வரலாற்றுப் போக்கில் பழையாறை
பழையாறை-பெயராய்வு : ‘பழையாறை’ என்பது இந்நகரின் பெயர். இது முதன் மூவர் பாடல்களுள் ‘ஆறை’ எனவும் ‘பழையாறை’ எனவும் ‘பழைசை எனவும் குறிக்கப்படக் காண்கிறோம். செய்யுள் வல்ல தெய்வச் சான்றோர்களால் பயில வழங்கப்பட்டுள்ள தாகிய ஆறை என்பது செய்யுள் விகாரமன்று; இயல்பான பெயரே எனலாம். ஆறை ” என்பது ஊர்ப் பெயர்; இது பழைமை என்னும்…