அடிமையைக் குறிக்கும் சொற்கள்

அடிமையைக் குறிக்கும் சொற்கள் :

தமிழகத்தில் அடிமை முறை நிலவியதற்கான சான்றுகளில் முக்கியமானதாக அமைவது அடிமையைக் குறிக்கும் சொற்களாகும். தற்போது நாம் பயன்படுத்தும் அகராதிகளுக்கு முன்பு நிகண்டுகள் என்பன பயன்பாட்டில் இருந்துள்ளன. இவற்றுள் திவாகரம் – பிங்கலம் – சூடாமணி என்ற மூன்று நிகண்டுகள் குறிப்பிடத்தக்கவை ஆகும். இவை மூன்றிலும் அடிமையைக் குறிக்கும் சொறகள் எவை என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

கி.பி. எட்டு அல்லது ஒன்பதாவது நூற்றாண்டைச் சேர்ந்த தாகக் கருதப்படும் “திவாகரம்” நிகண்டில் மக்கள் பெயர்த் தொகுதி என்ற தலைப்பில் “ஆளும் தொழும்பும் அடிமை” (ஆகும்) என்ற நூற்பா இடம், பெற்றுள்ளது.

கி.பி. எட்டில் இருந்து பத்தாவது நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் பிங்கல நிகண்டில் இரண்டு நூற்பாக்களில் (5:149 & 150) அடிமையின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இப் பெயர்கள் வருமாறு: (1) தொழும்பு (2) தொண்டு (3) தொத்து (4) தாதர் (5) தொறு (6) விருத்தி (7) சேடர் (8)கிணகர்

கி.பி பதினாறாவது நூற்றாண்டைச் சேர்நத சூடாமணி நிகண்டில் இடம்பெற்றுள்ள அடிமைகளைக் குறிக்கும் சொற்கள் வருமாறு: (1) தொத்து (2) கிணகர் (3) தாதர் (4) தொழும்பு (5) தொறு6) விருத்தி 7) தொண்டு8) சேடர் 9) ஆள் 10)தாதி 11)நிரை.

பதினாறாவது நூற்றாண்டுக் காலத் தமிழகத்தில் போர்ச்சுக்கீசியக் காலனியம் அறிமுகமானது. இது குறித்த வரலாற்றாய்வில் ஆழங்கால்பட்டவரான பேராசிரியர் எஸ். ஜெயசீல ஸ்டீபன் போர்ச்சுக்கீசிய-தமிழ் அகராதி ஒன்றை 2020ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளார். இது போர்ச்சுகல் நாட்டு வணிகர்கள், மறைப்பணியாளர்கள் பயன்பாட்டிற்காக 16ஆவது நூற்றாண்டு (1549) தொடங்கி 19ஆவது நூற்றாண்டு வரையிலான (1838) காலகட்டத்தில் வெளியான அகராதிகளைத் தொகுத்து உருவாக்கப்பட்டதாகும்.

இந்த அகராதியில் (2020:82) அடிமையைக் குறிக்கும் escravdao என்ற போர்ச்சுக்கீசியச் சொல்லுக்கு அடிமைத்தனம், தாசிகம்என்றும் பெண் அடிமையைக்குறிக்கும் escrava என்ற சொல்லுக்கு வெள்ளாட்டி, தாசி, அடியாள், தொந்தி, தொழும்பி, புளுக்கச்சி என்றும், ஆண் அடிமையைக்குறிக்கும் escravo என்ற சொல்லுக்கு அடிமை, தாசன், தொண்டன், புளுக்கையன், அடியன் என்றும் பொருள் தரப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் அடிமையைக் குறிக்கும் சில புதிய சொற்கள் காலந்தோறும் நடைமுறையில் வந்துள்ளதை உணரமுடிகிறது. இச் சொற்களில் ஒன்றான புளு(ழு)க்கை என்ற சொல் ஒரு வசவுச் சொல்லாக முத்துக்குளித்துறைக் கடற்கரைப் பகுதியில் இன்றும் வழக்கில் உள்ளது. சாதிகடந்த மண உறவில் பிறந்தோரைக் குறிப்பதாக இச் சொல் உள்ளது. அடிமைகளின் மண உறவு சாதி கடந்து அமையும். வாய்ப்புள்ளதன் அடிப்படையில் இவ் வசவுச் சொல் உருவாகி இருக்கு. இழிவான வேலைகளைக் குறிக்கும் வகையில் “புழுக்கை வேலை” என்ற சொல்லாட்சியும் உண்டு. இவையெல்லாம் கடந்த காலத்தின் எச்சங்களாக இன்றும் நிலைத்துள்ளன.

இச் செய்திகளின் அடிப்படையில் பார்க்கும்போது காலம்தோறும் அடிமைகளைக் குறிக்கும் சொற்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது தெரியவருகிறது. இது அடிமைகளின் பயன்பாடு மிகுந்தமையின் வெளிப்பாடு என்று கருத இடமுள்ளது.(நூலிலிருந்து)

தமிழகத்தில் அடிமைமுறை – ஆ. சிவசுப்ரமணியன்
விலை: 220/-
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
Buy this book online: https://www.heritager.in/product/thamizhagathil-adimai-murai-2/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908

Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/

#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers