காதல் பிரிவுக்கு ஒரு Pain killer. அறிவியல் கூறுவதென்ன? இலக்கியம் கூறுவதென்ன?

காதல் பிரிவுக்கு ஒரு Pain killer. அறிவியல் கூறுவதென்ன, இலக்கியம் கூறுவதென்ன?
 
காதல் தோல்வியால் மனம் உடைதல் என்பது கற்பனை கலந்த வெறும் உணர்வுமட்டும் அல்ல, உடல் அளவில் அது வலியை ஏற்படுத்துகிறது என அறிவியல் கூறுகிறது. எனவே, அதற்குத் தீர்வாக உடல் வலி நீக்கியை (Pain Killer) உபயோகிக்கலாம் எனநரம்பியல் ஆய்வாளர்  Melissa Hill கூறுகின்றார்.
 
A couple crying due to a broken heart illustration
 
காதல் தோல்வியால் மூளைக்கும் வயிற்றுக்கும், இதயத்திற்கும் செல்லும் நரம்பு பாதிக்கப்பட்டு, மூச்சு இறுக்கம் ஏற்படுகிறது. மேலும் வயிற்றில் செரிமானப் பகுதியிலும் ஒருவித இறுக்கம் ஏற்படுகிறது. மேலும் இதயத் துடிப்பு வழக்கத்துக்கு மாறாகக் குறைந்துவிடுகிறது. இது கிட்டத்தட்ட இதயம் செயலிழந்த தன்மையை (Heart Broke) போல இருக்கும். எனவே, காதல் தோல்வியால் ஏற்படும் வலி, உடலில் ஏற்படும் உண்மையான வலி என்றே ஆய்வாளர் கூறுகின்றார்.
 
இந்த வலி உணர்வுக்குத் தீர்வாக Acetaminophen என்ற வலி நிவாரணியைப் பயன்படுத்தலாம் என அவ்வாய்வு கூறுகிறது. ஆனால் சரியான மருத்துவ ஆலோசனை பெற்றுப் பயன்படுத்துவது அறிவுறுத்தப்படுகிறது.
 
சங்க இலக்கியங்கள் காதல் பிரிவால் ஏற்படும் துக்கத்தை “பசலை நோய்” என்றே குறிப்பிடுகிறது.
 
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து
(அதிகாரம்:புணர்ச்சி மகிழ்தல் குறள் எண்:1102)
 
உடலில் தோன்றும் வெவ்வேறு நோய்களுக்கு வெவ்வேறு மருந்துகள் இருக்கக் காதல் நோய்க்கு மட்டும் மருந்து காதலனே என்றும்
 
சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து. குறள் 1183:
 
அவர் என்னைப் பிரிகிறபோதே உள்ளத் துன்பத்தையும் பசலையையும் எனக்குக் கொடுத்துவிட்டு அவற்றுக்கு ஈடாக என் அழகையும் வெட்கத்தையும் கொண்டு போய்விட்டார் என்கிறது திருக்குறள்.
 
இப்போது தெரிகிறது ஏன் முக்கால்வாசி பேர் குடிகாரனாய் திரிகிறார்கள் என்று. இலக்கியங்களைப் படிக்காமல் யாரோ மது தான் காதல் நோய்க்கு மருந்து என prescription தப்பாக எழுதி தந்துள்ளனர். அதை எடுத்துக்கொண்டு நாமும் மதுக்கடைக்குச் செல்கிறோம்.