“மருமக்கள் தாய முறைப்படி ஒருவரின் உடைமைகள், அவருக்குப்பின் அவருடைய மக்களைச் சாராமல், அவருடன் பிறந்த சகோதரிகளுடைய ஆண்மக்களில் மூத்தவனைச் சாரும். சொத்தில் உரிமையை வைத்திருந்தவர் ‘காரணவர்’ என்றும், அவருக்குப்பின் அவ்வுரிமையை அடையும் மருமகன் ‘அனந்தரவன்’ என்றும் அழைக்கப்பட்டனர். காரணவர் இறந்தபின், அவரது மனைவி மக்களுக்கு அவ்வீட்டில் ஒரு உரிமையும் இல்லை. அவள் தன்மக்களுடன் பிறந்த வீட்டுக்குச் சென்றாக வேண்டிய சூழ்நிலை அன்று இருந்தது. அனந்தரவன் மனம் உவந்து கொடுக்கும் ‘உகந்துடைமையால்’ அவர் வயிறு வளர்ப்பர். ஆனால், பெரும்பாலும் அவர்களுக்கு ஒன்றும் கிடைக்காமலிருந்தது. இம்முறையால் வழக்குகள் மலிந்தன. பலதார மணமும், மாதரை இழிவுபடுத்தும் நிலையும் சமூகத்தில் தோன்றின. சமுதாயத்தில் கொடுமைகள் மலிந்தன
நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம் – அ.கா. பெருமாள்
Extra Features
- புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
- தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 978606 8908
- Worldwide Shipping
- புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.