ஒரு சாதியின் உள்கட்டமைப்பு (Structure of a Caste)
ஒரு சாதியைப் பொறுத்தவரை அந்த சாதியில் உறுப்பினராக இருப்பவர் அந்த சாதிக்குள் இருந்து மட்டுமே பெண் எடுக்க முடியும். இந்த அடிப்படையில் ஒரு சாதி என்பது அகமணக்குழுவாக (endogamous group) செயல்படுகிறது. இப்படி அகமணக் குழுவாகத் தமிழகத்தில் இனக்குழுக்கள், சாதி என்ற பெயரில் சுமார் 400க்கு மேற்பட்ட சமூகங்கள் உள்ளன.
அதே சமயத்தில் அதே சாதிக்குள் தங்களுக்குள் திருமணம் செய்வதற்குத் தடைசெய்யப்பட்ட சில குழுக்கள் இருப்பதையும் நீங்கள் கவனிக்க முடியும். உதாரணமாக “பங்காளிகள்”ஒரு பங்காளி தனது பங்காளிக்குள்ளேயே பெண் எடுக்க முடியாது. ஏனெனில் அவர்கள் அனைவரும் அண்ணன் தம்பிகளாக, அக்கா தங்கை, சகோதர, சகோதரிகளாக பெரியப்பா பெரியம்மாவாக, சித்தப்பா சின்னம்மாவாக இருப்பார்கள். எனவே ஒரு “பங்காளி’ தனது பங்காளிக்குழுவிற்கு வெளியிலிருந்து மட்டுமே பெண்எடுக்கமுடியும். இப்படி திருமணஉறவு தடை செய்யப்பட்ட குழுக்கள் அனைத்துச் சாதிக்களுக்குள்ளும் இருப்பதை நீங்கள் அவதானிக்கலாம். இந்த அடிப்படையில் இவை அனைத்தும் புறமணக் குழுக்களாக (Exogamous groups) செயல்படுகின்றன.
ஒரு சாதிய உறவும் இரத்த உறவின் அடிப்படையிலேயே உருவாகியுள்ளது.
இந்தியாவில் இத்தகைய புறமணக் குழுக்களைக் குறிக்க சுமார்400க்கும் மேற்பட்ட சொற்கள் பயன்படுத்தப்படுவதாக கே.எஸ்.சிங் (1997) Devnathan 1997). சுட்டுக்காட்டுகிறார்
தமிழகத்தில் இத்தகைய புறமணக் குழுக்கள் சுமார் 25க்கும் மேற்பட்ட பெயர்களில் அழைக்கப்படுகின்றன.
கிளை (ஆம்பனேரி மறவர் கொண்டயகோட்டை மறவர், செம்பிய நாட்டு மறவர், எரவாளர், காடேசர், நாகுடி வேளாளர், வலையர்), கூட்டம் (கொங்கு வேளாளர், முதுவர், புலையர், வேட்டுவர், கைக்கோளர், பூலூவர், சவலக்காரர், வேட்டுவ கவுண்டர், பிரமலைக் கள்ளவ) கரை (கள்ளர்) பட்டம் (உப்பிளியார்) வகையறா (வன்னியர்) வகை (வல்லம்பர்) கொத்து (பழியன்) கோயில் (நாட்டுக்கோட்டை செட்டியார்) குலம் (குறும்பர், அம்பளக்காரர், ஊராளி, சோளகர்சோலிகர், ஆதி கர்நாடகா, செருமான், கங்கவார் குலையர் சேரமார்) குடும்பம் (மலையாளி) தரவாடு (நாயர், தீயர், எழுத்தச்சர்) இல்லம் (ஈழவர், பனியர், ஐயனார், தாண்டன், அரையர் நுளையர் காஞ்சில் முதலி, சாது செட்டி சக்கரவார்) சொக்காரர் (நாடார்). அங்குசம் (தேவாங்கர் – கன்னடம்) வம்சம் (கொங்கு வைணவர்), காணி (பர்வதராஜ குல மீனவர்) மகன் (கொர்ச்சா), நாடு (தொரயர்), புரம் கீரமங்கல செட்டியார்) வகை (கங்கை குல வெள்ளாள செட்டியார்) வீட்டு பேரு (கிருஷ்ணவாகா, பெரும் கொல்லர், வாணியர்), இண்டி பேரு (மாதிகா, பாமுலு, தேவாங்கர் தெலுங்கு, தொகாட்டா வீர சத்திரியர், பொன்னை குறவர்கள்) கோத்திரம் (பிராமணர்கள், பண்டி, கணக்கன், அகரம் வெள்ளாள செட்டியார், கொங்கு செட்டியார், காசுக்கார செட்டியார், சோழிய செட்டியார், வல்லநாட்டு செட்டியார், ஆயிர வைசியர், பொண்டில், ஜோகி, கம்மாளர், லம்பாடி, மராட்டியர், சாலிவாகனர், சௌராஷ்டிரா,பட்ராஜீ, தாபி குறவர், ஜைனர், தொண்டை மண்டல சைவ முதலியார்) பங்காளி (பல சாதியினர் பரவலாக பயன்படுத்தும் சொல்) போன்று பல பெயர்களில் இந்த புறமணக் குழுக்கள் அழைக்கப்படுகின்றன. (நூலிலிருந்து)
மானுடவியல் நோக்கில் தமிழகத்தில் சாதிகள் – ஜெ. சிதம்பரநாதன்
விலை: 150/-
வெளியீடு: குமரன் புத்தக இல்லம்
Buy this book online: https://www.heritager.in/product/maanudaviyal-nokkil-thamizhagathil-saathigal/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers