கடற்படைத் தலைவனாக, தமிழகத்தில் 16-ஆம் நூற்றாண்டில் இருந்துள்ளான்.”

கி.பி.14-ஆம் நூற்றாண்டில் மதுரைப் பாண்டிய வாணாதிராயன் என்பவன் “வலங்கை மீகாமனாக (கரவா அரச மரக்கலகே) இருந்துள்ளான்.

அரசப்படை:-

கி.பி. 1163-1178-இல் கோன் கரவா – சமரக் கோன் பிரிவினர், ஒரு பாண்டிய மன்னனை, தொண்டிப்பாசிப்பட்டினத்திற்கு ஓட்டி விட்டுள்ளனர்.

வணிகப் பாதுகாப்புப் படை:-

கரவா வீரக்கொண்ட பிரிவினர், தமிழகத்தில் தெரிந்த வில் அகம்படி அணுக்கவில் எனும் விற்படையில் பணியாற்றியுள்ளனர்.கரவா வருணகுல சூர்யா குலத்தைச் சார்ந்த “வருணகுல ஆதித்தன்” என்பவன் (கரவா – அரச மரக்கலகெ) எனும் கடற்படைத் தலைவனாக, தமிழகத்தில் 16-ஆம் நூற்றாண்டில் இருந்துள்ளான்.”

கி.பி.14-ஆம் நூற்றாண்டில் மதுரைப் பாண்டிய வாணாதிராயன் என்பவன் “வலங்கை மீகாமனாக (கரவா அரச மரக்கலகே) இருந்துள்ளான்.

Buy this Book: பரதவம் இனவரைவியல் – முனைவர்.அரு.பரமசிவம்

அரசப்படை:-

கி.பி. 1163-1178-இல் கோன் கரவா – சமரக் கோன் பிரிவினர், ஒரு பாண்டிய மன்னனை, தொண்டிப்பாசிப்பட்டினத்திற்கு ஓட்டி விட்டுள்ளனர்.

வணிகப் பாதுகாப்புப் படை:-

கரவா வீரக்கொண்ட பிரிவினர், தமிழகத்தில் தெரிந்த வில் அகம்படி அணுக்கவில் எனும் விற்படையில் பணியாற்றியுள்ளனர்.கரவா பரதகுல சூர்யா இனக்குழுவினர், தமிழகத்திலும், இலங்கையிலும் கப்பல் தலைவர்களாக – முத்து, சங்கு, குதிரை யானை விற்கும் வணிகர்களாக – யானைகள் பிடிக்கும் கலையில் வல்லவராக – அங்கைப் போர் முறையில் வல்லவராக கப்பல் கட்டுமானத்தில் வல்லவராக இருந்துள்ளனர்.

வளஞ்சியர் வணிகக்குழு:-

கரவா வருணக்குல சூர்யகுல துரவா எனும் பிரிவினர் ‘துரு’ கப்பலை உருவாக்குபவராக – இயக்குபவராக – வளஞ்சியர் வணிகக்குழுவில் உள்ளவராக இருந்துள்ளனர்.

தமிழகத்தில் கரைதுறை வேளாளர் (அ) கரையார் (அ) பிள்ளை (அ) குடிப்பிள்ளை எனும் மீகாமன் வகையறாவினர், இலங்கையில் மனுகுல சூர்யா என்றும் கரவா அரச மரக்கலகே என்றும் அழைக்கப்படுகின்றனர்.

துளுநாட்டில் உள்ள ‘மரக்கலராயர்களும், (துறை) மீக வீரர்களும், தென்கன்னடம், கோவையில் வாழும் தொரையர்களும் (துரு + ஐயர்), தமிழகத்து, பெரியார் மாவட்டத்துப் பெரிய கொடிவேரியில் வாழும் (மரக்கல) நாயகர்களும், இலங்கையில், வத்தையில் கப்பல் தலைவராகச் செயலாற்றிய (வத்தர் பெரிய வத்தர் – சின்ன வத்தர்) பருவதராஜகுல மீனவ சமுத்திர பாண்டி மாலையிட்டான் காணியினரும் கரையார் – அரச மரக்கல நாயர்கர்களோடு ஒப்பிடத்தக்கவர் ஆவர்.

ஆகவே, மேற்சுட்டப்பட்ட உட்பிரிவினரும், அவரது வம்சத்தினரும் “சூரியப் பிரியன்” என்று அழைத்துக் கொள்ளத்தக்கவர் என்பது இதன் தெளிவாகிறது.

கரையார்

சிங்களத்தில் ‘கரவர்’ எனக் கி.பி. 2-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு “தமடெ கரவா மாநாய்கெ” எனக் குறித்துள்ளது.

இலங்கை ‘உடப்பு’ எனப்படும் கிராமத்தில் வாழும் ‘கரவாஸ்’ எனப்படுபவர் “வருணகுல சூர்ய குலம்” என அழைக்கப்படுகின்றனர். இக்குலக்குழுவிற்கு மகரக் கொடி, முத்துப்பல்லக்கு என்ற அடையாளச் சின்னங்கள் உள்ளன. வேறுசில கரவாக்களுக்குக் ‘கருடக் கொடி’ அடையாளம் உள்ளது.

இவ் இனக்குழு கரவெ – கரா -கரவா (சலங்கமா – துரவா) கௌரா எனும் பெயர்களில் அழைக்கப்படுகின்றனர்; சத்திரியர்.இக்குழுவைப் பற்றிச் சிங்களத்தில் ‘முக்காரா ஹடனர் என்ற வரலாற்றுச் சுவடி உள்ளது, ‘புஜ வலியா’ என்ற சுவடியும் உள்ளது.

இக்குழு தமிழகத்தின் தஞ்சை வட பகுதி மற்றும் ஆந்திரப்பகுதிகள் எனப்பட்ட குரு மண்டலம் என்ற கொர மண்டலக் கடற்கரைகளில் இருந்து இலங்கைக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

மகாபாரதத்தின் கௌரவர்களே தங்களின் மூலவர் என நம்புகின்றனர். சூரியன் – சந்திரன் – நட்சத்திரம் யானை – மீன் முரசு – கப்பல் – வெள்ளை குலச்சினை – முத்துக்குடை – கத்தி தாமரை எனப் பல அடையாளக் கொடிகளை உடையவர்; மண விழா நாட்களில் “நடையில் வெள்ளைத்துணி விரித்தல்” என்ற சடங்கினைப் பின்பற்றுகின்றனர். பௌத்தரின் ‘பல்வழிபாட்டுச் சடங்கு’ இவரிடம் இல்லை.

இவர்கள் சூரிய இனக் குழுவினர் ஆவர்; வீர சூர்யா விக்ரம சூர்யா – குருகுல சூர்யா-‘வருணகுல சூர்யா மிகிந்தகுல சூர்யா – பரத குல சூர்யா -மனுகுல சூர்யா விஜய குல சூர்யா அரசகுல சூர்யா என்றும்,வடுகர் என்றும், கோன்கரவா (சமரக்கோன், வீரக்கோன்) என்றும், ரத்னே (அரசரத்னா, ஜெயரத்னே) என்றும், கொண்டகெ கரவா (வீரகொண்ட, கொண்ட பெருமாள்) என்றும் ‘கெ’ பின்னொட்டுகளுடன் பாடபடிகெ, திசநாயெக, சேன நாயகெ என்றும் அழைக்கப்படுகின்றன.

கரவா அரசகுலரத்னெ என்பவரின் அடையாளக் கொடி “பஞ்சாயுதங்களுடன் கூடிய வீரமுரசம்” என்பதாகும்.

இன்றும் நடைமுறையில் அரச்சிகெ, அரச மரக்கலகெ,படுகெ (கப்பல் தச்சர்), ஹென்னெடிகெ, ஹெவகெ, கண்காணமகெ. மரக்கலக,ெ மேஸ்திரிகெ, படபெண்டிகெ, ராஜரத்னெ, தந்திரிகெ எனும் பிரிவினராக உள்ளனர்.

இன்னும் ”வருணகுல ஆதித்ய அரச நிலையிட்ட” என்றும் “வருணகுல சூர்யர் அரச நிலையிட்ட” என்றும் சில பிரிவினர் உள்ளனர்.

இன்னும் எகாடெக (கடல் மற்றும் நிலத்தில் சிறந்த வீரர்கள்) என்றும், ஐபீரியன் துணைப் பெயர்களான பெர்னான்டோ – பெரீரா மென்டிஸ் என்ற போர்ச்சுக்கல் துணைப்பெயர்களோடும், டி-சில்வா, டி-மேல் என்ற துணைப் பெயர்களோடும், பொன்சேகர, டிமேசமோடு, பெரிஸ் எனும் அரிய பெயர்களோடும் வாழ்கின்றனர்.இலங்கையில் கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் குருகுலத்தரையன் எனும் பெயர் கொண்ட – பௌத்தம் பின்பற்றிய கரையார்களாக கடற்படைத் தலைவர்களாக இருந்துள்ளனர்.

இலங்கையில் ஊரக் காவல்துறை, காங்கேசன் துறை, கொழும்பு, பருத்தித்துறை, மாதோட்டம், மன்னார்த் துறை ஆகிய துறைமுகப் பகுதிகளில் “கரையார் குடி” எனும் பெயரில் வாழ்ந்து வருகின்றனர்.

தமிழகத்தில் கி.பி. 1070-1120ஆம் நூற்றாண்டில் “கிளியூர் குலகுலத்தரையன்” என்பவன திருக்கோவலூரை ஆண்டுள்ளனர். (கரவா – குருகுல சூர்யா)

“குருகுலத்தரையன்” எனும் பட்டப் பெயர் பாண்டிய நாட்டை (கரவா) குருகுல சூர்யா 14ஆம் நூற்றாண்டு வரை ஆண்டிருந்த பாண்டிய வாணாதிராயர் சிலருக்கு இருந்துள்ளது.

“வலங்கை மீகாமன்” எனும் பட்டப் பெயரும் இப்பாண்டிய வாணாதிராயர்க்கு வழங்கப்பட்டிருந்ததைத் திருவாதவூர் பெண்ணாடம் கல்வெட்டு ARE 418/58-59 பக்.173 என்பதன் வழி அறிய முடிகிறது.

கி.பி. 16-17-ஆம் நூற்றாண்டு வரை நாகப்பட்டினம் பகுதியில் “வருணகுல ஆதித்தன் (கரவா வருணகுல சூர்யா) காத்தான்’ என்பவன் கடற்படைத் தலைவனாக இருந்துள்ளதை யேசுச்சபை பதிவுகள் வழி அறிய முடிகிறது.

இக்கடற்கடைத்தலைவன் மீது நாகைக் கணிகை “காளிமுத்து” என்பவள் “வருணகுல ஆதித்தன் காத்தான்மடல்” என்ற சிற்றிலக்கிய வகை ஒன்றைப் பாடியுள்ளாள்.

தமிழ்க்கரையார் சமூகத்தின் -முட்டம் கோவைக் குளம் செண்பகராமன் கலிங்கன் என்பான் மீது “செண்பகராமன் பள்ளு” எனும் சிற்றிலக்கிய வகை ஒன்று பாடப்பட்டுள்ளது.

கடலூர் முதல் கருக்களாச்சேரி (காரைக்கால்) வரை இடைப்பட்டுள்ள பதினாறு கிராமங்களில் “கரையூர் வேளாளர்” எனும் பெயரிலும், புதுச்சேரி – வில்லியனூர், கரைக்கால் எனும் ஊர்களில் பிள்ளை (அ) குடிப்பிள்ளை எனும் பெயரிலும் பட்டணவரின் உட்பிரிவான கரைத்துறை வேளாளர் மற்றும் கரையாளர் எனும் பெயரிலும் வாழ்ந்து வருகின்றனர்.இப்பிள்ளை எனும் பட்டப்பெயரோடு வாழ்பவர்களை இலங்கை முக்குவக் குடிகளில் “பூபால கோத்திரம் வன்னிபம்” எனும் தலைமைப் பண்டாரம் கீழ்வரும் அம்பலப்பண்டாரப் பிள்ளை, செல்லப் பண்டாரப் பிள்ளை, கற்பகப் பண்டாரப் பிள்ளை, கனக ரட்னப் பண்டாரப் பிள்ளை, அழகர்ப் பண்டாரப்பிள்ளை, அருணாச்சலம் பண்டாரப் பிள்ளை, ஆனந்தப் பண்டார வன்னிபம் என்பவர்களோடு தொடர்புபடுத்தலாம். இவர்களின் முன்னோர்கள் மலையாளக் கள்ளிக் கோட்டையிலிருந்து இலங்கைக்கு இடம் பெயர்ந்துள்ளனர், இலிங்க வழிபாட்டை மேற்கொண்ட அரசனின் படைத்துணைவர்களாக இலங்கைக்கு வந்துள்ளனர். இவ்வரசன் தன்னுடன் வந்த இவருக்கு “வன்னிபம்”, என்னும் பட்டத்தை வழங்கியுள்ளான்.

இம்முக்குவக் குடிகளில் ஒருவரான “செல்லப் பண்டாரப் பிள்ளை”யை ஆதி ஐதீகப் புராண ஆசிரியரான மேல்மலையனூர் வீரப்ப வாத்தியார் 91930) “செல்லப்பிள்ளை” எனும் பட்டப் பெயரால் பதிவு செய்துள்ளார்.

இக்குடி வழியினர் போர்ச்சுகேயர் ஆட்சியில் அரச அதிகாரிகளா இலங்கை வடமராட்சி முதலான மாகாணங்கள் ஒவ்வொன்றையும் நிர்வாகம் செய்ய நியமித்து அவர்களுக்குப் “பண்டாரப் பிள்ளை” எனும் பதவிப் பெயரைச் சூட்டியுள்ளனர்.

கி.பி. 17ஆம் நூற்றாண்டில் வடமராட்சியில் 6 பண்டாரப் பிள்ளைகளும், பச்சிலைப் பள்ளியில் 4 பண்டாரப் பிள்ளைகளும் அவர்களால் நியமிக்கப்பட்டனர்.

இப்பிள்ளை எனப்பட்ட அதிகாரிகள், அரசு விதிக்கும் வரித்தொகையில் ஒருவீதம் அளவுக்குப் பணத்தை ஊதியமாகப் பெற்றுக் கொண்டனர்.

இப்பிள்ளைக் குடிகளில் “தேசத்துப் பண்டாரப் பிள்ளை கல்லைத் தூக்கிப் பண்டாரப் பிள்ளை பறை தூக்கிப் பண்டாரப் பிள்ளை – தீவட்டித் தூக்கிப் பண்டாரப் பிள்ளை – கொடி தூக்கிப் பண்டாரப் பிள்ளை குருத்துக்கட்டி பண்டாரப் பிள்ளை வீதியலங்காரப் பண்டாரப் பிள்ளை எனும் பல உட்பிரிவுகள் இலங்கையில் இன்றும் உள்ளன.

இலங்கைக் கரையார் குடிகள் “தோணி”யைத் தமது அடையாளமாகக் கொண்டுள்ளனர்; இக்கரையாளர் குடிகளில் “வங்காளன்குடி”யே “நானாதேசி” எனும் வணிகக்குழுவில் இடம்பெற்று நான்கு திசைகளிலும் கடல் வணிகத்தை மேற்கொண்டது.

தமிழகக் கரையாளர்கள் “சமுத்திரக் கரையாயி” எனும் பெயரில் திருமலைராயன் பட்டினத்திலும், விழுப்புரம் மாவட்டம் – கள்ளக்குறிச்சி வட்ட ஈரியூரிலும் வாழ்கின்றனர்; இவர்கள் “கரையான் கொடி”யினை அடையாளமாக உடையவர்; வீரக்கொடியாராகவும் மும்முடிச் சோழ மண்டலம் தெரிந்த (கரவர் – அரசகுல ரத்ன) (அ) (கரவா – வீரகொண்ட) பரிவாரத்தாராகவும், கரையான் அடிக்கீழ்த்தளத்து எறிவீரராகவும் செயல்பட்டுள்ளனர்.

இக்கரையாளர் தமிழகத்தில் தேவிப்பட்டினம் இராச நாராயணன் பட்டினம், நாகப்பட்டினம், சதுரங்கன் பட்டினம், மயிலாப்பூர், மணல்மேல் குடியான குலோத்துங்க சோழபட்டினம், தேவனாம் பட்டினம், பறங்கிப்பேட்டை, சோழ பாண்டியபுரம் எனப்படும் கண்டசாலா, ஆகிய துறைமுகங்களில் நானாதேசி வணிகக்குழுவில் இருந்து கடலில் வணிகம் செய்துள்ளனர், சாமந்த பண்டசாலிகளாகப் பணியாற்றியுள்ளனர் (1412-1467-இல் ஆண்ட நாயக்கரது) இக்குழுவையே வீரப்ப வாத்தியார் ஆதி ஐதீகப் புராணத்தில் (1930) “நாட்டுச்சாமன்” எனவும் “மனம் ஏங்கா சாமன் நாடன்” (1412-1467 கனக சூரிய சிங்கை சூரியன் காலத்து வணிக அதிகாரிகள்) (1412 1462 வணிக அதிகாரி நாயக்கரது உதவியால் மீண்டும் ஆட்சி பெற்ற கனக சூரியன்) எனவும் குறித்துள்ளது இங்கு ஒப்பிடத்தக்கது.

இக்குழுவிடம் “கப்பல் சாத்திரம்” என்ற ஒரு நூல் இருந்துள்ளது; இக்குழுவைச் சேர்ந்த “காலிங்கராயப் பிள்ளை” என்பவரிடம் இருந்திருந்த இந்நூலைக் கையெழுத்துப்பிரதியாக ஆங்கிலேயர் 19 ஆம் நூற்றாண்டில் சேகரித்துள்ளனர். ‘நாவாய் சாத்திரம் என்ற நூலும் இருந்துள்ளது. கலவேடு என்ற சுவடி ஒன்று இருந்துள்ளது. இது கப்பல்கள் உருவாக்கப்படும் விதம் பற்றிய நுணுக்கங்களை உடையது என்பது தெரிகிறது. இது எங்குள்ளது, என்ன ஆனது என்பது பற்றித் தெரியவில்லை.

துறைமுகங்களும் கரையார்களின் பங்காற்றலும் –

”தொண்டி’ துறைமுகத்திற்கு அருகில் உள்ளது பாசிபட்டினம் ஆகும். ஈழப்படையில் உள்ள கரையார்களின் பாண்டிமண்டல முற்றுகைக்குத் தலைசிறந்த சாட்சியாக இது உள்ளது. கரையார்களின் ஈழப்படை, இலங்கை மாதோட்டத்தில் இருந்து புறப்பட்டு, பாண்டி நாட்டில் நுழைந்து, அதன் பகுதிகளை வென்று நிலைப்படுத்திக் நான்கு திசைகளிலும் கடல் வணிகத்தை மேற்கொண்டது.

தமிழகக் கரையாளர்கள் “சமுத்திரக் கரையாயி” எனும் பெயரில் திருமலைராயன் பட்டினத்திலும், விழுப்புரம் மாவட்டம் – கள்ளக்குறிச்சி வட்ட ஈரியூரிலும் வாழ்கின்றனர்; இவர்கள் “கரையான் கொடி”யினை அடையாளமாக உடையவர்; வீரக்கொடியாராகவும் மும்முடிச் சோழ மண்டலம் தெரிந்த (கரவர் – அரசகுல ரத்ன) (அ) (கரவா – வீரகொண்ட) பரிவாரத்தாராகவும், கரையான் அடிக்கீழ்த்தளத்து எறிவீரராகவும் செயல்பட்டுள்ளனர்.

இக்கரையாளர் தமிழகத்தில் தேவிப்பட்டினம் இராச நாராயணன் பட்டினம், நாகப்பட்டினம், சதுரங்கன் பட்டினம், மயிலாப்பூர், மணல்மேல் குடியான குலோத்துங்க சோழபட்டினம், தேவனாம் பட்டினம், பறங்கிப்பேட்டை, சோழ பாண்டியபுரம் எனப்படும் கண்டசாலா, ஆகிய துறைமுகங்களில் நானாதேசி வணிகக்குழுவில் இருந்து கடலில் வணிகம் செய்துள்ளனர், சாமந்த பண்டசாலிகளாகப் பணியாற்றியுள்ளனர் (1412-1467-இல் ஆண்ட நாயக்கரது) இக்குழுவையே வீரப்ப வாத்தியார் ஆதி ஐதீகப் புராணத்தில் (1930) “நாட்டுச்சாமன்” எனவும் “மனம் ஏங்கா சாமன் நாடன்” (1412-1467 கனக சூரிய சிங்கை சூரியன் காலத்து வணிக அதிகாரிகள்) (1412 1462 வணிக அதிகாரி நாயக்கரது உதவியால் மீண்டும் ஆட்சி பெற்ற கனக சூரியன்) எனவும் குறித்துள்ளது இங்கு ஒப்பிடத்தக்கது.

இக்குழுவிடம் “கப்பல் சாத்திரம்” என்ற ஒரு நூல் இருந்துள்ளது; இக்குழுவைச் சேர்ந்த “காலிங்கராயப் பிள்ளை” என்பவரிடம் இருந்திருந்த இந்நூலைக் கையெழுத்துப்பிரதியாக ஆங்கிலேயர் 19 ஆம் நூற்றாண்டில் சேகரித்துள்ளனர். ‘நாவாய் சாத்திரம் என்ற நூலும் இருந்துள்ளது. கலவேடு என்ற சுவடி ஒன்று இருந்துள்ளது. இது கப்பல்கள் உருவாக்கப்படும் விதம் பற்றிய நுணுக்கங்களை உடையது என்பது தெரிகிறது. இது எங்குள்ளது, என்ன ஆனது என்பது பற்றித் தெரியவில்லை.

துறைமுகங்களும் கரையார்களின் பங்காற்றலும் –

”தொண்டி’ துறைமுகத்திற்கு அருகில் உள்ளது பாசிபட்டினம் ஆகும். ஈழப்படையில் உள்ள கரையார்களின் பாண்டிமண்டல முற்றுகைக்குத் தலைசிறந்த சாட்சியாக இது உள்ளது. கரையார்களின் ஈழப்படை, இலங்கை மாதோட்டத்தில் இருந்து புறப்பட்டு, பாண்டி நாட்டில் நுழைந்து, அதன் பகுதிகளை வென்று நிலைப்படுத்திக் கொண்டது. அவற்றுள் மரக்காயர் பட்டினத்திற்கு அருகில் உள்ள வேதாளை, பெரிய பட்டினம், தேவி பட்டினம், தொண்டி, பாசி பட்டினம். மணல்மேல் குடி ஆகிய முக்கிய துறைமுகங்கள் ஆகும்.

கி.பி. 1163-1178இல் மதுரையை ஆண்டு கொண்டிருந்த குலசேகர பாண்டியனைப் பாசி பட்டினத்தில் வைத்து ஈழப்படையான கரையாளர் படை வெற்றி (கோன் கரவா – சமரக்கோன், வீரக்கோன்) பெற்றுள்ளது. இவ்வரலாற்றுச் செய்தியை மேல்மலையனூர் வீரப்பதாசன் இக்கரையார் படையைப் “பாசி நாடோட்டி” என்று தனது ஆதி ஐதீகப் புராணத்தில் பதிந்து வைத்திருப்பது இங்கு ஒப்பிடத்தக்கது.

இலங்கையில் கி.பி. 1268-1311 இல் முதலாம் ஆரியச் சக்கரவர்த்தியின் கீழ், ஊர்க்காவல்துறை, காங்கேசன் துறை, கொழும்புத்துறை, பருத்தித்துறை ஆகிய துறைமுகங்கள், கரையார் மூலமாகவும், மாதோட்டம் துறைமுகம் வழியாகவும் செழிப்படைந்திருந்தன.

யானை,முத்து,சங்கு ஆகியன மாதோட்டம், மன்னார் ஆகிய துறைமுகங்களினூடாக, கரையாரால் எடுத்துச் செல்லப்பட்டன.

சீனம், சாவகம், வங்கம், குரச்சரம், பாரசீகம், யவனதேசம், உரோமாபுரி முதலான தேசங்களில் இருந்தும் வணிகக் கப்பல்கள் மாதோட்டத்திற்கு வந்து சென்றன.

வாசனைச் சரக்காகவும், உணவுப் பொருட்களுக்குச் சுவையூட்டுவதற்காகவும் ‘கறுவர்’ மரங்கள் மாதோட்டத் துறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இவை அராபிய தேசங்களுக்காகவும். ஐரோப்பிய தேங்களுக்காகவும், பாரசீகம், இந்தியா, சீனா நாடுகளுக்காகவும் கரையாரால் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

மாதோட்டத்துறை அதிபதியான முதலாம் ஆரிய சக்கரவர்த்தியை உள்ளடக்கியும், இராசகாரியமாகப் பணிபுரிந்த கரையார்களை உள்ளடக்கியும் பொது நிலையில் வைத்து ஆதி ஐதீகப்புராணம் மேல்மலையனூர் வீரப்ப வாத்தியார் (1930) “கரையுருட்டான்” என்று பதிந்து வைத்துள்ளது குறிக்கத்தக்கது.

‘கறுவா’ வர்த்தகத்தில் ஈடுபாடு கொண்டதாலும், கறுவாச்சுருள் களிலிருந்து உருவாக்கப்பட்ட துணிகளை உற்பத்தி செய்வதில் அதிக ஈடுபாடு கொண்டதாலும், 14ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்த ஆரிய சக்கரவர்த்திகள் கடற்படை கொண்டு, தென்னிலங்கைக் கரையோரங்களின் ஊடாக நடைபெற்ற வணிகத்தைக் கட்டுப்படுத்து வதற்கான முயற்சிகளை – நூற்றுக்கணக்கான கப்பல்களை வைத்திருந்ததன் மூலம் மேற்கொண்டிருந்தான்.

பொருளாதார விடயங்களில் ஆர்வம் கொண்டவனாகவும், பாரசீக மொழியில் பயிற்சி அறிவும், வெளிநாட்டு வணிகத்தில் நேரடி பங்கு பெற்றவனாகவும் அவன் இருந்துள்ளான்.

வெளிநாட்டு வணிகத்தில் கரையார் துணையுடன் பங்கு பற்றியதால் “திக்கோட்டி” எனவும், முக்குவரின் உட்பிரிவான “சங்கு பயத்தன் குடியின் துணையுடன் பங்கு பற்றியதால் “சங்கேந்தி” எனவும், சீனநாட்டுக்குப் போகும் கப்பலான “சம்பான் மூலம் கரையாளர் துணையுடன் பங்கு பற்றியதால் “சம்பராப் பணிக்கன்” எனவும், மாதோட்டமான இராசராசபுரத்திலிருந்து சம்பரான் கப்பல் மூலம், கரையார் மணிக்கன் துணையுடன் கரையார் பணிக்கன் துணையுடன் பச்சை (அ) நீலப்பச்சை (berly) போன்ற அரியவகைக் கற்கள். இலங்கை இரத்தினத்தீவில் கிடைப்பதால் கிறித்தவ ஆண்டின் தொடக்கத்தில், வணிகப் பொருட்களாகச் சீனத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இதனை ஏற்றுமதி செய்ததாய் “பச்சைச் சீரும் அணி சித்ர சேனைப் பிரியன்” என்றும் ஆதி ஐதீகப் புராணத்தில் குறிப்பிடப் பெறுபவன் முதலாம் ஆரியச் சக்கரவர்த்தியே ஆவான்.

அரபுநாடுகளில் இருந்து வரும் குதிரைகளை இறக்குமதி செய்ததால் ‘கொக்கோட்டி பேர் பட்டன்” என்றும், மேற்கத்திய நாடுகளுடனும், கிழக்கத்திய நாடுகளுடன் கடல் வணிகம் செய்ததால் “பரவகுரிசி” என்றும், இலங்கையில் (பரத சூர்யா) இருந்து அனைத்துத்த் தென்னிந்திய துறைமுகங்களுடன் கடல் நடவடிக்கை மேற் கொண்டிருந்ததால் “பட்ட நாயகன்” (கரவெ – அரச மரக்கலகெ ) என்றும் வீரப்ப வாததியார் (1930) தனது ஆதி ஐதீகப் புராணத்தில் குறிப்பிட்டுள்ளது ஆரியச்சக்கவர்த்தியையே ஆகும்.

மேற்கண்ட, இவனது நடவடிக்கைகளுக்காகவும், வணிகக் கப்பல் பாதுகாப்பிற்காகவும், வணிகச்சந்தை – வணிகக்குழுப் பாதுகாப்பிற் காகவும் பல்வேறு கரையார் இனக்குழுக்கள் உதவியோடும் செயல்பாடுகள் நிகழ்ந்துள்ளன.