இந்து

பொங்கல் என்னும் புவுத்தப் பண்டிகை

பொங்கல் என்னும் புவுத்தப் பண்டிகை : போகிப் பண்டிகைக்கு மறுநாளாகிய தை மாதம் முதல் நாளைப் பொங்கல் பண்டிகை என்றும், சங்கறாந்திப் பண்டிகை என்றும் கொண்டாடி வருகின்றார்கள். சங்கறாந்தியாகிய பொங்கல் பண்டிகையும் பகவான் புத்தருக்காக கொண்டாடப் படும் பண்டிகையேயாகும். சங்கறாந்தி என்ற சொல்லை ஆராய்ந்து பார்த்தால் அதிலுள்ள வரலாற்று உண்மை நன்கு விளங்கும். சங்கறாந்தி என்பதை, சங்கறர் + அந்தி =சங்கறாந்தி என்று பிரித்துப் பொருள் கொள்ளவேண்டும். அந்தி என்றால் முடிவு, இறுதி, இறத்தல், மறைதல், பரிநிருவாணம்

பொங்கல் என்னும் புவுத்தப் பண்டிகை Read More »

தமிழர் உறவு முறைகளும் சமயமும் வழிபாடும்

நம்பமுடியாத புலமையாளர் தமிழ்நாட்டில் அறியப்பட்டவர்களைப் போல் அறியப்படாத பெரிய அறிஞர்களின் பட்டியல் ஒன்றும் இருக்கிறது. அதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு, சி.சு.மணி. தொல்காப்பியம் உயிர்ஈற்றுப் புணரியலைப் பற்றிப் பேசவேண்டுமா? சங்க இலக்கியத்தின் பிசிராந்தையார் நட்பினைப் பற்றிப் பேசவேண்டுமா? பரிமேலழகர் உரைச் சிறப்பு என்ன? தமிழிலக்கிய நெடும் பரப்பில் எங்கே எந்தக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லக்கூடிய ஓர் அறிஞர் அவர். சி.சு.மணி அஞ்சல் துறையில் எழுத்தராக இருந்தார். ஆனால், அவர் நெல்லை மாவட்டத்தில் எல்லாப் பேராசிரியர்களுக்கும் பேராசிரியர்.

தமிழர் உறவு முறைகளும் சமயமும் வழிபாடும் Read More »

யார் கைகளில் இந்து ஆலயங்கள்?

பல்வேறு மதங்களும் அதன் கோவில்களும் கோயில் என்பது, கடவுளை வணங்குதல், வேள்விகள் நடத்துதல்போன்ற சமயம் சார்ந்த அல்லது ஆன்மிக நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட கட்டிடத்தைக் குறிக்கும். ஆனால் மரங்களும், சாலையோரக் கற்களும்கூட கோயிலாகக் கருதப்படும் வழக்கமும் நமது சமூகத்தில் உண்டு. மனிதகுல வரலாற்றில் தன் சக்திக்கு அப்பாற்பட்ட இயற்கை நிகழ்வுகளை வணங்கவோ, பயம் கொள்ளவோ செய்த மனித சமூகம், அதனுடைய வளர்ச்சிப் போக்கில் ஒன்றுகூடி தங்கள் நலன்களுக்காக வேண்டிக்கொள்ள கோயில்களை அமைத்தனர். மிகப் பழைய காலத்தில் இருந்தே இந்நோக்கங்களுக்காக

யார் கைகளில் இந்து ஆலயங்கள்? Read More »

தமிழர் உறவு முறைகளும் சமயமும் வழிபாடும்

தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளரான மறைந்த தொ. பரமசிவன் எழுதிய 27 கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. நூல் அறிமுகங்களுடன் அணிந்துரைகளும் மதிப்புரைகளும் இடம்பெற்றிருக்கின்றன. அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய பல தகவல்கள் விரவிக் கிடக்கின்றன. தாய்த் தெய்வ வழிபாடு பற்றிய கட்டுரையில் மதுரை மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் பற்றிய தரவும் பெண் தெய்வங்களின் பெயர் வழங்குவது பற்றிய தரவும் பலரும் அறியாதவை. பெண் விலங்குகளை ஏன் பலியிடுவதில்லை என்பதைக் கூறும் பரமசிவன், சேர்ந்தே சூலாடு குத்துதல் பற்றியும் விளக்குகிறார். இசக்கியம்மனின் தோற்ற மூலத்தையும்

தமிழர் உறவு முறைகளும் சமயமும் வழிபாடும் Read More »

ஆலய நிர்மாணம்

ஆலய நிர்மாணம் நமது நாட்டில் சைவாகமங்களை ஒட்டியும், சாக்தேயம், பாஞ்சராத்திரிகம், தந்திரம் முதலியனவற்றை யொட்டியும் ஆலயங்கள் நிர்மாணம் செய்யப்படுகின்றன. சிவாகமங்கள் இருபத்தெட்டோடு சைவ உபாகமங்கள் நூற்றுப்பதின்மூன்று உள்ளன. சாக்தேய ஆகமங்கள் அறுபத்துநான்காகும். பாஞ்சராத்ராகமங்கள் நூற்றெட் டென்பர். அவற்றுள் முக்கியமானவை பாஞ்சராத்ரமும், வைகானஸமுமாகும். குமாரதந்திரம் முதலிய தந்திர நூல்களை மேற்கொண்டு எழுந்த கோவில்களும் பல உள. இவை ஒவ்வொன்றும் ஆலய நிர்மாணம், பிரதிட்டை, நித்திய பூஜை, நைமித்திக பூஜை, திருவிழாக்கள், தீக்கைகள், மந்திரங்கள் முதலியவற்றைப் பற்றி விளக்கமாகக் கூறுகின்றன.

ஆலய நிர்மாணம் Read More »

கலை வரலாற்றில் கணபதி

கலை வரலாற்றில் கணபதி : ‘ரிக் வேதத்தில் கணானாம்த்வகணபதிம்’ என்று சொல்லப்பட்டிருப்பினும் அது கணபதியைக் குறிக்கவில்லை. தைத்திரிய ஆரண்யகத்தில் ‘வளைந்த துதிக்கையை யுடைய தண்டின்’ என்ற கடவுள் குறிப்பிடப்பட்டுள்ளார். அவர் கைகளில் தானியச் செடிகளும் கரும்பும் கதையும் வைத்திருப்பார் என்று வருகிறது. ஏறத்தாழ இதே காலத் தினைச் (C. 1000 B.C.) சேர்ந்த கலைச்சின்னம் ஒன்று தொல்லியலாளரால் மேற்கு ஈரானின் லூரிஸ்டன் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் யானைத்தலையுடன் மனித உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இரண்டு கரங்களையுடைய இவ்வுரு

கலை வரலாற்றில் கணபதி Read More »

இந்து – சைவம் – வைணவம் – ஓர் அறிமுகம்

மனிதன் நல்வழிப்படும் மார்க்க நெறியே சமய நெறியாகும். பிற சமயங்கள் ஒரே தலைவரை தங்களின் சமய முதல்வராக ஏற்றுக்கொள்ள, இந்து சமயமோ ஒரே நெறியை வலியுறுத்துகிறது. அந்த நெறி பரந்தது. அந்த நெறியில் சென்று வெற்றியடைந்த அனைவரையும் இந்து சமயம் தலைவராக ஏற்றுக் கொள்கிறது, வணங்குகிறது. இந்தியப் பண்பாட்டின் அடித்தளத்தில் இருந்து இந்திய மக்களிடையே தோன்றிய ஞானியர்களால் வளர்க்கப்பட்டு வந்ததே இந்து சமயம். பல வேற்றுமைகளிடையே தெளிந்த ஒற்றுமையை வலியுறுத்தும் அதேநேரம், வேறுபாடுகளையும் அது ஏற்றுக் கொள்கிறது.

இந்து – சைவம் – வைணவம் – ஓர் அறிமுகம் Read More »

Shopping Cart