மனு நீதிச் சோழன் எங்கே வாழ்ந்தார்?

“மனு நீதிச் சோழன் எங்கே வாழ்ந்தார்?” என்பதற்கு தமிழ் கல்வெட்டு சான்று உள்ளது பற்றி தெரியுமா உங்களுக்கு?

மனுவை பற்றியும், மனு நீதி பற்றியும் பலரின் பதிவுகளைக் கடந்த காலங்களில் இணையம் முழுக்க நாம் கண்டுள்ளோம். மனு நீதி சோழனை இலங்கையில் எல்லாளன் (கி.மு.205 – கி.மு.161) என அறியப்படுகின்றார். சோழ நாட்டை சேர்ந்த மனுநீதி சோழன் பற்றி, மகாவம்சம் நூல் “மதிப்புமிக்க சோழ வம்வழி வந்த தமிழ் அரசன்” எனக் குறிப்பிடப்படுகிறது. சிங்களவர்களே மதிக்கும் அரசனாக விளங்கிய இவ்வரசன் சோழநாட்டிலிருந்து வந்து, இலங்கையின் அனுராதபுரத்தைக் கைப்பற்றி நல்லாட்சி செய்ததாக மகாவம்சம் குறிப்பிடுகிறது. பின்பு நடந்த போரில் சிங்கள மன்னன் துட்டகைமுணுவால் தந்திரமாகக் கொல்லப்பட்டதாக மகாவம்சம் குறிப்பிடுகிறது. மனுநீதிச் சோழனும், எல்லாளனும் வெவ்வேறானவர்கள் என்ற கருதுவோரும் உள்ளனர்.

மகாவம்சம் இப்படி கூற, தமிழகத்தின் திருவாரூர் கோவிலில் உள்ள விக்கிரமச்சோழனின் 12 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று, மனு நீதி சோழனின் வரலாற்றை விவரித்துக் கூறுவதோடு, மனு நீதிச் சோழன், சோழர்கள் முடிசூடி ஆட்சி செய்த நகரங்களில் ஒன்றான திருவாரூரை சேர்ந்தவர் எனக் குறிப்பிடுகிறது. இவர் திருவாரூரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், மனு நீதிச் சோழனின் மந்திரி ஒருவரின் வம்சாவழியினருக்கு மாளிகையும், மனையும் விக்கிரமச் சோழன் அளித்ததைப் பற்றியும் கல்வெட்டு உரைக்கின்றது. அது மட்டுமல்லாது சோழர்களால் மனு நீதி சோழனுக்கு கல் தேர், சிலையும் இக்கோவிலுக்கு அருகில் எடுக்கப்பட்டதாக (படம்) அறிஞர்கள் கூறுகின்றனர். இதன் மூலம் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், சோழர்கள் தங்களைச் சேர்ந்தவர்களைத் தொடர்ந்து ஆதரித்தும், பாதுகாத்தும் வந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது.

மனு நீதிச் சோழன் பற்றிய தகவல்கள் வெறும் கதைகளில் மட்டுமல்லாது, கல்வெட்டிலும் சிற்ப மற்றும் கட்டடக்கலை சான்றாகவும் தமிழகத்தில் உள்ளது என்பது கூடுதல் சான்றாகும். எனவே தமிழுக்கும், தமிழத்தின் பெருமைக்கும் ஒரே சான்றாக விளங்கும் நமது கல்வெட்டுகளை சிதைக்காமல் போற்றி பாதுகாக்க வேண்டும்.

தொடர்ந்து இவ்வாறான வரலாற்று செய்திகளை அறிய மறக்காமல் இப்பதிவை பகிருங்கள், விருப்பத்தை (👍🙂❤️😡😥) பதிவில் தெரிவியுங்கள். Thali Heritager Magazine எங்களுடைய பக்கத்தை Follow செய்யுங்கள். இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக அமையாக வாழ்த்துக்கள். நன்றி…

கருத்துப்படம் உதவி: திருவாரூரில் உள்ள மனு நீதிச் சோழன் கல்மண்டபம். நன்றி: Right Mantra.com

#Heritager

Leave a Reply