இராஜராஜன் கல்வெட்டில் சிறப்பிக்கப்படும் மருத்துவர்

இராஜராஜ சோழரின் பெரியகோவில் கல்வெட்டு ஒன்றில், மருத்துவர் ஒருவருக்கு அவரின் பணிக்காக, இன்றைய திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், ஆரப்பாழ் என்ற ஊரை தானமாக அளித்ததை “மருத்துவப்பேறு” என குறிப்பிடப்படுகிறது.

இதன் மூலம் 10 நூற்றாண்டில் சிறந்து விளங்கிய ஒரு மருத்துவரைப் பற்றியும், ராஜராஜசோழன் தமிழகத்தில் பாரம்பரிய மருத்துவத்தைப் போற்றிப் பாதுகாத்ததையும், தமிழ் கல்வெட்டுகள் மூலமாக அறியமுடிகிறது. ஆனால், அதே தமிழகத்தில் இன்று நமது தமிழ் மாணவர்கள் மருத்துவம் படிக்கும் உரிமையைக் கூட தனிச் சட்டம் இயற்றி தான் நிலைநாட்ட வேண்டியுள்ளது.

இவ்வாறு தமிழகத்தில் உள்ள பல கோவில்களில் தமிழக வரலாற்றில் நடந்த பல்வேறு முக்கிய விஷயங்கள் கல்வெட்டுக்களில் பொதிந்துள்ளன.‌ எனவே தமிழகத்தில் உள்ள கல்வெட்டுகளை காப்போம், தமிழின் வரலாற்று பெருமையை மீட்டெடுப்போம்.

மறக்காமல் Thali Heritager Magazine பக்கத்தை Follow செய்யுங்கள்.

#Heritager

Leave a Reply