தொடரும் மரபுகள்: சிந்துவெளி முதல் ‘ஆடுகளம்’ வரை

தொடரும் மரபுகள்: சிந்துவெளி முதல் ‘ஆடுகளம்’ வரை
ஆர். பாலகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ்

மேட்டுநிலத்தில் மேற்காகவும், கீழ்நிலத்தில் கிழக்குத் திசையிலுமாக அமைந்த இரு குடியிருப்புகளின் சண்டைக்கோழிகள் சிந்துவெளி நகர்களில் போரிட்டன!

மொகஞ்சதாரோவில், பொதுவாக நகரைக் குறிப்பதாகக்
கருதப்படும் குறியீட்டுடன் இரண்டு சேவல்கள் அருகருகேஇருக்கும் உருவப்பொறிப்புடன் கூடிய முத்திரையொன்றுகிடைத்துள்ளது.(மார்ஷல் முத்திரை எண் 338). நகரைக் குறிக்கும் குறியீட்டுடன் சேவல்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டஇந்த முத்திரையின் குறியீட்டு நிரல்முறை ‘சேவல்நகரம்’ என்றஅந்நகரின் பெயரைக் குறிப்பதாகச் சிந்துவெளி ஆய்வறிஞர்
ஐராவதம் மகாதேவன் விளக்கம் அளிக்கிறார். ஒரு மிக முக்கியமான நகரத்தின் பெயரைச் ‘சேவல் நகரம்’ என்றழைப்பதற்கு வலுவான காரணம் இருந்திருக்க வேண்டும்.சேவல்கள், மக்கள் வாழுமிடங்களிலெல்லாம் காணப்படுகிறவளர்ப்புப் பறவை. அவ்வாறாயின், ஒரு குறிப்பிட்ட நகரத்திற்குமட்டும் சேவல் நகரமென்று பெயர்வைக்கப்பட்டதற்கு, அந்தநகரத்துச் சேவல்கள் பற்றிய ஒரு சிறப்புக்காரணம் இருந்திருக்க வேண்டும்.

மேற்சொன்ன 338ஆம் இலக்க முத்திரையைக் கவனமாகப் பார்த்தால் அந்தக் காரணத்தை ஊகிக்க இடமளிக்கும் அறிகுறிகள் புலப்படும். சேவல்களின் கழுத்து நிமிர்ந்து புடைத்திருக்கிறது; வால் இறக்கை மேல்நோக்கி விரைப்பாக இருக்கிறது; கால்கள் தரையில் பாவாமல் மேலெழுந்து உள்ளன. இந்தச் சேவல்கள் இரண்டும் அநேகமாகச் சண்டைபோடும் தோரணையில் உள்ளன.

 

 

மேலே சுட்டிக்காட்டிய இந்த முத்திரையில் காணப்படும் குறியீடு நகரைக் குறிப்பதென்பது பல்வேறு ஆய்வாளர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட கருத்து. இந்த முத்திரையின் நோக்கம் ‘சேவல் ஊர்’ அல்லது ‘கோழியூர் என்பதை பதிவு செய்வதுதான் என்று எடுத்துக்கொண்டால் நகரைக் குறிக்கும் குறியீட்டிற்கு முன்னால், ஒரு சேவல் அல்லது கோழியில் உருவத்தைப் பொறித்தாலே போதுமானது. இரண்டு சேவல்களின் சின்னம் தேவை இல்லை. ஒருவேளை இம்முத்திரையின் நோக்கம் ‘ஏராளமான சேவல்கள் நிறைந்த நகரம்’ என்பதைத் தெரிவிப்பது என்றால் நகரத்திற்கான குறியீட்டோடு பல சேவல்களின் சின்னங்களைப் பொறித்திருக்க வேண்டும். ஏனெனில், இரண்டு என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட’ ‘இணை’ (pair), பாகுபாடான (divided, divisive) 2 (dichotomous, binary), ஒன்று முரணான (conflictive, competitive) போன்ற பொருளைத் தெரிவிக்குமே தவிர ‘ஏராளமான’ என்ற பொருளைத் தெரிவிக்காது. அவ்வாறாயின், நகரின் குறியீட்டோடு சேர்ந்த இரண்டு சேவல்களின் உருவச்சின்னம் எதைக் குறிக்கக்கூடும்? அதிலும் குறிப்பாக, இவ்விரண்டு உருவச்சின்னங்களும் சேவல்களின் உருவச்சின்னமாக (ஒரு சேவல், ஒரு கோழி என்று கூட வேறுபடுத்திக்காட்டாமல்) இருப்பதன் உள்நோக்கம் எதுவாக இருக்கமுடியும்? நகரைக்குறிக்கும் குறியீட்டுடன், “கழுத்து நிமிர்ந்து புடைத்திருக்கிற; வால் இறக்கை மேல்நோக்கி விரைப்பாக இருக்கிற; கால்கள் தரையில் பாவாமல் மேலெழுந்து உள்ள” இரண்டு சேவல்களின் உருவச்சின்னத்தைப் பார்க்கும்போது, அவை கோழிச்சண்டைக்குப் பெயர்பெற்ற ஒரு நகரத்தின் இரண்டு பகுதிகளைச் சேர்ந்த சேவல்கள் என்றும் அதனால்தான் அந்த நகரம் ‘சேவல் நகரம்’ என்று பெயர் பெற்றிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இது வெறும் ஊகம் அல்ல. இது சிந்துவெளியில் தோன்றி அங்கேயே சிதிலமாகிவிடவில்லை. இம்மரபின் தொடர்ச்சியைத் தமிழ்மரபு தொன்றுதொட்டு இன்றுவரை பேணிக்காத்து வருகிறது.

தொல்லியல் தமிழர் வரலாற்றுத் தடங்கள் – தொகுப்பாசிரியர்கள் ந.இரத்தினக்குமார் ,
பெ.க.பெரியசாமி ராஜா
விலை: 300/-
Buy this book online: https://www.heritager.in/product/tholliyal-thamizhar-varlaatru-thadangal/
WhatsApp to Order: wa.me/919786068908
Call to Order: 097860 68908

Social Media Handles:
Join our WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
Telegram:
Website: www.heritager.in

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு

#books #tamilbookstore #Heritager wwww.heritager.in

Buy History and Heritage Related book online:

Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/