பல்வேறு மதங்களும் அதன் கோவில்களும்
கோயில் என்பது, கடவுளை வணங்குதல், வேள்விகள் நடத்துதல்போன்ற சமயம் சார்ந்த அல்லது ஆன்மிக நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட கட்டிடத்தைக் குறிக்கும். ஆனால் மரங்களும், சாலையோரக் கற்களும்கூட கோயிலாகக் கருதப்படும் வழக்கமும் நமது சமூகத்தில் உண்டு. மனிதகுல வரலாற்றில் தன் சக்திக்கு அப்பாற்பட்ட இயற்கை நிகழ்வுகளை வணங்கவோ, பயம் கொள்ளவோ செய்த மனித சமூகம், அதனுடைய வளர்ச்சிப் போக்கில் ஒன்றுகூடி தங்கள் நலன்களுக்காக வேண்டிக்கொள்ள கோயில்களை அமைத்தனர். மிகப் பழைய காலத்தில் இருந்தே இந்நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட கோயில்கள் உலகம் முழுவதிலும் இருந்து வந்துள்ளன. தமிழில் கோயில் என்னும் சொல் கோ + இல் எனும் இரண்டு சொற்களின் சேர்க்கையால் உருவானது. இங்கே கோ என்பது இறைவனையும், இல் என்பது இறைவன் உறையும் இல்லம் அல்லது வீடு என்பதையும் குறிக்கும். எனவே கோயில் என்பது, ‘இறைவன் வாழுமிடம்’ என்னும் பொருள் தருகிறது. பொது வழக்கத்தில் கோயில் மற்றும் கோயில் என்ற இரு சொற்களும் உண்டு.
தேவஸ்தானம், அம்பலம்போன்ற சொற்களும் கடவுளை வணங்கும் இடத்தினைக் குறிக்கும். கோயில் என்பதற்கு ஆலயம் என்றொரு பெயரும் உண்டு. ஆலயம் என்னும் சொல் ‘ஆன்மா லயப்படுகின்ற இடம்’ அதாவது. ‘ஆன்மாக்கள் இறைவனை ஒரு மனதுடன் வணங்குவதற்கான இடம்’ என்ற பொருள் கொண்டது. அதேசமயம் பண்டைத் தமிழ் இலக்கியங்களில் கோட்டம் என்னும் சொல்லும் பயன்படுத்தப்பட்டுள்ளது. பண்டைய எகிப்தில், ப்ர் (pr) என்பது வீட்டையும், சமயம் சார்ந்த புனிதக் கட்டிடங்களையும் 36| எஸ்.ஜி. ரமேஷ்பாபு
சேர்த்தே குறித்தது. இதனால் அங்கேயும் இக்கட்டிடங்கள் இறைவன் வாழும் இடங்களாகவே கருதப்பட்டன. இத்தகைய கட்டிடங்களைக் குறிக்கும் சொற்கள் பலமொழிகளிலும் சொற்பிறப்பியல் அடிப்படையிலும் பல்வேறு பொருள் உணர்த்துவனவாக இருக்கிறது.
பண்டை எகிப்தியக் கோயில்கள்
பண்டைக்கால எகிப்தின் தொடக்கக் கோயில்கள் ஒரு மூடிய மண்டபம் ஆகும். இவற்றின் கூரைகள் தூண்களினால் தாங்கப்பட்டு இருந்தன. பின்பு வாயில் கோபுர அமைப்புக்கள். முற்றம், கோயில் கருவறைக்கு முன் அமைந்த மண்டபம் போன்றவை அமைக்கப்பட்டன. இந்த வகை கிரேக்க – ரோமர்காலம்வரை நிலைத்து இருந்தது. பண்டை எகிப்தியக் கோயில்கள் கற்களால் கட்டப்பட்டன. சுற்று மதில்களுக்கு செங்கற்கள் பயன்படுத்தப் பட்டன.
எகிப்தியக் கோயில்களின் நடுவில் ஓர்அறையில் கடவுள் உருவம் வைக்கப்பட்டிருக்கும். அரசனின் சார்பில் ஒரு மதகுரு இதற்குப் பொறுப்பாக இருப்பார். இக் கோயில்கள் பொதுவாக மக்கள் வழிபடுவதற்காகத் திறந்து வைக்கப்படுவது இல்லை. கோயில் அதிகாரிகளைத் தவிர வேறு எவரும் செல்ல முடியாதவாறு கோயில் பூட்டப்பட்டிருக்கும். விழா நாட்களில் மட்டும் சிலை மக்கள் வழிபடுவதற்காகக் கோயிலுக்கு வெளியில் எடுத்துவரப்படும்.
கிரேக்க – ரோமக் கோயில்கள்
பண்டைக் கிரேக்கர்கள் தமது கோயில்களை டெமெனோஸ் என்று அழைத்தனர். இது புனிதப் பகுதி என்னும் பொருள் கொண்டது. பலி கொடுப்பதற்கான பலிபீடம் கட்டிடங்களுக்குப் புறத்தே அமைந்த வெளியிடத்திலேயே இருப்பதால், இக் கோயில்களின் புனிதம் முக்கியமாக இவ்வெளியிடங்களுடனேயே தொடர்புபட்டு உள்ளது. கிரேக்கக் கடவுளர் சிலைகளைத் தாங்கிய சுட்டிடங்கள் தொடக்கத்தில் மிகவும் எளிமையான கட்டிடங்களாகவே இருந்தன கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னர் இவை விரிவான நுணுக்க வேலைப்பாடுகளுடன் அமைந்தன. கிரேக்கக் கோயில் கட்டிடக்கலை, பண்டைய கட்டிடக்கலை மரபுகளில் பெருமளவு தாக்கத்தைக் கொண்டிருந்தது.
புத்தக் கோயில்கள்
மரபுவழியான புத்தக் கோயில்கள் மனிதருக்கு உள் மற்றும் வெளி அமைதியைக் கொடுக்கும் நோக்கில் வடிவமைக்கப்படுகின்றன. பௌத்தம் இறைவனைப்பற்றிப் பேசுவதில்லை. ஆயினும், பௌத்த சமயத்தின் சில பிரிவுகள் கௌதம புத்தரைப் புத்த கோயில்களில் வைத்து வழிபடுகின்றனர். தாதுகோபுரம், அரச மரம், படிம வீடு, துறவிகள் மடம் போன்ற கூறுகள் புத்த கோயில்களில் காணப்படுகின்றன. இத் தாதுகோபுரங்களில் கௌதம புத்தரின் பல், எலும்பு போன்ற சின்னங்கள் வைக்கப்படுகின்றன. தென்கிழக்கு ஆசிய நாடுகள் பலவற்றிலும், சீனா, ஜப்பான், இலங்கை போன்ற நாடுகளிலும் புத்த மதம் பெரும்பான்மை மதமாக இருந்து வருகிறது. இதனால் அந் நாடுகளிலும், அவர்கள் புலம் பெயர்ந்து வாழும் வேறு பல நாடுகளிலும் புத்த கோயில்கள் உள்ளன.
உலகின் மிகப்பெரிய தாதுக் கோபுரங்களைக் கொண்ட புத்த கோயில்கள் சில இலங்கையில் உள்ளன. அசோகப் பேரரசனால் அனுப்பி வைக்கப்பட்டதும், புத்தர் ஞானம் பெற்றதுமான வெள்ளரசு மரக்கிளையை நட்டு வளர்க்கப்பட்ட அரச மரம் இன்றும் அநுராதபுரத்தில் உள்ள புத்தக் கோயில் ஒன்றில் உள்ளது.
சமணக் கோயில்கள்
சமண சமயம் அல்லது ஜைன மதம் என அழைக்கப்படும் மதம் ஒரு காலத்தில் இந்தியாவில் செல்வாக்குடன் திகழ்ந்தது. இம் மதம் செல்வாக்கிழந்தபோது சமணக் கோயில்கள் பல அழிக்கப்பட்டு விட்டன. இன்று இந்தியாவில் சிறு அளவில் சமணர் வாழ்ந்து வருகின்றனர். சமணக் கோயில்களில் தீர்த்தங்கரர்கள் எனப்படும் மதப் பெரியார்களின் உருவங்கள் வைத்து வழிபடப்படுகின்றன. சமணக் கோயில்கள் பெரும்பாலும் சலவைக் கல்லினால் அமைக்கப்படுகின்றன. சில புகழ் பெற்ற சமணக் கோயில்கள் இந்தியாவில், பலித்தானா, சங்கேஸ்வர். சிக்கார்ஜி, வர்த்தமான். மும்பை. அகமதாபாத் ஆகிய இடங்களில் உள்ளன. சமணக் கோயில்களில் பல சலவைக் கல் தூண்கள் அமைக்கப்படுகின்றன. இவை தேவதைகளின் உருவங்களைக்கொண்ட சிற்ப வேலைகளினால் அழகூட்டப்படுகின்றன. சமணக் கோயில்களின் முதன்மை அறையில், பார்சுவாநாதர், ரிஷப தேவர், மகாவீரர் ஆகிய மூன்று தீர்த்தங்கரர்களின் உருவங்கள் வைக்கப்படுகின்றன. மவுண்ட் அபுவில் உள்ள தில்வாரா கோயில்கள் சமணம் தொடர்பான மிக அழகிய யாத்திரைத் தலம் எனச் சொல்லப்படுகின்றது.
சீக்கியக் கோயில்கள்
சீக்கிய மதக் கோயில்கள் பொதுவாக குருத்துவாரா என்றே அழைக்கப்படுகின்றன. இச்சொல் பஞ்சாபி மொழியில் குருவுக்கான
38| எஸ்.ஜி. ரமேஷ்பாபு
வாயில் என்னும் பொருள் கொண்டது. எனினும் கோயில் என்ற சொல் சீக்கிய மதக் கோயில்களுக்கும் பரவலாக வழங்கப்படுவது உண்டு. சீக்கியக் கோயில்களில் உருவங்கள் வைத்து வணங்கப்படுவது இல்லை. ஹர்மந்திர் சாகிப் என்னும் பெயர் கொண்ட இக்கோயில் பொதுவாகப் பொற்கோயில்- புகழ்பெற்றது.
கிறித்தவக் கோயில்கள்
கிறித்தவர்கள் தங்களின் வழிபாட்டு இடங்களை ஆலயம் என அழைப்பர். இவ்வகைக் கோயில் வகைகள் சிற்றாலயம், ஆலயம் பேராலயம், திருத்தலம், மறைமாவட்டப் பேராலயம் எனப் பல வகைப்படும். கிறித்தவக் கோயில்களுக்குள் பிற மதத்தினரும் அனுமதிக்கப்படுகின்றனர். ஆயினும் திருவருட்சாதனங்களில் குறிப்பாக நற்கருணை விருந்தில் பங்கு பெற முடியாது. எல்லா கிறித்தவ ஆலயங்களும் குறிப்பாக கத்தோலிக்க ஆலயங்கள் அனைத்தும் ஏதேனும் ஒரு புனிதராலோ அல்லது இயேசு கிறித்துவின் பெயராலோ தந்தையாம் கடவுளுக்கே அர்ப்பணிக்கப்பட்டதாகும்.
இஸ்லாமியக் கோயில்கள்
மசூதிகள் எனப்படுவது இஸ்லாமியர்கள் பிரார்த்தனை நடத்துவதற்காக கட்டப்படும் கட்டிடங்கள் ஆகும். அவை அனைத்தும் சவூதி அரேபிய நாட்டில் உள்ள மெக்கா நகரில் கட்டப்பட்டுள்ள புனிதக் காபாவை நோக்கியே கட்டப்படுகின்றன. இவை பிரார்த்தனை நடத்துவதற்காக மட்டுமின்றி மக்கள் சந்தித்து தங்கள் பொதுப் பிரச்சனைகளைப் பேசுவதற்கும், இஸ்லாமியக் கல்வியை கற்பதற்கும் உதவுகின்றன. ஏழாம் நூற்றாண்டுவரை பொதுவாக அரேபியப் பாணியில் மட்டும் கட்டப்பட்டுவந்த மசூதிகளின் வடிவம் இன்றைய நாட்களில் மற்ற கலாச்சார அமைப்புகளிலும் காணப்படுகிறது. டெல்லி ஜும்மா மசூதி. அயோத்தியில் இந்து மதவெறியர்களால் 1992ல் இடிக்கப்பட்ட பாபர் மசூதி. பாகிஸ்தான் லாகூரில் உள்ள மன்னர் அவுரங்கசீப்பால் கட்டப்பட்ட பாதுசா மசூதி. ஜெருசலத்தில் உள்ளஅல்-அக்ஷாமசூதி. அல்வலீதினால் டமஸ்கஸ் நகரில் கட்டப்பட்ட உமையாபள்ளிவாசல் உள்ளிட்டவை புகழ்பெற்றவையாகும்.
இந்துக் கோயில்கள்
இந்தியாவில் பல நூறு மொழிகளைப் பேசுவோர் இந்துக்களாக இணைக்கப்பட்டனர். இதனால், இறைவனை வணங்குவதற்கான இடம், மந்திர் மந்திரா, தேவஸ்தானம் தேவாலயம், அம்பலம் போன்ற எண்ணற்ற சொற்களால் குறிப்பிடப்படுவது உண்டு. எனினும் இவற்றின் நோக்கம் ஒன்றே. இந்து சமயத்தில் ஒரு மரத்தின் கீழ் ஒரு கல்லை வைத்து அதை இறைவனாக உருவகித்து வணங்கும்போது அது ஒரு கோயிலாகி விடுகிறது. எனவே வெறும் மர நிழலில் இருந்து, ஒரு நகரத்தையே உள்ளடக்கிய பெரிய கோயில்கள்வரை பல அளவுகளிலும் இந்துக் கோயில்கள் உள்ளன. அமைந்திருக்கும் சமுதாயம். இடம், அமைக்கப்பட்ட காலம் ஆகியவற்றைப் பொருத்து இந்துக் கோயில்கள் பல்வேறு அமைப்புக்களில் காணப்படுகின்றன. எனினும் சில அடிப்படையான அமைப்புக்கள் எல்லா இந்துக் கோயில்களிலும் உள்ளன.
இந்து சமயக் கோயில்கள் நான்கு வகையாகப் பிரிக்கப்படுகின்றன. தைவிகம்- தேவர்களே மூலவிக்கிரகங்களை நிறுவிச்செய்தது. ஆசுரம் -அசுரர்கள் ஏற்படுத்திய கோயில்கள் இது. ஆர்ஷம் -ரிசிகள் கோயிலுக்கான மூலவரை நிறுவுவது. மாநுஷம்- மன்னரும், மக்களும் நிறுவிக் குடமுழுக்கு செய்யப்பட்டது.’
ஆனால் மற்ற கோயில்களுக்கும் இந்தியாவில் உள்ள சமயக் கோயில்களுக்கும் அடிப்படையில் வித்தியாசம் உள்ளது. பல தேசங்களாக இருந்த இந்தியாவில் கோயில் நிலத்துடன் பிணைக்கப்பட்டது. அதிகாரத்தின் சின்னமாக வார்க்கப்பட்டது. ஆளும் வர்க்கத்தின் தேவைகள் பொருளாதாரரீதியிலும், கலாச்சாரத் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கிலும் பயன்படுத்தப்பட்டன.
கோயில்கள் ஏன், எப்படி உருவாகின? கோயில்கள் என்ற சிந்தனை எப்படி உருவானது? கோயில்களுக்கு ஏன் நிலங்கள் குவிக்கப்பட்டன? பிரமாண்டமான கோயில்கள் எழுந்தன எதனால்? கோயில்கள் எப்படி மனிதகுலத்தின் மையமான இடத்தை வகிக்கின்றன? கோயில்களை ஏன் ஆளும் வர்க்கங்கள் காலங்காலமாக பேணி வளர்க்கின்றனர்? கோயில்கள் எப்படி மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் செல்வம் குவியும் மையங்களாக மாறின? ஏன் படையெடுப்பாளர்கள் கோயில்களைத் தாக்கினர்? நவீன அரசியலில் கோயில்களை, கடவுளர்களை மையமாக வைத்து எப்படி மதவாதம் வளர்ந்தோங்குகிறது? (நூலிலிருந்து)
யார் கைகளில் இந்து ஆலயங்கள்? எஸ்.ஜி.ரமேஷ்பாபு.
விலை: 200 /-
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
Buy this book online: https://www.heritager.in/product/yaar-kaikalil-inthu-alayangal/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers