மேகதாது பயணம்

கடந்த இருபத்திமூன்றாம் தேதி ஞாயிறு அன்று, நண்பர் மூர்த்தி அவர்களது அழைப்பின் பெயரில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஹோசூர்க்கு நாங்கள் பயணமானோம். பயணம், சேலத்தில் இருந்து அதிகாலை 1.30 க்கு பேருந்தில் துவங்கி அதிகாலை ஐந்து மணிக்கு ஹோசூர் சென்றடைந்தேன், பேருந்து நிலையத்தில் எனக்காக மூர்த்தி காத்திருந்தார். அவருடன் அவரது இல்லத்திற்கு சென்று அங்கு குளித்துவிட்டு, காலை சூடான காபி அருந்திய பிறகு மூர்த்தி அவர்களது நண்பர்கள் ஐந்து பேர் டாடா சுமோ வாகனத்துடன் வர காலை ஆறு மணிக்கே எங்களது பயணம் தொடந்தது.

முதலில் டெங்கனி கோட்டை என்று அழிபட்ட இடத்தை அடைந்தோம். டெங்கனி கோட்டையில் இருந்து தளி போகும் வழியெங்கும் தொட்டி, கெம்பாதஹல்லி, ஜாவல்கிரி, ஜோசஹத்தி போன்ற கிராமங்கள் முழுமையாக நர்சரி கார்டன்கள் கண்ணில் தென்பட்டன. இவ்வளவு நர்சரிகள் இங்கே உருவாக காரணம் இங்கே உற்பத்தி செய்யப்பட்டு செடிகள் தென்னிந்தியா முழுதும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்தியாவில் அதிகமான நர்சரிகள் இருப்பதும் இந்தப் பகுதியில் தான். அது மட்டுமன்றி இந்த பகுதி யானைகள் வலசை வரும் பகுதியும் கூட.
தொடர்ந்து பயணம் வழியில் மஞ்சுகொண்டபஹள்ளியில் எனும் ஊரில் உள்ள மாரியம்மன் கோயில் முன்பாக இந்த குறியீட்டுடன் உள்ள கல்லை பார்த்தேன், பூ வேலைப்பாட்டுடன் இருந்த இந்தக் கல் எதை குறிக்கிறது என்பது புரியாத புதிராக உள்ளது.

அப்படியே தொடர்ந்து தமிழகம் கர்நாடக வனப்பகுதி என மாறி மாறி வர கரடுமுரடான சாலைகளில் அஞ்செட்டி அடுத்து பத்திரிகைகளில் அதிகம் அடிபடும் பெயர் மேகதாது மலை. அதன் அருகிலுள்ள காவிரி ஆற்றின் கரையோரம் தெப்பகுழி எனும் இடத்தில் உள்ள கோயிலின் அருகில் இந்த பழைய கட்டுமானத்தை கண்டோம். மேக என்றால் கன்னடத்தில் ஆடு , தாட் என்றால் தாண்டு மேக்தாட் தமிழில் ஆடுதாண்டுகல்,காவிரி ஆறு இந்த இடத்தில் மட்டுமே மிக குறுகலாக இருக்கும்.

இங்கே உள்ளவர்கள் இந்தக் கட்டிடம் திப்பு சுல்தான் கட்டியது என்கிறார்கள், குழி என்றால் காரியம் செய்வது எனவும் பொருள்படும். திப்பு குழி ஒரு வேலை தெப்பகுழி ஆகிவிட்டதா என்பது ஆய்வுக்குரியது. திப்பு இங்கு வந்து எதற்காக காரியம் செய்ய கட்டிடம் ஆற்றின் கரையில் கட்ட வேண்டும்? என்ற பல சந்தேகங்கள் எழுகின்றது.

இந்த பகுதியில் தான் பல வருடங்களுக்கு முன்பு வீரப்பன் கன்னட நடிகர் ராஜ்குமார் அவர்களை சிறைபிடித்து கடத்தி வைத்து இருந்தார் என்பது கூடுதல் தகவல்.

 

[ngg src=”galleries” ids=”1″ display=”basic_imagebrowser”]

Leave a Reply