சென்னையில் 45-வது புத்தக கண்காட்சி தொடங்குகிறது. ஜனவரி 6 முதல் 23-ந் தேதி வரை இப்புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது.
சென்னை புத்தகக் கண்காட்சியை ஜனவரி 6ஆம் தேதி மாலை 6 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைக்கவுள்ளதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க நிர்வாகிகள் திங்கள்கிழமை அறிவித்தனர்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கத்தின் சார்பாக ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. 45-வது புத்தக கண்காட்சி ஜனவரி 6ம் தேதி தொடங்குகிறது.
சென்னை புத்தகக் கண்காட்சியை ஜனவரி 6ம் தேதி மாலை 6 மணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைக்கவுள்ளதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க (பபாசி) நிர்வாகிகள் திங்கள்கிழமை அறிவித்தனர்.
சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் வருகிற ஜனவரி 6, 2022-ல் 45வது சென்னை புத்தக கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
45வது சென்னை புத்தக கண்காட்சி ஜனவரி 6, 2022 முதல் ஜனவரி 23ம் தேதி வரை நடைபெறும் என்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
சென்னை புத்தக கண்காட்சி தொடர்பாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் வயிரவன் மற்றும் செயலாளர் முருகன் ஆகியோர் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், “45ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 6ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. விழா தொடங்கும் அன்றைய தினம் மாலை 6 மணி அளவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் புத்தக கண்காட்சியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்க உள்ளார். விழாவில், 2022ம் ஆண்டுக்கான முத்தமிழ் அறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்குவார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
சென்னை புத்தகக் கண்காட்சி சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், வேலை நாட்களில் மதியம் 3 மணி முதல் இரவு 8:30 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும்.
இந்த புத்தகக் கண்காட்சி கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டு 800 அரங்குகள் இடம் பெறும். புத்தக் கண்காட்சியில் பார்வையிடுவதற்கு நுழைவுக் கட்டணம் பொதுமக்களுக்கு நுழைவு கட்டணம் 10 ரூபாய் வசூலிக்கப்படும். புத்தகக் கண்காட்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நுழைவுக் கட்டணம் இல்லாமல் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள்.
புத்தகக் கண்காட்சி அரங்கத்தில் மின்விசிறிகள் மற்றும் டிராலி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். புத்தகக் கண்காட்சி நடைபெறும் இடத்தில் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படும். வாசகர்கள் அனைவருக்கும் முகக்கவசம் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிருமி நாசினியும் வழங்கப்படும். அதுமட்டுமில்லாமல், கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக தனியாக சிறப்பு தடுப்பூசி முகாம் அமைக்கப்படும். இந்த ஆண்டும், புத்தகத்திற்காக தனியாக பைகள் வழங்கப்படும். பிளாஸ்டிக் பை பயன்பாட்டை தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்படும். மகளிர் சுய உதவிக்குழுக்கள் புத்தக கண்காட்சியில் உணவகம் அமைக்க முன்வரலாம்” என்று தெரிவித்தனர்.
நந்தனத்தில் 45 வது கண்காட்சி புத்தக விரும்பிகளின் திருவிழாவாக கருதப்படும் புத்தகக் கண்காட்சி ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் நடைபெறுவது வழக்கம். மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் என அனைத்து தரப்பினரையும் புத்தகக் கண்காட்சிக்கு ஈர்க்கும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பபாசி நிர்வாகிகள் சென்னை நந்தனம் ஓஎம்சிஏ மைதானத்தில் 45வது புத்தகக் கண்காட்சி 2022ம் ஆண்டு ஜனவரி 6ம் தொடங்க உள்ளதாக தெரிவித்தனர். இந்த புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாகவும் இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
வாசகர்கள் அனுமதி நேரம்
சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ள இந்த புத்தக் கண்காட்யில் வாசகர்கள், பொதுமக்கள் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும், அலுவலக வேலை நாட்களில் மதியம் 3 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் அனுமதிக்கப்படுபவர் என பபாசி நிர்வாகிள் தெரிவித்தனர். புத்தகக் கண்காட்சியில் நடைபெறும் விழாவில் 2022ம் ஆண்டுக்கான முத்தமிழ் அறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகளையும் வழங்கி முதலமைச்சர் கவுரவிக்க இருப்பதாக தெரிவித்த நிர்வாகிகள் பபாசி வழங்கும் விருதுகளையும் அவர் வழங்குவார் என தெரிவித்தனர்.
கண்காட்சியில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு
புத்தகக் கண்காட்சியில் புத்தகங்கள் விற்பனை மட்டுமின்றி சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும் கண்காட்சிக்கு வரும் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டை போலவே இந்த முறையும் புத்தகங்களுக்காக 800 அரங்குகள் அமைக்கப்படும் என பபாசி நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த புத்தகக் கண்காட்சியில் புகழ்பெற்ற நூலாசிரியர்கள் மற்றும் பதிப்பாளர்கள், தமிழ், ஆங்கில மொழிகளில் வெளியிடும் உடல்நலம், இலக்கியம், கலை, அறிவியல், கணிதம், வரலாறு, தொழில்நுட்பம், உணவு, பொது அறிவு, விளையாட்டு புத்தகங்கள் கிடைக்கும். 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சென்னை புத்தக கண்காட்சிக்கு வந்து பயனடைவது வழக்கம்.
பேருந்து, மெட்ரோ ரயிலில் செல்லலாம்
சைதாப்பேட்டைக்கும் தேனாம்பேட்டைக்கும் இடையில் உள்ள நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்திற்கு சென்னை மாநகரப் பேருந்தில் வருபவர்கள் நந்தனம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளலாம். அல்லது மெட்ரோ ரயிலில் வருபவர்கள் நந்தனம் மெட்ரோ நிலையத்தில் இறங்கி எளிதில் புத்தகக் கண்காட்சியை சென்றடையலாம். புறநகர் ரயில் வருபவர்கள் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை பயன்படுத்தி கண்காட்சி நடைபெறும் இடத்திற்கு வந்து சேரலாம். மேலும் இருசக்கர வாகனம், கார் உள்ளிட்டவைக்கு மைதானத்தில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கம் 41 ஆண்டுகளுக்கு முன்பு பி.ஐ (B.I) பதிப்பகத்தின் திரு. மாத்யூ அவர்களின் முயற்சியால் சில பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு தொடங்கப்பட்டது. புத்தக ஆர்வலர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு அதிகமான நூல்களை வெளியிடுவதற்காகவும், வாசிப்பைப் பரவலாக்குவதற்காகவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் இவர்கள் 24.08.1976-ல் ஒரு கூட்டமைப்பை உருவாக்கினார்கள்.
இந்தக் கூட்டமைப்பு சென்னைப் புத்தகத் திருவிழாவை முதலில் ஒரு சில உறுப்பினர்களுடன் அண்ணா சாலையிலுள்ள மதுரஸா யஏ – ஆலம் மேல்நிலைப் பள்ளியில் சிறியதாக ஆரம்பித்தது. அதற்கடுத்த 28 ஆண்டுகள் அதே வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் அரசு பெண்கள் கல்லூரி மைதானத்தில் வெற்றிகரமாக நடத்தி முடித்தது. இதற்கு இருந்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து இந்திய மொழிகளில் குறிப்பாக தமிழ் மற்றும் இதர தென்னிந்திய மொழிகளில் நூல்களை வெளியிடும் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இந்தக் கூட்டமைப்பில் உறுப்பினர்களாகச் சேர்ந்தனர்.
இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் புத்தகத்திற்கு என்று ஒரு நிரந்தரப் புத்தகக்காட்சி நடைபெறுகிறது. எங்கள் சங்கத்தில் இன்று 489 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் பல இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் நூல்களை வெளியிடும் மற்றும் விற்பனை செய்யும் பதிப்பாளர்களும் விற்பனையாளர்களும் உள்ளனர். இந்தக் கூட்டமைப்பு இதுவரை சென்னையில் 41 ஆண்டுகளும், மதுரையில் 12 ஆண்டுகளும், கோவையில் 4 ஆண்டுகளும் புத்தகக் காட்சியை வருடந்தோறும் தொடர்ச்சியாகவும் வெற்றிகரமாகவும் நடத்தி வருகிறது.
படங்கள்: venkatarangan.medium.com