இடைக்காலச் சோழர்களின் நிர்வாக முறைகள்

நாட்டின் பெயராக அமைந்த ஊர்கள் பல பிற்காலத்தில் பிரமதேயமாகவும், நகரமாகவும் தேவதானமாகவும் மாற்றம் பெற்றுள்ளது. நாடுகளுக்கு பெயரிடுவதில் வேறு வகையும் இருந்திருக்கின்றன.

அவை கூற்றம், வளநாடு, ஆற்றுப்போக்கு, குளக்கீழ் என்ற பெயர்களில் வழங்கப்படுகின்றன. இவை இடத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ற முறையில் இடம்பெற்ற பெயர்களாகும். ஆனால் நாடு, கூற்றம் போன்ற வழக்கமே அதிகளவில் இருந்திருக்கின்றன.
குளகீழ், ஆற்றுப்போக்கு என்ற வழக்கு மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றது. இருக்கை, முட்டம் போன்ற பெயர்கள் பாண்டிய நாட்டில் நாடு என்ற சொல்லாட்சிக்கு இணையாக வழங்கப் பெற்றுள்ளது. இச்சொல்லாட்சி மற்ற மண்டலங்களைக் காட்டிலும் பாண்டிய நாட்டில்தான் அதிகம் காணப்படுகின்றது.”
கி.பி. 9-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.12-ஆம் நூற்றாண்டு வரையில் இருந்த நாடுகளில் வளர்ச்சிப்போக்கு கி.பி.13-14-ஆம் நூற்றாண்டுகளில் குறையத் தொடங்கியுள்ளது. இம்மாற்றத்திற்கு காரணம் பேரரசர்களின் வலிமை குன்றியமையே எனினும் நாடு என்ற முதன்மையான காரணம் எனலாம்.

கூற்றம் :

‘கூறு’ என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்டு கூற்றம் என்ற சொல் வந்திருக்கவேண்டும். கூறு என்பதற்குப் பங்கு, பிரிவு’ என்ற பொருள் கொள்ளப்படுகிறது. கூற்றம் என்ற அமைப்பு நாட்டுக்குச் சமமாகக் கருதப்படுகின்றது. தஞ்சாவூர்ப் பகுதிகளில் மட்டும் அமைந்த 65 நாட்டுப் பிரிவுகளில் 17 நாடுகள் கூற்றம் என்ற சொல்லாட்சியைப் பெற்று வழக்கத்தில் இருந்துள்ளன.

கூற்றம் என்ற சொல் பல்லவர்களின் காலத்தில் வழக்கில் இருந்தபோதிலும், பிற்காலச் சோழர்களின் காலத்தில் தான் அதிகளவில் காணப்படுகின்றது. அவ்வழக்கம் சோழ நாட்டிலிருந்தே பாண்டிய நாட்டிற்குப் பரவியிருக்கவேண்டும்.

வளநாடு :

நாடு என்னும் நிலப்பிரிவுக்கு வளநாடு என்று பெயரிடும் முறை சோழர் காலத்தில் காணப்படுகிறது. நாடு அதிக எண்ணிக்கையில் ஊர்களைக் கொண்டிருந்ததினாலும், வளமான நிலப்பரப்பை பெற்றிருந்ததினாலும் மக்கள் நெருக்கமாகத் தங்களது வாழ்விடங்களை அமைத்துக் கொண்டதினாலும் சில நாடுகள் வளநாடு என அழைக்கப்பெற்றுள்ளன. சில நேரங்களில் புதிதாக தேவதானம், பிரமதேயம் போன்றவை ஏற்படுத்தும் போது இம்மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கல்வெட்டுகளில் அரசு நிர்வாகம் :

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் பகுதியில் காணப்படும் பெரும்பாலானக் கல்வெட்டுகளில் அரசு சார்ந்த நடவடிக்கைகளையே கொண்டு காணப்படுகின்றன.

கோயிலுக்கு வழங்கப்படும் கொடைகளைச் சரிபார்த்து தேவைகளுக்கு பயன்படுத்தும் பொறுப்பை நிர்வாகக் குழுக்கள் பெற்றிருந்தனர். இவர்கள் அரசின் ஆணையினை நிறைவேற்றினர்.

நிர்வாக அமைப்புகள் :

இடைக்கால நிர்வாகத்தில் ஊர்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தது. பொதுவாக இவ்வூர்களின் விளைநிலங்களும், மக்கள் வாழ்விடங்களும் அமைந்திருந்தன. இவ்வூர்களில் நில உடைமையாளர்கள், உழுதொழில் செய்யும் குடியானவக் கூலியாட்கள், ஊர்ப் பணியாளர்கள் ஆகியோர் வாழ்ந்தனர்.

இக்கால ஊர்களைக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம். அவை வெள்ளான்வகை ஊர்கள், பிராமண ஊர்கள், நகரங்கள், தேவதான ஊர்கள் இவைத் தவிர தனியூர்கள் என்றொரு வகையும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றது. (நூலிலிருந்து)

இடைக்காலச் சோழர்களின் நிர்வாக முறைகள் – ஆ.துளசேந்திரன்
விலை: 130/-
வெளியீடு: யாப்பு வெளியீடு
Buy this book online: https://www.heritager.in/product/idaikkaala-sozhargalin-nirvaaga-muraigal/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908

Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/

#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers