குடுகுடுப்பைக்காரர்கள் என்ற பழங்குடியினர்

குடுகுடுப்பைக்காரர்கள் என்ற பழங்குடியினர் :

“இன்று இந்திய நாட்டில் ஏறத்தாழ மூன்று கோடிக்கும் அதிகமான பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். இவர்களை 472 இனங்களாகப் பிரிக்கின்றனர்?இவர்களில் பெரும்பாலோர் உணவு தேடலுக்காக மட்டுமே தங்களுடைய தினசரி வாழ்வில் பெரும் பகுதியைச் செலவழிக்கின்றனர். சிலர் நிலையாகக் காடுகளில் தங்கி, காடுகளில் விளையும் பொருட்களை உண்டு வாழ்ந்து வருகின்றனர். இன்னும் சிலர் ஊர் ஊராகச் சுற்றியலைந்து ஏதாவது சிறிய தொழில்கள் செய்து, அதன் மூலம் மக்களிடமிருந்து பொருள் அல்லது உணவினைப் பெற்று வாழ்ந்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் வாழ்ந்துவரும் குடுகுடுப்பைக்காரர்கள் என்ற பழங்குடியினர் உணவு மற்றும் பொருள் ஈட்டுவதற்காக ஊர்ஊராகச் சுற்றியலை கின்றனர். இவர்கள் குடுகுடுப்பை என்ற சிறிய உடுக்கையை ஒலித்துக்கொண்டு குறி சொல்வதைத் தங்களது முக்கியத் தொழிலாகக் கொண்டுள்ளனர். அதன் மூலமாகக் கிடை க்கும் வருவாயில் குடும்பம் நடத்துகின்றனர்.

தெலுங்கத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் குடுகுடுப்பைக் காரர்கள். சில நூற்றாண்டுகளாகத் தமிழ்நாட்டில் சுற்றியலைந்து வாழும் இத்தெலுங்கு மக்களின் பண்பாடு எவ்வாறு தமிழகப் பண்பாட்டுடன் இயை ந்து செல்கிறது என்பது ஆய்தலுக்குரியது. இவர்களிடையே நிலவும் சில பண்பாட்டு எச்சங்களைக் கொண்டுதான் இவர்களைத் தனியே பாகுபடுத்த முடிகிறது.

குடுகுடுப்பைக்காரர்கள் பொதுவாக மாநிறமான மேனியை உடையவர்கள். ஆண்கள் நன்கு வளர்ந்த தோற்றமும், பெண்கள் சற்றுக் குள்ளமான தோற்றமும் கொண்டவர்கள். ஆண்கள் தலை முடியை நிறைய வளர்த்து பெரிய அளவில் கொண்டை போல அள்ளிச் செருகிக் கொள்கின்றனர். அத்துடன் மஞ்சள், சிவப்பு, கறுப்பு போன்ற வண்ணத் துணிகளில் ஏதாவது ஒரு வண்ணத் துணியினால் தலை முடியைச் சுற்றித் தலை ப்பாகை போன்று கட்டிக்கொள்கின்றனர். கைகளில் வெள்ளிக் காப்பும் கம்பளிக் கயிறும் அணிகின்றனர். பெண்கள் எப்போதும் தலை முடியை க் கொண்டை போல அள்ளிச் செருகிக் கொள்கின்றனர். காது மடல்களில் சிறுசிறு வளையங்களை அணிகின்றனர்.

குடுகுடுப்பைத் தொழில்

குடுகுடுப்பை த் தொழில் காரணமாக ஊர்கள் தோறும் சுற்றுவதனைத் ‘தங்கலுக்குச் செல்லுதல்’ என்று குடுகுடுப்பைக் காரர்கள் குறிப்பிடுகின்றனர்.

தங்கலுக்குச் செல்லும் போது நான்கைந்து குடும்பங்களாகச் சேர்ந்து சிறிய குழுக்களாகச் செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் எந்தக் காலத்தில் எப்பகுதி வளமானதாக இருக்கும் என்பதனை அறிந்து வைத்துள்ளனர். எனவே குறிப்பிட்ட மாதங்களில் குறிப்பிட்ட பகுதிகளுக்குச் செல்வதைப் பழக்கமாகக் கொண்டுள்ளனர். அங்கு ஊருக்கு வெளியேயுள்ள பெரிய மரத்தடி நிழல், மடம், சாவடி, சத்திரம் போன்ற இடங்களில் தங்குகின்றனர். சில ஊர்களில் வீட்டுக்காரரின்அனுமதி பெற்று,வீட்டுத் திண்ணையில் தங்குகின்றனர். கடந்த ஆண்டு எவ்விடத்தில்
தங்கினாரோ அதே இடத்தில் நடப்பு ஆண்டும் சென்று தங்குகின்றனர்.

வெளியூர்களில் இரவு நேரத்தில் மரத்தடி போன்ற திறந்த வெளியில் படுத்து உறங்கும் போது, தாங்கள் படுத்திருக்கும் இடம், வைத்திருக்கும் பொருட்களைச் சுற்றி, மணலை அள்ளிக் கோடு போல போடுகின்றனர். அக்கோட்டினைத் தாண்டி பாம்பு போன்ற நஞ்சுடைய உயிரினங்கள், கொடிய விலங்குகள் வராது என்று நம்புகின்றனர்.இக்கோடானது ஜக்கம்மாவின் வாக்கிற்குக் கட்டுப்பட்டது என்ற நம்பிக்கை இவர்களிடம் உள்ளது.

பகலில் குறிசொல்லச் சென்ற பெண்கள் இருட்டுவதற்குள் எவ்வாறாகினும் தாங்கள் தங்கியுள்ள இடத்திற்கு வந்துவிட வேண்டும். அவ்வாறு வராமல் இரவில் எங்காவது தங்கிய பெண்களை இனத்தை விட்டு விலக்கி வைத்து விடுவார்கள்.

குடுகுடுப்பைத் தொழிலுக்காகச் சென்ற வெளியூர்களில் ஆண், பெண் ஆகிய இருபாலரும் தங்களை அலங்கரித்துக் கொள்ளக்கூடாது.அத்துடன் நகைகள் போன்ற ஆடம்பர அணிகலன்களை அணியக் கூடாது. ஏனெனில் அது ஊரில் உள்ளோர்க்கு குடுகுடுப்பைக்காரர்கள் செய்யும் தொழில் மேல் ஐயத்தைத் தோற்றுவிக்கும். சாதாரணமாகக் கடைக்குச் சென்று பொருள் வாங்கி வருவதாக இருந்தால்கூட ஆண்கள் தலைப்பாகை , தோளில் துண்டு, கையில் கம்பு ஆகியவற்றுடன்தான் செல்லவேண்டும். பெரிய அளவில் தாடி, மீசை , தலை முடி வளர்ந்திருப்பதனால்தான் மக்களுக்கு இவர்கள் சொல்லும் குறியின் மேல் நம்பிக்கை ஏற்படுவதாகக் கருதுகின்றனர்!

தங்கலுக்குச் சென்ற இடத்தில் யாராவது ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை எனில் எல்லோரும் நோயாளியுடன் தங்கி விடுகின்றனர். யாரும் குடுகுடுப்பைத் தொழிலுக்குச் செல்வதில்லை . இரண்டு மூன்று நாட்களுக்குப் பின்னர், நோயாளியின் உடல்நிலை தேறியவுடன், அவரிடம் அனுமதி பெற்று, மற்றவர்கள் தொழிலுக்குச் செல்கின்றனர்.

தங்கலுக்குப் போன இடத்தில் யாராவது அம்மை , காலரா போன்ற தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு, இறந்துவிட்டால், அப்போது அங்கிருந்த எல்லாக் குடும்பங்களும் மூன்று மாதம் ஊருக்குத் திரும்பி வரக்கூடாது. ஏதாவது அவசியம் ஏற்பட்டால், அவர்களில் யாராவது ஊருக்கு வந்தால், இரவில் தங்காமல் உடனே கிளம்பிச் சென்றுவிட வேண்டும். மேலும் வேறு குடும்பத்தினர் அக்கூட்டத் தாருடன் சேர வந்தால், அவர்களிடம் விவரத்தைச் சொல்ல வேண்டும். அவ்வாறு சொல்ல மறந்து விட்டால், அதனைக் குற்றமாகக் கருதிச் சாதிப் பஞ்சாயத்தில் ‘குற்றப்பணம்’ விதிக்கின்றனர். (நூலிலிருந்து)

குடுகுடுப்பைக்காரர் வாழ்வு – (இனவரை வியல் ஆய்வு) –
ந.முருகே சபாண்டியன்
விலை: 80/-
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Buy this book online: https://www.heritager.in/product/kudukudupaikaarar-vazhviyal/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908

Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/

#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers