ராஜராஜனின் கொடை – க.சுபாஷினி
சோழர் செப்பேடுகள் நெதர்லந்து வந்தடைந்தப் பின்னணி :
பெரிய லெய்டன், சிறிய லெய்டன் செப்பேடுகள்’ (ஆனை மங்கலம் செப்பேடுகள்) இரண்டும் தற்சமயம் லெய்டன் பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் உள்ள அரிய ஆவணங்கள் பகுதியில் பாதுகாக்கப்படுகின்றன. இந்தப் பெரிய லெய்டன் மற்றும் சிறிய லெய்டன் செப்பேடுகளுடன் மேலும் இந்தோனீசியாவின் ஜாவாவிலிருந்து டச்சுக்காரர்கள் தங்களது காலனித்துவ ஆட்சியின் போது சேகரித்துக் கொண்டு வந்த சமஸ்கிருத செப்பேடுகள் சிலவும், களிமண்ணால் செய்யப்பட்ட ஓட்டின் மேல் கீறப்பட்ட சமஸ்கிருத ஆவணங்களும் இடம் பெறுகின்றன.
நெதர்லாந்தில் பாதுகாக்கப்படும் பெரிய லெய்டன் சிறிய லெய்டன் என அழைக்கப்படும் செப்பேடுகள் Or. 1687 மற்றும் Or. 1688 என அடையாள எண்ணிட்டு பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த இரண்டு ஆனைமங்கலம் செப்பேடுகளையும் இந்தியாவிலிருந்து நெதர்லாந்துக்குக் கொண்டு வந்தவர் ஃப்லோரெண்டியூஸ் காம்பெர் (Mr.Florentius Camper) என்பவராவார். கிழக்கிந்திய டச்சுக் கம்பெனியின் ஆட்சிக்குட்பட்டிருந்த பட்டாவியா அரசு என்பது இந்தோனீசியா மற்றும் மலாயா தீவுக்கூட்டங்கள் அடங்கிய ஒரு பெரும்பகுதி . ஃப்லோரெண்டியூஸ் காம்பெர் 1702லிருந்து 1713 வரையிலான காலகட்டத்தில் இந்தப் பட்டாவியா அரசில் சமயத்துறைக்கான அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தார். அக்காலகட்டத்தில் அவர் தமிழ் நாட்டிலிருந்து சேகரித்தவைதாம் இந்த ஆனை மங்கலம் செப்பேடுகள் ஃப்லோரெண்டியூஸ் காம்பெர்
குறிப்பு: கட்டுரையாசிரியர் 2.8.2021 லெய்டன் பல்கலைக்கழக நூலகத்தில் நேரடியாக இச்செப்பேடுகளை ஆய்வு செய்து வந்ததன் அடிப்படையில் தகவல்கள் இப்பகுதியில் இடம்பெறுகின்றனஹமாக்கர் (Hamaker) பரம்பரையில் திருமணம் செய்து கொண்டார். அந்த வகையில் இச்செப்பேடுகள் பேராசிரியர் ஹெச்.ஏ ஹமாக்கர் (H.A.Hamaker) கைவசம் வந்தன.
ஆனைமங்கலம் செப்பேடுகள் என அழைக்கப்படும் இந்தச் செப்பேடுகள் லெய்டன் பல்கலைக்கழகத்தின் முதல் சமஸ் திருதப் பேராசிரியராகப் பணியாற்றிய பேராசிரியர் ஹெச்.ஏ ஹமாக்கர் (H.A.Hamaker) என்பவர் வசம் இருந்தன. இவர் 1835ம் ஆண்டு காலமானார். இவரது வாரிசுகள் இந்த ஆனைமங்கலம் செப்பேடுகளை 1862ம் ஆண்டு லெய்டன் பல்கலைக்கழக நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கினர்.
Or. 1687 என அடையாளப்படுத்தப்பட்டுள்ள பெரிய லெய்டன் செப்பேடுகள், 21 செப்புப் பட்டயங்களை உள்ளடக் கிய தொகுதி. இவற்றுள் 16 செப்புப்பட்டயங்கள் தமிழிலும் ஏனைய 5 சமஸ்கிருதத்திலும் எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு தனிச் செப்பேடும் செப்பு வளையத்தால் பிணைக்கப் பட்டு சோழச் சின்னம் பொறிக்கப்பட்ட செப்பு முத்திரையுடன் பிணைக்கப்பட்டுள்ளன. முத்திரையை இணைக்கும் வளையம் அமைந்திருக்கும் பகுதியில் தெளிவாக வாசிக்கக் கூடிய வகையில் வளையத்தின் மேற்பகுதியில் தமிழில் ‘ஆனைமங்கலம்’ எனப் பொறிக்கப்பட்டுள்ளது. இப்பெரிய லெய்டன் செப்பேட்டுத் தொகுதி ஏறக்குறைய 30 கிலோ எடை கொண்டது. இது மாமன்னன் ராஜராஜன் பொ.ஆ 1005இல் ஸ்ரீவிஜய பேரரசின் மன்னனுக்கு நாகப்பட்டினத்தில் ஒரு பொத்த விகாரையும் பள்ளியும் உருவாக்க வழங்கிய ஆனைமங்கலம் மற்றும் அதன் சுற்றுப்பகுதி கிராமங்கள் அடங்கிய நன்கொடை பற்றிய செய்திகளைக் கூறுகிறது.
Or.1688 என அடையாளப்படுத்தப்படும் சிறிய லெய்டன் செப்பேட்டுத் தொகுதி மூன்று செப்பேடுகளைக் கொண்டி ருக்கின்றது. செப்பேட்டில் உள்ள வாக்கியங்களுக்கான எண்கள் குறிப்பிடப்படவில்லை. இது முதலாம் குலோத்துங்கன் காலத்தில் வெளியிடப்பட்ட செப்பேடாகும். இது முழுமை யாகத் தமிழில் செதுக்கப்பட்ட செப்பேடு. மூன்று தனிச் செப்பேடுகளும் செப்பு வளையத்தால் பிணைக்கப்பட்டு, சோழர் முத்திரை பதிக்கப்பட்டு பிணைக்கப்பட்டுள்ளன.
இச்செப்பேடு சோழன் ராஜகேசரிவர்மன், அதாவது முதலாம் குலோத்துங்கனின் 20ம் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது(பொ.ஆ. 1090). இச் சிறிய லெய்டன் செப்பேடு சூளாமணி விகாரை பொத்த பள்ளிக்கு அளிக்கப்பட்ட கொடையை முதலாம் குலோத்துங்கன் காலத்தில் உறுதிப்படுத்தும் வகையிலும் மேலும் கடாரத்து அரையனின் தூதன் ராஜ வித்யாதர ஸ்ரீசாமந்தனும் அபிமானதுங்க ஸ்ரீசாமந்தனும் விண்ணப் பித்தபடி, முன்னர் சாசனத்தில் கொடுக்கப்பட்ட தானத்தைப் பள்ளிச் சங்கத்தாருக்கே வழங்கும் வகையிலும் இச்செப்பேட்டு அரசாணை (தாமிரசாசனம்) செய்யப்பட்டுள்ளது.
1938ஆம் ஆண்டு Archeological Survey of India வெளியிட்ட Epigraphia Indica and record of the Archaeological Survey of India Vol. XXII 1933-34 நூலில் பெரிய லெய்டன், சிறிய லெய்டன் செப்பேடுகளில் உள்ள செய்திகள் ஆய்வறிக்கையாக கே.வி. சுப்ரமணியன் அவர்களால் பதிப்பிக்கப்பட்டன. இந்த ஆய்வுக் குத் தேவைப்பட்ட இச்செப்பேடுகளின் மைப்படிகளை நெதர்லாந்திலிருந்து Prof..J.Ph.Vogel படியெடுத்து அனுப்பியிருந்தார். செப்பேட்டிலுள்ள ஒவ்வொரு வரியையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இந்த அறிக்கையில் அவர் வழங்கியிருக்கின்றார். அதனடிப்படையில், இந்நூலில் வழங்கப் பட்டுள்ள இச்செப்பேட்டு வரிகள் கூறும் செய்திகளை அடுத்த பகுதியில் காண்போம்.
விலை:180/-
Buy this book online: https://www.heritager.in/product/rajarajanin-kodai/
To order on WhatsApp: wa.me/919786068908
Call: 097860 68908
Buy online: www.heritager.in
Social Media Handles:
Join our WhatsApp Group: https://chat.whatsapp.com/Jq4WbvrezuyCvlLgb8igza
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு
#books #tamilbookstore #Heritager wwww.heritager.in
Buy History and Heritage Related book online:
Buy Tamil Inscription Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/inscriptions/
Buy Tamil Literature Books: https://www.heritager.in/product-category/books/tamil/literature/
Buy Tamil Archaeological Books: https://www.heritager.in/product-category/books/tamil/archaeology/
Buy Tamil Temple Architecture and Art Books: https://www.heritager.in/product-category/books/tamil/art/
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/